திருகோணமலை மகாவிளாங்குளம் பகுதியில் உள்ள தமிழ் விவசாயிகளை அங்கிருந்து வெளியேறும்படி, அந்த பிரதேசத்தைச் சேர்ந்த புத்த பிக்குகள் சிலர் அச்சுறுத்தியுள்ளனர்.
திருகோணமலையில் மகா விளாங்குளம் பகுதியில் 13ம் பிரிவில் நூற்றுக் கணக்கான தமிழ் விவசாயிகள் நெற்பயிர் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர்களை அங்கிருந்து துரிதமாக வெளியேறுமாறு, பெளத்த துறவிகள் சிலர் அச்சுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட தமிழ் விவசாயிகள், நொச்சிக்குளம், சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில், முன்னர் தமிழ் பெயரான ‘முதலிக்குளமாக” இருந்து பின்னர் பெயர் மாற்றப்பட்ட மொரவேவ பிரதேச செயலாளரிடம் குறித்த விவசாயிகள் முறைபாடு மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் புலம்பெயர் ஊடகமான “தமிழ் டவுன்” இணையத்தளக்கு வழங்கிய செவ்வி.. -கி.பாஸ்கரன் (கற்பனை தான்.. ஆனால் நிஜமாகலாம்..!)
கேள்வி: வணக்கம், மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே!
நீங்கள்தான் முதன் முதலாக ஐ.நா.சபையில் தமிழை பேசி உலகத் தமிழர்களுக்கு மிகவும் பெருமை தேடித் தந்துள்ளீர்கள். அந்த வகையில் நாங்கள் உங்களை பாராட்டுவதோடு எங்கே? எப்படி? ஏன் நீங்கள் தமிழை கற்றுக் கொண்டீர்கள் என்று கூறமுடியுமா?
பதில்: வனக்கம், உங்கள் எலோருக்கும் என் வனக்கம். தமிழர்களின் நல்ல காலம், நான் ஐனாதிபதியாகி ஐ.நா.சபைக்கு சென்று தமிழில் பேசினேன். எனதிடத்தில், ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாகி அவர் ஐ.நா. சபைக்கு போய் தமிழில் பேசியிருந்தால் வாடா, போடா என்று பேசி உலகத் தமிழனின் மானத்தையே வாங்கியிருப்பார். அதையிட்டும் நீங்கள் பெருமைப்பட வேண்டும். ஒருவேளை கலைஞர் கருணாநிதி, பிரபாகரன் போன்றவர்கள் ஐ.நா. சபைக்கு போய் பேசிவிட்டு வந்திருந்தால், அவர்களை உலகத் தமிழர்களே உலக சாதனையாளர்களாக கருதி பெரிய விழாவே எடுத்திருப்பார்கள். ஆனால் சிங்களவனான நான் ஐ.நா.சபையில் தமிழில் பேசிவிட்டு வந்தமைக்காக தமிழ் ஊடகங்களில் கூட ஒரு பாராட்டு தெரிவிக்கவில்லை என்பதில் எனக்கு மிகவும் வருத்தமே.
தமிழர்களுக்கு மனிதர்களை மதிக்கத் தெரியவில்லை காரணம் யாது? ஒரு காலத்தில் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், நீலம் திருசெல்வம், கதிர்காமர் போன்ற படித்தவர்கள் தமிழர்களை பிரதிநித்துவப் படுத்தினார்கள். அவர்களையொலாம் அழித்து விட்டு கடந்த மூன்று சகாப்த காலமாக காடைகளும், பயங்கரவாதிகளும் தமிழர்களை பிரதிநித்துவப் படுத்தியதன் வெளிப்பாடே தமிழர்களின் இன்றைய நிலைக்கு காரணம்.
முதன் முதலாக ஐ.நா.சபையில் தமிழிலில் பேசியவனும் நானாகத் தான் இருப்பேன். கடைசியாக பேசியதும் நானாகத் தான் இருப்பேன். நான் ஜனாதிபதியாக வந்தபின் தமிழை படிக்கவில்லை. நான் சிறுவயதாக இருக்கும் பொழுதே தமிழ் எனக்கு தெரிந்திருந்தது. ஆனால் இடையில் தமிழை பேசக்கூடிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்கவில்லை. எமது அயலவர்களாக நிறைய இந்திய வம்சாவழி தமிழர்கள் வாழ்ந்தார்கள். நான் சின்ன வயதில் அவர்களுடன் பழகியதிலிருந்து தமிழை கற்றுக் கொண்டேன். மீண்டும் நான் ஜனாதிபதியாக வந்ததன் பிற்பாடு ஒரு நல்ல தமிழ் ஆசிரியர் மூலம் தமிழை கற்றுக் கொள்கின்றேன்.
தமிழை நீங்கள் ஏன் கற்றுக்கொண்டீர்கள் என நீங்கள் கேட்பது எனக்கு வியப்பாக தெரிகின்றது. பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகள் (சம்பந்தன் உட்பட) சிங்களம் பேசுகிறார்;கள். அவர்கள் சிங்களம் அல்லது ஆங்கிலம் பேசுகின்ற போது தமிழர்கள் பெருமைபட்டுக் கொள்கிறார்கள். ஆனால் நான் தமிழ் பேசுகின்ற போது சில குறுகிய மனபான்மையுடைய தமிழர்கள் சொல்லுகிறார்கள். மகிந்த தமிழர்களின் வாக்குகளை வாங்குவதற்காக தமிழ் பேசுகின்றான் என்கிறார்கள். அப்படியானால் சம்பந்தன் போன்றவர்கள் என்ன சிங்களவர்களின் வாக்குகளை அபகரிக்கவா சிங்களம் பேசுகின்றார்கள்?
தமிழர்களை பொறுத்தவரை யாராவது ஆங்கிலம் பேசினால் மிகவும் பெருமைபட்டுக் கொள்வார்கள். வடகிழக்கிலிருந்து கொழும்புக்கு வந்த தமிழர்கள் ஏன் சிங்களத்தை கற்றுக் கொண்டார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? ஒன்று சிங்களவனை ஏமாற்றி பிழைப்பதற்கு, மற்றது சிங்களவனிடமிருந்து காசை பறிப்பதற்கு தான் தமிழர்கள் சிங்களத்தை கற்றுக் கொண்டார்கள். ஆனால் என்னை போன்ற சிங்களவர் ஒருவர் தமிழ் பேசவேண்டும் என்ற ஆசையில் தமிழை கற்றுக் கொண்டேன் அதைக்கூட கொச்சைப்படுத்தி தமிழர்கள் இனவாதம் பேசுகிறார்கள்..
கேள்வி: நீங்கள் ஜனாதிபதியாக பதவிக்கு வந்ததிலிருந்து தமிழர்களினுடைய இனப்பிரச்சினையில் முரண்பட்ட கருத்துக்களையே கூறி வருகின்றீர்கள். அந்தவகையில் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு நீங்கள் வழங்கிய செய்தியில் ‘சமஸ்டி” பற்றி கதைப்பவர்கள் வீட்டுக்கு போக வேண்டும் என்று கூறியதாக பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன. தமிழர்கள் தங்களுடைய அபிலாசைகளில் ஒன்றான சமஸ்டி ஆட்சி முறையை கோரி நிற்பது தப்பா?
பதில்: மக்கள் இன்றுள்ள நிலையில் ‘சட்டி”தான் கேட்கிறார்களோ ஒழிய சமஸ்டியை அல்ல. சமைத்து சாப்புடுவதற்கு சட்டி, பானை கேட்கின்றார்கள். நான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவன் என்ற அடிப்படையில், மக்கள் என்னிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார்களோ அதைதான் என்னால் வழங்க முடியுமே தவிர. ரை, கோட், சூட் போட்டவர்களான கூட்டமைப்பினர்கள் கேட்பதை என்னால் வழங்க முடியாது. கூட்டமைப்பினர்கள் நிறைந்த வசதியுடன் வாழ்கின்றார்கள். அவர்கள் தங்களுக்கு வேண்டிய பாதுகாப்பு, பயணம் செய்யும் பஜோரா ஜீப், 50.000ரூபாய்க்கு மேட்பட்ட வருமானம், உத்தியோக பூர்வ கடவுச்சீட்டு போன்ற அனைத்து வசதிகளையும் அரசாங்கத்திடமிருந்து கேட்டுப் பெற்று வைத்திருக்கிறார்கள்.
அந்த வசதிகள் யாவும் அவர்கள் பாராளுமன்ற அங்கத்தவர்களாக இருப்பதால் மட்டுமே அவர்களுக்கு கிடைக்கின்றது. இந்த வசதிகளை தக்க வைப்பதற்காக ‘சட்டிக்கும், பானைக்கும், சாப்பாட்டுக்கும்” கையேந்தும் நிலையில் உள்ள மக்களை ‘சமஸ்டி” வாங்கி தருவதாக ஏமாற்றி வாக்குகளை வாங்கி மீண்டும் பாராளுமன்ற பதவிகளில் வந்தமர்வதற்கு முனைகிறார்கள். கடந்த நான்கு வருடங்களாக பதவியிலிருந்த போது இனப்பிரச்சினை சம்பந்தமாக பேச வருமாறு நான் கூட்டமைப்பினர்களுக்கு பலமுறை அழைப்பு விட்ட போதும், அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினை பற்றி என்னுடன் கதைப்பதை தவிர்த்துக் கொண்டார்கள். விடுதலைப்புலிகள் சொல்லுவதையே கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இதேபோன்று விடுதலைப் புலிகளுடன் நாங்கள் ஜெனிவாவில் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போதும் தமிழர்களின் அதிகாரபகிர்வு திட்டம் சம்பந்தமாக பேசுவதற்கு விரும்பியிருந்தோம். ஆனால் புலிகள் தங்களின் பிழைப்பை நோக்கமாக கொண்ட ஏ9பாதை திறப்பது சம்பந்தமாகவே எங்களுடன் பேச முற்பட்டார்களே ஒழிய தமிழர்களின் அரசியல் தீர்வுதிட்டம் சம்பந்தமாக பேச மறுத்து விட்டார்கள். தமிழர் தரப்பினர் எந்தவொரு காலத்திலும் மனச்சுத்தியுடன் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தையில் சிங்கள தரப்புடன் ஈடுபடவில்லை என்பது தான் உண்மையாகும்.
‘சர்வகட்சி குழு” அமைக்கப்பட்டதே தமிழர்களின் இனப்பிரச்சினையை ஆராய்ந்து அதற்கான தீர்வு திட்டத்தை இனம்கண்டு அதை நடைமுறைபடுத்துவதற்கே. ஆனால் இந்த ‘சர்வகட்சிக்குழு”வில் சிங்களவர்களை பிரதிநித்துவப்படுத்தும் சிங்கள கட்சிகளும் அதன் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். முக்கியமாக இந்த ‘சர்வகட்சிகுழு”வில் கலந்து கொண்டு தங்களுக்குரியதான தீர்வை முன்வைத்து பேசவேண்டிய தமிழர்களின் பெரும்பான்மை பாராளுமன்ற பிரதிநிதிகளை வைத்திருந்த தமிழர் தரப்பினரான கூட்டமைப்பினர்கள் ‘சர்வகட்சி குழு”வில் கலந்து கொள்ளவில்லை என்கின்ற பொழுது அவர்களுக்கு தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் அக்கறையிருந்திருக்கவில்லை என்பதுதான் உண்மையாகும். சதாகாலமும் சிங்கள தரப்பினரை தமிழர்கள் தரப்பினர் குற்றம் சாட்டுவதை தவிர வேறு எதையும் இதுவரை அவர்களால் செய்யததில்லை.
உண்மையில் தமிழர்கள் கேட்கும் ‘சமஸ்டி” ரீதியிலான தீர்வை அவர்கள் விரும்பியிருந்திருந்தால் எதிர்கட்சியான ஐ.தே.கட்சியையும் தங்களுடன் இணைத்துக் கொண்டு சர்வகட்சி குழுவில் இணைந்து செயல்பட்டு தங்களுக்குரிய தீர்வை முன்வைத்திருக்கலாம்.
கூட்டமைப்பினர் என்னை ஜனாதிபதி தேர்தலில் வீழ்த்துவதற்காக ஜ.தே.கட்சியுடனும், ஜே.வி.பியினருடனும் ஒன்றினைந்து செயலாற்ற முடியுமென்றால் ஏன் அதே ஐ.தே.கட்சியையும், ஜே.வி.பியினரையும் சேர்ந்து சர்வகட்சி குழுவில் தங்களுக்குரிய தீர்வை முன்வைக்க கூடாது?
அப்பொழுதெல்லாம் தாயகம், சுயநிர்ணய உரிமை, ‘சமஸ்டி” போன்றனவை பற்றிப் பேசாத கூட்டமைபினர் இப்பொழுது தேர்தல் காலங்களில் மட்டுமே இவைகள் பற்றி பேசுகின்றார்கள். இவைகள் எல்லாம் மக்களை ஏமாற்றுவதற்கே ஒழிய வேறென்றுக்குமல்ல.
கேள்வி: ஆரம்பத்திலிருந்தே நீங்கள் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவேன் என்றும், தேவைபட்டால் 13வது திருத்தச் சட்டத்துக்கு மேலாகவும் போகலாம் எனவும் கூறிக்கொண்டு வந்திருந்தீர்கள். ஆனால் இப்பொழுதோ திடீரென்று பொலிஸ் அதிகாரத்தை கொடுக்க முடியாது என்றும், அத்தோடு வடகிழக்கை இணைப்பதற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஊடக செய்திகள் வெளிவருகின்றன. இவகைகள் பற்றி என்ன கூறுகின்றீர்கள்?
பதில்: நான் கூறியவற்றை சிலர் தங்களுக்கு புரிகின்ற மாதிரி விளங்கிக் கொண்டு பேசுகிறார்கள். பெரும்பான்மையாக தமிழர்கள் வாழும் வடகிழக்கு மாகாணங்களை தான் நான் ஒன்றாக இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தேனே தவிர, மற்றைய சிங்கள பெரும்பான்மை மக்கள் வாழும் மாகாணங்களுடன் வடகிழக்கை இணைப்பதற்கு நான் எப்பொழுதாவது எதிர்ப்பு தெரிவித்தேனா?
என்னை பொறுத்தவரை வடகிழக்கு மாகாணங்களை சேர்ந்த திருகோணமலை, அம்பாறை, வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களில் பெரும்பாண்மை இனத்தின் விகிதாசாரத்தை அதிகரிப்பதன் மூலம் வடக்கு மாகாணத்தை வடமத்திய மாகாணத்துடனும், கிழக்கு மாகாணத்தை மத்திய மாகாணத்துடனும் இணைப்பதன் மூலம் பிரிவினைவாதத்தை தவிர்க்கலாம் என்பதே எனது எண்ணமாகும். இதற்காகதான்; நாம் மேற்கூறிய மாவட்டங்களில் முடிந்தளவு சிங்களவர்களை குடியேற்ற முற்படுகின்றோம்.
13திருத்த சட்டத்தை பொறுத்தவரை, அந்த சட்டதிருத்ததின் அடிப்படையிலேயே ‘வடக்கு” தவிர்ந்த ஏனைய மாகாணங்கள் செயல்படுகின்றன. அந்த மாகாணங்களுக்கு மட்டுமே மேலதிக அதிகாரங்களை வழங்க முடியும் என்று நினைத்து சொன்னேனே தவிர வடகிழக்கு மாகாணங்களுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவதாக நான் எப்பொழுதுமே கூறியதில்லை.
நீங்கள் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்!.. கிழக்கு மாகாணம் ஒர் முன்னாள் போராளி ஒருவர் மூலம் செயல்படுகிறது. அங்கே பொலிஸ் அதிகாரங்கள் யாவும் எனது கட்டுப்பாட்டிலே இருக்கின்றது. அப்படியிருந்தும், அரசாங்கத்துக்கு தெரியாமல் கிழக்கு மாகாண முதலமைச்சரும், கருணா குழுவினரும் கிழக்கு மாகாணத்தில் இன்றும் இயக்க உறுப்பினர்கள் போன்றே கப்பம் வாங்குதல், கொலை செய்தல், பொதுமக்களை பயமுறுத்துதல், ஆட்கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாக எனக்கு தகவல் நாளும் வருகின்றன. அதேபோன்று வடக்கிலும் உள்ள ஓர் தமிழ் அரசியல் பிரமுகர் அரச பாதுகாப்பு படைகளின் பாதுகாப்புடன் இருந்து கொண்டு யாழ். மாவட்டத்தில் பல கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் சம்பவங்களை மேற்கொள்ளுவதாக எனக்கு தகவல் வருகின்றது. இவர்களை நம்பி நான் எப்படி பொலிஸ் அதிகாரத்தை வடகிழக்கு மாகாணங்களுக்கு வழங்க முடியும் சொல்லுங்கள் பார்க்கலாம்?
இவர்களின் கைகளில் பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்வதைபோன்றே வடகிழக்கு மக்கள் வாழவேண்டும் என்பதை நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். அதனால்தான் நான் இப்போதைக்கு பொலிஸ் அதிகாரத்தை வடகிழக்குக்கு வழங்க முன்வரவில்லை.
கேள்வி: மாநிலத்தில் ‘சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறாரோ? அவரின் இந்த நிலைப்பாட்டில் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்: அது அவர்தான் சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர நான் அப்படி ஒன்றும் கூறவில்லை. அதனால் இதை பற்றி நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்.
கேள்வி: மாவீரர்கள் துயிலும் இல்லங்களை இராணுவத்தினர் அழித்து வருவதாகவும், இந்த செயலானது தமிழர்கள் தங்களின் மனங்களை மிகவும் துன்புறுத்துவதாக விசனப்படுகிறார்களே?
பதில்: மாவீரர்கள் என்பவர்கள் யார்? பள்ளிக்கூடம் போன பிள்ளைகளை தாய் தகப்பனிடமிருந்து பிரித்து கட்டாயப்படுத்தி பிடித்துக் கொண்டு போய் ஆயுதப்பயிற்சி கொடுத்து போர்முனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பலி கொடுக்கப் பட்டவர்கள். ஒரு குழந்தை பிள்ளையை யாராவது கடத்திக் கொண்டு போய் கொலை செய்து புதைத்தால் பொலிஸ்காரர்கள் என்ன செய்வார்கள்? புதைத்த பிள்ளையை அடையாளம் காண்பதற்கு தோண்டித் தான் எடுப்பார்கள்.
மாவீரர்கள் துயிலும் இல்லங்கள் வெறும் கல்லறைகள். அங்கே நமது படையினர் தோண்டிப் பார்த்த போது எந்த உடல்களும் புதைக்கப் பட்டிருக்கவில்லை. புலிகள் போரை நடத்தி புலம்பெயர் தமிழர்களுக்கு பூச்சாண்டி காட்டியது போன்று இந்த கல்லறைகளையும் கட்டி காட்சிப் பொருட்களாக காட்டி பணம் சம்பாதிப்பதற்கு முனைந்திருக்கிறார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது.
அல்லாவிட்டால், நாட்டுக்காக போராடியவர்களின் ஆத்மாக்களுக்கு மரியாதை செலுத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டு புலம்பெயர் நாடுகளில் மாவீரர் விழா நடத்தி எப்படி காசு வசூலித்தார்கள்? உண்மையில் ஒரு தியாகியினுடைய ஆத்மாவை யாரும் விற்று பிழைக்க மாட்டார்கள். ஆக, மாவீரர்கள் என்பவர்களின் ஆத்மாக்களை அவர்கள் விற்று பிழைக்கும் போது மனம் துடிக்காதவர்கள் அவர்களுக்காக கட்டப்பட்ட கல்லறைகளை அழிக்கின்ற போது மட்டும் ஏன் துடிக்கின்றார்கள்? நாங்களும் அவற்றை பாதுகாத்து வைத்திருந்து, புலம்பெயர் நாடுகளிலிருந்து இங்கே வரும் தமிழர்களுக்கு அதை காட்சிபொருளாக பயன்படுத்துவதன் மூலம் காசு சம்பாதிக்கலாம் ஆனால் நாங்கள் அப்படி செய்ய விரும்பவில்லை.
கேள்வி: புலிகளை அழிப்பதற்கு உங்களுக்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தான் உதவிசெய்ததாக புலம்பெயர் புலியாதரவாளர்கள் கூறுகிறார்களே?
பதில்: இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் மட்டுமல்ல, முக்கியமாக மேற்கத்திய நாடுகள் தான் புலிகளை அழிப்பதற்கு நமக்கு உதவி புரிந்ததோடு, ஆதரவும் வழங்கினார்கள். இதனால்தான் பாரிய போராட்டங்களை புலம்பெயர் புலியாதரவாளர்களால் மேற்குலக நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட போதும் மேற்குலகத்தினர் நமது பக்கம் இருந்தார்களே ஒழிய, புலிஆதரவு சக்திகளின் பக்கம் சாய்ந்திருக்கவில்லை என்பதை நீங்கள் நினவில் கொள்ள வேண்டும். போரை நிறுத்தச் சொல்லி எந்தவொரு நாடும் எங்களை கேட்டுக் கொள்ளவில்லை. மாறாக முடிந்தவரை மக்கள் பாதிக்கப்படாமல் புலிகளை அழித்தொழிப்பதில் புலிகளுக்கு ஆதரவாக இருந்த நோர்வேயிலிருந்து மற்றைய ஜரோப்பிய நாடுகளும் எங்களுக்கு அனுசரணை வழங்கினார்கள் என்பது தான் உண்மை.
புலம்பெயர் தமிழர்கள் மேற்குலக நாடுகளின் தயவில் வாழ்வதால் மேற்குல நாடுகளை குற்றம் சுமத்தாமல் இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் மட்டுமே புலிகளை அழிப்பதற்கு இலங்கைக்கு உதவியதாக சொல்ல முற்படுகிறார்கள் அவ்வளவே. மேற்குலக நாடுகள் தான் புலிகளுக்கு ஆயுதம் வழங்கி புலிகளை வளர்த்து விட்டார்கள். ஆனால் அவர்கள் புலிகளை காப்பாற்ற முன்வரவில்லை என்பதையாவது புரிந்து கொண்டால் மேற்குலகத்தினர் புலிகள் இயகத்துக்காக எந்தளவு