இலங்கை ஜனாதிபத்தித் தேர்தலில் முன்னைய புலிகள் ஆதரவுக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு(TNA) சரத்பொன் சேகாவிற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்திருப்பதாக உறுதிப் படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரம சிங்கவுடனான பேச்சுக்கள் வெற்றியளித்திருப்பதாக ரனில் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கும் என்றும், இச் செய்தியை அவர்கள் சில நாட்களின் பின்பே வெளியிடுவர் என்றும் ரனில் மேலும் தெரிவித்தார்.
வன்னிப் போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கை என்பது சிங்களவர்களின் நாடு என்றும் தமிழர்கள் வேண்டுமானால் வாழ்ந்து விட்டுப் போகலாம், உரிமைகளைக் கோரமுடியாது என்று பல செவ்விகளை வழங்கியிருந்தார். ராஜபக்சவிற்குப் போட்டியாக இனவாதக் கருத்துக்களைப் பரப்புவதிலும் இனவழிப்பை மேற்கொள்வதிலும் சரத் பொன்சேகா திவிரமாக ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே வேளை புலி எதிர்ப்பாளர்களில் பெரும்பாலானவர்கள் மகிந்த ஆதரவுப் பிரசாரம் மேற்கொள்வதும் இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.
அரஷியலில் பலுத்த பழம் அயயா சம்பனதர் திடமான் முடிவொன்ரை எடுடத்துல்லார்.இதுநம் எல்லொர் வால்விலும்நலம் பயக்கட்டும்.2010 தமிழர் வாழ்வில் வசந்தம் தரட்டும்..
இம்மாதிரிப் பழுத்த பழங்கள் தான் தமிழ்ச் சமூகங்களை அழுக வைத்து நாறடிக்கின்றன.
இந்த பழுத்த பழங்களை திட்டிதீர்க்கும் யாழ்ப்பாண மக்களின் குரல் இன்னும் கேட்கவில்லையா