தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும் என்று கருணாநிதி அறிக்கை விடுத்துள்ளார். தமிழினத் தலைவன் வேடம் போட்டிருந்த கருணாநிதிக்கு நிகராக நடிப்பதற்கு ஜெயலலிதா கற்றுக்கொண்டதன் எதிரொலியாக இப்போது கருணாநிதி தமிழ் ஈழம் குறித்து பேச ஆரம்பித்துள்ளார். தமிழ் நாட்டு அரசியல் வாதிகளால் ஈழத் தமிழர்கள் வெறும் துருப்புச் சீட்டாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
2009 இல் முள்ளி வாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் கருணாநிதியுடன் இணைந்து ஒரு நாடகத்தையே நடத்தியதாக கோதாபாய ராஜபக்ச கூறியிருந்தார். அதே கோதாபய இப்போது கருணாநிதியின் தமிழ் ஈழம் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார். ஆக, புதிய நாடகம் ஒன்று ஒத்திகை பார்க்கப்படுகிறதா என்ற அச்சம் உருவாகியுள்ளது.
கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டி நீக்ரோ ஆகியவற்றை தனி நாடாக பிரகடனப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்பட்ட வாக்கெடுப்புகளே காரணமாக அமைந்தன. அதேபோல இலங் கையிலும் வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சிலர் ஆலோசிக்க துவங்கியுள்ளனர்.
அதேபோன்ற ஒரு நடைமுறையை தான் தனி தமிழ் ஈழத்தை பொறுத்தவரை பின்பற்ற வேண்டு மென்று நாம் கோருகிறோம். அதற்கு தான் இந்திய அரசின் ஒத்துழைப்பை நாடுகிறோம். இந்த வாக் கெடுப்பு பற்றி, நான் இப்போதல்ல, 14-10-1987ல் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும்போதே, ஒப்பந்தத்தில் ஒரு முக்கியமான ஷரத்து – வட கிழக்கு பகுதிகள் இரண்டு மாகாணங்கள் – அவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஈழத்தமிழ் மாநிலமாக தமிழர் தாயகமாக ஒரு மாநில அரசு அங்கே உருவாகக்கூடிய அளவிற்கு அதிக அதிகாரங்களை கொண்ட சுயாட்சி உரிமையோடு கூடிய ஒரு மாநில அரசு உருவாகக்கூடிய அளவிற்காவது இடை காலத்தில் குறிக்கோள் தமிழ் ஈழம் என்றிருந்தாலும் கூட, ஒரு ஏற்பாடு ஒப்பந்தத்தில் வேண்டும் என்று போராளிகள் கேட்டார்கள். நாமும் அதைத் தான் வலியுறுத்தினோம்.
ஒப்பந்தம் கையெழுத்தான அடுத்த வாரமே, இலங்கையிலே, கொழும்பிலே ஜெயவர்த்தனா, ராஜீவ் காந்திக்கு பக்கத்திலே அமர்ந்து ஒப்பந்தத்திலே கையெழுத்து போட்ட ஜெயவர்த்தனா கிழக்கு மாகாண மக்கள் விரும்பினால் இணைந்திருக்கலாம் இல்லாவிட்டால் தனித்திருக்கலாம் என்ற கருத் தமைந்த ஷரத்தை எழுதி கையெழுத்து போட்ட அதே ஜெயவர்த்தனா அப்படி ஒரு பொதுத் தேர் தல் வரும் போது, வாக்கெடுப்பு நடத்தும் போது, நான் கிழக்கு மாகாணத்திற்குச் செல்வேன், கிழக்கு மாகாணம், வடக்கு மாகாணத்தோடு இணைகின்ற அந்தக் கருத்திற்கு எதிராகப் பேசுவேன் என்று சொன்னார்.
எனவே ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு, அப்போதே அதற்கு மாறாக இலங்கை அதிபர் பேசினார். 27-8-1983ல் சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக் குழுவில் விடுதலை பெற்ற தனி தமிழ் ஈழம் தான் இதற்கு நிரந்தர பரிகாரம் என்று இந்த தீர்மானத்தை நிறைவேற்றினோம்.
தனித் தமிழ் ஈழம் என்பது வரலாற்று ரீதியாக தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமையாகும். ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கையும், தமிழ் நாடும் ஒரே நிலப்பகுதியாக இருந்தன என்ற உண் மையினை பல ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இலங்கை, கடலால் பிரிக்கப்படுவதற்கு முன்பு வாழ்ந்த மக்களின் வழித்தோன்றல்களே ஈழத் தமிழர்கள் ஆவர்.
தனித் தமிழ் ஈழம் எனும் விடுதலை கீதம் தரணியெங்கும் வாழும் தமிழர்களின் செவிகளிலே இடையறாது ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இலங்கை மண்ணில் தமிழர்கள் சிந்திய ரத்தமும், கொடுத்த உயிர்ப் பலிகளும், நிச்சயம் வீண் போகாது. இன்றில்லாவிட்டால் நாளை, நாளை இல்லா விட்டால் நாளை மறுநாள் தனித் தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகும். ஈழத் தமிழினத்தின் இணையற்ற அடையாளம் குன்றின் மேலிட்ட விளக்காக குவலயத்திலே ஒளி வீசும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
He had a special conferance at Coimbatore and felicitated the late Professor Karthigesu Sivathamby of Point Pedro. There is a regular Indian Army Cantonment at Coimbatore. They had the Madras Regiment stationed at Nainy, Allahabad, because the Lucknow mutiny was put down using the Tinnavely Regiment. Only after that the British Government took over from the East India Company all the affairs concerning the whole of India. All of you come to Terre Haute, Indiana, USA. 1964. General Sathasivam Selvanayagam. Five Stars. Sella Killi is a Sengunthar like Bharathithasan.
ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கையும், தமிழ் நாடும் ஒரே நிலப்பகுதியாக இருந்தன——–
இலங்கைவும் இந்தியாவும் தனி தனி நடுகல் ஆதரம்.
இலங்கைல் கிழக்கு மாகாண மட்டகளப்பு தமிழகத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது.
மட்டக்களப்புத் தமிழகம்
நூலாசிரியர் வி. சீ. கந்தையாவி.
சி.கந்கையா அவர்கள் “மட்டக்களப்புத் தமிழகம்”(1964) என்னும் நூலில், “விஜயன் கி.மு. 540இல், பாண்டிய நாட்டிலிருந்து கொண்டு வந்த தமிழ் மக்களைக் ‘கதிராகல’ என்னும் மலைச்சாரலிற் குடியேற்றினான் என்றும், இப்பகுதி அக்காலத்து வேடராற் குடியிருக்கப் பெற்றதென்றும் சிங்கள சரித்திர நூல்கள் கூறுகின்றன. அவற்றுட் குறிப்பிடப்பெற்ற ‘கதிராகல’ மலைப்பகுதி ஏறக்குறைய 1200 அடி உயரமுள்ள குன்றுகளாக இத் தமிழகத்திலே மட்டுநகரின் தென்மேல் திசையில் 17 மைல் தூரத்தே இன்றும் உள்ளது”(பக்.6-7) எனக்குறிப்பிட்டுள்ளார்.
http://www.facebook.com/note.php?note_id=419774064714997
ஈழம்) என்னும் தீவு நாடு இந்தியப் பெருங்கடலில் அமிழ்ந்துவிட்ட பரந்த இலெமூரியா கண்டத்தின் எஞ்சி நிற்கும் நிலப்பரப்பே ஆகும்.
ஏறத்தாழ 30,000 (முப்பதாயிரம்) ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர்கள் அங்கே புகழ் பெற்று சிறப்புடன் வாழ்ந்தனர் என்பது வரலாற்று உண்மை ஆகும். இந்தியாவும் ஈழமும் ஒரே நிலப்பரப்பில் இருந்த காலம் முதலே தமிழர்கள் அங்கே வாழ்ந்தார்கள் என்பதை நிரூபிக்க எத்தனையோ வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. சிறிலங்கா முழுவதுமே தமிழர்களுக்குச் சொந்தமானது ஆகும்: அவர்கள் மட்டுமே அந்தத் தீவு முழுவதிலும் வாழ்ந்தார்கள்.அதட்காக அன்னியமக்களை கைவிட்டதே இல்லை
வரதன் { கஸ்ட்ரோ }
கண்டம் தோன்றா விதம் ஆப்ரிக்கா கண்டதுடன் இருந்து இந்திய இலங்கை இனத்தை கண்டம் தட்டு பிரிந்த விதம் எங்கே குமரி கண்டம்http://www.youtube.com/watch?v=NYbTNFN3NBo&feature=related
வரதன் { கஸ்ட்ரோ }
இலங்கை தீவின் பூர்விக குடிகள் வேடர்கள் இந்த தீவின் விஜயன் வருகைக்கு பிறகு தான் தென் தமிழ் நாட்டில் இருந்து தமிழர் குடியேற்றம் நடைபெற்றது பார்க்கவும்
இலங்கை இந்து சமுத்திரத்தின் கடல் பயணத்தின் கேந்திர நிலையமாக திகழ்கிறது. அதில் முக்கியமாக வங்கக் கடலின் வடக்க்கிலும் மேற்கிலும் இருந்து வரும் கடற் பயணக்காரருக்கு படகுகளை கரை சேர்க்கும் இயல்லு கிழக்கு கரையோரத்துக்கு இருந்தது. இதனால் ஒரிசா (கலிங்கம்)ஈ வங்கம், முதலிய இந்திய வடகிழக்குப் பிரதேசங்களில் இருந்தும், சேர, சோழ, பாண்டிய எனும் தென் இந்தியாவில் இருந்து வந்தவர்களாலும் மட்டக்களப்பு மக்கள் குடியேற்ற வளர்ச்சி பெற்றது, அதன் தொன்மையை காட்டுகிறது http://www.battinews.com/2012/01/blog-post_8229.html
வரதன் { கஸ்ட்ரோ }
மேலும் தகவல் அரிய மட்டகளப்பு தமிழகம் இந்த நூலை பார்க்கவும்
http://noolaham.net/project/25/2469/2469.pdf
It is a single Sri Lankan citzenship. That means, rights, previlages and responsibilities. Four parliamentarians went to Chennai during the war and none wanted to meet them in the public then.