Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

தமிழ் அகதிகளை அழிக்கும் முள்ளிவாய்க்கால் ஆரம்பமாகிவிட்டது

இனியொரு... by இனியொரு...
06/05/2014
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
0
Home பிரதான பதிவுகள் | Principle posts

மனித குலத்தைப் பாதுகாப்பதற்கு என்றே உலகத்தின் ஒவ்வோரு மனிதனின் உழைப்பிலும் மில்லியன்களைச் சுரண்டி உருவான நூற்றுக்கணக்கான உரிமை அமைப்புக்கள் அனைத்தும் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்க ஆயிரமாயிரமாய் மனித உயிர்கள் இரத்தமும் சதையுமாய்ச் சிதைக்கப்பட்டன.. குழந்தைகளும், முதியோரும், சிசுக்களைத் தாங்கிய பெண்களும், நெஞ்சுரம் மிக்க நாளைய சந்ததியும் பிணக் குவியல்களாக அழித்துப்போடப்பட்டன. தனது எஜமானர்களான மேற்கின் ஏகபோக அரசுகளுக்குத் தேவைப்பட்டால், தூசு பட்டாலும் கண்ணீர்வடிக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு மகிந்த ராஜபக்சவின் பேரினவாதப் பாசிச அரசால் மக்கள் சாரிசாரியாகக் கொல்லப்பட்ட வேளையில் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தது. வெற்றுத் தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றி மக்களை ஏமாற்றியது.

உலக நாடுகளுடனும், இலங்கைப் பாசிச அரசுடனும் இணைந்து ஐக்கிய நாடுகள் சபைதமிழ்ப் பேசும் மக்களின் போராட்ட அரசியல் நியாயத்தை மட்டுமல்ல, அமைதியாய் வாழ்ந்த ஆயிரமாயிரம் மனிதர்களை மட்டுமல்ல, உலகத்தின் ஒவ்வொரு மனிதனின் உரிமையையும் அழித்துத் துவம்சம் செய்திருக்கிறது. சிங்கள பௌத்த பேரினவாதம் உருவாக்கிய மனித மிருகங்களான ராஜபக்ச குடும்பத்தின் தலைமையில் உலகின் அனைத்துக் கொடிய ஒடுக்குமுறையாளர்களும் தமது கொலைவெறியைத் தீர்த்துக்கொண்டனர்.

லியோ சீமான்பிள்ளை
லியோ சீமான்பிள்ளை

பல்தேசிய வர்த்தக நிறுவனங்களின் தூய வியாபார வெறி நடத்திய இந்தக் கொலைத் தாண்டவம் ஆயிரக்கணக்கான மக்களை உலகம் முழுவதும் அகதிகளாக்கி சிதைத்துச் சின்னாபின்னமாக்கியுள்ளது. ஐந்து வருடங்களின் முன்னர் இலங்கையின் கொலைக்களத்திலிருந்து தப்பி தமிழ் நாட்டிற்கு அகதியாகச் சென்று அங்கு அகதி வதை முகாமில் வாழ்ந்த லியோ சீமான்பிள்ளை என்ற தமிழர் அவுஸ்திரேலியாவில் தீமூட்டித் தற்கொலை செய்துகொண்டார். தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவதாகக் கூறுபவர்கள் ஈழத் தமிழர்கள் சிறைவைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களைக் கண்டுகொள்வதில்லை. இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சத்தில் மன்னாரைச் சேர்ந்த சீமான் பிள்ளை தற்கொலை செய்துகொண்டார். மன்னார் கடற்பரப்பில் பிரித்தானிய நிறுவனமான வேதாந்தா பெற்றோல் அகழ்ந்து செல்வத்தை அபகரிக்க அகதிகள் அந்த மண்ணின் மைந்தர்கள் பெற்றோல் ஊற்றித் தம்மை எரித்துக்கொள்கிறார்கள்.

மனித உரிமையைப் பாதுகாக்கிறோம் என்று கூறிவிட்டு சாரிசாரியாக மக்கள் கொல்லப்பட்டபோதும், இனச்சுத்திகரிப்புத் தொடரும் போதும் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் சபையின் துணை நிறுவனமே அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் முகவர் நிறுவனம்(UNHCR). இலங்கையில் இனப்படுகொலை அரசும் போர்க்குற்றவாளிகளுமே ஆட்சியிலிருக்கிறார்கள் என்று தாய் அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை பேச்சளவில் சொல்லிவரும் அதே வேளை செயலளவில் அதன் துணை அமைப்பான UNHCR அகதிகளைக் கேலிக்கூத்தாக்கியுள்ளது. கடந்தவாரம் மலேசியாவிலிருந்து UNHCR இனால் அகதியாக அங்கீகாரம் பெற்ற தமிழர்கள் இலங்கை அரசிடம் மீள ஒப்படைக்கப்பட்ட போது தாய் நிறுவனமான ஐ.நா சபை போல UNHCR உம் அண்ணார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக UNHCR இனை நம்பிப் பாதிக்கப்பட்ட ஆயிரமாயிரம் அகதிகள் உலகம் முழுவதிலுமிருந்து தமது அச்சத்தை வெளியிட்டனர். அதே வேளை உலகம் முழுவதிலும் தமிழர்களின் உரிமையில் அக்கறை உள்ளவர்களை அழித்தே தீருவோம் என இலங்கை அரசு சூழுரைக்கின்றது. இலங்கை அரசிற்கு ஐ,நா உம் UNHCR உம் துணை போகின்றனவா என்ற கேள்விகள் மீள எழ ஆரம்பித்துள்ளன. மலேசியாவிலிருந்து அகதிகளை எந்த முன்னறிவிப்பும் விசாரணையுமின்றி நாடுகடத்தும் போது மக்களும், ஜனநாயக முற்போக்கு சக்திகளும் என்ன செய்கிறார்கள் என்பதை இலங்கை அரசும் ஐ.நாவும் நாடிபிடித்துப் பார்க்கிறதா என்ற சந்தேகங்கள் எழ ஆரம்பித்துள்ளன. முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் ஆரம்பத்திலும் இவ்வாறு மனிதப் படுகொலைகளை நிகழ்த்திவிட்டு என்ன நடக்கிறது என்று இதே கும்பல் பரிசோதித்துப் பார்த்தது. அதன் பின்னர் உலகத்தை மௌனமாக்கிவிட்டு ஒரு லட்சம் பேர்வரை கொன்றுபோட்டது. இம்முறை இதனை அனுமதிக்க முடியாது. மக்கள் விழித்தெழுந்துவிட்டார்கள், இனியும் ஏமாற்ற முடியாது இந்த அமைப்புக்களுக்குச் சொல்லும் இந்த ஆர்ப்பாட்டம் தொடரும்.

தமிழ் அகதிகள் அனாதைகள் அல்ல! மக்களை ஏமாற்றாதே !! இனக்கொலை அரசின் கைகளில் அப்பாவிகளை ஒப்படைக்காதே!!!
06.06.2014
தமிழ் அகதிகளைக் காப்போம்! savetamilrefugees@gmail.com

நாளை மாலை UNHCR அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம்

savetamilrefugees

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
புலிகளைக் காரணம்காட்டி இராணுவக் குவிப்பை நியாயப்படுத்தும் இலங்கை அரசு

இராணுவ மயமாக்கலை அபிவிருத்தி என அழைக்கும் இலங்கை அரச பாசிஸ்டுக்கள்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...