புலம் பெயர் தமிழ்க் கலைஞரான தர்ஷன் தயாரித்து இயக்கியுள்ள பிரதிபலிப்பு என்ற குறும்படம் விரைவில் வெளியாகியுள்ளது. தேசிய இனப்பிரச்சனையையும் புலம்பெயர் வாழ்வின் அவலங்களையும் கதையோட்டமாகக் கொண்டுள்ள இக்குறும்படம் டி.ஜே.கருப்பு என்ற பெயரில் அறியப்பட்ட தர்ஷனின் நீண்ட நாள் முயற்சி. பிரித்தானியச் சூழலில் வளர்ந்த இளைஞரான தர்ஷன் பல்வேறு அரசியல் சமூகத் தளங்களில் செயற்பாட்டாளராக அறியப்பட்டவர்.
தென்னிந்திய சினிமாக் குப்பைகளுக்கு மத்தியில் தர்ஷன் போன்ற கலைஞர்களின் சமூகம் சார்ந்த படைப்பு நமது சொந்த கலை, கலாச்சாரப் பரப்பை விரிவுபடுத்துவதற்கான முன்முயற்சி.
புலம்பெயர் கலையை எமது மகிழ்வுகளதும் அவலங்களதும் பிரதிபலிப்பக வளர்த்தெடுக்க விரும்பும் ஒவ்வொருவரது ஆதரவையும் தர்ஷனும் அவரது கலைக் குழுவும் வேண்டி நிற்கிறது.