தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்படி அரசாங்கத்தை வலியுருத்தி 28ம் திகதி வியாழக்கிழமையான நேற்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. சமூகவாத இளைஞர் சங்கத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
‘சகோதரத்துவத்தின் தினமான’ ஜூலை 23 ஐ முன்னிட்டு சமூகவாத இளைஞர் சங்கம், தேசிய ஒற்றுமையை வலியுருத்தி பல நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடு செய்திருப்பதோடு, அதன் ஒரு அங்கமாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ததாக அதன் ஏற்பாட்டாளர் பிமல் ரத்னாயக தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் சிறைக் கைதிகளை விடுதலை செய்து அவர்களுக்கு சாதாரண வாழ்க்கையை வாழ சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகள் பலர் கலந்துகொண்டனர்.
சிங்கள இளைஞர்களே பெரும்பான்மையாகக் கலந்து கொண்ட இந்தப் போராட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
சிங்கள இளைஞர்கள் தனியாக கிளர்ச்சி செய்ய தூண்டி அவர்களை கொலை செய்தது…1971(அ
ழித்த)
தமிழ் இளைஞர்களை தனியாக கிளர்ச்சி செய்ய தூண்டி அவர்களை கொலை செய்தது…2009(அழித்தது)
சிங்கள தமிழ் இளைஞர்களை இணைத்து எப்போ கொலை செய்ய போகிறாங்களாம் இந்த அரசியல்வாதிகள்….?????
உங்கள்சந்தேகங்கள் கேள்விகளில் அர்த்தம் உண்டு.
கால தாமதமானாலும் தேவையானவொன்று.