முப்பது வருடம் வெற்றிகளையும் தோல்விகளையும் அவலங்களையும் அழிவுகளையும் சந்தித்த ஒரு தேசிய இனத்தின் எச்ச சொச்சங்கள் என்றால் எத்தனை அறிவு பூர்வமான விவாதங்கள் ஆக்கபூர்வமான நகர்வுகளைக் கண்டிருக்க முடியும்? கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு சமூகம் இருளுக்குள் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை மட்டும் யாரும் இலகுவில் உணர்ந்து கொள்வார்கள்.
முள்ளிவாய்க்காள் இழப்புக்கள் வரைக்கும் இராணுவ வெற்றிகளையும் அரசியல் தோல்விகளையும் அறுவடை செய்திருக்கிறோம். அத்தனை நண்பர்களையும் எதிரிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். அத்தனை எதிரிகளையும் நண்பர்கள் என்று நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
மூன்று கால் நூற்றாண்டுகளாக ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒன்றின் நியாயமான போராட்டம் தடையங்கள் கூட இல்லாம் துடைத்தெறியப்பட்டதற்கு பின்னணியில் இயங்கிய அதே வியாபாரிகளும் சந்தர்ப்பவாதிகளும் எந்தத் தயக்கமுமின்றி மீண்டும் மீண்டும் முளைத்தெழுகிறார்கள். தம்மைத் திருத்திக் கொண்டல்ல. அதே சாகடிக்கப்பட்ட வழிமுறைகளை மூட்டை மூட்டையாக முதுகில் சுமந்துகொண்டு மக்களை நோக்கி வருகிறார்கள்.
இராணுவ வெற்றிகளை உதாரணம் காட்டியே நிலை கொண்ட போராட்ட வரலாறு பல கசப்பான அனுபவங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த வெற்றிகளை சுட்டிக்காட்டியே தம்மைச் சுற்றி கதாநாயகர்கள் போன்ற விம்பத்தை உருவாக்கிக் கொண்ட அதே முகங்கள் இன்று அரசியல் வெற்றி பெறுவதாக மக்களை மாயைக்குள் வைத்திருக்க முற்படுகிறது.
அமரிக்கா இலங்கை அரசை துவம்சம் செய்கிறது; பிரித்தானியா ராஜபக்சவை அழித்துவிடப் போகிறது; “சரவதேசம்” ஈழம் பெற்றுக் கொடுக்கப் போகிறது; ரொபேர்ட் பிளேக் ராஜபக்சவைக் கடிந்து பேசிவிட்டுத் திரும்பியிருக்கிறார்; ஐ.நா இலங்கையை மனித் உரிமையால் சுற்றி வழைத்திருக்கிறது… இவையெல்லாம் முள்ளி வாய்க்கால் அழிவின் பின்னர் தமிழ் ஊடகங்களில் நாளாந்தம் வெளியாகின்ற “உற்சாகமூட்டும்” செய்தித் துளிகள்.
குறிப்பாகப் புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற உணர்வு பூர்வமான தமிழ்ச் சமூகத்தை “கொதி நிலை -உத்வேகத்தில்” பேணிக் கொள்வதற்காக இவ்வாறான செய்திகள் கருத்துக்களாக வெளியாகின்றன.
மறுபுறத்தில் ஈழத்தில் வாழ்கின்ற தமிழர்களை போராடாமல் தடுப்பதற்காக இதே செய்திகள் பரப்பப்படுகின்றன.
இரண்டு பிரதான சாதனைகள ஊடகங்கள் செய்து முடிக்கின்றன:
1. ஈழத்தில் மக்களைப் போராடாமல் தடுப்பது.
2. போராட்டத்தை வெற்றியை நோக்கி நகர்த்துவதற்கான அத்தனை வழிகளையும் தவறான நம்பிக்கைகளை வழங்கி மூடுவது.
முள்ளிவாய்க்காலில் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட வேளையில் அமரிக்கா படையோடு வருகிறது என்று நம்பிக்கை வழங்கப்பட்டது. அமரிக்க அதிகாரிகள் கொல்லப்படுவதை செய்மதியில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
லட்சக் கணக்கில் முகாம்களில் மக்கள் அடைத்து வைத்துச் சித்திரவதை செய்யப்பட்டபோது, மனித உரிமை கோரி ஐ.நா ராஜபக்ச வீட்டு வாசலுக்கே வந்துவிட்டதாக நம்ம்பிக்கையூட்டப்பட்டது. ஐக்கிய நாடுகள் செயலாளர் பன் கீ மூன் முகாம்கள் உலகத் தரத்தில் இருப்பதாக அறிக்கை விடுத்தார்.
அமரிக்க பாக்கிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறிப் புகுந்து ஒபாமாவைக் கொலைசெய்து விட்டு திரும்பிய மறு நாளே ரோபர்ட் பிளேக் இலங்கை சென்றார். ராஜபக்ச குடும்பத்தைக் கையோடு கூட்டிவந்து கூண்டில் அடைத்து விடுவார்கள் என்ற எல்லைக்கு நம்பிக்கை தரப்பட்டது. இலங்கையின் இதயத்தில் கால்வைத்துக் கொண்டே பிரபாகரனும் ஒபாமாவும் ஒரே வகையானவர்கள் என்று ராஜபக்ச அரசாங்கத்தைப் பாராட்டிவிட்டு வந்திருக்கிறார்.
கடந்த வாரம் மகிந்த ராஜபக்ச அமரிக்க சென்ற போது அங்கே பிடித்து அடைக்கப்போகிறார்கள் என்று பூச்சாண்டி காட்டப்பட்டது. இறுதியில் ராஜபக்ச பரிவாரங்களோடு நியூயோர்க் தெருக்களில் வலம்வந்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்.
பிரித்தானியப் பாராளுமன்றத்தில் இலங்கைப் பிரச்சைனையைப் பேசி வானத்தைப் பிளக்கிறார்கள் என்று நம்பிக்கை தரப்பட்டது. இன்று பிரித்தானிய தூதுவர் புலிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப் படவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் பின்னர், இனச் சுத்திகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றங்கள், பௌத்த சிங்கள மயமாக்கல், பாலியல் வல்லுறவுகள் என்று அத்தனை வழிகளிலும் இலங்கையில் மனித அவலத்தைத் திட்டமிட்டு ராஜபக்ச அரசு அரங்கேற்றுகிறது.
ஆனால் ராஜபக்ச சாம்ராஜ்யத்தின் சுவரிலிருந்து சாந்து கூடக் கொட்டவில்லை. மேலும் மேலும் தன்னைப் பலமாக்கிக் கொள்ளும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டங்கள் ஏதும் எழுந்து விடாமல் புலம் பெயர் தலைகளும் அவற்றிற்கு அரோகராப் போடும் ஊடகங்களும் பாதுகாத்துக் கொள்கின்றன.
அமரிக்காவும் ஐரோப்பாவும் இந்தியாவும் இதுவரைக்கும் ராஜபக்ச அரசிற்கு நேரடியாக எந்தத் தொல்லையும் தரவில்லை. மாறாக, பக்கபலமாகவே செயற்படுகின்றன. இந்த அரசுகள் மீது நம்பிக்கை கொள்ளச் சொல்கின்ற அரசியல் வியாபாரிகளின் கபட நாடகமும், அவர்களைப் பின் தொடரும் பாமரத் தனமும் தமிழ்ப் பேசும் மக்களின் “சாபக் கேடு”.
மக்கள் மத்தியில் இவ்வாறான நச்சுக் கருத்துக்களை விதைக்கும் தமிழ் ஊடகங்கள் வெளியிடுகின்ற செய்தியில் மறந்தும் அமரிக்கா போன்ற அதிகார வல்லரசுகளுக்கு எதிரான செய்திகளைக் காணக் கிடைப்பதில்லை.
லிபியாவைக் கொள்ளயிடுவதற்காக தலையீடு செய்த நேட்டோ, கடாபி மீது முன்வைத்த குற்றச் சாட்டுக்கள் பொய்யானவை என ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. இன்று உலக அரசியலின் ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியில் இது குறித்த பல விவாதங்கள் நடைபெறுகின்றன. தமிழ் ஊடகங்களுக்கு இதெல்லாம் பாரமான செய்திகள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். ஜே.வி.பியில் முக்கிய பிரிவொன்று பிளவுற்று தமிழ்ப் பேசும் மக்களின் சுயனிர்ணய உரிமைக்காக சிங்கள மக்களும் கூடப் போராட வேண்டும் என வெளிப்படையாகக் கூறுகிறது. இச்செய்தி கிசுகிசு செய்திபோல எங்கோ மூலையில் முகிழ்த்து மடிந்துவிட்டது.
உலக அதிகாரங்களின் வெற்றுக் கண்டனங்களை இலகுவில் புறக்கணித்துவிடும் ராஜபக்ச பாசிசம், தெற்கிலிருந்து எழும் போராட்டங்களைக் கண்டு அஞ்சுகிறது. அரசு பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பிற்கு உட்படும் போது அது பலவீனமடைகிறது.
அரபு நாடுகளின் அண்மைய எழுச்சிகளிலிருந்து வரலாறு முழுவதும் எமக்குக் கற்றுத்தரும் பாடம் கூட இதுதான். ஜே.வி.பியிலிருந்து முளைவிடும் முற்போக்கு அணி, ராஜபக்ச அரசைப் பலவீனப்படுத்தும் என அறிந்திருந்தும் நமீதாவிற்கும் விளம்பரங்களுக்கும் வழங்கும் முக்கியத்துவத்தைக் கூட தமிழ் ஊடகங்கள் இதற்கு வழங்கவில்லை.
ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு வழங்கும் அரசியல் வியாபாரிகளின் தடைகளைக் கடந்து புதிய ஜனநாயக முற்போக்கு அணி இலங்கையில் உருவாவது அவசியமானது அவசரமானதும் தேவையாகும்.








போலி இடதுசாரிகளான ஜேவிபி ஒரு சிங்கள இனவாத கட்சியென்பது வடகிழக்கு தமிழிரிடையே ஐயம்திரிபற நிருபணமாச்சு. எனியும் சோமன்வசா ரில்வின் சில்வா வகையறுக்களை வைத்து தமிழரை இடதுசாரிய புரட்சி பீலாகாட்டி உரிமைபோராட்டத்தை திசை திருப்ப முடியாது என்பது சென்ற உள்ளுராட்சி தேர்தலுடன் பட்டுத்தெளிஞ்சாச்சு. இனி உள்ள அடுத்த வழிதான் தமிழர் உரிமையை வலியுறுத்தி தோன்றும் புதிய மாற்றான ஜேவிபி. இதன் தலைவராக மறக்காது ஒரு தமிழ்பெயர் வருவதுமாதிரியும் செற்ரப் செய்தாச்சு.(சந்திரசேகரன் என்ற சிங்களகைக்கூலி ஜேவிபி கட்சியிலிருந்து கொண்டு வடகிழக்கு தமிழருக்கு எதிராக வசைமாரி பொழிந்ததை ஈழத்தமிழன் மறக்கவில்லை.) எனியென்ன வடகிழக்கு தமிழரை இடதுசாரிய புரட்சி பீலாகாட்டி தமிழரின் உரிமைபோராட்டத்தை திசை திருப்ப திட்டம் தயார். ஆனால் இந்த சிங்கள இனவாத பேராசையை நிறைவேற்ற துடிக்கும் போலிகளிடம் ஏமாற தமிழர்கள் தயாரில்லை. இருந்தும் கோசலனின் சிறிலங்கா அரச வருமானத்திற்கு பங்கமில்லை.
நாலுபேரை வைத்து பிழைக்கத்தெரிந்த பேர்வளியான நிர்மலன் படுமுட்டாள்தனமாக இங்கு கருத்து தெரிவித்து இத்தளத்தின் தெனாலிராமனாக இருக்க முனைவதாக என்னால் கருதமுடியவில்லை. மாறாக புலிகளுக்குள் இருந்து கொண்டே புலிகளின் தலைவருக்கு கழுத்தறுத்தவர்கள் போல மிக தீவிரமான புலிஆதரவாளர்போலவும், த்மிழ்த்தேசியத்தின் காவலர்போலவும் பாவ்லா காட்டியபடி அதற்கெதிராக வேலைசெய்கின்ற அரசின் ஆள் என்பது துல்லியம். ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புக்கள் பாணியில் மாற்று மதத்தவர்பற்றியும், ஏனைய இனத்தவர் பற்றியும் முன்னெடுத்துவரும் துர்ப்பிரச்சாரங்களை உற்றுநோக்கினாலே இதுபுரியும். இனியொரு விகடகவிகளுக்கும், ஜனநாயகம் வழங்கவேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக சுயநலநோக்கங்களுக்காக கருத்துதெரிவிப்பவர்களுக்கு இடமளித்து உங்கள்தரத்தை குறைத்துக்கொள்ளவேண்டாம்.
தேனீ! அதெப்படி சொல்லி வைச்சதுபோல் குறிப்பிட்ட சிலரால் விடயத்துடன் சம்பந்தப்பட்டு பேசாது ஏதேதோ மட்டும் பேச முடிகிறது! உங்களிற்கு தரப்பட்ட பயிற்சி அப்படிபட்டதா?
இனியொரு ஏற்கனவே எனது பல பின்னூட்டங்களை அழித்து தனது கையதளகத்தனத்தை காட்டிக்கொண்டிருக்கிறது. அது போதாது நிர்மலனை முழுமையாக தடைசெய்ய பரிந்துரைக்கிறீர்கள். இதனால் நிர்மலனுக்கு ஏதும் இழப்பு ஏற்படபோவதில்லை; என்ன இனியொருவின் கருத்துச்சுதந்திர கப்சாதான் அதன் வாசகர் வட்டத்திடம் அம்பலமாகும்!
“இனியொரு ஏற்கனவே எனது பல பின்னூட்டங்களை அழித்து தனது கையதளகத்தனத்தை காட்டிக்கொண்டிருக்கிறது. அது போதாது நிர்மலனை முழுமையாக தடைசெய்ய பரிந்துரைக்கிறீர்கள். இதனால் நிர்மலனுக்கு ஏதும் இழப்பு ஏற்படபோவதில்லை” ஆமாம். நிர்மலனின் கருத்துககளை வெளியிடாவிட்டால் தமிழ்சமூகத்திற்கே கருத்துவறட்சி ஏற்பட்டுவிடும். கொடுமைடா சாமி !!!
நிர்மலன், இன்றைய தேதியில் ராசபக்சவுடன் தேனிலவு அனுபவிப்பவர்கள் உங்களைப் போன்ற அறிவீனமாக தேசியம் பேசும் கோமாளிகள் தான். உங்களுக்கு ராசபக்சவை வீழ்த்துவது நோக்கமல்ல. மக்களிடமிருந்தும் ராசபக்சவிடமிருந்தும் பணத்தை வீழ்த்தி உங்கள் கல்லாப்பெட்டிக்குள் போட்டுக் கொள்வது தான் நோக்கம். நிர்மலன் கறுப்பு கடைசி வெளியீடு பார்த்தீர்களா? உங்கள் நண்பர் பழைய தீவிர புலி சுகந்தனின் ராசபக்ச டீல் ஓடியோ வாக வந்திருக்கிறது. அதைவிட ஒரு பேப்பர் பார்த்தீர்கள்?? கோவிலில் சுருட்டிய பணத்தை போட்டிருக்கிறார்கள். நிர்மலன், இப்படியெல்லாம் சுருட்டியதால் தானோ எதை எடுத்தாலும் பணம் பற்றியே கதைக்குறீர்கள்? ஆள்காட்டி ஆள்கடத்தி, உளவாளி, எல்லாம் தேசியம் பேசுற கலிஹாலம் நடக்குதையா!
ஜேவிபியின் பிளவு நாடகத்தை நடத்துவது இந்தியப்புலானாய்வு பிரிவு றோவா! சிறிலங்கா புலாய்னாய்வுப்பிரிவா! என்ற தலைப்பில் பல செய்திகள் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
மற்றப்படி நிர்மலனின் கருத்திற்கு எதுவும் தொடர்பற்ற விதத்தில் என்னுடன் எத்தொடர்புமற்ற நபர்களை விடயங்களை சொல்வது கருத்துவறுமையே அன்றி வேறுஎதுவுமல்ல. பாவம் நீங்களும் என்ன செய்ய முடியும். உங்கள் சட்டிற்குள் எதாவது உருப்படியாக இருந்தால்தானே அகப்பையில் வருவதிற்கு.
நிர்மலனாவது, ´இது நிர்மலனின் கருத்து´ என்று வெளிப்படையாக வருகிறார்.அதுக்கும் தெம்பில்லாத நீரெல்லாம் கருத்துச்சொல்ல வந்திட்டீர் ரெட்டு.உமக்கும் எல்லாத்தையும் விட்டு, பணம்தானே பெரிசாப்பட்டிருக்கு?
தமிழ் வர்த்தகர்களின் வளர்ச்சியே தமிழர்களின் வளர்ச்சி என்றுஒரு விளம்பரம் தமிழ் தேசியத்தின் லண்டன் குத்தகைத்தாரர் “கவிஞர் “ராஜமனோகரன் நடாத்தும் ஐ .எல்.சி என்ற வானொலியில் ஒலித்துகொண்டிருக்கிறது. இந்த கட்டுரை அந்த வானொலி கேட்ட பின்னர் தான் எழுதபட்டதோ என் என்ன தோன்றுகிறது.தமிழ் தேசியம் என்றும் நல்ல வியாபார சரக்காக இருக்க வேண்டும் என்பதே புலிகள் தொடங்கி ஏனைய வியாபாரிகளின் நோக்கமாகும்.
இந்திய தமிழ் தேசியவாதிகளின் நோக்கமும் அதுவே.
மக்கள் காலகாலமாய் அடக்கப்பட்டு போராட என்று எழுந்த போது கிரிமினல்கள் போராட்டத்தை கையில் எடுத்தார்கள். இப்பொது அந்தக் கிரிமினல்களே என்னமும் போராட்டத்தை கையில் எடுக்க புறப்படுகிறார்கள். என்ன செய்வது?
//ஆமாம். நிர்மலனின் கருத்துககளை வெளியிடாவிட்டால் தமிழ்சமூகத்திற்கே கருத்துவறட்சி ஏற்பட்டுவிடும். கொடுமைடா சாமி !!!
// என நானெங்காவது சொல்லியுள்ளேனா? நீங்களே இவ்வசனங்களை புனைந்துவிட்டு அதையே “கொடுமையடா சாமி” என்பதை பார்த்து எள்ளி நகைக்கத்தான் முடியும்.சுயசிந்தனையற்றவர்கள் குதர்க்க தனமாக எழுதுவது வழமை என்பதை உங்கள் நடத்தையில் தாரளமாக பார்க்க முடிகிறது.
எனது கூற்றை மேலும் வலுப்படுத்தும் விதமாக வெளியாகியுள்ள இரு தகவல்களை தெரிவிக்க விரும்புகிறேன்.
1)ஜேவிபியின் மாற்று அணியினர் தாம் மறைந்த ரோகனாவிஜயவீராவின் கொள்கை நிலைப்பாட்டை தீவிரமாகமுன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர். ரோகனாவிஜயவீராவின் கொள்கை நிலைப்பாடு என்பது இந்தியாவின் விஸ்த்தரிப்பு வாதத்தை மிகக்கடுமையாக எதிர்த்தல்.நல்லது அதில் எமக்கும் சம்மதம்தான் ஆனால் இந்தியாவின் விஸ்த்தரிப்பு வாத கருவியாகவே தமிழர்களை அதிலும் மலையகதமிழர்களை அடையாளப்படுத்துகிறது ரோகனாவிஜய வீராவின் கொள்கை நிலைப்பாடு. இதுவொரு சிங்கள பேரினவாதநிலைப்பாடே.
ஐதேக சுதந்திரகட்சி போலிக்கொம்முனிசிட்டுக்களின் சிங்களபேரினவாத நிலைப்பாட்டிற்கு எந்தவகையிலும் குறைந்ததல்ல ரோகனாவிஜயவீராவின் தமிழர் தொடர்பான நிலைப்பாடு. மற்றவர்கள் சிங்கங்கள் என்றால் ரோகனாவிஜயவீரா முதலை. இவரது கொள்கையில் ஊறி வளர்ந்தவர்களே நாம் இன்று பார்க்கும் தீவிரசிங்கள இனவாதிகளான விமல்வீரவம்ச சோமவம்ச ரில்வின் சில்வாக்கள். இவர்களுடன் கடந்த 20 வருட இனவாத அரசியல் செய்தவர்கள்தான் இந்த புதிய ஜேவிபியின் மாற்று அணியினர். அவர்கள் 40 வருடகாலத்தில் பட்டுணர்ந்தது தமிழர்கள் தீவிரமாக போராடக்கூடியவர்கள் மிகப்பெரும்பாலான தமிழர்கள் சிறிலங்கா அரசபயங்கரவாத எதிர்ப்பு நிலையுடையவர்கள். இவற்றை இலாவகமாக பாவித்து தமது ரோகனாவிஜய வீரா எண்ணத்தை ஈடேற்றுவதும் ஈழக்கோரிக்கையை மழுங்கடிப்பதும் ஈழத்தமிழருக்கெதிராக மேற்குலகு+ இந்தியாவை மேலும் மூர்க்கமுடன் திசைதிருப்பி சிறிலங்கா பேரினவாதம் சந்திக்கும் மேற்குலக அழுத்ததை தவிர்ப்பதும் எனும் உத்தியே காணப்படுகிறது. அதாவது “ஆறுகடக்கும் மட்டும்தான் அண்ணன் தம்பி உறவு”
2)”மேற்குலக நாடுகளில் பரந்து காணப்படுகின்ற புலம்பெயர் சமூகம் இலங்கை தொடர்பான தவறான கருத்துகளையும் பரப்பி வருகின்றது எனவே இவற்றை முதலில் முறியடிக்க வேண்டும் எனவும் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சர் குறிப்பிட்டார்.” எனச்செய்தி சொல்கிறது.இதன்வடிவம்தான் ஈழத்தமிழரை ஒண்றிணைக்கும் தேசீயகொடி எதிர்ப்பும். ஈழத்தமிழருக்கு ஜேவிபியின் மாற்று அணியினர் ஊடக சமவுடமை புரட்சியும் அதனூடு உரிமை மீட்புஏனும் புலுடாக்களும்.
தமிழர்கள் சிங்கள பேரினவாதத்திடம் இழந்தது ஏமாந்தது போதும் நவீன சிங்கள+ முஸ்லீம் சேகுவராக்கள் சமவுடமை புரட்சி செய்து தமிழரின் உரிமையை தரட்டும். அதுவரை போராடி களைச்ச நாங்கள் கொஞ்சம் ஒய்வெடுக்கின்றோம்.
கோயில் வைத்து உண்டியல் குலுக்கியும் களைத்துப்போவார்களா என்ன?
கொசலன் -முதல்ல நீங்கல் JVP யின் கில குலுனவை வைத்து இமய மலையில் எரலாம் என சொன்னாலும் பரவாயில்லை செவ்வாய்கு பொய் குடியிருக்க்ப் பொகிரன் எங கிர மாதிரி இருக்கு. இரன்டு வசனம் இலக்கனப் பிலையில்லாமல் எலுதத் தெரித்தால் எலுத்தாலர் அகிவிடுவிஙலொ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
திரு.கோசலன்
நமது இன்றய நிலைக்கு காரணம் நிச்சயமாக நம்மில் உள்ள கொடிய வியாபாரிகள் என்பதில் மறுப்பு கிடையாது.இவா்கள் மரங்களில் ஒட்டி வாழும் குருவிச்சை போன்று எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளனா் இவா்களை இனம் காணும் அளவிற்கு நம் இனத்தின் பெரும் பகுதியினா் தகுதியற்றவா்களாகவே உள்ளனா்.ஆனால் நீங்கள் கூறும் இலங்கையின் இடதுசாரிகளான யேவிபி யினரில் சிலா் பிரிந்து திடீரென ஞானம் பிறந்தவா்களாக வேசம் போடுவதை நம்பச்சொல்வதும் அதை தூக்கிப்பிடிக்கவில்லை என்று கண்ணீா் வடிப்பதும் ஒரு பிரயோசனமற்ற செயலாகவே தெரிகிறது.
பேரினவாதிகளிடமிருந்து எந்தவொரு காலகட்டத்திலும் நல்ல செய்தியை நாம் எதிர்பார்க்கவே முடியாது காரணம் பெரும்பான்மை சிங்கள மக்கள் இருட்டிலேயே வைக்கப்பட்டுள்ளார்கள் அவா்களை பேரினவாதிகள் வெளியில் வர அனுமதிக்கப்போவதில்லை.அடுத்ததாக இடதுசாரிகளின் ஆதங்கம் புரிகிறது இந்தவகையிலாவது புரட்சி ஒன்று ஏற்பட்டு பாலை வார்க்க மாட்டார்களா என்று கனவு காண்பது தெரிகிறது,எந்தப்புரட்சியும் எப்போதும் போல் நசுக்கப்படுவது உறுதி அத்தோடு இந்தப்புரட்சிகளால் தமிழ் இனத்திற்கு எந்தப்பிரயோசனமும் ஏற்பட்டுவிடாது.
பா்மாவின் கதையும் முடிகிறது கியூபாவில் தனியார் மயப்படுத்தல் ஆரம்பமாகிவிட்டது பாவம் நேபாளியா்கள் காலம் தெரியாது காலை வைத்துவிட்டுவிட்டார்கள் எத்தனை நாளைக்கோ.
ஜனநாயக வழியில்!, வன்முறை நீத்த ! ஒரே ஒரு தமிழ் கருத்தாளன் ! நிமலன் மட்டும் தான் ….
மாற்றுக் கருத்தக்கள் – அதற்கான விமர்சனங்கள்> அந்த விமர்சனங்கள் எப்படியிருந்தாலும் – நீண்டகாலத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள அனுபவம். ஒரு ஆரோக்கியமான அனுபவம்.
இரண்டாவது விடயம் எங்களுக்கு அப்பாற்பட்ட மற்றவர்களை- தவறானவர்களாகவும் > சந்தேகமானவர்களாகவும் கருதும் போக்கு ஆரோக்கியமற்றது. அதனை விட அந்தப் போககினால் ஆக்கபூர்வமாக எதனையும் செய்ய முடியாது என்பது முக்கியமான விடயம்.
தெளிவான அரசயில் எலல்h நிலைமைகளையும் எதிர்கொள்ள சக்தியைத்த தரும் என்பது என் கருத்து. விஜய்.