Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தமிழ் CNN கண்ணன் இனச்சுத்திகரிப்பின் இலங்கை இராணுவ முகவர்:தமிழ்நெட்

இனியொரு... by இனியொரு...
05/07/2014
in இன்றைய செய்திகள்
0 0
8
Home இன்றைய செய்திகள்

tamilcnn_logoதமிழ் சீ.என்.என் என்ற செய்தி இணையத்தளத்தை நடத்திவந்த கண்ணன் என்பவர் இலங்கை அரசின் இராணுவ ஆட்சேர்ப்பின் பின்புலத்தில் செயற்பட்ட பிரதான முகவர் என்று தமிழ்நெட் ஆங்கில இணையம் தகவல் தெரிவித்துள்ளது. இலங்கை அரசிற்கு எதிரான செய்திகளையும், புலிகளை ஆதரிக்கும் கட்டுரைகளையும் பிரசுரிக்கும் ‘தேசிய’ இணையங்கள் வரிசையில் தமிழ் சீ.என்.என் பிரதானமானது. வெறுமனே புலி ஆதரவாளர்களாகவும், ‘தமிழ் உணர்வாளர்களாகவும்’ தம்மை இனம்காட்டும் தனிநபர்கள் மற்றும் அமைப்புக்களின் பின்புலம் இலங்கை அரசாகவோ அன்றி உலகின் நாசகார உளவு நிறுவனங்களில் ஒன்றாகவோ இருக்கலாம் என்பதற்கு தமிழ் சீ.என்.என் மிகச்சிறந்த உதாரணம்.

வடக்குக் கிழக்குத் தமிழர்கள் பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராட வேண்டும் என்பது இலங்கையில் தவிர்க்க முடியாத முன்னிபந்தனை. இப் போராட்டம் வெற்றிபெற வேண்டுமாயின் இலங்கையில் ஒடுக்கப்படும் ஏனைய தேசிய இனங்களான மலையக மற்றும் இஸ்லாமியத் தமிழர்களுடனான இணைந்த போராட்டம் அவசியமானது. ஏகாதிபத்திய சார்பு ராஜபக்ச பேரினவாத அரசால் ஒடுக்கப்படும் சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவும் பங்களிப்பும் அவசியமானது. இதனை நிராகரித்து வட கிழக்குத் தமிழர்களைத் தனிமைப்படுத்தும் இனவாதிகள் இலங்கை அரசின் ஆதரவாளர்களே என்பது மறுபடி ஒருமுறை நிறுவப்பட்டுள்ளது.

இனப்படுகொலையில் பங்களித்த பின்னர் அமெரிக்க இராணுவக் கல்லூரியில் பயின்ற உதய பெரேரா
இனப்படுகொலையில் பங்களித்த பின்னர் அமெரிக்க இராணுவக் கல்லூரியில் பயின்ற உதய பெரேரா

அமெரிக்க இராணுவக் கல்லூரியில் பயிற்றுவிக்கப்பட்ட இலங்கை அரசின் வடமாகாண இராணுவத் தளபதியான உதய பேரேரா என்பவரது தலமையில் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இராணுவம் சார்ந்த பொருளாதாரம் தோற்றுவிக்கப்பட்டு மக்கள் அதனுள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இராணுவக் குடியிருப்புக்களாலும், திட்டமிட்ட சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பாலும் வடக்கும் கிழக்கும் நில ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றது. இராணுவத்தின் சேவகர்களாக, அதன் செயற்பாடுகளில் தங்கி வாழும் சமூகம் சர்வதேச நாடுகளின் துணையோடு தோற்றுவிக்கப்படுகின்றது.

இவ்வாறு இராணுவப் பொருளாதாரத்தில் தங்கி வாழ்கின்ற சமூகத்தை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை இனப்படுகொலை இராணுவத்தின் சேவகர்களாகச் செயற்படுவதற்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளில் இலங்கை இராணுவம் ஈடுபட்டுவருகின்றது. 18 இற்கும் 32 இற்கும் இடையேயான வயதையுடைய ஆண்களும் 18 இற்கும் 30 வயதிற்கும் இடையேயான பெண்களும் தமிழர்கள் மத்தியிலிருந்து அணிதிரட்டப்படுகின்றனர்.

இந்த அணிதிரட்டலின் பின்னணியில் புலிகளின் முன்னைநாள் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி யும் அவரது அடியாட்களும் செயற்படுவதாகவும் சீ.என்.என் இணையத்தை நடத்திவந்த கண்ணன் அவர்களுடன் கூட்டிணைந்துள்ளதாகவும் தமிழ் நெட் மேலும் தெரிவிக்கின்றது. பிரித்தானியாவிலிருந்து இலங்கை சென்ற கண்ணன் இலங்கையில் வசிக்கும் யாதவன் சோமசுந்தரம் என்பவருடன் இணைந்து இராணுவத்தின் சேவர்கள் வேலைக்கு அணிதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கண்ணன், யாதவன்
கண்ணன், யாதவன்

அரச துறை வேலைக்கு ஆட்சேர்ப்பதாகப் போலி தன்னார்வ நிறுவனம் ஒன்றின் ஊடாக பிரசாரங்களை மேற்கொண்ட கண்ணன் குழுவினர் ஆட்சேர்பின் இறுதியில் இராணுவத்திடம் நேர்காணலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அமெரிக்க அரசு தலைமைதாங்கும் அபிவிருத்தியின் முக்கிய சின்னமாக விளங்குவது மதுபானச் சாலைகளும் ‘நாகரீகமான’ விபச்சாரமுகாகும். தமிழ் சீ.என்.என் கண்ணனும் யாதவனும் இதனை ஒத்த மதுபானச் சாலை ஒன்றை வடமராட்சிப் பகுதியில் ஆரம்பித்துள்ளதாக தமிழ் நெட் கூறுகிறது.
தகவல்கள் வியப்படைவதற்கில்லை. வயிற்றுப்பிழைப்பிற்கான ‘தேசியத்தின்’ பேரால் உலகின் கிரிமினல்

அரசுகளோடும் இலங்கை அரசுடனும் இணைந்து விடுதலை பெற்றுத்தரப்போவதாகக் கூறும் தமிழர்களின் தலைமைகளுக்கு கண்ணன் ஒரு உதாரணம் மட்டுமே.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சமூக வலைத் தளங்களைத் தடைசெய்தால் வீட்டில் புரட்சி ஏற்படும் : மகிந்த

சமூக வலைத் தளங்களைத் தடைசெய்தால் வீட்டில் புரட்சி ஏற்படும் : மகிந்த

Comments 8

  1. skantha says:
    12 years ago

    Oh Kanna You Too?
    Whom to trust in this world?

  2. Senthil says:
    12 years ago

    அதிதீவிர ‘புலி’ வேடம் போட்ட பல கே.பி யின் ஆட்கள் ,புலபெயர்ந்த  நாடுகளில் இருந்து இயங்குகிறார்கள்.
    போராட்டத்தை அழிப்பதுவே அவர்களின் ஒரே குறிக்கோள்.  யானை, சிறுத்தை, மான் என்று ஒரு கும்பலே சேர்ந்து வேலை செய்கிறது. 5 வருஷ சாதனை.

    • Kumar says:
      12 years ago

      அரசாங்கத்தின் பட்டியலில் அதிதீவிரமாக இயங்கிய பலரின் பெயா்கள் இல்லாது போனதற்கு   கே.பி காரணமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

    • Alex Eravi says:
      12 years ago

      So, no more Tigers or Lions…?
      Time & circumstances will change everything…
      See the crises of Russia & Ukraine…
      All over the world politicians stand change by ground situation/ reality…
      In this political game some of them they play well…
      And some people survive within this politics…

      This is the reality…
      Nature of politics…
      Nature of survival…

  3. sivapalan_sivaguru@yahoo.fr says:
    12 years ago

    கேபியின்  ஆட்கள் மட்டுமல்ல அவர்களை விட ஆபத்தான நந்த கோபனின் ஆட்களும் புலத்தில் அதிதீவிர தேசியம் பேசிக்கொண்டு ஊடகம் நடத்திவருகின்றனர்.ஜிரிவியின் ஆஸ்த்தான ஆய்வாளர் பிரேமானந்த சுவாமிகள் கண்ணனின் நெருங்கிய கூட்டாளியாச்சே.! கண்ணபிரானுக்கு பிரேமானந்த சுவாமிகளுடன் நெருக்கம்.அதே நேரம் துரோகி பட்டம் கொடுக்கும் பல்கலைக்கழகம் நடத்தும் விக்கிரமாதித்தன் சுவாமிகளுடன் நகமும் சதையும் போல நெருக்கம்.கூட்டிக்கழித்து பார்த்தால் எல்லாம் கோத்தபாய சரணம் கச்சாமி

    • Maniyam says:
      12 years ago

      அடிடா புறப்படலையில எண்டானாம். கருணா, மாத்தையா,பிள்ளையான்,கேபி, நந்தகோபன் பட்டியலில இறுதிச் சண்டையில உள்ளுக்குளிருந்து காட்டிக்கொடுத்த புலிகளையும் சேர்க்க வேணும். புலம் பெயர்ந்த நாடுகளிலும் பெரிய புலி பட்டியல் இருக்கிறது. நீங்களே அழித்துவிட்டு ஏன் மற்றவைய குறை சொல்லுறியள்.

  4. mannan says:
    12 years ago

    தமிழீழப்போராட்டத்தினை    அழித்து அதன் மூலம் தங்கள் வளங்களை
    மேலடையச்செய்து, வல்லரசுகளின்  கூலிகளாக  செயற்படுவோரே
    தமிழரின் அழிவிற்காக  குரல் கொடுக்கின்றார்களாம்.

    இவர்களே  போராட்டக்காலத்தின் போது  தமது  துரோகத்தனததையும்
    மாபியா  நடவடிக்கைகளையும்    வெளியில்  கொண்டுவர  முனைவோரை
    துரோகி   பட்டம் சூட்டி   கொலை செய்விததவர்கள்.  தமிழினத்தின் இன்றைய  நிலைமைக்கு  இவர்களே  முதற் காரணம்.

    • Kumar says:
      12 years ago

      முற்றிலும் உண்மை.
      விடுதலை என்னும் பெயாில் இளைஞா்கள் யுவதிகள் தம்மை அா்ப்பணித்துக்கொண்டிருக்கும் வேளை அவா்களுக்கு எந்தவகையிலும் தம்மை சம்பந்தப்படுத்தாமல் வாழ்ந்து பின்பு புலம்பெயா்ந்து அந்த யுத்தத்தை
      வைத்தே அகதிகளாக தம்மை அறிமுகப்படுத்தியவா்களுக்கு தாம் ஆபத்தை தாண்டிவிட்டோம் என்ற நம்பிக்கை வந்தபின்பே விடுதலை உணா்வும் தம்மை விடுதலைப்புலிகளாக அடையாளம் காட்டவேண்டும் என்ற வெறியும் வந்த வினோதமே பொிய கதை.
      புலம்பெயா்ந்த நாடுகளில் இந்த அற்பமனிதா்கள் செய்த கொடுமைகளை யாரும் மறக்கமுடியுமா இப்போது இவா்களால் வாழ முடியவில்லை காரணம் இவா்கள் வாழ்ந்த உல்லாச வாழ்க்கை பறிபோனதால் வெறுவளிகளை தேடிக்கொண்டிருக்கின்றாா்கள் இதனால் இவா்கள் கே.பி என்பவாின் அழைப்பிற்கு தலைசாய்ப்பதில் ஆச்சாியம் எதுவும் இல்லை.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...