வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழர் தேசிய கூட்டமைப்பு (TNA) க்கான ஆதரவை சக்தி வாய்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் விலக்கிக்கொண்டது.
தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களில் பாதிப்பேரை ஒருதலைப்பட்சமாக கூட்டமைப்பின் தலைமை விலக்கிக் கொண்டதை தொடர்ந்து, கூட்டமைப்பின் தலைமை இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு, தமிழ் காங்கிரசுக்கும் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையில் வேறுபாடுகள் தோன்றிய நிலையில், யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் தமிழர் தேசிய கூட்டமைப்பு (TNA) க்கான ஆதரவை விலக்கிக்கொண்டது.
மேலும் தாம் நடுநிலை வகிக்கப் போவதாகவும், இம்முறை மக்கள் பொருத்தமான வேட்பாளர்களை, கட்சியை தாமே தெரிவு செய்யட்டும் எனவும், தாம் மக்களிடம் வைக்கும் வேண்டுகோள் இதுவே எனவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.
“கூட்டமைப்பின் தலைமை இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு, தமிழ் காங்கிரசுக்கும் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையில் வேறுபாடுகள் தோன்றிய நிலையில்….”
இதை இவர்கள் இப்போது தான் கண்டறிந்தார்களா?
ஏன் இந்த அந்நிய முகவர்களை நிராகரிக்குமாறு மக்களையும் தாமும் ஒதுங்கி நிற்பதாக அறிவிக்குமாறு அவர்களின் பட்டியலில் நிற்போரையும் கேட்க மாட்டார்கள்?
யாழ்ப்பாணத்தின் வெறும் 40 சதவீதமான வாக்காளர்கள் அட்டைகளே அஞ்சல் அலுவலகங்கள் ஊடாக விநியோகிகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள 7, 21,359 வாக்காளர்களுக்கான அட்டைகள் விநியோகிக்கப்பட வேண்டும். எனினும், இதுவரையில் 4, 27,164 வாக்காளர் அட்டைகளே விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணேஸ், எதிர்வரும் தேர்தல் தினத்தன்று 4 மணி வரையில் வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் வாக்களிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக தடுப்பு முகாம்களில் கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வலிகாமம் பகுதியில் இருந்த வாக்காளர்களின் வாக்கு அட்டைகளை, காங்கேசன்துறை – மருதனார்மடம் தற்காலிக அஞ்சல் நிலையத்தில் பெற்றுக் கொள்ளகூடியதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலெக்சின் இடுகைக்கும் செய்திக்கும் என்ன சம்பந்தம்?
மாணவர்கள் நடுவே கருத்து முரண்பாடுகளால் இந்தத் தடுமாற்றமா?
சுயேச்சைக் குழுக்கள் எல்லாம் அரசாங்கக் காசில் கேட்பவை என்றும் புதிய ஜனநாயகக் கட்சி சுயேச்சைக் குழு மட்டுமே விலக்கானது என்றும் புதிய ஜனநாயகக் கட்சியை மெச்சியும் சிவாஜிலிங்கம் பேசிவருவதாக அறிகிறேன்.
அது நல்ல அறிகுறி.
ஆனால் சிவாஜிலிங்கம் இப்போது தான் கண்டு பிடித்தாரா என்ற கேள்வியும் எழுகிறது.
இப்போது கேள்விப்படும் மன மாற்றாங்கள் எல்லாம் ஓரிரு வாரங்கள் முன்னர் ஏன் ஏற்படவில்லை?
கற்றறிந்த சமூகமே புதிய ஜனநாயக கட்சியின் கேத்தல் சின்னத்துக்கு வாக்களித்து மாற்று அரசியல் தலைமைத்துவத்துக்கு வழிகோலுங்கள்