யாழ்ப்பாணத்திலிருந்து இரவோடிரவாக மனித நாகரீகம் அவமானப்படும் வகையில் வெளியேற்றப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் குறித்து இரண்டு தசாப்தங்களின் பின்னர் பேசப்படுகின்ற அரசியலும் அதன் பின்னரான அணி சேர்க்கைகளும் நம் மத்தியில் புரையோடிப் போயிருக்கும் ஆயிரம் அழுக்குகளை உரசிப்பார்க்கும் உரைகல்.
தமிழ்ப் பேசும் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட வேளையில் தமிழ் சமூகத்தின் முன்னணி சக்திகள் மத்தியிலிருந்து திரும்பிப் பார்க்கத்தக்க கண்டனக் குரல்கள் வெளிவரவில்லை. அது குறித்த மௌனம் மட்டும் தான் எஞ்சியிருந்தது. விரல்விட்டு எண்ணத்தக்க கயவர்கள் மட்டும் வெளியேற்றத்தை ஆதரித்திருந்தனர். அவர்களில் டி.பி.எஸ்.ஜெயராஜ் என்ற பத்திரிகையாளுரும் ஒருவர். “புத்திசீவிகளின்” அறிக்கையை கண்டித்து கருத்து வெளியிட்ட “தேடகம்” அமைப்பு அப்போது முஸ்லீம்களின் வெளியேற்றத்தைக் கண்டித்து ஒன்றுகூடல் ஒன்றை நடத்திய போது அதனை மூர்க்கத்தனமாக எதிர்தவர் ஜெயராஜ். இன்று கையெழுத்திட்டவராகக் கருதப்படும் 71 பேரில் ஜெயராஜும் ஒருவர். “தேடகம்” எதிர்ப்பக்கத்தில்.
டி.பி.எஸ்.ஜெயராஜ் என்ற மனிதர் புதிய அணிசேர்க்கைகளின் வெறுமனே ஒரு குறியீடு மட்டுமே.
சமூகத்தில் மாற்றங்களும், தலைமைக்கான வெற்றிடங்களும் உருவாகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அணிசேர்க்கைகளை வெளிப்படையாகக் கண்டுகொள்ளலாம். ஒடுக்கு முறைக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டம் சமூக அங்கீகாரம் பெற ஆரம்பித்த 80 களிலிருந்து புலிகள் அழிக்கப்பட்ட காலப்பகுதி வரைக்கும் இதே அணி சேர்க்கைகளையும் அவற்றின் மத்தியிலான உள் முரண்பாடுகளையும் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
புலிகள் அழிக்கப்படும் வரை மூர்க்கத்தனமாகவும், பலவந்தமாகவும் தலைமையைத் தக்கவைத்துக்கொண்டிருந்தனர். உறுதியான வர்க்க சார்பின்றிய புலிகளுக்கு தத்துவார்த்தப் பின்புலத்தையும் தலைமையையும் வழங்கியவர்கள் ஏகாதிபத்திய சார் மேட்டுக்குடி அரசியல் சக்திகளே. புலிகளின் தேவை இவர்களுக்கு அற்றுப் போனதும் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையோடு புலிகளையும் அழித்துவிட்டு இலங்கை அரசோடு கைகோர்த்துக்கொண்டார்கள்.
இதன் மறுபக்கத்தில் உருவான மேல்தட்டு அரசியல் வியாபாரிகளிடையான முரண்பாடு இன்னொரு பகுதியினரை இலங்கை அரசின் ஆதரவாளர்களாக மாற்றிவிட்டிருந்தது. இவர்கள் இருபகுதியினரிடையேயும் உருவான முரண்பாடு என்பது ஒரு வகையான நட்பு முரண்பாடாகவே இன்று காணப்படுகிறது. இவ்வகையான மேட்டுக்குடிகள் இடையேயான முரண்பாடு தெற்காசிய நாடுகள் அனைத்திலும் கண்கூடான ஒன்று.
முஸ்லீம்களது இன்றைய விவாதங்களிலும் இந்த அணிசேர்க்கையைத் தெளிவாகக் காணலாம். இந்த வர்க்க முரண்பாடுகளின் மோதலில் முஸ்லீம்களின் நியாயமான உரிமைகள் குறித்த விவாதம் பந்தாடப்படுகின்றது.
தமிழ்ப் பேசும் முஸ்லிம்களைப் பொறுத்தவரை தன்னாட்சி உரிமை கொண்ட, தனியான கலாச்சரத்தையும் பொருளாதார அடித்தளத்தையும் கொண்ட வரலாற்று வழிவந்த மக்கள் கூட்டம். வட-கிழக்குத் தமிழர்களைப் போன்றும், மலையக மக்களைப் போன்றும் இலங்கை அரச பேரினவாத ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் சிறுபான்மைத் தேசிய இனம்.
மனித குலம் அவமானம் கொள்ளும் வகையில் அவர்கள் வடக்கிலிருந்து ஆயுத முனையில் வெளியேற்றப்பட்ட அதே பகுதிகளில் மீள் குடியேற்றப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இலங்கை இராணுவத்தினதும், இராணுவத் துணைக் குழுக்களதும் காலடியில் வாழ்கின்ற மக்கள் மூச்சுவிடுவதற்குக் கூட உரிமை மறுக்கப்படும் நிலையில் முஸ்லீம்கள் குடியேறுவதை நிறுவனமயமாக எதிர்க்கிறார்கள் என்பது கேலிக்குரியது.
கலாச்சாரம் பண்பாடு குறித்த வேறுபாடுகள் மேலெழும் போது அவர்கள் மத்தியிலான முரண்பாடுகள் உருவாவது இயல்பானது. இவற்றை ஆழப்படுத்தி அரசியல் இலாபம் சம்பாதித்துக்கொன்றது யாழ்ப்பாணத்தில் அதிகாரத்தைக் கையகப்படுத்தியிருக்கும் மேட்டுக்குடி. இந்த முரண்பாடுகளுக்கு எதிரான சமூகப் பொதுப் புத்தி ஒன்றை உருவாக்க வேண்டியது முன்னோக்கிச் சிந்திக்கும் ஒவ்வொருவரதும் கடமை.
நாகாலாந்து மக்கள் மீதான ஒடுக்குமுறையை நாம் உணர்ந்து கொள்வது போன்று, கஷ்மீரிகளின் வலி எமக்கும் வேதனை தருவது போன்று எமது கொல்லைப்புறத்தில் அவலத்துக்கு உள்ளாக்கப்படும் முஸ்லீம்களின் வலியையும் நாம் உணர்ந்துகொள்ளப் பின் நிற்கக்கூட்டது. இந்த உணர்தலினால் ஏற்படும் புதிய சிந்தனைப் போக்கு பிற்போக்கு அதிகார வர்க்கத்தை எதிர்கொள்ளும் பலம் மிக்க முற்போக்கு அணியைக் கூட உருவாக்கும் அடிப்படையாக அமையலாம்.
இதன் அடிப்படையை நாம் புரிந்துகொள்ளத் தவறினால் முஸ்லீம்களுக்கும், வட-கிழக்குத் தமிழர்களுக்கும் இடையேயான முரண்பாட்டை ஆழப்படுத்த இலங்கை இந்திய அரச சார்பு மேட்டுக்குடிகள் தயாராகிவிடுவார்கள். பன்நாட்டு மூலதனத்தின் பணபலத்திலும், இலங்கை இந்திய அதிகார வர்க்கங்களின் ஆதரவிலும் இயங்கும் இந்த மேட்டுக்குடிகளின் புதிய எழுச்சியின் இன்னொரு முகம் தான் நமது “புத்திசீவிகள்”.
1915 இல் ஆரம்பித்து சிங்கள உயர்தட்டு வர்க்கத்துடன் கைகோர்த்துக்கொண்டு முஸ்லீம்களுக்கு எதிராக செயற்படும் அதே வர்க்கத்தின் அடிப்படைப் பண்பு முரண்பாடுகளைத் தமது வர்க்க நலனுக்குச் சார்பகக் கையாள்தல் என்பதே.
எவ்வாறு ஏகதிபத்திய சார்பு தமிழ் குறுகிய தேசிய வாதம் -விதேசியம்- ஒவ்வோர் சமூகப் பிரச்சனைகளிலும் தமிழ் மக்கள் என்ற பொதுமைப்பாட்டை முன்வைத்ததோ அதே வகையில் வடக்குத் தமிழர்கள் என விழிக்கும் “புத்திசீவிதம்” ஒடுக்கப்படும் பெரும்பான்மையான தமிழர்களை முற்றிலுமாக நிராகரிக்கின்றது.
இந்த அடிப்படையில் வடக்கின் அணிசேர்க்கைகள் குறித்த மேலோட்டமான பார்வையாவது அவசியமாகிறது.
வன்னி இனப்படுகொலையிம் பின்னர், வடக்கில் புதிய மேல்தட்டு வர்க்கம் ஒன்று வேர்விட்டு விருட்சமாக வளர ஆரம்பித்துள்ளது. இவர்கள் அரச அதிகாரிகள், பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களின் முகவர்கள், நில உடமையாளர்கள் உட்பட பல அதிகார மையங்களைச் சார்ந்தவர்கள். இவர்களின் பின்பலமாக இராணுவம், இராணுவத் துணைக் குழுக்கள், அரசியல் கட்சிகள் போன்றவை செயற்படுகின்றன.
இவர்களின் ஒரு பகுதி முஸ்லீம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை முன்வைக்க இன்னொரு பகுதி தமிழர்களைக் குற்றம் சுமத்துகிறது. தமக்கிடையே நட்பு முரண்பாடுகளைக் கொண்டிருக்கும் இவர்கள் ஒருவரை ஒருவர் பலப்படுத்திக் கொள்கிறார்கள். மக்கள் பற்றுமிக்க அனைவரும் இவர்களின் எதிரிகள்.
இராணுவத்தினதும் அதன் துணைக் குழுக்களதும் இரும்புக் கரங்களில் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ளைப் பொறுத்தவரை முஸ்லீம் தமிழர்களுக்கு எதிராகக் குரழெழுப்ப வேண்டும் என்று சிந்திப்பதே இயலாத ஒன்று. மூச்சுவிடக் கூட அச்சப்படும் அவர்களைக் குற்றம் சுமத்தும் இராணுவத்தோடு இணைந்து செயற்படும் ஈ.பி.டி.பி என்ற துணைக்குழுவின் ரங்கன் போன்ற உறுப்பினர்கள் தமிழர்களைக் குற்றம் சுமத்துவதன் உள் நோக்கம் புரிந்துகொள்ளத் தக்கது.
ஆக, யாழ்ப்பாணத்தின் அதிகாரத்தைப் புதிதாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ள மேல்தட்டு வர்க்கத்தின் நட்புப் பாராட்டும் உள்முரண்பாட்டின் ஒரு பகுதி முஸ்லீம்களை நோக்கித் தமிழ் மக்களைக் குற்றம் சுமத்த மறுபகுதி தமிழர்கள் என்ற பொதுமைப்பட்ட முகமூடியுடன் முஸ்லீம்களைக் குற்றம் சுமத்துகிறது.
இதேபோன்ற இலங்கை அரச அதிகாரத்தின் வால்களாகத் தொழிற்படும் முஸ்லீம்களின் மேட்டுக்குடி அரசியல் வியாபாரிகளுக்கும் ஒடுக்கப்படும் பெரும்பான்மையான முஸ்லீம் தமிழர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இருவரது நலன்களும் வேறுபட்டவை.
வன்னி அழிவுகளின் பின்பதாக ஒடுக்கு முறைக்கு எதிராக தமிழ்ப் பேசும் முஸ்லீம்கள் ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களோடு இணைந்து போராடியிருக்கிறார்கள். இதனால் அச்சம் கொண்ட இலங்கை இந்திய அதிகாரங்களைச் சார்ந்த உயர் தட்டுவர்க்கத்தினர், ஒரு புறத்தில் முஸ்லீம்களுக்கு எதிராகவும் மறுபுறத்தில் முஸ்லீம்களை முன்வைத்துத் தமிழர்களுக்கு எதிராகவும் செயற்பட ஆரம்பித்துள்ளனர். இந்த இரு ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு இடையேயான முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தலே இவர்களின் அடிப்படை நோக்கம். இதற்காக ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவனங்களும் இலங்கை இந்திய அரச அதிகாரங்களும் பின்னணியில் செயலாற்றத் தயார் நிலையில் உள்ளன.
தமிழர்கள் என்ற முகத்திரைக்குள் மறைந்து கொள்ளும் இந்த இரண்டு பகுதியினரும் இலங்கை அரச பேரினவாதத்தை எதிர்கொள்ளும் சாமன்யர்கள் அல்ல.
இந்த அடிப்படை அணி சேர்க்கைகளை உணர்ந்து கொள்ளும் சமூக உணர்வும் மக்கள் பற்றும் மிக்க அரசியல் சக்திகள் இலங்கை அரச பாசிசத்திற்கு எதிராகவும் அதன் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பிற்கு எதிராகவும் முஸ்லீம்களும் தமிழர்களும் இணைந்து போராடும் பொது வெளி ஒன்றை உருவாக்குவார்கள். முப்பது வருடப் போராட்டத்திலிருந்து அனுபவங்களைப் பெற்றுக்கொண்ட மக்கள் கூட்டம் தவறுகளுக்காக அழுது வடித்துக்கொண்டிராது. அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளும். குண்டுச் சன்னங்களைச் சுமந்த புதிய தலைமுறை புதிய எதிரிகளை உணர்வு பூர்வமாக இனம்கண்டுகொள்ளும்.
முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தின் போதான தமிழ் மக்களின் மெளனத்திற்கு விடுதலைப் புலிகளின் உயிர் அச்சுறுத்தலே முதற் காரணம். புலிகள் தம்மீது சுமத்திய அடக்கு முறைகளைக் கூட தமிழ் மக்கள் எதிர்க்க முடியாமல் முடங்கி அழிந்து போனார்கள் என்பது வரலாற்று உண்மை.
“தமிழ்ப் பேசும் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட வேளையில் தமிழ் சமூகத்தின் முன்னணி சக்திகள் மத்தியிலிருந்து திரும்பிப் பார்க்கத்தக்க கண்டனக் குரல்கள் வெளிவரவில்லை.”
சபா நாவனன் அவர்களே இந்தக் கூற்று சரிதானா. தயவு செய்து இன்னும் கொஞ்சமாவது ஆய்வு செய்து எழுதுங்கள்.
முஸ்லிம் மக்களது மீழ் குடியேற்றமும் தமிழ் மக்களின் மீழ் குடியேற்றமும் இணைக்கப் படுவதை எதிர்க்கும் குறும் தமிழ் இன்வாததுக்கான கண்ண்டனத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
வணக்கம் ஜெயபாலன்,
முஸ்லீம் மக்கள் வெளியேற்றத்தின் போது உங்களது குரல் குறிப்பிடத்தக்கது. யாரும் அதனை மறுப்பதற்கு இல்லை. முஸ்லீம் மக்கள் குறித்த உங்கள் ஆய்வு மட்டுமே தமிழில் வெளியான கோடிட்டுக் காட்டத்தக்க ஆய்வு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.இருப்பினும் ஒரு சமூகமே அங்கிருந்து வெளியேற்றப்படும் பொழுது அதற்கு எதிரான குரல்கள் ஒடுக்கப்படும் எம்மத்தியிலிருந்து குறிப்பிடத்தக அளவில் வெளியாகவில்லை என்பதையே குறிப்பிட்டேன்.
நன்றி நாவலன். சரிநிகர் போன்ற பத்திரிகைகளில் சிலரது எதிர்ப்பு பதிவாகி உள்ளது. அச்சம் காரணமாக பலர் உரத்துப் பேசவில்லை. கவிஞர் வில்வரத்தினம் போன்ற பலர் தனிப்பட்ட உரையாடல்களில் கொதிப்புடன் கருத்துக்களை பரிமாறியுள்ளனர். எனினும் நீங்கள் சொல்வதுபோல கோபமும் எதிர்ப்பும் பாதகதொரு பேரலையாக எழவில்லை. அது தொடர்பான வருத்தம் எனக்கும் உள்ளது – ஜெயபாலன்
இலங்கையில் அன்றும் சரி இன்றும் சரி இனவாத சக்திகளின் போக்கே மேலோங்கி இருக்கிறது.அதற்கான காரணம் யரரும் அங்கு வர்க்கப்போராட்டத்தை நடத்தவில்லை. எனவே இனவிடுதலைக்கான போராட்டம் நடக்கும் ஒரு தேசத்தில் இனஉணர்வுகளை தூண்டபடுவதும் அது இன வெறியாக மாற்றமடைந்து சக சிறுபான்மை இனங்கள்மீது சீற்றம் கெள்ளவைப்பதுவும் தான்விர்ந்த மாற்று இனங்களை தனது பகுதிகளில் இருந்து விரட்டியடிப்பதும் கொலைசெய்வதும் பின்னர் இதுவே பிரதேசம் சாதி என குச்சுஒழுங்கை வர நீட்சிஅடைவதும் இயல்பு. சிங்கள தமிழ் முஸ்லீம் மலையகம் என அனைத்து இனங்களிலும் இன்றுஆதிக்கம் செலுத்துவது இனவாத கட்சிகள்தான்.தமிழர்விடுதலைகூட்டணியில் தொடங்கி விடுதலைபுலிகளையும் கடந்து இன்றைய ரிஎன்ஏ வரைக்கும் இனவாத கட்சிகள்தான் தமிழர்களின் தலைமை யாகின்றன! . இவர்களின் அடிப்படை அரசியலே இனவாதமாக இருக்கும் போது இவர்கள் இந்திய தேசியத்தோடு சேர்ந்தால் என்ன சிங்கள தேசியத்தோடு சேர்ந்தால் என்ன அமரிக்க தேசியத்தோடு செர்ந்தால் தான் என்ன.எங்கு எவருக்கு அதிக பலன் கிடைக்கிறதோ அவர்களுடன் அவர்கள் .சேருவார்கள்! சேரட்டும் சேராவிட்டால்தான் ஆச்சரியப்படவேண்டும்.அதேபோல் புலித்தேசியம் பெரும் விலைகொடுத்து விரட்டியடித்த முஸ்லீம்களை சிங்கள இனவாதம் மனிதாபிமானம் ? மீழ்குடியேற்றம் என மீண்டும் அவர்கள் மீழ் குடியேற்றப்படுவதை இனவாதம் ஊட்டி வளர்க்கப்பட்ட மானம்உள்ள எந்ததமிழன் விரும்புவான்!?. எந்த தமிழ் தேசியகட்சி உணர்வுடன் ஆதரிக்கும். எனது பிரச்சனை இனவாதத்தில் மனிதாபிமானம் தேடுவதல்ல!
மாறக இலங்கை மக்களின் விடுதலை!. இனவாதம் ஊட்டப்பட்ட ஒருதீவு மக்கள் கூட்டத்தின் விடுதலை என்பது அரசியல் பொருளாதார சமூக மற்றத்தினுடாகவே சத்தியமாகும்.
ஆனால் இதில் எனது நிலமை என்பது அன்று அந்த மக்களுடன் அவர்களின் அன்றாட பிரச்சனைகளுடன் அரசியல் பொருளாதார சமூக மற்றம் பற்றிய சிந்தனைகளுடன் அர்பணிப்புடன் சிந்தித்தோம் செயல்பட்டோம் கற்றோம் .அதற்காகவே வாழ்ந்தோம் என்பதைவிட கடினமான பாதையில் பயணித்தோம் ! அதுவே எமக்கு இன்பமாக இருந்துது என்பது தான் உண்மை!. ஆனால் இன்று நான் சமூக மற்றம் பற்றிய கருத்துக்களின் ரசிகன் மட்டுமே! என்னால் கட்டுரைகளை ரசிக்க மட்டுமே முடிசிறது எப்போது மக்களிடமிருந்து நான் அன்னியப்பட்டனோ அப்போதில் இருந்து நான் சமூகமாற்றத்திற்கான செயற்பாட்டாளன் என்ற தகுதியை இழந்து ரசிகன் ஆகிவிடுகிறேன். ஒருவேளை நான் மீண்டும் எனக்கு பரிட்சியமான நிலத்தில் சமூக அரசியல் பொருளாதார கூறுகளுடன் என்னை இணைத்துக்கொண்டால் மட்டுமே சமூகமாற்றம் பற்றிய யதார்த்தமான கருத்துக்களை கூறமுடியும் செயற்படமுடியும் அதுவரை யாவும் கற்பனையே ! எல்லாவற்றிற்கும் மேலாக யாரொருவன் புலம்பெயர் தேசத்தில் இருந்து மீண்டும் புலம்பெயர்ந்து தான் நேசித்த மக்களின் சமூக அரசியல் பொருளாதார விடுதலைக்கான உழைக்கிறானோ அவனே பிடல்கஸ்ரோ சே லேனின் அவனேமனிதன் !!!!!!!!!!!!!!
1980ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலிருந்தே தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையிலான முரண்பாடுகள் படிப்படியாக முளைவிடத்தொடங்கியிருந்தன.
அதற்கு முழுமுதற்காரணிகளாக முன் நிற்பவை சிங்கள அரசின் விருந்தினர்களாக அப்போது வந்திறங்கிய மொசாட் உளவுப்படையினரும் அதனைத்தொடர்ந்து தமிழீழ விடுதலை என கூவிக்கொண்டு U.P ரெயினிங்க் என்றும் லெபனான் பயிற்சி என்றும் மார்தட்டிக்கொண்டு ஊருக்கு வந்தடைந்த சில நம்மவர்களுமே.
அமைதிப்படை காலத்தில் நடைபெற்ற இந்திய படைகளினதும் அதன் ஒட்டுண்ணிப்படைகளினதும் அக்கிரமங்களில் இருந்து முஸ்லீம் மக்களும் விதிவிலக்களிக்கப்படவில்லை.
இந்தியப்படைகளினதும் அதனையண்டி குந்தியபடைகளினதும் வெளியேற்றத்தைத் தொடர்ந்து தமிழ், முஸ்லீம் மக்களிடையே 1990ஆம் ஆண்டு நடுப்பகுதிவரை நல்லுறவே நிலவியிருந்தது.
2ம் கட்ட ஈழப்போர் மூண்டு சிங்கள இராணுவம் கிழக்கில் முன்னேறி வந்த போது, தமிழர் எக்காலத்திலும் காணாத சொல்லொண்ணா துயரினில் அங்கு நின்றிருந்தனர்.
அப்போது, எங்கள் முஸ்லீம் உறவுகள் வந்த சிங்களப்படைகளுக்கு கோலாகல வரவேற்பு தந்து மாலையிட்டும் மல்லிகைப்பூ செண்ட்டும் இட்டு கொண்டாடினர். அத்துடன், தமிழர் வேள்வியில் களைத்து நின்ற இனவாத இராணுவத்துக்கு மரைக்கார் நானாவின் சாப்பாட்டுக் கடையிலும் நஜீம் ஹாஜியாரின் கேளிக்கை விடுதியிலும் அவர்களுக்கு விடிய விடிய விருந்தும் கொடுத்தார்கள்.
இது மட்டுமா? நேற்றைய எம் அயல் வீட்டு காக்காக்களும் நானாக்களும் தனித்தும் படைகளுடன் ஒருமித்தும் எங்கள் சொத்துக்களையும் உடமைகளை சூறையாடியதுடன் தூற்றுக்கணக்கான எங்கள் பெற்றோர்களையும் உடன் பிறந்தோர்களையும் பிள்ளைகளையும் சுட்டும் வெட்டியும் கொன்றார்கள். காட்டுக்குள் தப்பிச் சென்றவர்கள் தவிர குறிப்பாக, இளவயதினர் யாவரும் அடியோடு இல்லாமல் செய்யப்பட்டார்கள். பாண்டிருப்பு கிராமம் இதற்கு ஒரு உதாரணம்.
இவற்றினைத் தொடர்ந்து இதற்கான எதிர்வினை இதே பாணியில் தவிர்க்க முடியாமல் தொடங்கியது. அவ் வழியில் அவ்வேளையில் நடந்ததுதான் தாங்கள் குறிப்பிட்ட மனித நாகரீகம் அவமானப்படும் வகையிலான ஒரு மக்கள் கூட்ட வெளியேற்றம் அல்லது அந்த மனிதாபிமானி உரிமை கோரும் கண்டன நிகழ்வு. வாழ்க உங்கள் புகழ். இது நியாயப்படுத்தல் அல்ல தெளிவு படுத்தல்.
எது எவ்வாறு இருப்பினும் சிங்கள இனவாதம் தான் நினைத்ததை அடைந்தது. இனி?
ராஜபக்ச குடும்ப பாசிசம்…. தெற்கில் ஏழைகள் பொருளாதார சுமையில் தற்கொலை, வடக்கில் உளவுப் படையினதும் துணை குழுவினதும் ஆட்சி… மலையகத்தில் இன வன்முறை…. இதை எல்லாம் திசை திருப்பி முஸ்லிம் பிரச்சனை க்கு தமிழர்களே காரணம் எனற நிலைகு கொண்டுவந்து எதையோ மறைக்கப் பார்க்கிறார்கள். இதற்கு பலிகடா ஆகிவிடாதீர்கள். இந்த விவாதத்தை தொடர்ந்து இவர்களுக்கு முக்கியதுமம் கொடுக்காதீர்கள்.
What were Jeyapalan and others were doing when 500,000 upcountry Tamils were deported to India by Srimavo.
(2) I ask jeyapalan and others to read Mr Jeyananthamoorthy’s book titled ” Destroyed Tamil villages” to know how Muslims treated Tamils in the Eastern Province.
வீர்முனையானின் நோவு புரிகிறது. அதேபோல ஆனால் வரலாறுகாணாத அளவில் பாதிக்கப் பட்ட வடபகுதி முஸ்லிம் மக்களின் நோவையும் வீரமுனையான் புரிந்துகொள்ள வேணும். ஏனெனில் தமிழரும் முஸ்லிம்களும் துண்டிக்க முடியாத விதியால் பிணைக்கப்பட்டவர்கள்.
தமிழர்கள் பெரும்பாண்மையாக இருந்த இடங்களில் (வடமாகாணம் மட்டக்களப்பு) முஸ்லிம் மக்களும் முஸ்லிம் மக்கள் பெரும்பாண்மையாக இருந்த இடங்களில் (அம்பாறை மாவட்டம்) தமிழரும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஈரோஸ் தவிர்ந்த ஏனைய தமிழ் போராளிகள் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் கிழக்கு மாகாணத்தில் அரச படைகளின் உதவியுடன் முஸ்லிம் ஊர்காவல் படைகள் போன்றவை தமிழர்களுக்கு எதிராகவும் படுகொலை தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன. இதில் முக்கியமான ஒரு விடயம் 1995ன் பின்னர் ஈரோஸ் உட்பட எர்த தமிழ் போராளிகள் அமைப்பும் தமிழரதும் முஸ்லிம்களதும் அமைப்பாக செயல் படவில்லை. இது தொடர்பாக நான் எப்பவும் – என் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி வைக்கப் பட்ட தருணங்களில்கூட _ தட்டிக்கேட்கவோ குரல் கொடுக்கவோ எழுதவோ தயங்கியதில்லை.
வடமாகாணத்திலோ மட்டக்களப்பிலோ நான் தமிழரது அநீதிக்கு எதிராக குரல்கொடுத்தது மட்டுமே வெளியில் தெரிந்தது. தமிழ்பேசும் ஈழவனான நானும் தமிழன் அடையாளத்தைக் கொண்டிருப்பதால் அது என் தலையாய கடமையாகிறது. ஆனாலும் பெளசார் போன்ற என்னுடைய முஸ்லிம் தோழர்கள் நான் எவ்வளவு நடு நிலையாக இருந்தேன் என்பதை அறிவார்கள். என்னுடைய சரிநிகர் கட்டுரைகளை (வெளியிட வேண்டும் பிரதிகள் கிடைக்கவில்லை) நீங்கள் வாசிததில்லைப் போலும்.
1996ல் ஓட்டமாவடி முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக விடுதலைப் புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக படுவான்கரைக்கு போயிருந்தேன். அப்போது வீரமுனையில் இருந்து முஸ்லிம் குழுக்களால் விரட்டப்பட்டு படுவான்கரைக்கு அகதிகளாக வந்திருந்த சிலர் என்னைப் போன்றவர்களைக் கொல்லவேண்டும் என்றார்கள். அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அகதிகள் மதியில் இருந்து வந்த போராளிகளும் என்மீது கோபப் பட்டார்கள். நான் உயிருக்கு பயந்து பாதிக்கப் பட்ட முஸ்லிம்கள் தரப்பு நியாயத்தைப் பேச அஞ்சவில்லை.
இதேபோல பாண்டிருப்பில் உமாவரதராசனுடன் கவிஞர் மரூதூர்க் கொத்தனைச் சந்திக்கப்போனபோது றிவோல்வர் சகிதம் வந்த அவரது மகன் (தீவிர வாதி) என்னை முஸ்லிம் பகுதியைவிட்டு வெளியேறும்படி உத்தரவிட்டார். முஸ்லிம்களது அரசியல் பார்க்க எங்களுக்குத் தெரியும் ஒரு தமிழர்களின் உதவி தேவையில்லை என்று அவர் கத்தினார். (அவருக்கு என் சரிநிகர் கட்டுரை ஒன்று பிடிக்கவில்லைபோலும்) பாய்ந்து அவரது சேட்டில் பிடித்த நான் அங்கே படுவான் கரையில் முஸ்லிம்களின் நியாயத்தைப்பேச புலிக்குப் பயபட்டதுமில்லை இங்கு தமிழர்களது நியாயத்தைப் பேச உங்களுக்குப் பயப்படப்போவதுமில்லை என்று சொன்னேன். என்றும் என் நிலைபாடு இதுதான். நாங்கள் தமிழரும் முஸ்லிம்களும் வாழும் வீடுகள் இரணை (ட்நின் கொஉசெச்) வீடுகளாகும். ஒரு பக்கமாக தீயை வைப்பதும் அணைப்பதும் சாத்தியமில்லை.
மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
உங்கள் சரிநிகர் கட்டுரைகள் எந்த காலபகுதில் வந்தவையென தோராயாமாக தெரிந்தால் தமிழரங்கம் ஆவணசுவடிகளில் தேடலாம்.
http://www.padippakam.com/index.php?option=com_content&view=article&id=3086%3A-216&catid=297%3A2010-10-01-09-55-32&Itemid=1
இதற்குமேல் இதை ஒரு விவாதமாக தொடர விருப்பமில்லை. நன்றி
//அப்போது முஸ்லீம்களின் வெளியேற்றத்தைக் கண்டித்து ஒன்றுகூடல் ஒன்றை நடத்திய போது அதனை மூர்க்கத்தனமாக எதிர்தவர் ஜெயராஜ். இன்று கையெழுத்திட்டவராகக் கருதப்படும் 71 பேரில் ஜெயராஜும் ஒருவர். “தேடகம்” எதிர்ப்பக்கத்தில்.
டி.பி.எஸ்.ஜெயராஜ் என்ற மனிதர் புதிய அணிசேர்க்கைகளின் வெறுமனே ஒரு குறியீடு மட்டுமே.//
அப்பாடா ஒருவழியாய் முஸ்லீம்களின் மீள் குடியேற்றத்தைத் தான் 71 (70) பேரின் அறிக்கை வலியுறுத்துகிறது என்று ஒப்புக்கொண்டீர்களே.
Thanks Jeyapalan for your comments. My position is that we should speak out condemning the grave mistakes committed by both sides ( Tamils and Muslims) and the successive givernments and prevent any further deterioration in the relationship of Tamils and Muslims. I go one step further and demand that we all should safeguard the up country tamils too. I am distressed to see that you have failed to respond to the question of up country Tamils I raised and decided to stop answering any further. Up country Tamils need us very badly. They were deported from their own country to an unknown country, not displaced from one local area to another area. How many poets writers and so called intelectuals from Tamil and Muslim communities voiced against this crime?
நன்றி வீரமுனையான். வடபகுதி முஸ்லிம் மக்களின் மீழ்வரவும் மறுவாழ்வும் வெற்றிகரமாக இடம் பெற வேண்டும். அதுபோலவே வீரமுனை மற்றும் மூதூர் தம்ழ்பிரிவு போன்ற பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட தமிழருக்கும் உறுகாமம் போன்ற மட்டக்களப்பு மேற்ற்க்குக்கரை முஸ்லிம் கிராமங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் சுபீட்சமும் சமாதானமும் கிட்டவேண்டும்.இப்பிரச்சினைகளை நாம் நடுநிலையோடு புரிந்துகொள்வது அவசியம்.
Who told you Indian Tamils were deported from their country. They went out of India thinking they can make more money in the foreign land. In most cases it worked for them. Unfortunately in SL it did not work for them. I too empathize with them. But that doesn’t change the facts.
Thanks Jeyapalan but why dont you express your views on the sinful acts committed (and by remaining silence too) on up country Tamils by the government and Tamils & Muslims.
நாவலன் குறிப்பிடுவதில் சில உண்மைகள் இருக்கின்றன. 1990இல் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட போது தமிழ் சமூகத்தின் முக்கியமான தரப்புகளிலிருந்து அதற்கான எதிர்ப்பு வரவில்லைத் தான். இன்று முஸ்லிம்களுக்காகத் தனியயொரு பத்திரிகை நடாத்துகின்ற வீரகேசரி உட்படத் தமிழ் ஊடகங்களும் மௌனம் சாதித்தன என்பதும் உண்மை தான்.
சாதாரண தமிழ் மக்களிடம் அதற்கான எதிர்ப்பு மனோ நிலை இருந்தாலும் அதனை வெளிப்படுத்த புலிகளிடம் இருந்த ஆயுதம் அனுமதிக்கவில்லை.
ஆனால் சரிநிகர் என்கிற பத்திரிகை மட்டும் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை ‘ஈழத்தின் தேசியத் தற்கொலை’ என்று தலையங்கம் தீட்டியதோடு தொடர்ந்து அதற்கெதிராகக் கட்டுரைகளைப் பிரசுரித்து வந்தது. காத்தான்குடி ஏறாவூர் பள்ளிவாசல் படுகொலைகளை வன்மையாகக் கண்டித்திருந்தது. சேரன்இ ஜெயபாலன் மருதூர் பஷீத் போன்றோருடைய கட்டுரைகள் தொடர்ந்து இவை பற்றி எழுதி வந்ததை அந்நாட்களில் படித்திருக்கிறேன்.
கவிஞர் சு.வில்வரட்ணம் பின்னைய நாட்களில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை குறித்து கவிதை எழுதியிருந்தார். அது அன்ரன் பாலசிங்கம் முஸ்லிம்கள் வெளியேற்றபட்டமை வருந்தத்தக்கது என்று குறிப்பிட்டதன் பின்னர் தான் நடந்தது.
ஜெயபாலனுடைய முஸ்லிம்கள் குறித்த கட்டுரைகள் தொடர்ந்தும் சரிநிகரில் வந்து கொண்டிருந்தன.
முன்னதாக ஜெயபாலன் எழுதி அலை வெளியீடாக வந்த முஸ்லிம்கள் தொடர்பாக ஒரு சிறு புத்தகமான முஸ்லிம்களும் தேசிய இனப்பிரச்சினையும் எனும் புத்தகம் முக்கியமான புத்தகம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
பின்னதாக 2000ஆம் ஆண்டளவிலாக இருக்கக்கூடும் உயிர்ப்பு என்றசஞ்சிகை முஸ்லிம்களுடைய பிரச்சினைகள் குறித்து விசெட இதழ் ஒன்றையும் வெளியிட்டது. முஸ்லிம்களுடைய பிரச்சினைகள் பற்றிப் பேசும் போது அவற்றையும் கவனத்தில் எடக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.
என்ன செய்வது இப்பவாவது உன்மைகலைப் பெச எத்தனிப்பொம்.
சிங்கள பௌத்த பேரினவாதத்தை ,”இடதுசாரியம்” பேசி வளர்த்து விட்டோம்.
இஸ்லாமிய மதவெறியை “மனிதம்” பேசி வளர்த்தி விட்டோம்.
தமிழினம் “கொலைவெறி”பாடிப் பூரித்துப் போகட்டும்.
பிற்குறிப்பு:
சர்வதேச இஸ்லாமிய ஊடுருவல் பற்றி,நாம் விளங்கிக் கொள்ளக் காலம் எடுக்கும்.
http://www.bbc.co.uk/news/world-asia-16675086
Selvan please note that up country Tamils are NOT indian tamils. Their great great great grand fathers have come from India. That dose not mean the descendants are Indians. They were born in Ceylon and there is no doubt that they are Ceylon citizens but deprived of their citizenship by Sinhala chauvenists and Tamil Muslim politicians. For arguement sake if your view is taken as correct then most of the Sinhalese who are descendants of Vijaya and his 700 companions and women brought from south India for marriage are to be called as Indians. Furthermore asylum seekers from Srilanka who now live in foreign lands and got foreign citizenship in respective countries have to be called as Srilankans, accoording to your arguement. Do you know that a student stays legaly in UK for ten years can become a permanent citizen of UK. After obtaining permanency he could become a British Citizen. Think of upcountry Tamils who lived hundreds of years in Ceylon and earned foreign exchange by their hard work, have been deprived of their birth rights. History books reveal these facts including the forceful removal.
Jeyapalan has failed to express his views on the plight of upcountry Tamils, although I raised this matter thrice and asked him to give his response. By his silence I record here that he does not wish to raise his voice in support of upcountry Tamils.
Selvan, When I said deported from their own country I meant Sri lanka where they were born and bred. Unknown country is India. They being Srilankan/ Ceylon citizens deported forcefully to India which country they have not seen even in a map.
I am not sure how much of what you are saying is fact. I am know of some who went voluntarily, I have met at least one of them in India. Agree they are SL Tamils. We have to learn to apply that to all Tamils in SL. When you stop asking, “You are from SL ? Which part of Jaffna ?” That is the day it will unite us all.
Selvan You may have come across one or two persons went to India voluntarily. Even behind this “voluntary” there was fearful atmosphere created by the Sinhalese for the Tamils to flee the country, which we should not forget. There are so many articles and books that describes the pathetic plight of Tamils in the Tea and Rubber estates during 1970s. If you go through the web pages and read whenever you have time, you will agee what I have previously mentioned. When Jeyapalan- a well known poet and an actor and claim to be a fearless activist for the oppressed North -East Tamils and Muslims, remain silent on the question of up country Tamls in spite of my repeated requests, what can we say about other Tamils who ask ” where are you from? which part of jaffna?”.