நாம் ஒரு பிரச்சினையை ஆராயும் போது, அந்தப் பிரச்சினை ஆரம்பித்த போதிருந்த சூழ்நிலையென்ன, அதன் வளர்ச்சிப் போக்கென்ன, அதன் இன்றைய நிலையென்ன என்பதை வரலாற்று வளர்ச்சியின் ஊடே புரிந்து கொண்டாலே பிரச்சினைக்குரிய தீர்வைக் காண முடியும். கடந்த காலத்தைப் பற்றிப் பேசாது விடுவோம், இன்றைய நிலை பற்றி மட்டுமே கதைப்போம் என்பது எம்மை மேலும் மேலும் சகதிக்குள் தள்ளும் வேலையேயாகும். இதைத் தான் இன்று தமிழ்த் தேசியவாதிகள் செய்து வருகின்றனர்.
முப்பது வருடங்கள் சாத்வீகம் பேசிப் பாராளுமன்றம் சென்று பிற்போக்கு அரசியல்வாதிகளுடன் கூடிக் குலாவி, அடுத்த முப்பது ஆண்டுகள் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்து நின்று, இன்று அதுவும் தோல்வியில் முடிந்ததாகப் பகிரங்கமாக அறிவித்துத் தமது இயலாமையை வெளிப்படுத்திய தமிழ்த் தேசியவாதிகள் தமிழ் மக்களை மேய்க்க வந்துள்ளனர். ‘நடந்தெல்லாம் மறந்திருப்போம், நடப்பதையே நினைத்திருப்போம்” எனக் கவி பாடுகின்றனர்.
தாம் கடந்துவந்த பாதை ஏன் தோல்வியுற்றதென்பதை ஆராயத் தமிழ்த் தேசியவாதிகள் தயாராக இல்லை. கடந்து வந்த பாதை பற்றிச் சுயவிமர்சனம் செய்யாமல் உள்நாட்டிற் பிற்போக்குச் சக்திகளுடனும் வெளிநாட்டில் இந்திய ஆளும் வர்க்கத்துடனும் கூடிக் குலாவுகின்றனர். இடதுசாரிகள் செய்த தவறுகளுக்கு அவர்களை மன்னிக்க முடியாதெனக் கூறுபவர்கள் , தாம் செய்த தவறுகளாற் பல இலட்சக் கணக்கில் தமிழர்கள் கொல்லப் பட்டும் இடம் பெயர்ந்து அவலங்களை அனுபவிப்பதற்கும் கோடிக் கணக்கிற் சொத்துக்களை இழப்பதற்கும் பொறுப்பான இந்தத் தேசியவாதிகளது கடந்த காலத்தை மறந்து மன்னித்தருள வேண்டுமாம். இப்போது கூட்டமைப்பு எனக் கூறிக் கொண்டு வடக்கிலே வாக்குக் கேட்க ஆரம்பித்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான தமிழ்த் தேசியவாதக் கனவான்களிடம் தமிழ் மக்கள் கேட்கிறார்கள்,ஐயாமாரே உங்கள் மனைவிமார், பிள்ளைகள், குடும்பங்கள் எங்கே உள்ளனர் என்று உண்மையைக் கூறுவீர்களா?
மலையகத் தொழிலாளர்களின் வாக்குரிமை பறிப்புக்குத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி உடந்தையாய் இருந்த காரணத்தால் அக் கட்சியிலிருந்து பிரிந்து தமிழரசுக் கட்சியை ஸ்தாபித்தனர். ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியினர் கூட்டங்கள் வைத்த போது அக் கூட்டங்கள் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினரால் குழப்பட்டன. அன்று தமிழரசுக் கட்சியினரின் கூட்டங்கட்கு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் பாதுகாப்பு வழங்கினர். அதை அவர்கள் மறந்தது தற்செயலானதல்ல. தமிழரசுக் கட்சியும் ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்களாகிக் கொண்டது தான் காரணம். தமிழ்க் காங்கிரஸ் சைவ மேட்டுக்குடி வேளாள ஆதிக்கக் கட்சி என்றால் தமிழரசு சைவ கிறிஸ்தவ மேட்டுக்குடி வேளாள ஆதிக்கக் கட்சியாகியது. தந்தை, தளபதி, அண்ணன், தம்பி என வேடமணிந்தவர்களாற் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டதே மிச்சமாகும்.
1956ல் பண்டாரநாயக்க அரசாங்கம் சிங்களம் மட்டும் மசோதாவைப் பாராளுமன்றத்திற் சமர்ப்பித்து வாக்கெடுப்புக்கு விட்ட வேளை, அதை எதிர்த்து இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, தமிழரசுக் கட்சி என்பன வாக்களித்தன. அன்று சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து வாக்களித்த தமிழ்ப்; பாராளுமன்ற அங்கத்தவர்களிலும் பார்க்கக் கூடுதலான சிங்கள இடதுசாரி உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தனர் என்பதை அரசியல் ஆய்வுப் பிரநிதிகள் அறிவார்களா?
இது ஒரு முக்கிய நிகழ்வு. பாராளுமன்ற இடதுசாரிகள் பிற்காலத்திற் செய்த தவறுகளுக்கு மன்னிக்கவே கூடாதென்பவர்கள் இச் சம்பவத்தைப் பற்றி ஏதும் பேசத் தயாரில்லை. அப்படியான ஒரு நிகழ்வு இடம் பெற்றதாகவே கூறுவதற்கு தயாரில்லை. அன்றைய தனிச் சிங்கள மசோதாவை எதிர்த்து அப்போதைய பருத்தித்துறைப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கம்யூனிஸ்ட் தோழர் பொன் கந்தையாவின் காரசாரமான உரையைத் தமிழ்த் தேசியவாத ஆய்வு மரமண்டைகள் ஒரு முறை தானும் வாசித்திருக்குமா?
தமிழ் மக்களுக்கு அநீதி விளைவித்த பண்டாரநாயக்க அரசாங்கம், அதே வேளை, நாட்டின் சுதந்திரத்தையும் இறமையையும் வலியுறுத்திப் பாதுகாத்த உண்மையை மறுப்பது நியாயமாகாது. அன்று பண்டாரநாயக்க அரசாங்கம் நாட்டிலிருந்த பிரிட்டிஸ் தளங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்த போது, அதை எதிர்த்து மாட்சிமை தங்கிய மகாராணியாருக்கு தந்தியடித்த பெருமை தமிழரசுக் கட்சியின் இரும்பு மனிதர் டாக்டர் ஈ.எம்.வி. நாகநாதனையே சேரும். தமிழத் தேசியவாதிகள் பிற்போக்காளர் பக்கத்திலும் அந்நியச் சக்திகளின் அடிவருடிகளாகவுமே அன்றிலிருந்து இன்றுவரை செயற்பட்டனர் என்பதற்கு இது ஒரு சான்று. தேசியத் தலைவரெனப்பட்ட பிரபாகரன் கடைசி நேரத்தில் ஒபாமா நிர்வாகம் தம்மைக் காப்பாற்றுமென எதிர்பார்த்தது, இவர்களின் மேற்கத்தைய ஏகாதிபத்திய சார்பு, உயர் வர்க்க நிலைப்பாட்டை அம்பலப் படுத்தியது. பண்டாரநாயக்க ஆட்சியின் போது, பண்டா-செல்வா உடன்படிக்கை செய்யப்பட்டு, எழுதிய மை காய முன்பே தளபதி அமிர்தலிங்கம் சிறீ எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்து ஒப்பந்தத்தைக் கிழிப்பதற்கான சூழலை உருவாக்கினார். அதை அப்போது இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்த போது ஏற்க மறுத்த அமிர்தலிங்கம், பிற்காலத்தில் ஒப்பந்தம் கிழிக்கப் படுவதற்குத் தானும் ஒரு காரணம் என ஏற்றுக்கொண்டார். அதை எத்தனை தமிழ்த் தேசியவாத ஆய்வாளர்கள் நினைவூட்டத் தயாராக உள்ளனர்?
பண்டாரநாயக்கவிற்கு எதிராக அவருடைய கட்சிக்குள் புத்தரக்கித்த தேரோ, விமலா விஜயவர்தன போன்றோர் செயற்பட்டிருந்தனர். அந்த ஒப்பந்தத்தைச் செய்ததன் காரணமாகத் தமிழரசுக் கட்சியினர் தனக்கு ஆதரவளிப்பார்களென பண்டாரநாயக்க எதிர்பார்த்தார். ஆனாற் தமிழரசுக் கட்சியினரோ, பண்டாரநாயக்க அரசுக்கு ஆதரவளித்து ஒப்பந்தத்தை அமுல் நடாத்துவதற்குப் பதிலாக, அவருக்குத் தொந்தரவு கொடுத்தனர். யூ.என்.பியினர் ஜே.ஆர். தலைமையில் கண்டி யாத்திரை மேற்கொண்டனர். அந்தப் பாதயாத்திரையை இம்புலகொடவில் எஸ்.டி. பண்டாரநாயக்க முறியடித்தார் என்ற போதும், தமிழரசுக் கட்சியின் ஆதரவு கிடைக்காததாலும் பண்டாரநாயக்க ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார் என்பது மற்றொரு மறைக்கப்படும் பக்கமாகும். பண்டா-செல்வா ஒப்பந்தம் அமுலாகியிருந்தாற், பிற்காலத்தில் இடம்பெற்ற குடியேற்றத் திட்டங்களைத் தடுத்திருக்கலாம். ஏன் வட-கிழக்கு இணைப்பிற்கும் அவ் ஒப்பந்தத்தில் ஏற்பாடு இருந்தது. அதை விட, லட்சக் கணக்கான உயிர்களைப் பாதுகாத்திருக்கலாம். இடப் பெயர்வுகளைத் தடுத்திருக்கலாம். ஆனாற் தெற்கின் பேரினவாதிகளும் வடக்கு-கிழக்கின் தமிழ்க் குறுந் தேசியவாதிகளும் அதற்கு வழிவிடவில்லை. பண்டா-செல்வா ஒப்பந்த விடயத்திற் தமிழரசுக் கட்சியில் அமிர்தலிங்கம் தலைமையிற் செயற்பட்ட ஒரு பகுதியினரின் அதி தீவிர நடவடிக்கையின் விளைவால் நாம் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தோம். அவற்றிற்காகத் தமிழ்த் தேசியவாதிகளை மன்னிக்கலாமா என்பதை எதிர்காலத் தமிழ் இளந் தலைமுறையினர் தான் முடிவுசெய்ய வேண்டியவர்களாவர்.
பண்டாரநாயக்க ஆட்சியின் போது மேற்கொண்ட முற்போக்கு நடவடிக்கைகளை எல்லாம் மேட்டுக்குடி உயர்வரக்கப் பிரதிநிதிகளான தமிழரசுக் கட்சியினர் எதிர்த்து வந்தனர். பண்டாரநாயக்க ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட சட்டங்களுள் நெற்காணி மசோதாவும் ஒன்று. அதையுந் தமிழரசுக் கட்சியினர் எதிர்த்தனர். நெற்காணிச் சட்டம் முழுமையாக அமுற் படுத்தப்பட்டிருந்தால் குடியேற்றத் திட்டங்களுக்கான தேவை ஏற்பட்டிராது. விவசாயிகளைக் காணிகளிலிருந்து வெளியேற்றுவதை அச் சட்டம் தடைசெய்தது. ஏழை விவசாயிகள் நன்மை பெறக் கூடியதாக இருந்தது.
பண்டாரநாயக்கவின் அரசியலிற் பங்கேற்று ஒப்பந்தத்தை அமுல் நடத்தாதவர்கள் பிற்காலத்தில் டட்லியுடன் ஒப்பந்தம் செய்து அவரின் அமைச்சரவையில் உள்ளுராட்சி அமைச்சர் பதவியை மு. திருச்செல்வத்திற்கு வாங்கிக் கொடுத்தனர். எவ்வாறாயினும் வட-கிழக்கில் மலசல கூடங்களைத் தானும் அவர்களால் கட்ட முடியவில்லை. தமிழ்த் தேசியவாதிகள் தமது வர்க்க நிலைக்கு அமைவாகப் பிற்போக்கு அரசியல்வாதிகளின் பின்னாலேயே சென்றதற்கான இவ் உதாரணங்கள் வரலாற்றில் என்றும் இருந்து வரவே செய்யும்.
no tamil nationalists, tamil feelers didn’t respond to your article….
if you wrtie about Praba as God there would have been 1000s of hits 🙂 that is how smart we are
The article of Mr,Vannnaikaran is somthing like cock and bull story. The past will not come again whatever may be the causes raised in t5he so long ago is to be treated as past t5hings. Now the question is how to solve the problems of tami8ls suffered a lot behind the barbed wire fencing. It is a pity t6hey are expecting wqays and means to returned their own living place. This kind of treatment is required now.
Hi
if you not see the past then how you do the now, what ever it is , you must correct from the past, past is past but we learn from the past how we do right in future…
after another 20 years what happened in 2009 would be past things…so no need to worry
நல்ல பதிவு ..தொடர்ந்து எழுதுங்கள் .
எனது கருத்துக்கள் சில் .
‘சிந்திக்காமல், கண்மூடித்தனமாக ஒரு தலைவரது கவர்ச்சியில் மயங்கி அவரைப் பின்பற்றுவது கூடாது. இந்தியாவில் பக்தி அல்லது தலைவரைப் போற்றுவது என்பது உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு அரசியலில் பெரும்பங்கு வகிக்கிறது. சமய நெறியில் பக்தி, ஆன்ம விடுதலைக்கு வழியாக இருக்கலாம். ஆனால் அரசியலில் பக்தி அல்லது தலைவரைப் போற்றுதல் என்பது நிச்சயமாக ஜனநாயக சாவுக்கு வழிவகுத்து, அதன் விளைவாக சர்வாதிகாரத்துக்கு அழைத்துச்சென்றுவிடும்’
– டாக்டர் அம்பேத்கர்.
அவர் சொன்னது இந்தியாவில் ,ஆனால் அது ஈழத்திற்கும் பொருந்தும் .இப்படி அம்பேத்கர் சொன்னதால் தமிழுக்கு அவர் என்ன செய்தார் ? என்று கேட்டக் கூடியவர்கள் ஈழத்து தமிழ் தேசிய வாதிகள்.
இலங்கையில் நடைபெறுகின்ற இன்றைய இன ஒடுக்கலின் ஆரம்பம் 1915 இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் பேசும் முஸ்லிம் மக்ககளுக்கு எதிரான கலவரத்துடன் தொடங்கியது.சிங்களவருக்கு காவடி தூக்கி லண்டன் வரை சென்று வழக்கை வெற்றி செய்தது தமிழ் தலைமை.லண்டன் திரும்பிய சேர்.பொன்.ராமநாதனை கொழும்பு துறைமுகத்திலிருந்து பாராளுமன்றம் வரை சிங்களவர்கள் தூக்கி சென்றார்கள். அப்போது முஸ்லிம்களை தமிழ் பேசும் மக்கள் என்று தமிழ் தலைவர்கள் பார்க்கவில்லை.
பின்னர் சிங்களவர்களால் மலையாளிகள் விரட்டப்பட்டனர்.அப்போதும் தமிழ் தலைவர்கள் ஒன்றும் செய்யவில்லை.
பின் இந்திய வம்சாவழி தமிழ் தோட்ட தொழிலாளிகள் தமிழ் தலைவர்கள்
சம்மதத்துடன் விரட்டியாடிக்கப்பட்டார்கள் .ஏனென்றால் கம்முநிஸ்ட் களுக்கு அவர்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. 1956 இல் தமிழருக்கு எதிரான கலவரம் வெடிக்கிறது.பண்டாரநாயக்காவை தமிழ் தேசியவாதிகள் பச்சை இனவாதியாகவே சித்தரிப்பார்கள்.
சமீபத்தில் ஈழத்து எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை எழுதிய வரலாற்று நூல் ஒன்றில் பண்டாரநாயக்கா எப்படி சூழ்நிலையின் கைதியாக விளங்கினார் என் விளக்குகிறார். எஸ்.பொன்னுத்துரை புலிகளின் ஆதரவாளர். அவரது மகன் (அருச்சுனா ) புலி போராளி.எஸ்.பொன்னுத்துரையாலும் பண்டாரநாயக்காவை இனவாதி என கூறமுடியவில்லை.
தங்களை பெரிய மேதாவிகள் என எண்ணி திரிபவர்கள் யாழ்பாணத்து மேட்டு குடியினர். அவர்கள் தங்கள் அரசியில் அபிலாசைகளை எல்லாம் அப்பகாத்து மாரிடம் (வழக்கரின்ஜரிடம் ) ஒப்படைத்துவிட்டிருன்தனர்.பொய்யிலும் ,பித்தலாட்டமும் அவர்களது தொழில் . கிணற்று தவளை மனப்பான்மையும் ,தங்கள் தான் அதி உயர்ந்தவர்கள் என்ற மமதையும் நிறைத்தவர்கள் யாழ்ப்பாணத்து மக்கள் ஆதலால் மற்றவர்களை மதிப்பதே இல்லை.வெளி ஊரில் வாழ நேர்ந்தாலும் மற்றவர்களுடன் கலப்புக்களை ஏற்படுத்த விரும்பாதவர்கள்.
ஏனென்றால் சைவமும் ,தமிழும் அவாறான காரியங்களுக்கு இடம் கொடுக்காது.இதன் பின்னால் ஒளிந்திருப்பது “சாதி வெறி ” என்பது தான் உண்மை. மற்றவர்கள் மீது எப்போதும் அவ நம்பிக்கை ,அதன் அடிப்படையில் எழுப்பப்பட்ட விடயங்கள் தான் மற்றவர்கள் குறித்து இழிவாக பேசுவது. சில உதாரணங்கள் :
இந்தியா மக்கள்= வடக்கதயான்கள் / “வயிற்ருகுத்தை நம்பினாலும் வடக்கனை நம்பகூடாது ”
இந்திய வம்சாவழி தமிழ் மக்கள் =தோட்டக்காட்டான்கள்/ தற்குறிகள்/நாகரீகமற்றவர்கள்.
கிழக்கு மாகான மக்கள் = மட்டகிளப்பான்கள் (சூனியக்காரர்கள்)
முஸ்லீம் மக்கள் = தொப்பி பிரட்டிகள் /நயவஞ்சகர்கள்.
சிங்களவர்கள் = முட்டாள்கள் / மூளையில்லாதவர்கள்.
தாழ்ந்த சாதியினர் = மற்றதுகள் ,அதாவது மனிதர்களே அல்ல ,பிராணிகள்,ஜந்துக்கள்.
கிருஸ்தவர்கள்.= நம்பாத வேதகாரர்.
ஆக சைவ வேளாள தமிழர்களே உலகத்தின் உன்னத மக்கள் ! இவர்கள் தான் அப்பர் ,சுந்தரர் , மணிவாசகர் களின் நேரடி வாரிசுகள். இந்த அகம் பாவம் தான் எல்லா பாதகங்களுக்கும் அடி கோலியது.
மார்க்சிய -லெனினிய இயக்கம் தீண்டாமைக்கு எதிராக சங்கானை என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களையும் ,முற்ப்போக்கு எண்ணம் கொண்டோரரையும் ஒன்றிணைத்து போராடிய போது, “சைவத்தையும் ,தமிழையும் வளர்த்த தலைமை ” பார்லிமெண்டில் என்ன பேசினார்கள் தெரியுமா ?
சீனாவுக்கு ஒரு ஷாங்காய்
ஈழத்திற்கு ஒரு சங்கானை …. என்று நக்கு சுழட்டியது. தமிழ் தேசிய ஒற்றுமைக்கு இது அவசியம் என கருதவில்லை.தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திய அந்த போராட்டங்களுக்கு முழுதும் எதிராக நின்றவர் “அடங்கா தமிழன் ” என்று புகழ் பெற்ற சுந்தரலிங்கம் .அவர் தான் தமிழீழம் என்பதை முதன் முதலாய் முன் மொழிந்தவர்.போராட்டத்தில் அவர் மண் கவ்வியது வேறு கதை. இந்த பின்னணி தெரியாத இந்திய தலித்திய வாதிகள் எல்லாம் ஈழத்தில் சாதி பிரச்சனை எல்லாம் கிடையாது என்பது போல கதைப்பது சிரிப்புக்கிடமானது.(தமிழீழத்தில் எல்லாம் இது ஒழிக்கப்பட்டுவிட்டதாம்.)
சிங்கள இனவாதம் வளர்க்கப்பட்டது போலே தமிழ் இனவாதமும் வளர்க்கப்பட்டது. தீர்வு காண தவறிய தமிழ் தலைமைகள் இளைஞ்ர்களை
உசுப்பி விட்டது .தை பொங்கலுக்கு தமிழ்ழீழம் வருகுது என்று கதை அளந்தது.தங்களது அரசியல் எதிரிகளின் மேல் இளைஞ்சர்களை ஏவி விட்டது .
இந்த விமர்சனத்தில் கடைசியாக யோகா என்ற பெயரில் குறிப்பிட்டுள்ள அத்தனை விசயங்களும் தொடக்க காலத்தில் இருந்ததை சமகால வரலாறு எதுவும் பதிவு செய்யவில்லை என்பது மிகப்பெரிய ஆச்சரியம்.
அப்பர். சம்பனதர்.சுந்தரர், மணீ வாசகர்களீண் வாரிசுகளாய் சைவத்தை முன்னேற்றூகிறேன் என்பவர்கள் ஆக் முடியாது.தமது வாரிசுகலையே சைவர்களாய் வளர்க்கத் தெரியாதவர்கள்.சைவத்தில் தவறீல்லை அதை தமது சுயனலங்களூக்கு பயன்படுத்திய தனி மனிதர்களீல்தான் தவறூ.தேவாரங்கள் தமிழை வளர்த்தன,தமிழைக் காத்தன இன்றூநம் கோயில்களீல் தேவாரங்கள் மட்டுமே தமிழாக இருக்கின்றன.