Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தலைவரே.. முகாம்களையும் திரும்பிப் பாருங்கள் : வட்டக்கச்சியான்

இனியொரு... by இனியொரு...
08/15/2009
in போராளிகள் டயரி
0 0
8
Home அரசியல் போராளிகள் டயரி

டக்ளஸ் தேவானந்தா அவர்களே,dd8

பெரும்பான்மைச் சிங்கள இனத்தைச் சேர்ந்த நிமல்கா பெர்னாண்டோ அவர்கள் தடுப்பு முகாம்களில் மக்கள் நடாத்தப்படும் முறை பற்றிச் சொல்லியிருக்கிறாரே? 260, 000க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் செட்டிக்குளம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை நிலைமையைப் படுமோசமாக்கியிருப்பதாகக் கண்டு வந்தவர்கள் சொல்கிறார்கள். தற்காலிகமாக அமைக்கப்பட்ட‌ மலக்குழிகளில் பல நிரம்பி வழிந்தபடியிருப்ப‌தாகவும் பல முற்றாகச் சீர்கெட்டு விட்டதாகவும் சொல்கிறார்கள்.

இங்கெல்லாம் அருகில் இருப்பவருக்குத் தும்மல் வந்தாலே, பன்றிக் காய்ச்சல் வந்துவிடுமோ என்றி மூக்கைப் பொத்திக்கொள்கிறார்கள்.

என்னே கேவலமையா உங்கள் ஆட்சியில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது?

நீங்கள் அங்கம் வகிக்கும் அரசாங்கம் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றொழித்த போது ஏதோ நீங்கள் மூச்சுக்கூட விடாமல் மௌனமாய் இருந்தீர்களே அதையெல்லாம் இப்போது பேசவேண்டாம். உங்களுக்கு ஒரு நியாயம் இருந்தது .. புலிகள் அழிக்கப்படுகிறார்களே என்று!

நீங்கள் எதுவுமே பேசாமல் அரச நியாயாம் கற்பித்துக் கொண்டிருந்த வேளைகளிலெல்லாம் உங்கள் மக்கள் சேவைக்குத் தடையாகப் புலிகள் இருப்பதாகவே சொல்லிக் கொண்டிருந்தீர்கள்!

இப்போதுதான் புலிகள் இல்லையே. அதுவுமல்லாமல் நீங்கள் எதிர்பார்த்த ஆட்சி அதிகாரமும் உங்கள் கரங்களிலே குவிந்துள்ளதே.

உங்களையெல்லாம் நிமல்கா பெர்னாண்டோ போல அரசிற்கெதிராகவெல்லாம் பேசச் சொல்ல யாரும் கோரிக்கை விடவில்லை. அதெல்லாம் பெரிய விடயம், வேண்டாம்..

இதோ உங்கள் கண்முன்னாலேயே உங்கள் மொழிபேசும் மக்கள் முகாம்களில் அனாதைகள் போல கொல்லப்படுகிறார்களே?

ஹிட்லரின் சித்திரவதை முகாம்களை விடவும் கேவலமான நிலையில் மக்கள் அணுவணுவாகக் கொல்லப்படுகிறார்களே?

இதைப்பற்றி எல்லாம் இன்னமும் நீங்கள் மூச்சு விடவில்லையே? புலிகள் இல்லாத “சுதந்திர பூமியில்” ஆட்சி நடத்தும் நீங்கள் அந்த மக்களை வெளியேற்ற என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?

மூன்று நாட்களாக வெள்ளத்தில் மலக் கழிவுகளின் மத்தியில் மிருகங்களைப் போல வாழ நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கும் மக்களை முன்றே நாட்களில் புலித் தலைமையை முற்றாக அழித்த “செயற்திறன் மிக்க” உங்கள் அரசாங்கத்தின் ஊடாக அம்மக்களைத் தற்காலிகமாகவேனும் காப்பாற்றலாமே?

மேற்கு நாட்டுத் தன்னார்வ நிறுவனங்களையே முகாம்களின் பக்கம் நெருங்கவிடாத உங்கள் அரசு எங்களையெல்லாம் அதுபற்றிப் பேசவே அனுமதிக்காது எனவே நீங்கள் தான் ஒரே ஒரு சரியான ஆள். உங்கள் அரசாங்கம் அல்லவா….?

உங்கள் உயிரைத் துச்சமென மதித்து, வெளியே வந்து இதோ இந்த அரசு இனப்படுகொலையை முகாம்களிலும் நடத்திக்கொண்டிருக்கிறது என்றெல்லாம் நீங்கள் கூறுவீர்கள் என்றும் சர்வதேச அமைப்புக்களின் தலையீட்டை உங்கள் ராஜபக்ஷ நண்பர்களுக்கு எதிராகக் கோருவீர்கள் என்றெல்லாம் எதிர்பார்க்க நாங்கள் எல்லாம் கடைந்தெடுத்த முட்டாள்களல்ல.

இதற்கு முன்னால் ஆயிரம் பகிரங்கக் கடிதங்களை ஆயிரம் பேர் எழுதியிருப்பதாகக் கேள்வியுற்றிருப்பீர்கள் இது ஆயிரத்து ஒன்றாவதாக இருக்கலாம். ஆனால் இது அவசரமானது.. நாளை பொழுது புலர்ந்தால் எரிக்கப்பட்டதிலிருந்து தப்பியோடி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பச்சிளம் குழந்தைகள் நோயின் பிடியில் அழிக்கப்பட்டுவிடுவார்கள்.

உங்கள் பதிலை எதிர்பார்க்காத ..

வட்டக்கச்சியான்

 

15.08.2009

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இலங்கையில் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு நாம் நியாயம் தேடியாக வேண்டும்:பால் நியூமேன்

Comments 8

  1. eelavan says:
    17 years ago

    டக்ளஸ் நிங்கள் புலிகள் உள்ள மட்டும் தான் சிங்களக் காடையர்களால் மதிக்கப்பட்டிர்கள் தலையிலெ தூக்கிவைத்து ஆடப்பட்டீர்கள். அப்படியெ நீங்களூம் ஒருமாதிரி ஈ…..ஓட்டிட்டிக்கொண்டிங்கள் இப்ப புலி இல்லஎண்டொண்னை உங்கலாலை உங்க வால்கையைக்ககூட ஓட்டமுடியாமல் இருக்குப் பாருங்க …………….. இதுல தமிழ் அகதிங்க வெற பாருங்க……….உங்கழுக்கு வெச்சகுரி வெச்சது தானுங்க……….

  2. Guru.Radhakrishn an,Nellikuppam--607105 --Cuddalore District says:
    16 years ago

    டக்லஷ் டெவனந்தாவின் அமைதி யை என்னவொன்டு சொல்வது. காடையர்கள் த்மிழர்களை கொன்ற்தையும், குழ்ந்தைகளை , பென்டுகளை சாகடித்த்தை எப்படி உஙக்ளாள் மர்ற்க்கமுடிகிரது.நிஷயம் மக்கள் உங்களுக்கு டிர்ப்பு வ்ழங்குவர்ர்கள்

  3. Soorya says:
    16 years ago

    நான் என்ன செய்ய, இந்த நிலைக்கு என்னைக் கொண்டுவந்தது பூச்சாண்டிப் புலிகள்தானே! ஆனா எனைத் திருத்த இப்போது புலிகள் இல்லையே. என்ன செய்ய? எனக்குத் தேவை பணம், பகட்டு, பதவி, பலாத்காரம், பந்தம், பவிசு, வேறென்ன, இதற்காக நான் எதுவும் செய்வேன். தமிழன் வாழ்ந்தாலென்ன, மடிந்தாலென்ன. நானும் எனது குடும்பமும் நல்லா இருந்தாச் சரி. இது எவ்வளவு காலத்திற்கு ஓடுமோ, எப்போ புலிகள் திரும்பிவருவார்களோ.

  4. amprose says:
    16 years ago

    Shhhhh…… Don’t open your mouths! There might be a WHITE VAN around.

  5. BALAJI says:
    15 years ago

    பன்றியிடம் என்ன சந்தணம் பற்றி 

  6. BALAJI says:
    15 years ago

    எவன் தலைவன்

  7. yazhalavan says:
    14 years ago

    முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான் மக்கள் புலிகளிடம் மாட்டுப்பட்டு இருக்கும்போது வாலைச்சுருட்டிக்கொ;டிருந்தவர்கள் இப்ப எதற்கு கதைக்கவந்தீர்கள் என்று தெரியவில்லை. அப்போதுமட்டும் மக்கள் என்ன சந்தனக்கட்டையையா சமைப்பதற்கு பயன் படுத்தினார்கள். மரணப்பிடியில்இருந்து வந்தமக்கள் போட்டஉடுப்பைத்தவிர வேறுஎதையும் கொண்டுவரவில்லை. அப்போது உங்களில் எத்தனைபோர் அவர்களுக்கு உதவிசெய்ய வந்ததீர்கள்?. அப்போது நீங்கள் என்ன சண் ரீவியா பார்த்துக்கொ;ணடிருந்தீர்கள். சும்மா புளுடாக்கதை கதைப்பதைவிட்டு யாதார்த்தத்திற்கு என்ன பொருந்த முடியுமோ அதைசெய்வதைப்பார்க்கலாம். கூரை ஏறி கோழி பிடிக்கமுடியாதவர்கள் எல்லாம் வானம் ஏறி வைகுந்தம் போவதைப்பற்றி ஏன் கதைப்பான்.

  8. Annpu says:
    14 years ago

    தலைவன் என்ற சொல்லே அவமானப்பட்டுவிட்டது. மனிதநேயமற்ற எவரையுமே சமூகம் தலைவனாக ஏற்றதில்லை. அகதியான அவதிப்பட்டு மக்களிடமே பிடுங்குபவன் ஒருதலைவமனா? அகதிகளிடம் கோடிக்கணக்கில் பணம் கறந்து கொண்டு இந்தியாவில் கொண்டுவந்து விடுபவனும்; தனிமனிதர் சொத்துக்களை அபகரிப்பவரும்; முதுகன்னிமேய்பவர்களும் தலைவன் என்றால் தலைவன் என்ற சொல்லே தலைகுனிந்து நிற்கும்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...