ஈ.பி.டி.பியினருக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகளை அபகரிப்பது மட்டும் இன்றைய தமிழ்த் தேசிய அரசியல் வாதிகளின் நோக்கமல்ல. ஈ.பி.டி.பி.யிலிருந்து மக்களைப் பிரிப்பது தான் அவர்களின் திட்டமாகும் என . ஈ .பி.டி.பி யின் ஆலோசகரும், லன்டனில் இயங்கும் இலங்கை ஜனநாயக முன்னணியின் SRI LANKA DEMOCRACY FORUM (SLDF) முக்கிய உறுப்பினருமான சட்டத்தரணி ரங்கன் தேவராஜன் தெரிவித்தார்.
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் சனி (03) நடைபெற்ற யாழ் மாவட்ட பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவு நிறுவனங்களின் எழுச்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் இன்றைய சூழ்நிலையில் ஈ.பி.டி.பி.க்கு எதிராக அவதூறான தார்மீகமற்ற , ரவுடித் தனமான முறையில் யாழ்ப்பாண அச்சு ஊடகங்கள் சிலசெயற்பட்டு மக்களை தவறான வழியில் இட்டுச் செல்ல முயன்று வருகின்றன.
அண்மையில் யாழ் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அவர்கள் தாக்கப்பட்டமை மற்றும் அவரது வாகனங்கள் நொறுக்கப்பட்டமை தொடர்பாக மேயர் அவர்கள் ஊடகவியலாளர் மாநாட்டை நடாத்தி உண்மைக் கருத்துக்களை கூறியிருந்த போதிலும் முதல்நாள் தவறான செய்தியை பிரசுரித்த நாளிதழைத் தவிர மறுநாள் எந்த யாழ்ப்பாண நாளிதழ்களும் அந்தச் செய்தியை பிரசுரிக்கவில்லை. இவ்வாறான செய்திகளை பிரசுரிக்காமல் சில கட்சிகளின் ஊதுகுழல்களாக இத்தகைய நாளிதழ்கள் விளங்கி வருகின்றன.
இப்பத்திரிகைகள் இவ்வாறு செயற்படுகின்ற போதிலும் தமிழ் மக்களால் இன்று அதிகம் விரும்பப்படும் ஒரே தமிழ்த் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே.அதுமட்டுமல்லாமல் ஜனநாயகக் காவலனாகவும் , உழைக்கும் மக்களின் தோழனாகவும் என்றைக்கும் தன்னை அடையாளப்படுத்தி வருகின்றார் என சட்டத்தரணி ரங்கன் தேவராஜன் தெரிவித்தார்.மக்களுடைய தேவைகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்தவருக்கு செய்து கொண்டிருப்பவர்களுக்குமே உங்களது வாக்குகளை வழங்கி அவர்களை நாம் ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.தமது சுயநலன்களுக்காகவும் , சுகபோக வாழ்க்கைக்காகவுமே ஏனைய அரசியல் கட்சிகள் உங்களிடம் வாக்குக் கேட்டு வருகின்றனர்.எனவே உங்களது ஒட்டுமொத்த வாக்குகளை எமக்களிக்கும் பட்சத்தில் நிச்சயம் வளமானதொரு எதிர்காலத்தில் எமது மக்கள் பயணிப்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
– யாழ்ப்பாணத்திலிருந்து சுதாகரன்-
இதில் இணைத்திருக்கும் பேட்டி தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் வழங்கப்பட்டது. மேலும் பேட்டியின் கீழ் என்னுடைய பின்னூட்டத்தையும் தொடுத்துள்ளேன்.
புலம்பெயர் தமிழர்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மகிந்தவுக்கு வசதியான செயற்பாடுகளைச செய்து கொண்டிருக்கிறார்கள்.. -புளொட் தலைவர் த.சித்தார்த்தன் (புளொட் தலைவரின் பேட்டி)
தம்பி இப்படி ஏன் செய்தான்? என்று தெரியவில்லை என்று குறிப்பிடும் புளோட் (PLOTE) அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மே 17 இற்கு பிறகு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை கூறுகிறார். ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்ட சூழலில் இன்றைய காலச் சூழலின் தேவையை உணர்ந்து தமிழ் மக்களின் பிரச்சினைக்களை தீர்க்க உன்மையான ஜனநாயகத்தை நிலை நாட்ட தீர்வை நோக்கி நகர இணைந்து செயறபட தயாராக உள்ளதாகக் குறிப்படும் சித்தார்த்தனை வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சந்திந்து இந்த உரையாடலை நிகழ்த்தினேன்…..
தீபச்செல்வன் : தமிழ் மக்களின அரசியலில் ஒன்றிணைவது என்பது மிக முக்கியமான விடயமாயிருக்கிறது. ஆரம்ப காலம் முதல் மிக முக்கிமான விடயமாக இருந்த பொழுதும் மே 17 இன் பின்னர் அதற்கான பல அவசயங்கள் எழுந்துள்ளன. ஆனால் தொடர்ந்தும் ஒன்றினைதல் நிறைவேறாமலிருக்கிறது. நீங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து இம்முறை பாராளமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக செய்திகள் வந்திருந்தன. முன்னாள் நாடாளமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் நான் உரையாடும் பொழுது நீங்கள் இறுதி வரை இணைவதாக குறிப்பிட்ட பொழுதும் பின்னர் இணையவில்லை என்று குறிப்பிட்டார். நீங்கள் ஏன் அவ்வாறு இணைந்து போட்டியிடவில்லை?
புளொட் தலைவர் சித்தார்த்தன் : மே 17 எமது ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டு விட்டது. தமிழ் மக்களின் அரசியலைப் பொறுத்தவரை மே 17க்கு முன்னர், மே 17இற்கு பின்னர் என இரண்டு பிரிவுகளாக பிரித்து பார்க்க வேணடி உள்ளது. அதற்கு முன்பு நடந்தவற்றை இப்பொழுது அப்படியே விட்டு விட்டு இனி நடக்க வேண்டியவற்றைப் பார்க்க வேண்டும். இந்த யுத்த்தில் ஆயிரக்கணக்காண மக்கள் கொல்லப்பட்டடு லட்சக் கணக்காண மக்கள் இடம்பெயர்ந்து இருக்கிறார்கள். இதனால் இந்தப் போராட்டத்தை தொடங்கிய எல்லோருக்குமே ஒன்றுபட வேண்டிய கடப்பாடு இருப்பதை நான் பல தடைவ கேட்டிருக்கிறேன். இதற்காக எல்லாவற்றையும் விட்டு நான் வருவதற்கு தயாராக இருக்கிறேன். இந்த இடத்தில் அவர்களிடம் நான் ஒன்றை குறிப்பிட்டேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை மாற்ற வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றால் தென்பகுதியில் ஒத்துள்கொள்ளாத தன்மை உள்ளது. அதனால் இந்தப் பெயரை நாம் மாற்ற வேண்டும் என்று கேட்டேன்.
இனி ஈழம் என்ற கோரிக்கை சாத்தியப்படாது. ஓன்று பட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வைதான் நாங்கள் எல்லோரும் கேட்கிறோம். அதை நாங்கள் ஒன்றிணைந்து கேட்க வேண்டும். கடந்த காலத்தில் சரத்பொன்சேகாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்த பொழுது அது தெற்கில் வேறு அர்த்த்தை கொடுத்து இறுதிவரை சரத்பொன்சேகாதான் ஜனாதிபதி என்ற நிலையிருந்து பின்னர் இறுதியில் 18 லட்சத்திற்கு மேற்பட்ட பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மகிந்த ஜனாதிபதியானார். தெற்கை எதிர்கொள்ள சமாளிக்க இந்த மாற்றயங்களை நாம் செய்ய வேண்டி உள்ளது.
சம்பந்தன் அய்யா என்னை வந்து தங்களுடன்தான் கேட்க வேண்டும் எனக் கேட்டார். நானும் அதற்கு சம்மதித்திருந்தேன். புலிகளால் நியமிக்கப்பட்டவர்கள் எல்லாம் விலக்கப்பட்டார்கள். அந்த இடங்களுக்கு இவ்வளவு காலமும் பேராட்டத்துடன் நின்ற சிலருக்கு ஆசனங்களைக் கேட்டிருந்தோம். அவர்கள் தந்திருக்கலாம். இது பற்றி செல்வம் அடைக்கலநாதன் அவர்களிடம் நான் தெளிவாக சொல்லியிருந்தேன். அவர் பேசி விட்டு சொல்லுவதாக சென்றார். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு பொது இணக்கத்திறகு வர முயற்சி செய்தோம். ஆனால் எல்லா கட்சிகளும் முற்று முழுதாக தேர்தல் ஒப்பந்தம் ஒன்றையே செய்து கொண்டன. அத்தோடு தத்தமது கட்சிகளின் நலன்களை பார்க்கும் பொழுது நாங்கள் எங்கள் கட்சியின் நலநனை பார்க்க வேண்டியிருந்தது. மற்றும்படி ஒன்றிணைந்து செயற்படுவதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. பொதுவான வேலைத் திட்டத்திற்கு உரியவர்களை விண்ணப்பிக்கும்படி கேட்டு அவர்களை நேர்காணல் ஊடாக நியமனம் கொடுத்திருக்கலாம். இறுதி வரை நாங்கள் அவர்களது பதிலுக்கு காத்திருந்தோம். செல்வம் அடைக்கலநாதன் எங்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை அதனால் நாங்கள் இறுதி நேரத்திலேதான் இப்படி போட்டியிடுவது என தீர்மானித்தோம்.
தீபச்செல்வன்: இந்த தேர்தலின் பிறகு தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக நீங்கள் இணைந்து செறய்படுவீர்களா?
புளொட் தலைவர் சித்தார்த்தன்.. தேர்தலின் பிறகு நாங்கள் இணைந்து செயற்படத் தயாராக இருக்கிறோம். இந்திய நிருபாமா எங்களை சந்திக்கும் பொழுது ஒரு விடயத்தை சொல்லியிருந்தார். நீங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒவ்வொரு தீர்வுகளை முன் வைக்கிறீர்கள். அதை விடுத்து நீங்கள் எல்லோரும் சேர்ந்து நியாமான தீர்வை முன்வைத்தால் நாங்கள் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து அதை நிறைவேற்றித் தருவோம் என்று அவர் குறிப்பிட்டார். அவருக்கு நாங்கள் இந்தத் தேர்தலில் இணைய முடியாத நிலையிருப்பதை சொல்லிய அதேவேளை தேர்தலின் பிறகு நாங்கள் இணைந்து செயற்படுவோம் என்று சொன்னோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக ஒரு தீர்வை நோக்கிச செல்லும் அதேவேளை இப்பொழுது தேவைப்படுபவற்றை ஆரம்ப கட்டமாக செய்ய இணைந்து செயற்பட தயராக உள்ளோம்.
தீபச்செல்வன் : அவசரகாலச்சட்டம் முதல் இன அழிப்பு, யுத்தம், வன்முறை என்று எல்லாமே நடந்தேறிக் கொண்டிருந்தபொழுது நீங்கள் அரசாங்கத்தில் இணைந்திருந்தீர்கள் அல்லது அரசாங்கத்துடன் சேர்ந்து இருந்தீர்கள். ஆதரவளித்தீர்கள். இவற்றை தடுக்க ஏன் உங்களால் முடியாமல் இருந்தது?
புளொட் தலைவர் சித்தார்த்தன்.. நான் 2001 இற்கு பிறகு பாராளமன்றத்தில் இருக்கவில்லை. நான் அவசரகாலச் சட்டத்தை ஆதரிக்கவில்லை. நாங்கள் இந்த அரசாங்கத்தை ஆதரிக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலின் பொழுது நாங்கள் மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்தோம். கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரித்தது. இரண்டுமே ஒரே நிலைப்பாடுதான். இரண்டுமே ஒன்றுதான். நாங்கள் மகிந்தவை ஆதரிக்கும் பொழுதே இதை மிகத் தெளிவாக சொல்லியிருந்தோம். இவர்கள் இரண்டு பேருமே தமிழ் மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளவோ தீர்க்கவோ மாட்டார்கள் என்று சொல்லியிருந்தேன்.
ஆனால் நான் மகிந்த ராஜபக்ஷவைக் கேட்டிருந்தேன் ஏன் இந்த மக்களை தடுத்து வைத்திருக்கிறீர்கள் என்று? அப்பொழுது பலருமே சொன்னார்கள் இந்த மக்களை பல வருடங்களுக்கு தடுத்து வைத்திருப்பார்கள் என்று. மகிந்த எங்கள் கட்சியிடம் ஆறு மாதங்களுக்குள் அவர்கள் குடியிருத்தப்படுவார்கள் என்று சொன்னார். அடுத்து 12 ஆயிரம் சிறுவர்களை தடுத்து வைத்திருப்பது பற்றியும் எடுத்துச் சொன்னோம். 87கள் உட்பட ஜே.வி.பி போராட்டத்தில் சிறைவைக்கப்பட்ட சிறுவர்களை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டது போல அவர்களையும் விடுவிக்க வேண்டும். இவர்களை தடுத்து வைப்பதில் ஞாயமில்லை என்று சொன்னோம். சோன்னோம் என்பதை விட அவர்களை விடுதலை செய் என்பதை நாங்கள் ஒரு கோரிக்கையாக வைத்தோம். அவர்களை படிப்படியாக நாங்கள் விடுதலை செய்வோம் என்று மகிந்தா குறிப்பிட்டார்.
இதில் இன்னொரு விடயத்தையும் நான் இங்கு குறிப்பிட வேண்டும். புலம்பெயர் தமிழர்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மகிந்தவுக்கு வசதியான செயற்பாடுகளைச செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கு கடல் கடந்த தமீழம் நாடு கடந்த தமீழம் வட்டுக் கோட்டை தீர்மானம் என்று சொல்லிக் கொண்டிருக்க இங்கு மகிந்த இங்கு ‘புலிகள் மீண்டும் உருவாகி விடுவார்கள்’ என்று அவர்களை விடுதலை செய்ய பின்னடிக்கிறார். இது வெளி நாட்டில் உள்ளவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. அவர்களுக்கு இங்குள்ள மக்களின் நிலமைகளை சரியாகத் தெரியும். இங்குள்ள போராட்டத்தின் நிலை தெரியும். அவர்கள் தாங்கள் எதையாவது செய்ய வேண்டும் என்பதிற்காக செய்கிறார்கள். அவர்கள் இந்த மக்களுக்கு எத்தனையோ வித்தில் உதவிகளைச் செய்ய முடியும். தேவையான அதிகாரப் பரவலாககம் சம்பந்தமான பல வேலைகளைச் செய்யலாம். அழுத்தங்களைக் கொடுக்கலாம்.
இது மகிந்தவுக்கு வசதியை அமைத்து கொடுக்கின்றது. சிறார்களுக்கு புனர்வாழ்வு கொடுக்கிறோம் என்று மகிந்த சொல்லும் பொழுது சிறார்களுக்கு புனர்வாழ்வை பெற்றோர்களால் தான் கொடுக்க முடியும் என்று நான் குறிப்பிட்டேன். இன்று அரச கட்சியில் போட்டியிடும் கனகரத்தினம் போன்றவர்கள் அவர்களை விதலை செய்வதற்காக என்று கூறி விண்ணப்ப படிவம் நிரப்புகிறார்கள். அரச கட்சியில் போட்டியிடுவர்கள் ஏன் விண்ணப்ப படிவம் நிரப்ப வேண்டும்? இங்கு இவர்களது தேர்தலுக்காக அந்த மக்களின் வேதனைகள் எல்லாம் பாவிக்கப்படுகிறது. நாங்கள் படிப்படியாக அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புகிறோம். ஆனால் முதலில் பலவந்தமாக சேர்க்கப்பட்டவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டிருந்தோம்.
உலகம் முழுவதிலும் யுத்தம் முடிந்தவுடன் ஒரு சமாதானம் எதரிர்பார்க்கப்படும். எனவே இப்படியான விடயங்களுக்கு நாங்கள் அழுத்தம் கொடுத்திருக்கிறோம். தேர்தலின் பிறகும் நாங்கள் இதற்காக அழுத்தங்களைக் கொடுப்போம்.
தீபச்செல்வன் : இப்படி அரசாங்கத்துடன் சேர்ந்திருக்கும் பொழுது எதை உங்களால் சாதிக்க முடிந்தது?
புளொட் தலைவர் சித்தார்த்தன்… 1990ஆம் ஆண்டு நாங்கள் எப்படி நாங்கள் அரசாங்கத்துடன் சேர வேண்டி வந்தது என்று குறிப்பிட வேண்டும். 90 இல் முள்ளி வாய்க்காலைப் போலத்தான் வவுனியா இருந்தது. தாண்டிக் குளத்திற்கு அப்பால் மக்கள் தள்ளப்பட்டிருந்தார்கள். இந்திய இராணுவக் காலமான அப்பொழுது நாங்கள் எல்லாவற்றிலிருந்தும் விலத்தியே இருந்தோம். கொழும்பிலும் மலை நாட்டிலும் என்று எங்கள் பாதுகாப்பிற்காக பிரிந்திருந்தோம். அப்பொழுது வவுனியா அச்சமான சூழலுடன் இருந்தது. நாங்கள் ஓமந்தைக்குச் சென்று வெள்ளைக்கொடி காட்டி மக்களை கூட்டி வந்தோம். நாங்கள் அன்று இதில் ஒதுங்கி இருந்திருந்தால் இது ஒரு தமிழ் பகுதி இல்லாமல் போயிருக்கும். அம்பாறையாக அல்லது திருகோணமலையாக மாற்றுவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டது.
வன்னியில் இன்று மக்கள் வாழ்வதாக இருந்தால் இராணுவத்தின் மத்தியில்தான் வாழ வேண்டும். அதுபோலத்தன் வவுனியா மக்களுக்கும் அந்த நிலை ஏற்பட்டது. அதற்காக இந்த மக்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து விடுவதா? நூங்களும் அப்படித்தான். விடுதலைப் புலிகளுக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்சினைகளும் பிறகு இருக்கவில்லை. எங்களை விட மிக அதிகமாக இந்திய இராணுவக் காலத்தில் விடுதலைப் புலிகள் இராணுவத்தினருடன் வேலை செய்திருக்கிறார்கள்.
நாங்கள் அழிவுதான் போராட்டம் என்று பார்க்கவில்லை. எமது மக்களின் அவலங்களை வைத்து அரசியல் செய்ய முடியாது. அரசைப் பொறுத்தவரை எங்கு எதிர்க்க வேண்டுமே அங்கு எதிர்த்துதான் இருக்கிறோம். வவுனியாவில் இராணுவ முகாங்களை அமைத்து அதைச் சுற்றி மக்களை குடியமர்த்த இராணுவம் இடமளிக்காத பொழுது அதை எதிர்த்து அங்கு மக்களை குடியமர்த்தியிருக்கிறோம். நாங்கள் இல்லா விட்டால் இங்கு பல குடியிருப்புகள் இல்லாமல் போயிருக்கும். எங்கள் மக்கள் வாழ வேண்டும். வாழத்தானே நாங்கள் போராட்டம் தொடங்கியிருந்தோம். அரசாங்கத்தத்துடன் சேர்ந்திருப்பதாக நீங்கள் கேட்கிறீர்கள் ஆனாலும் நாங்கள் சரியாகத்தான் பயணிகிக்கிறோம் என நினைக்கிறோம்.
அப்பொழுது நாங்கள் சந்திரிகாவுடன் கதைச்சு செய்ய வேண்டியதைச் செய்தோம். இப்பொழுது ஒரு விடயமாக இருந்தால் மகிந்தவுடன் கதைச்சு அதை நாங்கள் செய்வோம். ஏனென்றால் விரும்பியோ விரும்பாமலே மகிந்ததான் இந்த நாட்டின் ஜனாதிபதி.
தீபச்செல்வன் : இந்தத் தேர்தலில் சுயாட்சி, ஜனநாயகம், அபிவிருத்தி என்பவற்றை உங்கள் நோக்குகளாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். யுத்தம் முடிந்த சூழலில் ஜனநாயகம் உன்மையிலே ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட முடியுமா? நீங்கள் குறிப்பிடும் சுயாட்சி என்பது எத்தகையது?
புளொட் தலைவர் சித்தார்த்தன்… அபிவிருத்தி என்பது எமது மக்களுக்கு நீண்டகாலமாக தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது. எமக்கு இதுவரை எந்த அபிவிருத்தியும் நடைபெறவில்லை. எனவே அதை எங்கள் நோக்கில் ஒன்றாக கொள்கிறோம். யுத்தம் முடிந்த பிறகு ஓரளவு ஜனநாயக் ஏற்பட்டிருக்கிறது. இதை நான் வெளியில் செல்லும் இடங்ககளில் பார்ததிருக்கிறேன். முக்கள் முன்பை விட பேசுவதற்கு துணிகின்றார்கள். ஆனால் முழுமையான உன்மையான ஜனநாயகம் ஒன்றை நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்காக நாங்கள் நாடாளுமன்றத்தில் எமது நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம். சுயாட்சி என்பது வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தங்கள் அலுவல்களை தாங்களே பார்த்துக் கொள்ளக்கூடிய அதிகாரபரவலாக்கத்தை பெற்றுக்கொள்ளுவதைக் குறிக்கிறது. அதனையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
தீபச்செல்வன் : வடக்கு கிழக்கு இணைப்பை கை விடுவது அல்லது அது பற்றி பேசுவது என்பது தமிழ் அரசியல் கட்சிகளின் முக்கியமான நிலைப்பாடுகளாக மாறியிருக்கின்றன. இந்த விடயம் தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன?
புளொட் தலைவர் சித்தார்த்தன்… வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் பூர்வீக தாயகம். அதை யாரும் மறுக்க முடியாது. அது எப்பொழுதும் ஒன்றாகவே இணைந்திருக்கிறது. அதை யாரும் பிரிக்க முடியாது. நிர்வாக ரீதியாக பிரித்திருக்கிறார்கள். சட்ட ரீதியாக நீமின்ற ஆனை முலம் பிரித்திருக்கிறார்கள். வடக்கு கிழக்கு இணைந்த மாநிலமாக இருக்க வேண்டும் என்பது தமிழ் மக்கள் எல்லோரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. ஆனால் வடக்கு கிழக்கை இணைப்பது பற்றி வடக்கில் இருந்து குரல்கள் வருவதைவிட கிழக்கில் இருந்தே இனி வர வேண்டும். சில முஸ்லீம் மக்கள் இதை மறுக்கலாம். கடந்த காலச் செயற்பாடுகள் இதில் முக்கிய தாக்கத்தை செலுத்துகின்றன. அதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். எனவே வடக்கு கிழக்கை இணைப்பது தொடர்பாக வடக்கில் இருந்து நிறைய குரல்கள் வந்து விட்டன இனி கிழக்கிலிருந்தே அதற்கான குரல்கள் வர வேண்டும். நாங்கள் இருசாராரும் இணைந்து குரல் கொடுப்பதன் மூலம் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கை இணைக்க முடியும் என்று நம்புகிறேன்.
தீபச்செல்வன் : விடுதலைப் புலிகள் இருக்கும் பொழுது நீங்கள் ஆயுதங்களை வைத்திருந்தீர்கள். அது உங்கள் பாதுகாப்பிற்கு அவசியம் எனக் கூறப்பட்டது. இப்பொழுது விடுதலைப் புலிகள் இல்லாத சூழலில் ஆயுதங்களை நீங்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான், முத்தையன்கட்டு போன்ற இடங்களில் மக்கள் குடியேற்றப்பட்டுள்ள நிலையில் ஒட்டிசுட்டான், மாங்குளம் பிரதான வீதியின் இருமருங்கிலும் சிங்கள மக்களை குடியேற்றும் செயற்பாடுகளில் இலங்கைப்படையினர் ஈடுபட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இலங்கைப் படையினரின் போர் நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் வவுனியாவில் வதைமுகாம்களில் வைக்கப்பட்டு பின்பு மீள்குடியேற்றம் என்றபெயரில் கொண்டுசென்று விடப்பட்டுள்ளார்கள்.
மாங்குளம் தொடக்கம் கரிப்பட்டமுறிப்பு, ஒட்டிசுட்டான் வரையான 12 கிலோமீற்றர் தூர பிரதான வீதியின் இருமருங்கிலும் 1000 சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும் முயற்சிகள் தற்போது நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்களக் குடியேற்றப் பொருட்களுக்கு படையினர் பாதுகாப்பு!
கொக்காவில் முதல் முறிகண்டிவரையான நிலப்பரப்பினை ஆக்கிரமிக்கும் நோக்கிலான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. கொக்காவில் முதல் முறிகண்டி வரையான வீதியின் இரு மருங்கிலும் புதிய வீடுகளுக்கான நவீன தளபாடங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன.
நான்காயிரம் படையினரின் குடும்பங்களுக்கு வீடுகளை அமைக்கும் நோக்கிலான நடவடிக்கைகள் துரிதமாக்கப்பட்டு வருகின்றன.
வீடுகளை அமைப்பதற்கென கொண்டு செல்லப்பட்டுள்ள பொருட்களைப் பாதுகாக்கவென பொருட்களுக்கு மிக அருகில் இராணுவ நிலைகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மாங்குளம் தொடக்கம் கரிப்பட்டமுறிப்பு, ஒட்டுசுட்டான் வரையான பகுதிகளை மையப்படுத்தி ஆயிரம் சிங்களக் குடியேற்றங்கள் முதற் கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கில் ஆயுதக் குழு வன்முறைகள் : ஆனந்தசங்கரி
https://inioru.com/?p=12018
சாவகச்சேரி EPDP அலுவலகம் தாக்கப்பட்டது
https://inioru.com/?p=11903
மாணவன் கபிலநாத் படுகொலை: சுயேச்சைக் குழு வேட்பாளர்கள் சம்பந்தம் ஈ.பி.டி.பி. குற்றஞ்சாட்டு
https://inioru.com/?p=11881
மாணவன் சடலமாக மீட்பு:சம்பவத்தின் பின்னணியில் அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ்க் ஆதரவுக்குழு?
https://inioru.com/?p=11798
இலங்கையில் போர் முடிந்து பல மாதங்களாகிவிட்ட நிலையிலும், யாழ்ப்பாணத்தில் பொதுமக்களிடையே அச்சம் நீடிப்பதாக அப் பகுதியின் முன்னாள் முதல்வர் ஏ.வரதராஜ பெருமாள் இந்திய பத்திரிக்கை தினமணிக்கு அளித்த செவ்வியில் அவர் கூறியிருக்கிறார்…
1990-ல் இலங்கையை விட்டு வெளியேறிய அவர், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தற்போது யாழ்ப்பாணத்துக்குத் திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
யாழ்ப்பாணத்தில் கடந்த காலத்தில் கையில் துப்பாக்கியுடன் வீதிகளில் திரிந்த விடுதலைப் புலிகளோ, வேறு எந்த அமைப்பைச் சேர்ந்தவர்களோ, இலங்கை ராணுவ வீரர்களோ ஆதிக்கம் செலுத்தினர்.
தற்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான அரசு ஆதரவு பெற்ற ஆயுதக் குழு யாழ்ப்பாண வீதிகளில் வலம் வருகிறது.
அவர்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த ஆயுதக் குழுவை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி ஓரிரு இடங்களில் வெற்றி பெறுவது கூட, இந்த ஆயுதக் குழுவின் அத்துமீறல் நடவடிக்கைகள் காரணமாக கேள்விக்குறியாகி விட்டது.
இதனால், தமிழ் தேசிய கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. இந்த அச்சம் காரணமாகவே, தான் விரும்பும் கட்சி எது என்பதை சாதாரண மக்கள் வெளிப்படையாக கூறுவதில்லை.
அதனால்தான் தேர்தல் பிரசார கூட்டங்களில் மக்கள் கலந்து கொள்வதில்லை. மக்கள் தங்கள் கருத்தை வெளிப்படையாக கூறும் அளவுக்கு நிலையை மேம்படுத்த நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் 30 ஆண்டுகள் விடுதலைப் புலிகள் ஆதிக்கம் செலுத்தியபோதும், தற்போது புலிகள் அமைப்பின் சாதக, பாதக அம்சங்கள் குறித்தோ, பிரபாகரன் குறித்தோ யாரும் பேசுவதில்லை.
விடுதலைப் புலிகளை கடந்த காலமாக கருதும் மக்கள், வருங்காலம் குறித்தே தற்போது சிந்தித்து வருகின்றனர். பொருளாதார முன்னேற்றம் அடையும் அதே நேரத்தில் அரசியல் உரிமையும் தேவை என யாழ்ப்பாணம் மக்கள் கருதுகின்றனர் என்றார் அவர்.
வடக்கில் ஆயுதக் குழு வன்முறைகள் : ஆனந்தசங்கரி
https://inioru.com/?p=12018
சாவகச்சேரி EPDP அலுவலகம் தாக்கப்பட்டது
https://inioru.com/?p=11903
மாணவன் கபிலநாத் படுகொலை: சுயேச்சைக் குழு வேட்பாளர்கள் சம்பந்தம் ஈ.பி.டி.பி. குற்றஞ்சாட்டு
https://inioru.com/?p=11881
மாணவன் சடலமாக மீட்பு:சம்பவத்தின் பின்னணியில் அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ்க் ஆதரவுக்குழு?
https://inioru.com/?p=11798
தீவகத்தில் ஒலிம்பிக் கொடி – டக்கிளசு ஏற்றினார்
முன்னாள் வட-கிழக்கு முதல்வரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதல முன்னணியில் அம்மைச்சர் டக்கிளசுவுடன் ஒன்றாக இதுவரை இந்தியாவின் பாதுகாப்பில் இருந்து தேர்தல் பிரகுசாரத்திர்க்காக நாடு திரும்பிய ஏ.வரதராஜ பெருமாள் இந்திய பத்திரிக்கை தினமணிக்கு அளித்த செவ்வியில் அவர் கூறியது போல தற்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில், அம்மைச்சர் டக்கிளசு தேவானந்தா தலைமையிலான அரசு ஆதரவு பெற்ற ஆயுதக் குழு யாழ்ப்பாண வீதிகளில் வலம் வருவது மட்டுமல்லாமல் தீவகத்தை….. தீவக மக்களை தம் கட்டுப்பாட்டில் வைத்ருகும் நிலையில் ஊர்காவற்துறையில் நடைபெற்ற தீவக முன்பள்ளி ஆசிரியர்களுக்கிடையிலான அபிநய விளையாட்டுப் போட்டி நிகழ்வில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அம்மைச்சர் டக்கிளசு தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
ஊர்காவற்துறை புனித மரியாள் றோமன் கத்தோலிக்க மகளிர் வித்தியாலய மைதானத்தில் தீவகத்திலுள்ள 21 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இடையேயான அபிநய விளையாட்டுப் போட்டி நேற்றைய தினம் (05) நடைபெற்றது.
ஈகைச்சுடரையும் ஒலிம்பிக் கொடியையும் அம்மைச்சர் டக்கிளசு தேவானந்தா அவர்கள் ஏற்றிவைக்க ஏனைய முன்பள்ளிக் கொடிகளை அந்தந்த ஆசிரியைகள் ஏற்றி வைத்தனர்.
அங்கு உரையாற்றிய யாழ் மாநகர மேயர் திருமதி யோகேஸ்வி பற்குணராஜா “விளையாட்டு”ப் போட்டி நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும், வருகின்ற சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலமே சமூகம் விருத்தியடைவதோடு வளர்ச்சியடையுமென்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய அம்மைச்சர் டக்கிளசு தேவானந்தா அவர்கள் இன்றைய இந் நிகழ்வில் கலந்து கொண்டமையானது மகிழ்ச்சியைத் தருகின்றது. இயற்கையும் உங்களை ஆசீர்வதிக்கின்றது. இருந்த போதிலும் எதிர்காலத்திலும் இப்படிப்பட்ட சிறப்பான போட்டிகள் நடைபெற வேண்டுமெனவும் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை சரியாகப் பயன்படுத்தி உங்களது வாக்குகளை எமக்கு தந்து எம்மைப் பலப்படுத்துங்கள் என்றும் கேட்டுக் கொண்டாலும் தீவகத்தில் மாற்றுக் கட்சியினரை தேர்தல் பிரச்சாரம் செய்யாமல் தடுத்து, வாக்காளர்களை தமக்கு வாக்கு போட நிர்பந்தித்து, போடாதவர்களை அடித்து மிரட்டி எப்படியும் தீவக வாக்குகளை தாமே அபகரிப்பர் என்பது கடந்த கால அனுபவங்களிலிருந்து வெள்ளிடைமலையாகும்.
alex,
இந்த அடாவடித்தனத்தைப்பற்றிப் பேசுகிறோம். நல்லது.
தமிழ் அச்சு ஊடகஙகள் தமிழ்த் தேசியக் கூட்டணிக்காகச் செய்கிற வெட்கக்கேடான செய்தித் திரிப்புக்களையும் செய்தி இருட்டடிப்புக்களையும் பற்றி யாரும் ஏன் வாய் திறப்பதில்லை?
முன்பக்கச் செய்தித் தலைப்பு முதல் ஆசிரியர் தலையங்கம் வரை, பக்கம் பக்கமாக, அந்தக் கள்ளர் கூட்டத்துக்கு வெள்ளையடித்து, அதை அமோக வெற்றி பெறச் செய்யாவிட்டால் தமிழினத்துக்கு எதிர்காலமே இல்லை என்று புழுகுகின்றனவே. அதைப் பற்றி யாரும் ஏன் வாய் திறப்பதில்லை?
இந்தியப் பணம் கோடிக் கணக்கில் யாழ் தேர்தலில் புரளுகிறதே அது யார் கண்ணிலும் தெரியவில்லையா?
எல்லா அயோக்கியத்தனங்களைப் பற்றியும் எல்லாரும் அறிய வேண்டும்.
எல்லா நியாயமான கேள்விகட்கும் பதில் வர வேன்டும் அல்லவா. சில கேள்விகள் ஏன் எழுப்பப்படுவதில்லை?
உண்மைதான்,கேள்விகள் எல்லாம் அமைதியாக்கப்பட்டு விட்டன்.சீஸர் செய்தது போலவே கொல்லப்பட்டார் டக்ளஸ் தீவக மக்களூக்கு செய்த செய்யும் கொடுமைகள் வார்த்தையில் வராதவை.ஆகவேதான் அச்சமும் வேதனையுமாய் பயத்துடன் பார்க்கிறோம்.
விடயங்கள் அறிந்தவர்கள் வெளியில் கொண்டு வாருங்கள் இவ் மாற்று அரசியலிர்க்கான உரையாடல் வெளியில் கொண்டுவாருங்கள்…….. ஆதாரத்துடன் கொண்டு வாருங்கள்.
வாக்களிக்கவிருக்கும் உங்கள் உறவுகளை விழிப்பூட்டுங்கள் …….
என்னுடைய அகராதியில் மற்றவன் என்ன செய்கிறான் என்று பார்ப்பதுடன்…… நான் என்ன செய்கிறேன் என்பதுதான்.
அத்துடன் நண்பரே!
டக்கிளசு கூட்டம் செய்யும் அட்டகாசமும் கொன்ஷம் இல்லை.
நான் அறிபவற்றை கொண்டு வருகிறேன்.
தாங்கள் அறிந்த கூத்தமைப்பின்….. உறுப்பினரின் வண்டவாளங்களை வெளியில் கொண்டு வாருங்கள். இன்னும் இரு தினங்களே உள்ளன.
1. வன்னியில் – நங்கூரம்:
திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் – இல – 4
தோழர் க.சிவநேசன் (பவன்) – இல – 2
திரு. வை. பாலச்சந்திரன் – இல – 8
யாழில் – கேத்தல்:
தோழர் சி.கா.செந்திவேல்
மெழுகுவர்த்தி
ஸ்ரீதரன் – இல – 6
அராலி கடற்கரையில் அடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் சடலம் ஒன்று ,இன்று மதியம் கரையொதுங்கியுள்ளது.
நடுத்தர வயது மதிக்கத்தக்க மேற்படி சடலம் பிறிதொரு ,இடத்திலிருந்து அவ்விடத்திற்கு ஒதுங்கியிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கடற்கரையிலிருந்த சடலத்தை மீட்ட அராலிப் பொலிஸார் அடையாளம் காண்பதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
வவுனியாவில் கடந்த 27ஆம் திகதி இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய் யப்பட்ட சம்பவம் தொடர்பாகத் தேடப் பட்டுவந்த இரு ஈ.பி.டி.பி. உறுப்பினர் களும் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர் என வவுனியா தக வல்கள் தெரிவிக்கின்றன.
சாந்தசோலையைச் சேர்ந்த தங்கராசா கிருஷ்ணகோபால் என்ற இளைஞரே அடித்துக் கொலை செய்யப்பட்டவராவர்.
கடந்த 28ஆம் திகதி பிறந்த தினத் தைக் கொண்டாட இருந்த இந்த இளை ஞரை முதல் நாள் மாலை மதுபான விருந்து உபசாரத்திற்கென அழைத்த இளைஞர்களே அடித்துக் கொலை செய்தனர் என வவுனியா பொலிஸ் வட்டாரத்தில் தெரி விக்கப்பட்டது.
அடிகாயங்களுடன் அன்றிரவு வவு னியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இந்த இளைஞர் இறப்பதற்கு முன் பொலி ஸாருக்கு வழங்கிய உடனடி வாக்குமூலத் தில் ஈ.பி.டி.பி. கட்சியில் கடந்த உள்ளூ ராட்சித் தேர்தலில் 6ஆம் இலக்கத்தில் போட்டியிட்ட குரு என்ற ஜெயராஜ், ஈ.பி. டி.பியின் ஆதரவு மாணவர் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் துன்பம் என அழைக்கப்படும் தினேஷ் ஆகியோரே தன் னைத் தாக்கினர் எனத் தெரிவித்திருக் கின் றார்.
கடுங்காயங்களுடன் அன்றிரவு வவு னியா வைத்தியசாலையில் சேர்க்கப் பட்ட அவர் அடுத்தநாள் அங்கு உயிரிழந் துள்ளார்.
இந்தக் கொலையுடன் சம்பந்தப்பட் டோர் எனக் கருதப்படும் நான்கு இளை ஞர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப் பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட் டனர். ஜெயராஜ், தினேஷ் ஆகிய இரு ஈ. பி.டி.பி.யினரும் தலைமறைவாகியிருந்த னர்.
அந்த இருவரும் சில தினங்களுக்கு முன் னர் கைது செய்யப்பட்டனர் என்றும்
அவர்களும் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு ஏனைய சந்தேகநபர் களுடன் நேற்று விளக்க மறியலில் வைக் கப்பட்டிருக்கின்றனர் என்றும் வவுனி யாத் தகவல்கள் தெரிவித்தன. – Uthayan
இப்படியும் நினைக்கிறார்கள்…… பொறுத்திருந்துதான் பார்ப்போமே.
விஜயகலா மகேஸ்வரன்:
யாழ்.நிலைமை குறித்து திருப்தி – வடக்கில் தற்போது அசம்பாவிதங்கள் ஏதும் இதுவரை இடம்பெறவில்லை என தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன் தெரிவித்தார். (அண்மையில் இவரது வாகனங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது)
மாவை சேனாதிராஜா:
வடக்கு,கிழக்கு மாகாணங்களில் கூட்டமைப்பு வெற்றி பெறும் , இன்று இடம்பெறும் நாடாளுமன்றத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வடக்கு,கிழக்கு மாகாணங்களில் அமோக வெற்றி பெறும் என சற்று முன் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.
இஈ.பி.டி.பி சார்பு கருத்துக் கணிப்பு:
1. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) – 72 வீதம்
2. தமிழரசுக் கட்சி – 14 வீதம்
3. ஈ.பி.ஆர்.எல்.எவ் புளொட் கூட்டணி – 12 வீதம்
4. ஐக்கிய தேசியக் கட்சி – 02 வீதம்