பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசும்போது, நான் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானில் இருந்து தாவூத் இப்ராகிமை இந்தியாவிற்கு கொண்டு வருவேன் என கூறியிருந்தார்.
மோடியையும் இந்தியத் தேர்தலையும் வழி நடத்துவது பல்தேசிய நிறுவனங்களும் அமெரிக்காவுமே. அமெரிக்கப் பல்தேசிய நிறுவனமே இந்திய மோடியின் தேர்தலுக்குப் பணம் வழங்கியுள்ளது. ஆபிரிக்க நாடுகளையும் மத்திய கிழக்கையும் இரத்தத்தால் தோய்த்தெடுத்த இதே பல்தேசிய வியாபார நிறுவனங்கள் இந்தியாவை முழுமையாகச் சுரண்ட அனுமதி கேட்கின்றன. தாவூதையும் இஸ்லாமியர்களையும் காட்டி மக்களை ஏமாற்றி முழு நாட்டையும் அன்னியர்களுக்கு விற்பனை செய்வதே மோடியன் கடமை. மன்மோகனை விட மிகவேகமாக இக் கடமையை மோடி செய்வார். எதிர்ப்புக் கிளம்பினால் ஆம் ஆத்மி பார்த்துக்கொள்ளும்.
பாகிஸ்தான் உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் அலி கான் அளித்துள்ள பதிலில், தாவூத் எங்கு வாழ்ந்து வருகிறார் என்பதை முதலில் மோடி முடிவு செய்யட்டும் என்று கூறியுள்ளார். இந்தியாவின் பிரதமராக மோடி வந்தால் அது நாடுகளுக்கு இடையேயான அமைதி கோட்பாட்டில் ஸ்திர தன்மையை வலுவிழக்க செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தாவூத்திற்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்கிறது என கூறுபவர்கள் மற்றும் பாகிஸ்தான் மண்ணில் சோதனை நடத்தப்படும் என கூறுபவர்கள், இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படும் அளவிற்கு பலவீனமான நாடு அல்ல பாகிஸ்தான் என்பதை உணர வேண்டும். இது போன்ற பொறுப்பற்ற அறிக்கைகளை கேட்டு பொறுத்து கொண்டிருக்கும் நாடு அல்ல பாகிஸ்தான் என்பதனையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என கடுமையாக பதிலளித்துள்ளார்.