இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரபல தமிழ்த் தொழிலதிபர் வாசுதேவன் இராசையா மண்டைதீவைச் சுற்றுலா மையமாக மாற்றும் திட்டத்திற்கு முதலீடு செய்கிறார். வாசுதேவன் இராசையா என்ற தொழிலதிபர் முதலீடு செய்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரூடாக பிரித்தானியாவைச் சேர்ந்த மற்றொரு தமிழ்ப் பல்தேசிய நிறுவனமும் இந்தப் பல மில்லியன் முதலீட்டில் தொடர்ப்புடையதாக இருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கின் ஆளுநர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசாங்க அதிபர், வேலணை பிரதேச செயலர், வேலணை பிரதேசசபை, கடற்றொழில் நீரியல் வள அமைச்சு, சுற்றுச்சூழல் அமைச்சு இணைந்த கூட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றது.
200 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படும் இச் சுற்றுலா மையத்தில் 2000 பேருக்கு வேலைவாய்பு வழங்கப்படும் என்கிறது இலங்கை அரசு.
பல்தேசியச் சுரண்டலுக்கு முழு இலங்கையையும் உட்படுத்தும் ஏகாதிபத்தியங்களின் நட்பு அரசான ராஜபக்ச பாசிச அரசு வடபகுதியை முற்றுமுழுதான கலாச்சார பண்பாட்டு அழிப்பிற்கு உட்படுத்துவதற்கும் தேசியப் பொருளாதாரத்தை அழிப்பதற்காகவும் இலாப வெறிகொண்ட பல்தேசிய நிறுவனங்களை அழைத்து வருகிறது.
இதேவேளை இலங்கையின் ஹப்புத்தல என்ற இடத்தில் 400 ஏக்கரில் இதே தொழிலதிபரின் ஊடாக சுற்றுலா மையம் ஒன்றை நிறுவுதற்காக முதலிடப்படுகின்றது.
இத்திட்டம் கடந்த 2012 ல் இருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தமிழ்ப் பேசும் மக்கள் சுயநிர்ணைய உரிமை கோரிப் போராடினால் தமிழ் வர்த்தகர்கள் சார்பில் இலங்கை இராணுவம் அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்.
ஆங்கிலேயர் இலங்கையை ஆழும்போது தேயிலைத்தோட்டங்களிற்காக
தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் வாழ்வும் வழமும் அனறும் இன்றும் ஒன்றே.
ஆங்கிலேயரின் ஆட்சியில் தேயிலைத்தோட்டங்களிற்கு தென்னிந்திய
தொழிலாளரை கண்காணிக்க இலங்கைத்தமிழரையே நியமித்தார்கள்
அந்தக் கண்காணிகள் எசமானிற்கு விசுவாசமாக சேவையாற்ரி தேயிலைத்தோட்டத்தையும் மேற்குலகபொருளாதாரத்தையும் முதலாளித்துவத்தையும் காப்பாற்ரினார்கள்.
அதே போல இன்று இலங்கை அரசு போரினால் தம்நிலைகுலைந்து
வாழும் தமிழரை மேற்குலகின் தமிழ் முதலாளித்துவத்தைக் கொண்டு
அடக்கியாள முனைகின்றது. இதுவரை ஆயுதமேந்திய தமிழ் குழுவினரை
தமது சுயநலங்களிற்கா பாவித்த அரசு இப்போ தமிழ் முதலாளிகளை
வரவழைக்கின்றது.
##ஆங்கிலேயர் இலங்கையை ஆழும்போது தேயிலைத்தோட்டங்களிற்காக
தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் வாழ்வும் வழமும் அனறும் இன்றும் ஒன்றே.#
அன்றிலிருந்து இன்றுவரை ஆட்சியாளர்களாக இருந்தவர்கள் யார் ?
பிரிட்டிஷ் அரசும் . சிங்கள அரசுகளும்தானே .
இதில் பிரிட்டிஷ் அரசை மட்டும் மேற்குலக முதலாளித்துவம் என்று வசை பாடி விட்டு , மிச்சத்துக்கு இலங்கை தமிழ்கர்ள் கண்காணிகளாக இருந்தார்கள் என ( இலங்கை தமிழர்க்கு அரசு இல்லையாதலால் வேலை செய்த கண்காணிகளை வம்புக்கிழுத்திருக்கிறார்கள் } வயிறு குளிர குறை சொல்லியாகி விட்டது.
ஆனால் தோட்ட தொழிலாளர்களின் இந்த அவல வாழ்வுக்கு பொறுப்பாளிகளும் , பதில் சொல்ல வேண்டியவர்களும் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையை சிங்கள ஆட்சியாளர்கள் தான்
ஆனால் முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதில் மன்னரானவர் .தோட்ட தொழிலாளர்களின் கடந்த 70 வருட அவல வாழ்வுக்கு காரணமான சிங்கள ஆட்சியாளர்களை தடவி விட்டுக்கொண்டு , அதற்கு குறைந்த அளவில் காரணமானவர்கள் மேலும் , எந்த வகையிலும் காரணமற்றவர்கள் மேலும் பழி போட்டு , 70 வருட கால சிங்கள ஆட்சியாளகளை காப்பாற்றுவதில் புளங்காகிதமடைந்துள்ளார்.
//ஆனால் தோட்ட தொழிலாளர்களின் இந்த அவல வாழ்வுக்கு பொறுப்பாளிகளும் , பதில் சொல்ல வேண்டியவர்களும் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையை சிங்கள ஆட்சியாளர்கள் தான்// இ
தே நிலமை இலங்கைத்தமிழர்களிற்கும் எதிர்காலத்தில்
ஏற்பட்டும்
சாத்தியம் இருப்பதையே இந்த கட்டுரையும் விளக்குகின்றது. அப்போது
ஆங்கிலேயரையோ, சிங்கள அரசையோ குற்ரம் சொல்ல முடியாது
தமிழரின் வாழ்வையும் வதிவிடங்களையும் சிதைத்தவர்கள் தமிழ்
முதலாளித்துவமாகத்தான் இருக்கும். -மன்னன்
##இ
தே நிலமை இலங்கைத்தமிழர்களிற்கும் எதிர்காலத்தில்
ஏற்பட்டும்###
தோட்ட தொழிலாளர்களின் இன்றைய அவலநிலைக்கு 70 வருடங்களுக்கு மேலாக அவர்களை ஆண்டு கொண்டிருக்கும் சிங்கள அரசுகள்தான் காணமென்பதை மூடி மறைத்து மற்றவர்கள் மேல் மூளையை அடகு வைத்து விட்டு பழி போட்டது அம்பலத்திற்கு வந்து விட்டதென்ற ஆத்திரத்தில் கோடங்கி குறி சொல்வது போல் தரம் தாழ்ந்து விட்டீர்கள் .
உங்களுக்குள் இருக்கும் ஒரு இனத்திற்கு எதிரான் துவேஷ புத்தியும் உங்களை அறியாமல் வெளி வந்து விட்டது.
தோட்ட தொழிலாளர்களின் இன்றைய அவலநிலை பற்றிய விவாதத்தில் பதில் சொல்ல முடியாநிலை ஏற்பட்டு விட்டதால் இலங்கை தமிழர்க்கு அதுதான்நடக்குமென கூறி தோட்ட தொழிலாளர்களிலிருந்து இலங்கை தமிழகளுக்கு ஒரே தாவாக தாவி விட்டீர்கள் .
ஆரம்பத்திலிருந்தேநீங்கள் இதைத்தான் செய்து வருகிறீர்கள் .
ஒரு விடயத்திற்கு பதிலளிக்க முட்யாது போனால் உடனே சம்பந்தமில்லாமல் வேறு ஒரு விடயத்திற்கு தாவி விடயத்தை திசை திருப்பி விடுவது,
##ஆங்கிலேயரையோ, சிங்கள அரசையோ குற்ரம் சொல்ல முடியாது##
யாருடையநிலைக்கு ?
இங்கு தோட்ட தொழிலாளர் னிலைமை குறித்துதான் உரையாடி கொண்டிருக்கிறோம் .
அவர்களின்நிலைக்கு ஆங்கிலேயர்களும் , சிங்களநல் அரசும் காரணமில்லை என்றால் , பின் யார்தான் காரணமாக இருப்பார்கள் ?
ஒரு வேளை கடவுளாக இருக்குமோ ?
இதையும் யாராவது கோடங்கியிடம் குறி கேட்டு சொல்லுங்கள் .
//அவர்களின்நிலைக்கு ஆங்கிலேயர்களும் , சிங்களநல் அரசும் காரணமில்லை என்றால் , பின் யார்தான் காரணமாக இருப்பார்கள் ?
ஒரு வேளை கடவுளாக இருக்குமோ ?
இதையும் யாராவது கோடங்கியிடம் குறி கேட்டு சொல்லுங்கள் .//
ஆங்கிலேயரும் சிங்கள அரசும் தமது ஆட்சியையும் அதிகாரத்தையும்
தமிழர் மீது பிரயோகிப்பதற்கு தமிழர்களையே பாவித்தார்கள் பாவிக்கின்றார்கள். கடவுழுமில்லை சாத்தானுமில்லை.
##ஆங்கிலேயரும் சிங்கள அரசும் தமது ஆட்சியையும் அதிகாரத்தையும்
தமிழர் மீது பிரயோகிப்பதற்கு தமிழர்களையே பாவித்தார்கள் பாவிக்கின்றார்கள். கடவுழுமில்லை சாத்தானுமில்லை.##
உலகமடங்லும் இன்றுவரை உலகநாடுகளில் ஏற்பட்ட நல்லது கெட்டதுகளுக்கு அந்தந்தநாட்டு அரசுகளையே அது பாராட்டாக இருந்தாலும் சரி , விமர்சனமாக இருந்தாலும் சரி அல்லது தண்டனையாக இருந்தாலும் சரி வழங்கி வந்திருக்கிறார்கள் .
ஆனால் இப்போதுதான் முதன் முறையாக ஒரு வர்க்கப்போராளி மூலமாக ஒரு பாடத்தை படித்திருக்கிறேன்.
அது என்னவென்றால் , 70 வருடங்களூக்கு மேலாக தோட்ட தொழிலாளர்களை அவலநிலையில் வைத்திருக்கும் இனவாத அரசுகள்
ரொம்ப பாவமாம் . அதனை குறை சொல்லக்கூடாதாம் .
மாறாக அந்த அரசுகளிடம் சம்பளம் வாங்கி வேலை செய்யும் உத்தியொகத்தர்கள் தான் காரணமாம் .
அப்படியனால் இந்த வர்க்கப்போராளிகள் எடுத்ததெற்கெல்லாம் அமெரிக்க எகாதிபத்தியம் . , உலக பயங்கரவாதம் , உலகத்தின் பல பாகங்களில் ஏற்பட்ட அழிவுகளுக்கு அமெரிக்க அரசுதான் காரணமென ஏன் முழங்கி வர வேண்டும் ?
அதற்கும் அமெரிக்க அரசிடம் சம்பளம் வாங்கி அந்த அரசு இடும் உத்தரவுகளை நிறை வேற்றும் உத்தியோகத்தர்களை சாடி திட்டி தீர்க்க வேண்டியதுதானே ?
அமெரிக்க அரசை பாவம்நல்ல பிள்ளை என விட்டு விட வேண்டியதுதானே ?
//மாறாக அந்த அரசுகளிடம் சம்பளம் வாங்கி வேலை செய்யும் உத்தியொகத்தர்கள் தான் காரணமாம் .//
உத்தியோகஸ்தர் விடும் தவறுகளிற்கும் அரசாங்கத்தை மாற்றுவீர்களா?
அல்லது அரசினை மாற்றுவீர்களா?
இராணுவம் படுகொலைசெய்தால் அந்த அரசு இராணுவத்தின் மீது சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் அதனை செய்யாவிட்டாலேயே
அந்த அரசினை குற்ரம் சுமத்தமுடியும்.
சரித்த்திரத்தில் எழுதப்பட்டுள்ள விடயம் இலங்கையில் தேயிலைத்தோட்டததிலும்,மலேசியாவில் இரப்பர் தோட்டங்களிலும்
வேலை செய்வதற்கு இந்திய தொழிலாளரும் அவர்களை மேற்பார்வை செய்து கண்காணிப்பதற்கு வடபகுதித்தமிழர்களையும் ஆங்கிலேயர்
வேலைகளிர்கு சேர்த்து கொண்டார்களென்று.
எதற்காக ஏழ்மையில் வாழும் சிங்களவ்ர்களையோ, அல்லது வடபகுத்தித்தமிழர்களையோ தேயிலைத்தோட்டத்தில் வேலைசெய்வதற்கு அமரத்தவில்லை?
சிங்களவர்களையும், தமிழர்களையும் பிரித்து இலங்கையர் என்ற
பலத்தை இல்லாமல் செய்தல். இந்தியத் தமிழ் தோட்டத்தொழிலாளர்
வடபகுதி படித்ததமிழர் என்று பிரித்து தமிழர் என்ற பலத்தை குறைத்தல்.. இவைகள் வெற்ரிகரமாக செய்யப்பட்ட சூழ்சிகள்.
இது மட்டுமா, ஆயுத போராட்ட கால்த்தில் பல்வேறு அமைப்புகளை
வளர்த்து மோதவிட்டு தமிழ் போராளிகளை அழித்தது இந்திய இலங்கை
அரசுகளின் சூழ்சிகள்.இதற்கு யார் பொறுப்பு தமிழரில் தோன்றிய முற்போக்கு சிந்தனைய்ற்ர தலைவர்களேயாகும். எங்களை ஆங்கிலேயர் கெடுத்தார்கள்,இந்தியன் கெடுத்தான், சிங்களவ்ர் அழித்தனர் என்பது மீண்டும் மீண்டும் செய்த தறுகளை தொடர்ந்து செயயவே வழிவகுக்கும்.