தலித் மக்களே வியக்கத்தக்க வகையில் மிக மிக மிக நெருங்கிய மோடியின் நண்பராக இருந்தார் ராம் விலாஸ் பாஸ்வான், நாடு முழுக்க தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் பற்றியோ, கொலைகள் பற்றியோ வாயே திறக்காத பாஸ்வான் சென்ற ஆண்டு திடீரென மறைந்தார்.
அவரது மகனோ லோக் சன சக்தி என்ற கட்சியை வைத்து மோடிக்காக களமாடினார். அவருக்கு நிதிஷ்குமாரை வீழ்த்த வேண்டும் என்பதே இலக்கு அதனால் நிதிஷ் குமார் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் கவனம் குவித்து வாக்குகளை சிதறடித்தார். இது நிதிஷ் குமாரின் வெற்றியை கடுமையாக பாதித்தது. பாஜக வியக்கத்தக்க வகையில் வென்றது.
பாஜகவின் வெற்றிக்கு உழைத்த சிராக் பாஸ்வானை பாஜக இப்போது கைவிட்டுள்ளது. கட்சிக்குள் உருவான பிளவு லோக் சன சக்தி யாருக்கு என்ற போட்டியை உருவாக்கி போட்டியிட முடியாத சூழலையும் உருவாக்கி விட்டது.
காஷ்மீரில் மெகபூபா, ஆந்திராவில் சந்திரபாபு, பீகாரில் சிராக் பாஸ்வான் பாஜகவோடு கூட்டணி வைத்தவர்கள் சொந்த மாநிலங்களில் பரிதாபமான முறையில் நிராகரிக்கப்படுகிறார்கள்.