தமிழ் சினிமாவில் விடுதலைப்புலிகளின் பணம் ஆண்டுக்கு 350 கோடி ரூபா வரை பழக்கத்தில் விடப்படுகிறது. அதேச மயம் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகை யில் கூட்டங்களில் பேசி வரும் திரைப்பட இயக்குநர் சீமான் மீது உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறுகிறார் முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழகத்தின் மூத்த காங்கி ரஸ் தலைவர்களில் ஒருவருமான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியவை வருமாறு:
தமிழ்ச் சினிமாவில் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாவரை முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இதில் வெளி நாடுகளிலிருந்து விடுதலைப்புலிகளின் பணம் இங்குள்ள முக்கியநபர்கள் மூலம் தமிழ்ப் படத் தயாரிப்புகளில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. ஆயிரம் கோடியில் மூன்றில் ஒரு பங்கு , அதாவது 350 கோடி ரூபா வரை தமிழ்ப் படங்களில் இவ்வாறு புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. இதனால் தான் புதிய படங்களின் தயாரிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திரைப்பட இயக்குநர் சீமான் , “நாம் தமிழர்’ என்ற இயக்கத்தைத் தொடங்கி செயல் வீரர்கள் கூட்டத்தை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தியிருக்கிறார்.
இக்கூட்டங்களில் சீமான் பேசியவை இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப் பாட்டுக்கும் எதிரானவை. பணத்தைப் பற்றிக் கவலைப்படாதே , எத்தனை ஆயிரம் கோடி பணம் தேவைப் பட்டாலும் அதைத் தர பலரும் தயாராக இருக்கிறார்கள் என்றும் உறுதியளித்துள்ளார்.
இந்திய ஒருமைப்பாட்டின் மீது நம்பிக்கை வைத்து , கருணாநிதி செயலாற்றி வரு வதை சீமானால் தாங்கிக்கொள்ள முடிய வில்லை. தலைவர்களுக்கு எதிராக மக் களை தூண்டிவிடும் வகையிலும் சீமான் பேசிவருகிறார்.
இந்தியா இனிமேல் எங்களுக்குப் பக்கத்து நாடு தான். எங்கள் நாடு இல்லை. இனிமேல் இந்திய இறையாண்மை என்று யார் பேசினாலும் அவர்களை நாடு கடத்து வோம். தமிழர் அல்லாதோர் கடைகளை யும் , நிறுவனங்களையும் அடித்து நொறுக்குங்கள் , எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள் , நான் இருக்கிறேன்’ என்றும் சீமான் பேசி வருகிறார்.
சீமானின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தாவிட்டால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடும். முதல்வர் கருணாநிதி உட்பட பல தலைவர்களுடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்படும் என்றார்.
“சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகை யில் கூட்டங்களில் பேசி வரும் திரைப்பட இயக்குநர் சீமான் மீது உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்னைபொறுத்த வரையில் இது ஒரு புதுச் செய்தியல்ல (NEW ‘S)கோடம்பாக்கத்தில் மட்டுமல்ல இந்தியாவில் பல முதலீடுகளில் புலிகளின் பணம் புரண்டோடுகிறது. அங்கு மட்டுமல்ல துபாயிலும் பல முதலீடுகள். இதை எனது கருத்துக்களில் ஈழத்து, இந்திய தளங்களில் தெரவித்திருந்தேன். (KP இப்போ சொல்லி, வருங்கால ஸ்ரீலங்கா மார்க்கோஸ் குடும்பத்தின் பெயர்களில் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கலாம்)
அத்துடன் “கழுதை ஏற்றுவது” இனி புலம்பெயர் நாடுகளின் கோடைகாலங்களில் “நட்சத்திர விழா”, “இன்னிசைக் கச்சேரி” என்று தொடக்கி விடும். சென்னையில் கழுதை ஏற்றுவதற்கு பல ஏஜென்டுகளே உள்ளனர்.
இவையெல்லாம் இந்திய மத்திய, மாநில அரசாங்கங்களிர்க்குத் தெரியாமலில்லை. அந்நிய செலாவணிக்காக,உள்ளூர் வியாபாரத்திற்காக கண்டும் காணாத மாதிரி விட்டுள்ளார்கள். இதை பலமுறை சுட்டிக் காட்டி விட்டுவிட்டேன். தற்போதும் புனையில் நடந்த குண்டுவெடிப்பு இந்திய அரசாங்கத்தின், உளவுத்துறையின் அசமத்தப் போக்கினாலேயே நடந்தது. நாட்டிற்குள் உலவும் புலியைப்
பிடிக்கமாட்டார்கள்,புற்றிர்க்குள் இருக்கும் சிற்றேரும்பை பிடிக்கத் தெரிவார்கள், வேண்டுமானால் அதை செய்தியாகவும் போடுவார்கள்.
ஈழத்தமிழரின் குருதியில் அரசியல் செய்யும் தமிழ்நாட்டில் இதுவும் ஓர் அரசியல், தற்போது யோசிக்கிறார்கள் அமரர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அன்புத் தம்பி என்று தன்னை தானே அழைக்கும் சீமானின் “தமிழர் இயக்கம்” தமிழ்நாட்டில் வளர்ந்து அரசியலில் இறங்கினால் என்ன செய்வது என்று. “சீமான் பேசியவை இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப் பாட்டுக்கும் எதிரானவை” என்று சொல்பவர்கள் மக்களிடையே செல்வாக்கு இல்லாத வீரமணி, பழ. நெடுமாறன் எவ்வளவு பேசியிருப்பார், வைகோ எவ்வளவு பேசியிருப்பார், ஏன் அவர்களைக் கண்டு கொள்ளவில்லை?
மேலும் சொல்கிறார்கள், “இந்திய ஒருமைப்பாட்டின் மீது நம்பிக்கை வைத்து , கருணாநிதி செயலாற்றி வரு வதை சீமானால் தாங்கிக்கொள்ள முடிய வில்லை. தலைவர்களுக்கு எதிராக மக் களை தூண்டிவிடும் வகையிலும் சீமான் பேசிவருகிறார்”, “சீமானின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தாவிட்டால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடும். முதல்வர் கருணாநிதி உட்பட பல தலைவர்களுடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்படும் என்றார்”. இதன் அர்த்தம் என்ன? ஈழத்தமிழ் ஆதரவு கோஷத்தை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல் போட்டியே.
இன்று இந்த தமிழ் நாட்டு அரசியலின் “கோமாளி அரசியல்” தற்போது எம் ஈழத்திலையும் அகதிகள் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், அபிவிருத்தி என்ற பெயரிலேயே அரங்கேறுகிறது. உதாரணத்திற்கு ஒரே இடத்தில் மீள் குடியேற்றப்பட்டவர்கட்க்காக அரசாங்கம் தனிய அறிக்கை விட இரு தமிழ் மாற்று அரசியல் கட்சிகள் தமது வேண்டுகோளிற்கு இணங்கவே ஜனாதிபதி செவிமடுத்தார் என முண்டியடித்து அறிக்கை விட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், தற்போது இலங்கையின் மிகப்பெரும் கொடையாளி நாடாக சீனா உள்ளதாலும், பாரிய முதலீடுகளில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், எந்நேரமும் இராணுவ மயமாக்கப்படக் கூடிய எண்ணெய்குதங்களைக் கொண்ட அம்பாந்தோட்டை துறைமுகம் முதற்கொண்டு இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் சுற்றை மியான்மார் தொடங்கி கடல் பாதையை ஆக்கிரமித்து வரும் நிலையில், இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் வளம் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் செய்திகள் வரும் நிலையிலும், இந்தியா எந்நேரமும் 80களின் அனுராதபுர படுகொலைகளையோ, மன்னார் இரயில் தாக்குதலையோ, சாவகச்சேரி போலிஸ் நிலைய தாக்குதலையோ தொடரலாம். இவ் சீன அச்சுருத்தல்களுக்காகவே தற்போது கடுமையான பேச்சு வார்த்தைக்கு முன்பு இலங்கைத் தூதுவராக இருந்த, இந்திய வெளிவிவகார செயலர் நிருபாமா இராவை அனுப்பியுள்ளார்கள். மற்றும்படி ஈழத்தமிழருக்காகவோ, 13வது சீர்திருத்த சட்டம் அமுலாக்கப் பட வேண்டும் என்ற உணர்வில்லோ அல்ல.
– அலெக்ஸ் இரவி