தமிழ் நாட்டை நோக்கி மீண்டும் இலங்கை அகதிகள்

வடக்கில் படையினருக்கும் புலிகளுக்குமிடையே மோதல் அதிகரித்து வருவதையடுத்து கடந்த சில வாரங்களாக இலங்கையிலிருந்து 36 அகதிகள் தமிழ்நாட்டுக்குச் சென்றுள்ளனர்.
14 பேர் விடுதலைப் பலிகளின் கட்டப்பாட்டுப்பகுதியிலிருந்து தனுஷ்கோடிக்குச் சென்றுள்ளனர். இதற்காக இவர்கள் படகிற்கு தலா ஒருவருக்கு பதினையாயிரம் ரூபாய் வீதம் செலவழித்துள்ளனர். தமிழகப்பொலிஸாரால் இவர்கள் மண்டபம் அகதி முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 11 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் படகோட்டிகளால் தனுஷ்கோடி என்று சொல்லி 3வது மணல் திட்டில் இறக்கி விடப்பட்டிருந்தனர். இந்திய கடற்படையினர் அவர்களைக் கைது செய்து தனுஷ்கோடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் அவர்கள் தமிழக பொலிஸாரால் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.