தேசியம் குறித்தும், தேசம் குறித்தும் தத்துவார்த்த ஆய்வின் முடிவுகளை முதலில் தெளிவான வரைமுறைகளோடு முன்வைத்தவர் ரஷ்யப் புரட்சியாளர் ஜே.வி.ஸ்டாலின் என்பதை அவரது எதிரிகளே ஏற்றுக்கொள்கின்றனர். ஸ்டாலின் முன்வைத்த ஆய்வுகளின் பின்னதாக, கடந்த நூற்றாண்டில் துறை சார் அறிஞரான பேராசிரியர் கெல்னரின் ஆய்வுகள் பிரதானப்படுத்தப்பட்டன.
ஸ்டாலினின் ஆய்வுகளை மேலும் உறுதிப்படுத்தும் ஐரோப்பிய தேசியவாதம் சார்ந்த தகவல்களுடன் இவரது நூலான Nation and Nationalism என்பது ஐக்கிய நாடுகள் நிறுவனத்தாலும் தேசியம் குறித்த ஆய்வுகளுக்காக மேற்கோள் காட்டப்படுகிறது.
90 களில் பெனடிக்ட் அன்டர்சன் என்ற மனிதவியலாளர் தேசியம் குறித்த கருத்துருவாக்கத்திற்கு அச்சுத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியே முதன்மையான காரணம் என்ற கருத்தை முன்வைக்கிறார். மனிதவியலாளரான அண்டர்சன் ஆய்வின் எல்லைகளைத் துறைசார் முறைமைகளுள் மட்டுப்படுத்திக் கொண்டார். அண்டர்சனின் ஆய்வில் முழுமையற்ற தன்மையை பின்னதாகப் பல ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ள போதிலும், தேசிய வாதக் கருத்துக்களை வளர்ப்பதில் அச்சு ஊடடங்களின் வரவு கணிசமான பங்கினை வகித்திருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.
நாடுகடந்த தேசிய வாதத்தை – தொலைதூரத் தேசியவாதத்தை – வளர்ப்பதற்கு இணையத்தளங்கள் பிரதான பாத்திரம் வகிப்பதாக, அச்சு ஊடகங்கள் குறித்த தனது கருத்தை முன்வைத்து 25 வருடங்களின் பின்னதாக அன்டர்சன் மீண்டும் குறிப்பிடுகிறார். தேசம் கடந்து வாழ்கின்ற அல்பேனியர்களின் இணைய உரையாடல் தளங்கள் அவர்களிடையே ஏற்படுத்திய இணைவை முன்வைத்து இந்த முடிவிற்கு வர அவர் எத்தனிக்கிறார்.
இணையத் தளங்களும் தேசிய வாதமும் குறித்து 2011 இல் வெளியான குறிப்பிடத்தக்க நூலான Ethnopolitics in Cyberspace: The Internet, Minority Nationalism, and the Web of Identity இல் அதன் ஆசிரியர் ரொபேட் சௌன்டேர்ஸ் சில குறிப்பான குழுக்களை முன்வைத்து அவற்றின் ஒருங்கிணைவத் தேசிய வாதமாக முன்வைக்கிறார்.
நான்கு முக்கிய குழுக்களை முன்வைத்து கருத்துரைக்கப்படும் இந்த நூலில்,
1. அல்பேனியாவிற்கு வெளியால் வாழும் அல்பேனியர்கள்
2. ஐரோப்பிய முஸ்லீம்கள்
3. ரூமேனிய ஜிப்சிகள்
4. ரஷ்யாவின் குறித்த பகுதியினர்
போன்ற பொதுவான அடையாளத்தைக் கொண்டிருக்கும் குழுக்களின் மத்தியில் ஆய்வுகளை மேற்கொள்ளப்படுகிறது.
இங்கு இக் குழுக்களின் “புளொக்” எனப்படுகின்ற உரையாடல் தளங்களையும், சில செய்தி இணையங்களையும் முன்வைத்து ஆய்வு செய்யப்படுகின்றது. அல்பேனியர்களைத் தவிர ஏனையோர் மத்தியில் தேசிய இன அடையாளங்களைக் காண்பதில் சிக்கல்கள் காணப்பட்டாலும் “குறித்த அடையாளம்” என்ற வகையில் இணையங்கள் எவ்வாறு பங்காற்றுகின்றன என்ற ஆய்வு கவனிக்கத் தக்கதாக அமைகிறது.
தேசிய அடையாளத்தைப் பேணுவதிலும், அவற்றில் பழமைவாதத்தைப் புகுத்துவதிலும் இணையத்தளங்களின், குறிப்பாக உரையாடல் தளங்களின் பங்களிப்புக் குறித்து விரிவாகக் கூறப்படுகின்றது. அல்பேனியர்கள் தமது தேசியவாத அடையாளத்தைப் பேணிவதற்கான அடிப்படையான பங்கை இணையங்கள் மேற்கொள்கின்றன என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
அல்பேனியர்களின் தேசிய வாதம் என்பது குறுகிய எல்லைகளை வரையறுத்துக்கொண்ட குறுந்தேசிய வாதமாக சீரழிந்து போவதை நேரடியாக நூலாசிரியர் குறிப்பிடத் தவறினாலும் ஏனைய தேசிய இனங்கள் மீது அவர்களின் வெறுப்புணர்வு, தேசிய அடையாளத்தின் வழியாக அவர்கள் மறந்துவிடும் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவுகளின் சிக்கல்கள் போன்ற ஆசிரியரின் குறிப்புகளூடாக அதனைப் புரிந்து கொள்ளலாம்.
தவிர, தேசிய வாத எல்லைக்கு அப்பால் செயற்படும் நிழல் உலகத் தாதாக்கள் போன்ற இணையக் குழுக்களயும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. இவர்களில் பெரும்பாலோனோர் ஒடுக்கும் அதிகாரங்களுடன் இணைந்து செயற்படுகின்றனர் என்பது சுவாரசியமான பேசு பொருள்.
அடையாளம் குறித்த கருத்தை உருவாக்குவதில் தகவல் தொழில் நுட்பத்தின் பங்காற்றல் அதற்கு அப்பாலும் நகர்த்தப்படலாம் என்ற நம்பிக்கை அரேபிய மக்கள் எழுச்சியின் போது அதன் பயன்பாட்டிலிருந்து வெளிப்படுகிறது.
குறைந்தபட்சம் மத்தியதர வர்க்கம் சார்ந்த முன்னணி சக்திகளின் சமூகமாற்றத்திற்கான பங்கை ஊக்கப்படுத்தும் கருவியாக இணையங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற நம்பிக்கையை இவை வழங்குகின்றன.
தமிழ்ச் சூழலில் இணையங்களின் அரசியல் பங்காற்றல் வன்னிப்படுகொலைகளின் பின்னர் பாய்ச்சல் நிலை வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஒடுக்கு முறையின் கோரம் உருவாக்கிய சமூகப் புறச்சூழல் பல் ஆரோக்கியமான விவாதங்களைத் தோற்றுவித்திருக்கிறது. தவிர, உலகம் முழுவதுமே உருவாகியிருக்கின்ற புதிய அரசியல் சூழலின் தாக்கம் அதிகார வர்க்கம் குறித்த குறைந்தபட்ச விழிப்புணர்வை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்ததாகக் காணப்படுகின்றது.
எது எவ்வாறெனினும், ரொபேர்ட் சௌன்டர்சின் நூலில் கூறப்படும் இணையக் குழுக்களின் சமாந்தரத் தன்மைகளையும் தமிழ் அரசியல் இணைய அரசியல் சூழலில் வெவ்வேறு அளவுகளில் காணலாம்.
1. குறுகிய எல்லைக்குட்பட்ட தேசிய வாதம் அல்லது இனவாதம்.
2. இலங்கை, இந்திய அரசுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்ப்பட்ட அரசியலும் இணையத்தள நிழல் உலகத் தாதாக்களும்.
3. ஏனைய அடையாள அரசியல் சார்ந்த இணையங்கள்.
குறுகிய தேசியவாத அரசியலை எதிர்கொள்ள தத்துவார்த்தப் பின்பலமற்ற பின் இரண்டு பகுதியினரும் தமமைச் சுற்றிய நிழல் உலகத்தை உருவமைத்துக் கொள்கின்றனர்.
தாம் பேசுகின்ற அரசியல் சார்ந்த பிரதேசத்தோடு தொடர்பறுந்த நிலையிலுள்ள இவர்கள் மிக நீண்ட காலத்தின் முன்னதாகத் தாம் எதிர்கொண்ட சிக்கல்களிலிருந்தே இன்றைய உலகத்தைக் கனவு காண்கின்றனர். கால் நூற்றாண்டுகளின் முன்னான சம்பவங்கள், இழப்புக்கள், தனி மனித அரசியல் தவறுகள் போன்ற அனைத்தையும் இன்றுள்ள அவல நிலையோடு மறு பிரதியீடு செய்து கொள்கின்றனர். இவற்றினூடாக உருவாகும் நிழல் உலகத்தில் ஒருவரை ஒருவர் பாத்திரப்படுகொலை செய்து வெற்றிகொள்வதாக புழகாங்கிதமடைகின்றனர்.
வரலாறு என்பது கூட ஒரு கணத்தில் நிறுதப்பட்டுவிட்ட சம்பவங்களின் தொகுப்பாகக் கருதும் இவ்வணியினரை அதிகாரவர்க்கம் தனது பயன்பாட்டிற்கு உட்படுத்திக்கொள்வது மிக இலகுவாதாகின்றது.
பல ஆண்டுகளின் முன்னதான சமூகப்புறச் சூழல், அக்காலப்பகுதிக்குரிய சமூகப் பொதுப்புத்தி, என்பன போன்ற பல காரணிகள் தவிர்க்கப்பட்டு தனி நபர்களைக் குறிவைத்து நிகழ்த்தப்படும் அவலத்தை எதிர்கொள்வது கடினமானது. இந்த நிழல் உலக அவதூறுகளுக்கு மாறாக உறுதியான அரசியல் உரையாடல் தளமாகவும் ஜனநாயக உருவாக்கத்திற்கான செயற்பாட்டு வெளியாகவும் சமூக அக்கறையுள்ளோர் தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதே இன்றைய தேவையாகும். இனவாத எல்லைகளைக் கூட இதன் வழியாக கடந்து செல்ல வாய்ப்புண்டு.
இவர்களின் மறுபுறத்தில் இனவாதிகளோ தமது அடையாளம், குறியீடு, சின்னம் போன்ற அனைத்தையும் அதன் பின்புலத்தில் புதைந்திருக்கும் அரசியல் உண்மைகளை இறுக்கமாக மூடிவைத்துவிட்டு அவற்றைத் தமது சுய தேவைக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். இணையங்கள் இவ்வாறான அடையாளங்களை எந்தவகையான அர்த்தங்களுமின்றிப் பயன்படுத்திக்கொள்ளப் பெரிதும் பங்காற்றுகின்றன. ஹிட்லர் தனது அடையாளத்தை உருவாக்கி முழு ஜேர்மனியர்களையும் அவற்றின் போதை மயக்கத்திற்கு அடிமையாக்கி ஜேர்மனியர்களையும் உலகையும் அழிவுக்கு உட்படுத்த முற்பட்டத்தை பலர் மறந்துவிட்டார்கள். அடையாளங்களைப் புனிதத் தன்மையோடு உருவாக்குதலும் அவற்றை முதலீடாகப் பயன்படுத்திக்கொள்தலும் ஆரம்பத்திலிருந்தே அழிவை நோக்கி வழிநடத்தப்பட்ட இராணுவப் போரின் பிரதான பண்பாக அமைந்திருந்தது.
ஆளூக்கு ஆள் கிள்ளீக் கொண்டும் ஒருவரை ஒருவர் குற கண்டு கொண்டும் விமர்சனம் எனும் போர்வையில் ஒருவர் மீது ஒருவர் சேறூ எறீந்து விளயாடும் தளமாக இணயங்கள் இருப்பதும் இங் கே சூர்யா, விஜய், சிம்பு, என்றேல்லாம் முகங்கள மறத்த எழுத்தாளர் உலவுவதும் சகிக்க முடியாத வேதனைகள்.
தமிழில் சரியாக எழுதத் தெரியாத சில வித்துவான்கள் தம்மை உலகமே அறிந்துள்ளது என்று எண்ணுவது மிக நகைப்புக் கிடமானது. சினிமா என்று ஊறி அதன் தாக்கத்தால் பிதற்றுவது மிகக் கவலைக்கிடம். கட்டுரையை சரியாகப் புரிந்துகொண்டவன் இப்படியெல்லாம் சத்தி எடுத்து தன்னையே கோமாளியாக்க மாட்டான்.
பின் குறிப்பு: சூர்யா எனது உண்மைப்பெயர். சிவகுமாரின் மகனுக்கு முன் பிறந்தவன் நான்.
சூர்யா என்ற தமிழ் ந்டிகர் பெயர் முன் வரவேண்டும் எனும் எண்ணத்தில் நண்பர் சூர்யா எனும் இணய நண்பரை நான் மறந்து விட்டேன்.பால்குமார் நாவல் படித்த தருணத்தில் பின்னூட்டம் விட்டதால் இந்த தவறூ ஏற்பட்டுள்ளது.தங்கள பாதிதிருந்தால் தயவு செய்து ம்ன்னிக்கவும்.
தமிழ் தேசியம் குறித்து கடந்த காலத்தில் சிலாகித்த இணையம் இன்றும் தமிழ் தேசியம் குறித்து அளவளாவும் இணையம் ஒன்று பல படுகொலைகள் குறித்து படங்களுடன் தகவல்களை வெளியிட்டு வருகின்றது அந்த இணையம் இலங்கை புலனாய்வுத் துறையுடன் இணைந்து செயலாற்றி வருகின்றது எனக் கூறுகின்றனர் இப்படி நிழல் உலக இணையங்கள் மக்களை குழப்பி வருகின்றது. குறைந்த பட்சம் இந்த இணையங்கள் யாரால் இயக்கப் படுகின்றன என்று கூற முடியாதவர்கள் நாம் இதோ வருகிறார் அதோ வருகிறார் என்பதில் ஏமம் காலம் கடந்து போகிறது. எது என்னவோ எல்லா இணையங்களையும் பகுத்தாராய்ந்து பார்க்கும் திறமை மக்களிடம் வரவேண்டும்.
புரட்சிக்கு இட்ட கருத்துநீர் முள்ளிவாய்க்கால் வ்ழி ஓடீ
கொமிசாரிணைய
பொய்யுக்கும் பொசியுமாம்..