Published on: Aug 24, 2013 @ 3:34
இன்று இலங்கையில் ராஜபக்ச பயங்கரவாதம் சர்வதேசப் பயங்கரவாதத்தின் தெற்காசிய முன்முகமாகத் தொழிற்படுகிறது. இன்று வரைக்கும் இலங்கையில் அரச பயங்கரவாதிகள் மனிதப் படுகொலைகளை தயக்கமின்றி கட்டவிழ்த்துவிடுவதும் அதன் பின் சுயாதீன விசாரணை என்ற பெயரில் காலத்தை இழுத்தடிப்பதும் வழமையாகிவிட்டது. வன்னிப் படுகொலை நடந்த நாட்களிலேயே விசாரணை நடத்தப்படும் என்று உலகின் ஏகாதிபத்தியங்களும் உள்ளூர் மனித உரிமைக் ‘காவலர்களும்’ உலக மக்கள் குரல்களைத் தடுத்து இன்று ஐந்தாவது வருடத்தை நோக்கி நாட்கள் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இதே முறைமை மீண்டும் மீண்டும் பிரயோகிக்கப்படுகின்றது. படுகொலையின் பின்னர் முள்வேலிக்குள் மனித குலத்தின் ஒரு பகுதியையே அடைத்துவைத்திருக்கும் போது ஐ.நா உம் இந்தியாவும் ஐரோப்பாவும் அமரிக்காவும் மீண்டும் கொக்கரித்து அடங்கிவிட்டன.
தமிழகம் கொந்தளிக்கவில்லை. இந்தியாவில் போராடும் மக்கள் ஐ.நாவை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். இன்றுவரைக்கும் அமரிக்க சார்பு மனித உரிமை அமைப்புக்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று பேசிப் பேசியே காலத்தைக் கடத்திவிட்டார்கள்.
இப்போது எல்லாம் அடங்கிப் போய்விட்டன. ஐ.நா யுனோஸ்கோ விருதை 2006 ஆம் ஆண்டு சமாதானத்திற்காக ஆனந்த சங்கரிக்கு வழங்கியது. அந்த நாட்களில் புல்லிகளுக்கு அஞ்சி இலங்கை அரசின் இராணுவப் பாதுகாப்பில் வாழ்ந்த சங்கரி இப்போது ‘தமிழ் உணர்வு’ பீறிட்டதால் தேசியக் கூட்டமைப்பில் வாக்குக் கேட்கிறார்.
இப்படி ஐ.நாவையும் அமரிக்காவையும் சுட்டிக்காட்டி உலகம் முழுவதும் இலங்கை அரசிற்கெதிராக குருவியை கூடக் கூவவிடாமல் தடுத்ததில் புலம் பெயர் ஐந்தாம் படைகளுக்கும் பங்குண்டு.
எதிர்கால சந்ததி ஒன்றையே போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்தும் ஏமாற்று வேலையை நடத்திமுடித்த புலம் பெயர் ஐந்தாம் படைத் ‘தேசியவாதிகள்’ இன்னும் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்படும் என்றும் அமரிக்காவிற்கு நாங்கள் வால்பிடித்தாலே போதுமானது என்று மக்களை நம்பவைத்து ஏமாற்றுகிறார்கள்.
இவர்களின் காட்டிக்கொடுப்பு இன்னும் நீண்டகாலத்திற்குத் தொடரும் வகையில் எல்லா வழிமுறைகளும் ஏற்கனவே வன்னி அழிப்பிற்கு முன்னமே திட்டமிட்டு வகுக்கப்பட்டிருந்தன.
ஈழப் போராட்டம் அடியோடு துடைத்தெறியப்பட்டது போன்று அண்மைக் காலத்தில் எங்கும் நடைபெற்றதில்லை. நிராயுத பாணியான மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள யுத்தம் அதிகார வர்க்கத்திற்கு தெற்காசியாவில் கிடைத்த மாபெரும் வெற்றி. மாபெரும் அழிவின் பின்னர் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்த வரலாறுகள் தான் எம்முன் உள்ளன.ஈழத்தில் மட்டும் அது பொய்யாகிவிட்டது. ஈழப் போராட்டத்தை இலங்கை அரசோடு இணைந்து அழித்த அமரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் இலங்கையை ஏதோ இறைச்சித் துண்டுபோல தங்களுக்குள் பங்குபோட்டுக்கொள்கின்றன.
இன்று நாம் காணும் அவலங்களும் அரசியலும் 2005 ஆம் ஆண்டு முதல் திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் என்பது ஆயுத பலத்தை மட்டுமே நம்பியிருந்த குழு என்பதால் அதனைத் தோற்கடிக்க ஆயுத பலம் மட்டுமே போதுமானதாகவிருந்தது. இங்கு சிக்கல் புலிகளை அழிப்பது அல்ல. புலிகள் அழிக்கப்பட்ட அதன் பின்னர் தோன்றக்கூடிய போராட்டங்களையும் தலைமைகளையும் அழிப்பது தான். அது திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. அதற்கான திட்டங்கள் 2205ம் ஆண்டிலிருந்து வரையப்பட்டன. படிப்படியாக நிறைவேற்றப்பட்டன. அழிப்பின் முன் கீழ்வரும் 8 பிரதான செயற்பாடுகள் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டன.
அழிப்பிற்கு முன்னர்..
1. அமரிக்க இந்திய மற்றும் அனைத்து ஏகபோக ஆதரவு ஐந்தாம் படைகள் ‘தேசியவாதிகள்’ என்ற பெயரில் நேர்த்தியாகத் திட்டமிட்டு வளர்க்கப்பட்டனர்மிகக் குறுகிய காலத்தில் அமரிக்கா உடப்ட ஏனைய ஏகபோக நாடுகளின் தமிழ் உளவாளிகள் திடீர் வளர்ச்சி பெற்றனர். இந்தத் திடீர் வளர்ச்சிக்கு 2005 ஆண்டின் பின்னர் மூன்று வருட வரலறே உண்டு. கடைந்தெடுத்த மனித நேயமற்ற வியாபாரிகளைத் தலைமையில் இருத்தி புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் என்ற பெயரில் இந்த ஐந்தாம் படைகள் களமிறக்கப்பட்டன.
2. இவர்களை வளர்த்ததில் புலியெதிர்ப்புக் கும்பல்களின் பங்களிப்பை மறுக்கமுடியாது. புலிகளின் ஜனநாயக மறுப்பிற்கு எதிராகப் போராடுகிறோம் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்ட இவர்கள் இலங்கை அரச துணைக்குழுக்களோடும் இலங்கை அரசோடும் தமது உறவைப் பலப்படுத்திக்கொண்டனர்.2005 இன் பின்னரேயே பெரும் பணவசதிகளோடு வளர்ச்சியைந்த இந்தக் கும்பல் புலிகளுக்கு மாற்றான கருத்தைக் கொண்டவர்கள் அனைவரும் அரச ஆதரவாளர்கள் என்ற விம்பத்தை உருவாக்கும் வேலையைச் செய்து முடித்தனர்.
3. அடையாள அரசியல் என்ற சாபக்கேட்டை தமிழ் நாட்டிலிருந்து மிகத் தந்திரமாக இறக்குமதி செய்து கிழக்கு அடையாளம், சாதி அடையாளம் என்று மக்களைப் பிளவுபடுத்தும் ஒரு கும்பல் தயார் செய்யப்பட்டது. இந்தக் கும்பல்கள் பலவற்றிற்கு அமரிக்க அரச உதவி நிறுவனமும், உலகவங்கியின் ஆசியக் கிளையும் பணக் கொடுப்பனவுகளை இன்றும் வழங்கி வருகின்றது. 2005 ஆம் ஆண்டின் பின்பே இவர்களின் வளர்ச்சி முனைப்புப் பெற்றது.
4. அதுவரை புலிகளைத் துரோகிகள் என்றும் இலங்கை அரசோடு நெருக்கமான உறவைப் பேணிவந்தவர்களுமான சுரேஷ் பிரேமச்சந்திரன், ஆர்.சம்பந்தன் ஆகியோரது தலைமையில் அமரிக்க – இந்திய சார்பு அரசியலை முன்னெடுப்பதற்கான ஒரு குழு தயார் செய்யப்பட்டது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் புலிகளின் துணையுடனேயே பாராளுமன்ற அரசியல் வழிமுறையைத் தயார் செய்தது.
5. 2005 தேர்தலில் அமரிக்காவினதும் இந்தியாவினதும் நேரடிக் கைக்கூலிகளாகத் தொழிற்படத்தக்க லும்பன்களான ராஜபக்ச குடும்பம் புலிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வருகிறது. புலிகளை அழிப்பதற்கான ஆரம்பத்தை இங்கு அவர்களே ஏற்படுத்துகிறார்கள்.
6. போருக்குப் பின்னர் முளைவிடக் கூடிய மக்கள் போராட்டங்களை அழிக்கும் நோக்கோடு இலங்கை அரசு ஆட்சி செய்த பிரதேசங்களில் எல்லாம் போராட்ட சக்திகளும் மக்கள் அமைப்புக்களும் அழிக்கப்படுகின்றன. புலிகள் ஆட்சி செய்த இடங்களில் இதே நடவடிக்கை புலிகளால் மேற்கொள்ளப்படுகிறது.
7. தமிழ் நாட்டில் உருவாகும் எழுச்சிகளைத் தடுப்பதற்காக வியூகங்கள் வகுக்கப்படுகின்றன. சீமான் போன்ற இரக்கமற்ற வியாபாரிகள் களமிறக்கப்படுகின்றனர். இவர்களோடு கூடவே பல குழுக்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. அவ்வப்போது உணர்ச்சியூட்டும் உரைகளையும் போராட்டங்களையும் நடத்தும் இக்கும்பல்களால் இந்திய அரசிற்கு அல்லது இந்திய அரசியலுக்கோ பாதிப்பில்லாத வகையில் இவை திட்டமிடப்படுகின்றன.
8. கடந்த பத்துவருடங்களில் வன்னிப் படுகொலைக்கு நிகரான மாதிரியில் அழிக்கப்பட்ட போராட்டங்களிலிருந்து தம்மைச் சுதாகரித்து மீண்டெழுந்த பிலிப்பைன்ஸ் போராட்டங்கள் போன்றவற்றில் கம்யூனிஸ்ட்டுகளின் ஒழுங்கமைக்கப்பட்ட பங்களிப்பு அளப்பரியது. இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சிகளோ அன்றி இடதுசாரி இயக்கங்களோ இல்லாத நிலையில் புதிய இடதுசாரி அரசியல் சிந்தனைகளையும் போராட்டங்களையும் தடுக்கும் நோக்கில் நோர்வே போன்ற நாடுகளின் பணக்கொடுப்பனவில் போலி இடதுசாரிகள் களமிறக்கப்பட்டனர். இவர்களது செயற்பாடுகள் அறியப்படாதவை ஆயினும் சிறிய அளவில் போருக்குப் பின் துளிர்விடக்கூடிய முற்போக்கு ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைவை அழிப்பதில் இவர்கள் கணிசமான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.
இவ்வாறு இனப்படுகொலைக்கு முன்பதாகவே அழிப்பதற்கான சூழல் திட்டமிட்டு ஏகாதிபத்தியங்களால் உருவாக்கப்பட்டது. இவை அனைத்தினதும் பிரதான நோக்கம் போர் நடத்தி மக்களை அழித்த பின்பு புதிய போராட்டங்கள் உருவாகாமல் தடுப்பதே. இத் திட்டமிடல்கள் மிக நேர்த்தியாக நகர்த்தபட்டன. ஒவ்வொரு திரும்பல் புள்ளிகளிலும் எதிரியின் ஆட்கள் நிறுத்தப்பட்டனர்.
இதன் பின்னரே மக்கள் மீதான அழிப்பு யுத்தம் புலிகளை அழிக்கிறோம் என்ற தலையங்கத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டது.
போரின் பின்னான புறச் சூழலலை பேரினவாத இனச்சுத்திகரிப்பிற்கு ஏற்புடையதாக மாற்றுவதற்கான தயாரிப்பு ஒரு பக்கத்தில் நடந்துகொண்டிருந்த அதேவேளை இராணுவத் தயாரிப்புக்களும் மேற்கொள்ளப்பட்டன.
அமரிக்காவிலிருந்து கோத்தாபய பாதுகாப்பிற்குப் பொறுப்பாக இலங்கை வருகிறார். சரத் பொன்சேகா யுத்தப் பொறுப்பை ஏற்கிறார். இந்திய சீன அரசுகள் யுத்த ஆலோசனை வழங்குகின்றன. அமரிக்க அதிபர் குறித்த காலப்பகுதிக்குள் அழித்துவிடுங்கள் என்று ராஜபக்சவிற்கு அறிவுரை வழங்கியதான விக்கிலீக்ஸ் கேபிள் பல தகவல்களை உறுதிப்படுத்துகிறது. அமரிக்க அரசும் இந்திய அரசும் தாராளமான பணவசதியை இலங்கை அரசுக்கு வழங்குகிறது. பிரித்தானியா, சீனா, ரஷ்யா, ஜேர்மனி, இந்தியா போன்ற நாடுகள் ஆயுதங்களை விற்பனை செய்கின்றன.பிரித்தானியாவின் பொட்டிங்டர் போன்ற நிறுவனங்கள் மில்லியன்களை வாங்கிக்கொண்டு ஆலோசனை வழங்குகின்றன.
கருணா, கேபி உட்பட பல உளவாளிகள் தயார் செய்யப்படுகின்றனர். மக்கள் மீதான யுத்தம் ஆரம்பிக்கிறது.
புலம் பெயர் ஐந்தாம் படைகள் அமரிக்காவும் ‘சர்வதேசமும்’ காப்பற்றும் என்று ஏமாற்று ஆலோசனைகளை வழங்கி நந்திக் கடலை அண்மித்த பகுதிவரை புலிகளை நகர்த்தி வருகின்றன. இலட்சக்கணக்கான மக்களதும் ஆயிரக்கணக்கான போராளிகளதும் உயிர்த் தியாகங்களோடும் 30 வருடப் போராட்டம் ஒருசில மாதங்களோடு சாம்பலாகிவிடுகிறது.
போரின்போது…
கிரேக்கத்திலும் பிலிப்பைன்சிலும் மேற்கொண்ட யுக்திகள் பல போரின்போது மேற்கொள்ளப்படுகின்றன. மக்களை ஒரு சிறிய இடத்தில் முடக்கி அவர்கள் மீதும் திட்டமிட அழிப்பு நடத்தப்படுகிறது. மிக நீண்டகாலத்திற்கு மக்களைப் போராட்டத்தின் மீது அச்சமும் வெறுப்பும் கொள்வதற்கான யுக்திகள் மேற்கொள்ளப்படுகின்றன.
1. மக்களை நீண்டகாலத்திற்கு அவலத்திற்கு உட்படுத்தல் : போர் நடக்கும் போது மக்களை வறுமைக்கும், தாக்குதல்களூடான் அச்சத்திற்கும் அழிவிற்கும் உட்படுத்தல். உணவு, நீர், மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளைத் தடைசெய்தல் -இவை நீண்டகால அழிவிற்குத் தயார் செய்யும் வழமையான யுத்த தந்திரங்கள் . யாருடைய எதிர்ப்புமின்றி வன்னிப்படுகொலைகளின் போது இவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.
2. அழிப்பு நடைபெறும் போது அழிவுகளின் எல்லைக்குள்ளேயே மக்களை வைத்திருத்தல். வன்னிப் படுகொலைகளின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் மக்களை வெளியேற அனுமதிக்கவில்லை. கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு நடைபெற்றது. பல அப்பாவிகள் விட்டில் பூச்சிகள் போன்று அழிந்து போனார்கள்.
இந்த இரண்டு பிரதான நடவடிக்களின் பின்னர் போராடித் தியாகிகளாக தம்மை அர்ப்பணித்த அப்பாவிப் போராளிகள் கோரமான அவல்த்திற்கு இலங்கை அரச பாசிஸ்டுக்களால் உள்ளாக்கப்படுகின்றனர்.
செயற்பாட்டுத் தளத்தில் உந்தப்பட்ட இந்த இரண்டும் இனிமேல் ஆயுதம் தாங்கிய போராட்டம் வேண்டாம் என்றளவிற்கு மக்களை விரக்திக்கு உள்ளாக்கின்ற யுக்திகளாகின்றன.
இனவழிப்பின் முன்னர் தயாரிக்கப்பட்ட சூழலில் தான் இன்றைய இலங்கை அரசியலும் புலம் பெயர் ஐந்தாம் படைகளும், இந்திய சந்தர்ப்பவாதிகளும் நகர்த்தப்படுகின்றனர்.
இன்று இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புலியெதிர்ப்புக் கும்பல்கள், அரச துணைப்படைகள் ஆகியன அரசியலைக் கையகப்படுத்திக்கொள்ள, புலம் பெயர் நாடுகளில் இலங்கை இந்திய அமரிக்க ஐந்தாம் படைகள் அதனைக் கையகப்படுத்தியுள்ளன. ஆக. எதிர்ப்புகளை மட்டுமே விளைபலனாக வைத்திருக்கும் ராஜபக்ச பாசிசத்திற்கு எதிராக எழுச்சி பெறக்கூடிய போராட்டம் மிக நீண்டகாலத்திற்குப் பிந்தள்ளப்பட்டுள்ளது. இந்த நீண்டகாலம் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு எந்த எதிர்ப்பும் இன்றி தேசியத் தன்மை சீர்குலைக்கப்படுவதற்குப் போதுமான அவகாசமுடைய காலப்பகுதி.
இன்னும் இந்த ஆய்வு விரிவாக்க்ப்ப வேண்டும். தன்னார்வ நிறுவனங்களின் பங்கு, அழிப்பில் அவர்களின் பங்கு என்பவை ஆராயப்படவேண்டும். இவை அனைத்திலுமிருந்து கற்றுக்கொண்டு சுய நிர்ணய உரிமைக்கான புரட்சிகரப் போராட்டம் மக்கள் யுத்தமாகத் தயார்செய்யப்பட வேண்டும். அதனை இன்று தவறவிட்டால் விளைவுகள் ஆபத்தானதாகும். இன்றைய எதிரியின் நிலைகளில் நிறுத்தப்பட்டுள்ள அரசியல் தலைமைய அம்பலப்படுத்துவதும், சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துவதும் புதிய புரட்சிகரத் தலைமைகள் தோன்றுவதற்கான வழிகளைத் திறப்பதுவுமே இதன் ஆரம்பமாக அமையும்.
John gave the full picture in a compact article. But there is no solution.
Without external powers interference we have to solve our own differences & we have to solve our own differences & problems.
Kosalan gave the full picture in a compact article. But there is no solution.
Without external powers interference we have to solve our own differences & we have to solve our own differences & problems.
1999 இல் எதிர்வு கூறப்பட்ட முள்ளிவாய்க்கால் சரணடைவு !!!
Mullivaaikkaal surrender planed in 1999
எமது அழிவு 2005 இல் திட்டமிடப்பட்டது என்பது தவறு . என்று அயோக்கியத் தனம் புகுந்து கொண்டதோ அன்றே அழிவு சொல்லாமல் கொள்ளாமல் தலைவாசலால் கதவைத் திறந்து கொண்டு புகுந்து விட்டது .
விடுதலை இயக்கத்துக்கு முதல் தேவை நேர்மை . என்று அதில் நாம் தளர்வுப் போக்கை கடைப் பிடிக்க ஆரம்பித்தோமோ அன்று அழிவிற்கு கால் அத்திவாரம் வெட்டியாச்சு.
இப்பொழுதும் அது தொடர்கின்றது . ஆட்கள் மாறி இருக்கின்றார்களே அன்றி காரியங்கள் ஒரே விதமாகவே இருக்கின்றன . இந்த அயோக்கியர்களிடம் இருந்து நாம் விடுபடாவிட்டால் இந்த இனம் அழியும் . இது 2000 ஆண்டு உலகம் அழியும் என்பது போன்ற கற்பனை அல்ல . யதார்த்தமாக தர்க ரீதியாக பார்த்தால் அப்படித் தான் சொல்ல முடியும் . .
பெரிய ஆய்வாளர்கள் எனப்படுவோர் என்ன சொல்லுகினம் எண்டு பார்த்துக் களைச்சுப் போனன் . யோக்கியன் அயோக்கியன் என்ற சொற்களைப் பாவிக்க வேண்டிய இடம் இது பாவித்தால் கல்லைக் கண்டால் காலைத் தூக்கிற நாய் மாதிரி யாரும் தூக்கினாலும் எண்டு போட்டு இதய சுத்தத்தோடு பொறுத்து இருந்தேன்.
நேர்மை அற்றவர்கள், சொன்னதை செய்யாதவர்கள் , செய்வதைச் சொல்லாதவர்கள் , பின் முதுகு பேசுபவர்கள் , ஒருவனை வெல்வதற்கு மற்றவனிடம் போய் எந்த காரணுமும் இல்லாமல் அவனை ஒதுக்கு எனக் கோருபவர்கள் , பெயருக்கும் புகழுக்கும் ஆசைப் படுபவர்கள் , வெற்றுவெட்டுக் காரர் , …..இப்பிடியே இதை ஒத்த நாணயம் அற்ற , நா நயம் அற்ற பேர்வழிகள் என்று விடுதலை போருக்குள் இடம் பிடிதார்களோ அன்றே முள்ளிவாய்க்கால் சொல்லாமல் கொள்ளாமல் தலை வாசல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்துவிட்டது . பலருக்கு அது புரியவில்லை .
அயோக்கியர்கள் எவ்வளவு உயரந்த உதவிகளைச் செய்தாலும் . ஒருநாள் அவர்கள் தேனில் நஞ்சு கலப்பது போல் அழிவை ஏற்படுத்துவார்கள் .
இந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பல ஆயிரக் கணக்கான அயோக்கியர்கள் இந்த அழிவுக்கு காரணமாக இருந்திருக்கின்றார்கள் .
நான் 1979 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் முதலாவது அயோக்கியனுடன் மோதுப்பட்டேன் . அவன் பெயர் அன்டன் சிவக்குமார் . திம்பு பேச்சுவார்த்தைக்கு செல்லும் அளவுக்கு அவன் உயர்ந்தான் .
பின்னாளில் கனடிய உளவுத் துறையின் ஒற்றனாக மாறினான் . யாழ் பல்கலைக் கழக கணித பீட மாணவனாக நான் இருந்த காலம் அது. அன்று எனக்கு பரீட்சை நாள் அவனுக்கும் அது நன்றாகவே தெரிந்திருந்தது . நாம் இருவரும் பக்கத்து பக்கத்து அறையிலேயே இருந்தோம் .
http://www.sundaytimes.lk/960218/news/newsm.html#Spy
நான் பரீட்சை மண்டபத்தில் நின்று கொண்டிருந்தேன் . என்னிடம் ஒருவர் வந்து கேட்டார் நீ அந்த கூட்டத்துக்கு போகவில்லையோ என்று . எனக்குத் தலை வெடித்தது . உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் அஜோக்கியத் தனம் நடந்துவிட்டது என்றுணர்ந்தேன் . சயிக்கிளை எடுத்துக் கொண்டு வெறி பிடித்தவனாய் 10 மைல்கள் ஓடி மின்னல் வேகத்தில் கூட்டத்துக்கு சென்றடைந்தேன் கூட்டத்தில் . பலத்த விவாதம் . உந்த பொதுச்சபை எல்லாம் சரிவராது . “அவர்” தலமையில் இயங்குவோம் என்ற கருத்தை நான் ஆதரித்தேன்.
உவன் ஒரு “வெறியன்” என்பதால் வெட்ட நினைத்தான் போலும் . ஆனால் அவன் சொன்ன விளக்கம் அற்புதமானது உன் பரீட்சையை குழப்பக் கூடாது அதனால் தான் சொல்லவில்லை என்றான் அந்த அயோக்கியன் .
அவன் பார்வையில் நான் வெறியன் . ஆம் வெறி நாய் .
உண்மைக்கும் நேர்மைக்கும் பங்கம் என்றால் எனக்கு வெறி பிடிக்கும் அதுக்கு நான் வெட்கப்படவில்லை . அது தான் எனது பொசிடிப் சைட் , அதுதான் எனது நெகடிவ் சைட் .
அன்றே சொன்னேன் . உன்னால் எமக்கு அழிவு வரும் என்று .அன்று முதல் அவனும் நானும் பேசுவதில்லை . இந்தியாவில் கூட அவன் இருந்த வீட்டுக்கு நான் செல்ல மறுத்திருந்தேன் .
அந்த அயோக்கியன் கனடிய உளவுத் துறைக்கு எம்மைக் காட்டிக் கொடுத்தான் அன்று எமது அமைப்பு விழித்துக் கொண்ட பொழுது it was too late .see the document @ http://tmwtmw.blogspot.co.uk/2013/08/1999.html
இப்படியே தொடர்ந்த அழிவின் அதி உச்ச அயோக்கியத் தனம் 1996 இல் இடம் பெற்றது . ஊடகத்தையும் நிதியையும் கைப்பற்றும் நோக்குடன் கஜன் நாதன் ஆகியோர் கொலை செய்யப்பட்ட பொழுது அழிவின் உச்சத்துக்கு நாம் சென்றோம் .
அயோக்கியர்கள் கையில் நிதியும் ஊடகமும் சென்றது .
1998 ஆம் ஆண்டு அழிவின் உச்சம் பற்றியும் புலம் பெயர் தேசத்தில் உள்ள நிதி ஊடகத்தைக் கைப்பற்றிய கும்பல் சுருட்டலின் உச்ச கட்டத்தில் எல்லாத்தையும் விட்டுட்டு சரணடையுங்கள் என்பார்கள் என்று வாதிட்ட நான் உண்மைக்கு நேர்மைக்கு நாணயத்துக்கு பண்புக்கு மாறாக ஒரு சிறுகாரியம் செய்தாலும் அவனை அந்த இடத்தில் வைக்க வேண்டும் என வாதிட்டேன் . நீ உப்பிடித்தான் கடும் பிடி எண்டார்கள் . ஈழ முரசில் விபச்சார விடுதி விளம்பரம் வராத குறை மட்டும் தான் . விளம்பரப் பணத்துக்காக எழுதாமல் விட்டவை பல .
குழந்தையாய் பெற்றெடுத்து வளர்ப்பது போல் சம்பளம் ஏதும் இன்றி நான்கு வருடங்கள் வளர்த்த “ஈழமுரசுக்” குழந்தையை அன்னியர் கையில் விட்டு ஒதுங்கினேன் .
1999 ஆம் ஆண்டு வரை முயற்சிதேன் . முடியவில்லை . கையெழுத்து தந்தார் ஒரு புலம் பெயர் பன்றி (see the document @http://tmwtmw.blogspot.co.uk/2013/08/1999.html) சரணடைவு என்ற சொல்லுக்கே இடம் இல்லை என்று . ஆனையிறவை நாம் பிடித்திருந்த காலம் அது .
ஊடகத்துக்குள்ளும் நிதிக்குள்ளும் சொல்வதை செய்யாமல் செய்வதைச் சொல்லாமல் நடக்கும் பசாசு அயோக்கியன் ஒருவன் போதும் அதி உச்ச அழிவை ஏற்படுத்த . அது தொடர்வதாகவே நான் நினைக்கின்றேன்.
. அந்த கையெழுத்திட்ட ஆவணத்தை இத்துடன் இணைக்கின்றேன் .அழுவதைத் தவிர என்ன செய்ய முடியும் . பாவப்பட்ட இனம் இது .
இப்படியே தொடர்ந்தால் அழிவு நிச்சயம் . see evidences @ http://tmwtmw.blogspot.co.uk/2013/08/1999.html
///////தமிழ்ப் பேசும் மக்களின் இன்றைய அவல நிலை 2005 இலேயே திட்டமிடப்பட்டது : கோசலன்///////என்பது தவறானது . 1996 இல் நிதி ஊடக பொறுப்பாளர்கள் கொலை செய்யப்பட்டு நிதியும் ஊடகமும் அயோக்கியர்கள் கையகப் படுத்திய பொழுது அழிவு தீவிரமாகியது . எனினும் உண்மைக்கும் நேர்மைக்கும் இடம் கொடாது ஆள் எண்ணிக்கைக்கு இடம் கொடுத்த பொழுது இந்த அயோக்கியர்கள் உட்புகுந்து கொண்டார்கள். அது தான் அழிவின் ஆரம்பம் .
உள்ளடக்கம் எவ்வளவு சரியானது என்று கூற எந்த ஆதாரங்களும் தரப்படவில்லை. எனவே இந்தக் கட்டுரை வெறும் ஊகம் தான்.
எனினும் 2002ல் போர்நிறுத்தம் வந்த போதே இது குழப்பப்பட்டால் அடுத்த கட்டம் என்ன என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டு விட்டதாக அனுமானிக்கலாம்.
புலிகள் தோற்கடிக்கப்பட முன்னரே விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு விட்டது என்றும் ஒரு கருத்து உண்டு.
இனியொரு திரித்துப் பொய் எழுதுகின்றது.
அவைகளை பின்பு வாதிடலாம்.
இன்று சீனா மட்டும்தான் ஐ.நா வில் எந்த நடவடிகையையும் எடுக்க தடையாக உள்ளது. ருஸ்யாகூட சீனா பொல் இன அழிப்பிற்கு ஆதரவு தருவதாக தெரியவில்லை.
இந்த உண்மைகளை மறைத்து மக்களை ஏமாற்றுவதை இனியாவது இனியொரு நிறுத்தவேண்டும் இல்லயேல் நல்ல கருத்துகள் இருந்தாலும் மக்கள் கதிக்கமாட்டார்கள்.
//////இனியொரு திரித்துப் பொய் எழுதுகின்றது.///////////
Why don’t you publish true updates then public will decide. isn’t the true democracy .
DO NOT TRY TO BAN WHAT YOU DO NOT LIKE.
I believe Tamils do not know what is democracy . LTTE is banned here . but they still allow Maveerar thinam etc . That is what is called freedom of speech .
சிறீவாசு அண்ணை என்ன இத்தப் பக்கம் . உங்களிட்டை கனவிசயம் கேக்க வேணும் எண்டு எனக்கு ஆசை!!!
என்ன என்ன சென்னீங்க ? சீனா தடுக்குதா? இஞ்சை வாங்கோ, சீனா இருக்கட்டும் நாங்கள் சரியாக செயல் படுகின்றோமா ? வேலை செய்யாமல் விடுறதுக்கு கனபேர் விடுற கதை உது . அதைதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீண்ட நாட்களாக விட்டுக் கொண்டு இருக்கின்றது.
கடவுள் தந்த வரமாக விக்கினேஸ்வரன் அரசியலுக்கு வந்திருக்கின்றார். நிறையக் கள்ளர் காடையர்களை தனது சேவைக் காலத்தில் கண்ட மனிதன் அவர். பொய் புலுடாக் காரர் எப்பிடிக் கதைப்பினம் எண்டதைக் கண்டு பிடிக்க அந்தாளுக்கு கனநாள் எடுக்காது .
அவரை இழந்து விடாமல் நடக்க வேண்டியது உங்களைப் போன்றவர்களின் கையில் இருக்கின்றது .
உங்களிட்டை ஒரு கேள்வி :—
முதலாவது கேள்வி , இனப்படுகொலை நடக்குது எண்டு ஒரு வெளிநபருக்கு சிறீவாசு அண்ணை சொல்லுறார் எண்டு வைத்துக் கொள்வோம் .அந்தாள் கேக்குது அந்த தகவலை எங்கே பார்க்கலாம் . தினம் தினம் நடக்கும் இன அழிப்புக்களை உங்கள் அமைப்பு நவீன தொழில் நுட்ப ருவிட்டர் , முகனூல் வழியாக உடனுக்குடன் சர்வதேச நாடுகளுக்கு அறியத் தருகின்றதா ? எனக் கேட்டால் உங்கள் பதில் என்ன ?
இரண்டாவது கேள்வி, சில வேளை எனக்குத் தெரியாமல் அப்பிடி தகவல் பரி மாற்றம் இருக்கலாம் . எங்களுக்கும் சொல்லுங்கோ நாங்களும் நாலு வெளி ஆக்களைப் பார்க்கச் சொல்லலாம் . ஏனென்டால் தமிழ் நெட் திருந்தா விட்டால் மெல்ல அழியப் போகுது . நடெசனையும் ஒரு மாதிரி விரக்திக்கு தள்ளியிட்டாங்கள் கோதாரி விழுவார் . காரைநகர் தம்பிராசா தாக்கப்பட்டது முதல் எல்லாமே உலகத்துக்கு தெரிய வேண்டாமா ? எங்கடை அமைப்புக்கள் தமிழில் வெளியிட்டு தமிழருக்கு பிரச்சாரம் செய்கின்றன .நாமே அடிவாங்கி நாமே வெளியிட்டு நாமே பார்த்து சுய இனபம் அடையும் கேவலம் போல கேவலம் என்ன இருக்கு . இதுக்கு என்ன செய்யப் போறியள் .
I will wait for your reply .
Mouli’s sister been bitinen by dog!!!
Is the dog ok ?
//////////Reply
thevan
Posted on 08/26/2013 at 01:34
Mouli’s sister been bitinen by dog!!!
Reply
Senthuran
Posted on 08/27/2013 at 03:37
Is the dog ok ?
//////
this is the type of illness Thevan is suffering , look at the time he posted the comment 0134 loss of sleep also sign of hallucination they see people , get telephone calls with urgent messages .
Watch this video
தமிழர்களின் அரசியல்,ஆயுத,இராஜதந்திர போராட்டமனைத்தும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதாகவே அமைந்தது.
இதற்குக் காரணங்கள்:
1. ஈழத்தமிழர்கள் மத்தியில் படித்தவர்கள் இருந்தளவிற்கு,அறிவாளிகள் இல்லை.
2.தமிழகத்து தமிழர்களின் கண்காணித்துவம்.
3.புலம்பெயர் தமிழர்களின் களியாட்டமும்,வியாபார வேட்கையும்.
This is the type of illness THEVAN IS suffering I feel sorry for him . Could some one help him take him to a hospital
by looking at the time THEVAN posted the comment is 0130 AM . this shows that he is possible suffering from sleeping disorder the fist sign of Visual hallucination . people who suffer by visual hallucination see strange voices and images around them , they even seems to get telephone calls saying accidents , disasters.
they naturally switch on computer send emails , post comments and cause social disaster.
If any of your relatives suffer such problems please take them to a doctor normally they will be put in secure centers to avoid any harm they may do to public
மௌலீசன் தம்பி,
சீனாதான் ஐநா,ம.உ.பே யில் முன்நின்று மற்றய சில நாடுகளை இன அழிப்புச் சிறீலங்காவிற்கு ஆதரவாக செயல்படவைகின்றது. அதனால்தான் அங்கு நடவடிக்கைகள் சிறிது தாமதமாக நடைபெறுகின்றது. ஆனால் சர்வதேசத்துடன் இணைந்து வெற்றியை நோக்கி நடைபோடுகின்றோம் என்பது உறுதி.
இருக்கட்டும் நாங்கள் சரியாக செயல் படுகின்றோமா ?
ஆம்
சர்வதேசம் முநின்று நடாத்துவது உண்மை. அதற்கான அரசியல் தழம் (சாணக்கியம் என்பர்) தமிழ்த் தலைமையுடனும் சிங்கள புத்திஜீவிகளுடனும் சேர்ந்துதான் சர்வதேசம் முன்னெடுக்கப்படுகின்றது.
வெற்றி நிட்சயம்.
திரு விக்னேஸ்வரன் அந்தச் சதுரங்கத்தில் முக்கிய பணியாளர். அவருக்கும் எமது விடுதலை நிட்சயம் என்றுதான் தோன்றுகின்றது. அதற்கு தேவையானதை மக்கள் தொடர்ந்தும் த.தே.கூ பின் சாணக்கியத்திற்கு துணைநிற்பதால்தான் நிறிவேற்ற முடியும்.
சாணகியத்தின் இன்னொரு ஆசான் மா சுமந்திரனின் ற்றுவிற்றெ ஐ பின்பற்றுங்கள். அவர்தான் சம்பந்தனின் சர்வதேச சாணக்கியத்தை முன்நின்று செயல்படுத்துபவர்களில் ஒருவர்.
நாளுக்குநாள் அறிவிக்கின்றனர், ஆனால் சர்வதேசம் முழு புள்ளிவிபரம்களையும் பாராளுமன்றின் ஹன்சாட்மூலம்தான் எதிர்பார்கின்றது ஏனெனில் தங்களுக்கு தமிழரைவிட அதிகமான நாளுக்குநாள் செய்திகள், நடந்தவை, நடப்பவை தெரியும் என்
கின்றது. புரியும் என்று நினைக்கின்றேன். தங்களைப்போன்றோர் அந்த 2009ல் இருந்தான எல்லா ஹன்சாட் விபரம்களையும் தமிழர் பார்வைக்கு தந்தால் நல்லது. சர்வதேசத்துக்குத் தேவையானவை நடைபெறுகின்றன.
இருப்பினும், தாங்கள் சொல்வதுபோன்ற தகவல்களை மேலும் தரமாகச் செய்ய தொண்டர்கள் மேலும் தேவை. எல்லாம் நடக்கின்றது. இன்னமும் சிறப்பாக நடந்தஆல் நல்லதே.
தமிழர் தரப்பில் ஐநா விற்கு அறிக்கைகள் த.தே.கூ மட்டுமன்றி பிரிஎப், ஜிரிஎப், ரிஜிரிஈ, சிரிசி என்று எண்ணற்ற அறிக்கைகளும் போமாலிற்றிக்காக மிக மிக மிக அவைசியமானது, அவை நடக்கின்றது. ஆனால் நாம் எல்லாம் செய்வதைவிட மிக ஆழமான தகவல்கள் தங்களிடம் இருக்கின்றது என்று தாமாகவே எமது உரிமைக்காக நடவடிக்கை எடுக்கும் சர்வதேசம் ….யாண்டிசெய்கின்றது!
தமிழர் செய்யவேண்டிய ஒன்று எமக்கு உரிமைவேண்டும் என்று சொல்வது. அதனை செய்வதில் எல்லோரும் முன்நின்று உழைப்போம்.
Mr Srivas I hate people bluffing . it makes me irritated . if you want to talk with relevant answers we can continue. The question I asked was ” what mechanism do you operate to inform world public and media about the atrocities i mean a web page , twiter or face book with daily updates of events ” for example I saw a twiter which said Mullivaikal victims were not allowed to meet Navipillai. where can I find a daily update from TNA .
I remind you please give appropriate reply to the above question .
Go and ask people in Mullivaikal ?
did Srivas asked you to reply mind your business
நேர்மை அற்றவர்கள், சொன்னதை செய்யாதவர்கள் , செய்வதைச் சொல்லாதவர்கள் , பின் முதுகு பேசுபவர்கள் , ஒருவனை வெல்வதற்கு மற்றவனிடம் போய் எந்த காரணுமும் இல்லாமல் அவனை ஒதுக்கு எனக் கோருபவர்கள் , பெயருக்கும் புகழுக்கும் ஆசைப் படுபவர்கள் , வெற்றுவெட்டுக் காரர் , …..இப்பிடியே இதை ஒத்த நாணயம் அற்ற , நா நயம் அற்ற பேர்வழிகள் என்று விடுதலை போருக்குள் இடம் பிடிதார்களோ அன்றே முள்ளிவாய்க்கால் சொல்லாமல் கொள்ளாமல் தலை வாசல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்துவிட்டது . பலருக்கு அது புரியவில்லை .////1999 ஆம் ஆண்டு வரை முயற்சிதேன் . முடியவில்லை //// are you saying VP didn’t know anything about these? why didn’t you let him know? … why are crying now LIKE jANAKARAJ? naai kadichchittuthu..
you are getting better , now you see it is Janakaraj crying , who is her sister then there is 10 basic question normally asked before releasing patients like you . this is the first question I will ask them in order. WHO IS THE SISTER OF JANAKARAJ ..
you let us know : who are those நேர்மை அற்றவர்கள், சொன்னதை செய்யாதவர்கள் , செய்வதைச் சொல்லாதவர்கள் , பின் முதுகு பேசுபவர்கள் , ஒருவனை வெல்வதற்கு மற்றவனிடம் போய் எந்த காரணுமும் இல்லாமல் அவனை ஒதுக்கு எனக் கோருபவர்கள் , பெயருக்கும் புகழுக்கும் ஆசைப் படுபவர்கள் , வெற்றுவெட்டுக் காரர் , …..இப்பிடியே இதை ஒத்த நாணயம் அற்ற , நா நயம் அற்ற பேர்வழிகள் : and are you saying VP didn’t know anything about these? why didn’t you let him know? … why are crying now LIKE jANAKARAJ? naai kadichchittuthu..
என்று திட்டமிடப்பட்டது என்பதைவிட இன்றுவரை தொடர்கின்றது- இன்னும் இவ்அவலநிலை தொடரப்போகின்றதே என்பதே சிந்திக்கப்படவேண்டியதும் இவ்அவலநிலையை நிரந்தரமாகப் போக்குவதற்க்கு உகந்த மாற்றுவளியினை தேடவேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தமிழ் மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம் என்பதே யதார்த்தமாகும். தன்வினை தன்னைச்சுடும் அவலம் விளைவித்தவர்களையே மீளவந்து சூழும் என்பதற்க்கிணங்க எம் தமிழ் சமுதாயம் என்றுமே ஒற்றுமைஇன்றியும்
நாற்காலிகளுக்காகவும் தலைமைத்துவத்திற்காகவும் எமக்குள் நாமேபோட்டிபோட்டு தியாகிகள் தேசியவாதிகள் துரோகிகள் என்று பிரிவினைப்பட்டு துரோகிகளை அழிக்கமுற்ப்பட்ட காலம் தொடக்கம் – பெரிய பெரிய திருடர்கள் சமூகவிரோத்கள் எல்லாம் தேசியவாதிகள் அரசியல்வாதிகள் என நிலைத்துநிற்க்க – சாதாரண வாழ்க்கைப்பாதையில்
பசியின்நிமித்தமோ அன்றி வறுமைப்பட்ட தனது குடும்பத்தை காப்பாற்றும் நிமித்தமோ கோழி திருடியவர்களை எல்லாம் தெருக்கம்பத்தில் கட்டி மரணதண்டனை நிறைவேற்றி தமது திறமைகளை வெளிப்படுத்திய காலம் தொடங்கியும் – விடுதலைக்காகப்போராடுகின்றோம் என்றபோர்வையில் ஒற்றுமைஇன்றியும் – விடுதலைபற்றியோ- அன்றி அரசியல் பற்றிய தீர்க்கதரிசன அறிவுமின்றி ஏட்டிக்குப்போட்டியாக எண்ணற்ற இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடங்கியும் – போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் விடுதலைஉணர்ச்சியுடன் இணைந்த போராளிகளின் நியாயமான உட்க்கட்ச்சிப் போராட்ட முனைப்புகளின்போது மறைமுகமாகவே பலநுற்றுக்கணக்கான போராளிகளை அடையாளமின்றி கொன்றொழித்த காலம் தொடங்கியும்- சமாதானதிற்க்காக பேசுவோம் வாருங்கள் எனஅளைத்து வைத்தியசாலைவளாகம் என்றும்பார்க்காமல் சகோதரபோராளிகளையே கொன்றொழித்தபோதும் – தொடர்ச்சியாக தாம்மட்டுமே உண்மையான தேசியவிடுதலைக்கானபோராளிகள் மற்றய ஆயுதம்தாங்கிய அமைப்புகள்யாவும் துரோகிகள் என்றுகூறி பாசிசத்தின் கொடுங்கோன்மைக்கு எடுத்துக்காட்டாக மனிதநேயத்திற்க்கு அப்பால்சென்று ஏனைய அமைப்புக்களின் போராளிகளையும் தலைமைகளையும் அழித்தொழித்த காலத்தின் போதிலும் – மூத்தஅரசியல்வாதிகள். கல்விமான்கள். புத்தஜீவிகள் போன்றோரின் அழித்தொழிப்பு நடவடிக்கையின்போதும் – இவைஎல்லாவற்றையும் கண்மூடி வாய்பொத்தி கைகட்டி எதையுமேசெய்யமுடியாதவகையில் எமது மக்கள்சக்தி மெளனமாய் வீற்றிருக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்க்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளையின்போதேயும் – மேலும் 2001 ம் ஆண்டு செப்டெம்பர் 11 இல் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து- உலகைஆழும் எஜமானர்களாலும் அவர்களின் விசுவாசிகளினாலும் தமதுநலன்களைக்காப்பாற்ற மேற்க்கொள்ளப்பட்ட புதிய உலகஅரசியல் ஒழுங்கின் மாற்றங்களை அவாதனித்து – அதற்க்கேற்றவகையில் நிலமைகளை உணர்ந்து நாமும் மாற்றங்களை ஏற்ப்படுத்திக்கொண்டு கனிந்துவந்த பலசந்தர்ப்பங்களை தொடர்ந்து உதறித்தள்ளி விடாக்கண்டன் கொடாக்கண்டனாக செயற்ப்படமுற்ப்பட்டதன் மூலமும்-இவ்வாறாக இன்றுவரை இதுவரை கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து திருந்துவதை தவிர்த்து இன்னும் இன்னும் யார் யாரோ எல்லாம் வந்து எமக்கு தீர்வுகளை கப்பலிலேகொண்டுவந்து தருவார்கள் காத்திருங்கள் என்றுகூறி எமது மாக்களை (மக்களை) ஏமாற்றிவரும் ( அகத்திலும் புலத்திலும்) அரசியல்வாதிகள் இருக்கும்வரையும் – ஏன் இதேபோன்ற பிளைக்கத்தெரிந்த அரசியல்வாதிகள் மேன்மேலும தோன்றும் வரையும் – எமது தழிழ் சமுதாயத்தின் அவலநிலை தொடரத்தான் போகின்றது என்பதை நினைக்கும்போது ஏற்ப்படும் இதயத்தின் மாற்றமுடியாத வலிக்கு நிவாரணம் தேடி எங்கு செல்வது என்ற ஏக்கநிலையில் – வலியைசுமந்தபடி
மாக்களாக வாளவேண்டிய அவலநிலையில்தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா?
இந்த கட்டுரையை மேலோட்டமாகவேனும் நான் வாசிக்கவில்லை, ஆனால் பின்னூட்டங்களை கவனமாக வாசித்தேன். சி.சந்திரமௌவ்லிசன் சிலவற்றை சொல்ல விளைகிறார். இல்லாத அல்லது இருக்கின்ற சிலரை அல்லது ஒருவரை பொதுமை படுத்தி விமர்சிக்கிறார். தன்னை வேறுபடுத்தி, நவீன சிந்தனையை கொண்டிருப்பதாக சொல்லி (அன்றும் இன்றும்), சிந்தனையும் அறிவியல் வறுமையும் சந்தர்ப்பவாத சக்திகளும் புலிகளின் கிளை அமைப்புகளில் குந்தியதும் அல்லது குந்த வைக்கப் பட்டதும், நவீன முற்போக்கு சிந்தனையாளர்களை அறிவாளிகளை (தன்னைப் போன்ற அல்லது தன்னை) புலிகளின் அணிகளில் இருந்து வெளியேற்றியது அல்லது வெளியேற்றி வைக்கப் பட்டது (1999 இல்) என்பதில் இருந்தே போராட்டத்தின் தோல்வி ஆரம்பமானது என்கின்ற சி.சந்திரமொவ்லிசனின் கூற்று என்னை பலவிதத்திலும் தூக்கி வாரிப்போடவைத்து விட்டது (சகித்து கொண்டேன்).
பிற்போக்கு சக்திகளில் இருந்து வெளியேறியோ அல்லது வெளியேற்றப்பட்டோ செல்லும் சக்திகள் செயல் வீச்சோடு மேல் எழுந்து ஒரு தேச விடுதலைப் போராட்டத்தின் சீரழிவுகளை தடுத்து தோல்வியில் செல்லும் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னகர்த்துவதே ஒரு செயலூக்கமுள்ள போராளியின் பங்கு ஆகும். ஆனால் சி.சந்திரமொவ்லிசன் இந்த வகையறாவில் அடங்கவில்லை.
இங்கு சந்திரமொவ்லிசனுக்கு பின்னூட்டம் இட்ட சிலரை புறாவை வறுத்து தின்ற 23 ஆம் புலிகேசிக்கு ஒப்பிடுவதா எனத் தெரியவில்லை! ஆம் கருத்து வறுமையில் கதை அளப்பதும் நையாண்டி செய்வதும் பண்பாட்டு வறுமைக்கும் அதன் பிறப்புக்கும் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறு பண்பாடு அற்று விமர்சனம் செய்யும் பண்பாடு புலிகளில் இருந்த பல்லக்கு தூக்கிகள் பலரிடமும் இருந்தது. இந்த பல்லக்கு தூக்கிகளை நம்பியே பிரபாகரனும் பயணம் செய்தார். தருணம் வரும் போது கொடி குடை ஆலவட்டம் கிரீடம் எல்லாவற்றையும் தூக்கி கொண்டு ஓடிவிட்டார்கள். இந்த நையாண்டி நக்கல் பௌத்த சிங்கள பேரினவாதிகளிடமும் உண்டு. இன்று இந்த பல்லக்கு தூக்கிகளும் ஸ்ரீலங்கா பேரினவாதமும் தேன் நிலவு கொண்டாடுகின்றன.
கொண்டாடுங்கள் பிரபாகரனின் ஒருநிலை முனைப்பு சிந்தனை உங்களை போன்ற பல்லக்கு தூக்கிகளை அவரிடம் ஒட்டவைத்தது. நீங்கள் அவரிடம் ஒட்டி பிழைத்தீர்கள். இப்போ மகிந்த & கோ! நாளை?…………………
அழிக்கப்பட்ட நலிவுற்ற இனத்தின் சமாதிகளையும்
தோண்டி நையாண்டி பண்ணுங்கள்!
கிழிக்கப்பட்ட எங்கள் இதயங்களின் சீழ்களை
நக்கி பிழைப்பு நடத்துங்கள்!
பழிக்கப்பட்ட இனமாகவே இருக்க வேண்டும் என
பிரார்த்தனை நடத்துங்கள்!
தேவன் ஒருவன் இருந்தால் உங்கள்
நீசத்துக்கு ஒருமுறை கூப்பிடுங்கள்1
ஒருவாசகத்துக்கும் உருகாதோர்
திருவாசகத்தை தெருவோரம் தூக்கிப் போடுங்கள்!
பாழ்பட்ட மக்கள் ஓர்நாள் தோள் தட்டி எழுவர்
அதுவரை அதுவரை அவர்களின் பதிலுக்காய் காத்திருங்கள்!!
S.G.Ragavan