சீனாவும் பயன்படுத்திக் கொண்டு ஆப்கானை தனது செல்வாக்கு மண்டலமாக மாற்றுவதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது.
ஓபியம், பாப்பி, கஞ்சா பயிற்செய்கயில் ஆண்டுக்கு பத்தாயிரம் டன் அளவுக்கு உற்பத்தி செய்து வருவாய் ஈட்டிய ஆப்கான் தன்னிடம் உள்ள இயற்கை கனிம வளங்களைத்தான் கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்க முடியும். அப்படி ஒரு சூழல் வந்தால் ஷரியத் சட்ட ஆட்சியை நிறைவேற்றி கார்ப்பரேட்டுகளை ஆப்கானுக்குள் தலிபான்கள் அனுமதிப்பார்கள்.
இப்போதைக்கு தங்களின் கடந்த கால கரும்புள்ளிகளை களைய வேண்டிய தேவை இருப்பதால் “நாங்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்து போல் இப்போது இல்லை எங்கள் பார்வைகள் மாறியிருக்கிறது” என்கிறார்கள். ஆனால், “ஆப்கான் 20 ஆண்டுகளுக்கு முன்பும் இஸ்லாமிய நாடாகவே இருந்தது இனியும் அப்படித்தான் இருக்கும்.ஷரியத் சட்டத்தின் படி பெண்களுக்கு உரிமைகள் கொடுப்போம்” என்கிறார்கள்.
இந்த தலிபானிசத்தை எந்த நாடு இன்று எதிர்க்கும். இந்தியாவில் இந்து தலிபானிசம் மேலோங்கி இருக்கும் நிலையில் நூலிபான்கள் தலிபான்களை விமர்சிக்கிறார்கள். அவர்களுக்கு ஷரியத் சட்டம் இந்து பாசிசத்திற்கு வர்ணாஸ்ரமம்.அவ்வளவுதான் வித்தியாசம். தலிபான்களும் சரி இந்துத்துவ சக்திகளும் சரி திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை!