“தமிழ்ப் புலிகளின் இரும்புக் கரங்கள்”:ஜெரோமியின் புலனாய்வு நூல்!

சர்வதேச பயங்கரவாதக் குழுக்கள், பாதாளக்குழுக்கள் சர்வதேச ரீதியில் போதைவஸ்து ஆயுதங்கள், கடத்தல்கள், கொள்ளைகள் போன்ற பாரதூரமான சட்டவிரோத நடவடிக்கைகளிலே ஈடுபட்டுவரும் குழுக்கள் மற்றும் இவைபோன்ற அனைத்து வன்முறைக் குழுக்கள் பற்றியும் தகவல்களைச் சேகரித்தும் விசாரணைகளை மேற்கொண்டும் அவற்றின் செயற்பாடுகளை வெளிப்படுத்தும் புத்தகங்களை எழுதிவரும் பிரபல பிரான்ஸ் நாட்டு புலனாய்வு நூலாசிரியராகிய ஜெரோமி பீறட் அண்மையில் “”பிரான்ஸில் மாபியா குழுக்கள்’ என்ற தனது புதிய நூலை வெளியிட்டுள்ளார். பிரெஞ்சு மொழியிலான இந்தப் புலனாய்வு நூலில் பிரான்சில் செயற்பட்டுவரும் பிரபல மாபியாக்குழுக்கள் அதாவது பாதாளக்குழுக்கள் பற்றிய பல திடுக்கிடும் தகவல்களை நூலாசிரியர் ஜெரோமி பீறட் வெளியிட்டுள்ளார். மேற்படி “”பிரான்சில் மாபியாக் குழுக்கள்’ நூலில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பற்றியும் பிரான்சில் புலிகள் இயக்கத்தின் வன்முறைகள் பற்றியும் விசேடமாகத் தகவல்களை வெளியிட்டுள்ளார் ஜெரோமி. இதற்கேற்ப பிரபாகரனின் புலிகள் இயக்கம் பிரான்சில் பாதாளக் குழுக்களை உருவாக்கியிருப்பதாகவும் பிரான்சில் இயங்கும் அனைத்து மாபியாக் குழுக்களைக் காட்டிலும் மிகப் பயங்கரமான மாபியாக்குழுவாக புலிகள் இயக்கம் பிரான்சில் முக்கிய நகரங்களில் பகிரங்கமாகவும் இரகசியமாகவும் செயற்பட்டு வருவதாகவும், தெரிவித்துள்ளார். இவர்கள் மேற்படி முக்கிய நகரப்பகுதிகளில் பரவலாக கடத்தல், கப்பம், கொள்ளை, தாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் பெருந்தொகையில் பணம் சேகரித்து வருவதாகவும் குறிப்பாகத் தமிழர்கள் வாழும் பகுதிகளிலேயே இந்தப் புலிகள் மாபியாக் குழுக்கள் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகவும் மேற்படி “”பிரான்சில் மாபியாக் குழுக்கள்’ நூலில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த நூலில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அனைத்துப் பகுதிகளிலும் புலிகள் மாபியாக் குழுக்கள் அல்லது பாதாளக் குழுக்கள் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் கப்பம், கொள்ளை மற்றும் மோசடிகள் பற்றி விரிவான புலனாய்வுத் தகவல்களை ஆசிரியர் ஜெரோமி பீறட் வெளியிட்டுள்ளார்.

பிரான்ஸ் பாரிஸ் சோபோன் பல்கலைக்கழகத்தின் உயர் கௌரவ பட்டதாரியாகிய ஜெரோமி பீறட் இதுவரை இவ்வாறு பிரான்ஸில் நிகழும் அனைத்து வன்முறைகள், குற்றச் செயல்கள் பற்றி 10 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அவர் வெளியிட்டிருக்கும் 10 ஆவது புலனாய்வு நூலே ??பிரான்சின் மாபியாக் குழுக்கள் என்பதாகும். தனது இவ்வாறான புலனாய்வு நூல் வெளியீடுகள் பற்றி ஆசிரியர் ஜெரோமி பீறட் தெரிவிக்கையில், அவர் மேற்படி சர்வதேச பயங்கரவாதக் குழுக்கள், மாபியாக் குழுக்கள் பற்றிய தகவல்களை உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து திரட்டியுள்ளதாகவும் அந்தத் தகவல்களை அடிப்படையாக வைத்தே தனது நூல்களை வெளியிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இந்த வகையில் அவர் உலகின் பிரபல பயங்கரவாதக் குழுக்களான அல்ஹைடா, ஹிஸ்புல்லா தலைவர்களையும் சந்தித்து அவர்களிடம் போராட்டச் செயற்பாடுகள் பற்றி பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இதுபற்றி ஆசிரியர் ஜெரோமி கூறுகையில்;

இவ்வாறான வன்முறைகள் பற்றி குறித்த பிரபல அமைப்புகளின் செயற்பாடுகள் பற்றித் திரட்டிய தகவல்களைக் கொண்டு ஒப்பீடு செய்கையில் ஸ்ரீலங்காவில் இயங்கும் புலிகள் இயக்கக் குழுக்கள் மிகப் பயங்கரமானதும் மிலேச்சத்தனமானதும் மனிதாபிமானமற்றதும் காட்டுமிராண்டித்தனமானதுமான பல்வேறு தாக்குதல்களைச் செய்துள்ளதாகத் தெரிவித்திருப்பதுடன் ஒப்பீட்டளவில் ஏனைய பயங்கரவாத அமைப்புகளைக் காட்டிலும் புலிகள் இயக்கம் மிக மோசமான அமைப்பு எனவும் இந்த இயக்கம் போன்று மிலேச்சத்தனமான குழு உலகில் வேறு எந்த நாட்டிலும் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவ்வாறான பயங்கர புலிகள் இயக்க குழுக்களே தற்போது பாரிசில் பாதாளச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன எனவும் இவற்றின் செயற்பாடுகள் கூட இலகுவில் புலனாய்வுத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட முடியாத வகையில் சூட்சுமமாகவும் திட்டமிடப்பட்ட முறையிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜெரோமி தெரிவித்துள்ளார்.

ஜெரோமியின் மேற்படி புலனாய்வு நூல் 444 பக்கங்களைக் கொண்டதாகும். இந்தப் புத்தகம் பிரபாகரனின் புலிகள் இயக்கத்தின் உண்மையான பயங்கரவாத முகத்தைத் தெள்ளத்தெளிவாக உலகுக்குக் காட்டியுள்ளது. பிரான்சில் இயங்கும் மோசமான மாபியாக் குழுக்கள் பற்றி இந்நூலில் வெவ்வேறு அத்தியாயங்களில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பிரான்சில் புலிகள் இயக்க மாபியாக் குழுக்களின் நடவடிக்கை பற்றிய தகவல்களுக்கெனத் தனியான அத்தியாயத்தை ஜெரோமி வெளியிட்டுள்ளார். இந்த அத்தியாயத்தின் தலைப்பு “”கூடஞு ஐணூணிண ஏச்ணஞீ ணிஞூ கூச்ட்டிடூ கூடிஞ்ஞுணூண்’ என்பதாகும். “”தமிழ்ப் புலிகளின் இரும்புக் கரங்கள்’ எனப் பொருள் கொண்ட இந்த விசேட அத்தியாயத்தில் புலிகள் இயக்கத்தினர் பிரான்சில் மேற்கொண்ட மேற்கொண்டுவரும் தாக்குதல்கள், கப்பம், கொள்ளை கடத்தல்கள் பற்றிய தகவல்களை மட்டுமன்றி அவர்கள் சர்வதேச ரீதியில் மேற்கொண்டுவரும் பயங்கரவாதக் குற்றச் செயல்கள் பற்றியும் விபரங்கள், தகவல்களை வெளியிட்டுள்ளார் ஜெரோமி. இந்த வகையில் அவர் பிரான்சில் மட்டுமன்றி ஐக்கிய அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜேர்மனி, சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா, டென்மார்க் மற்றும் நாடுகளிலிருந்தம் புலிகள் இயக்கத்தின் குற்றச்செயல்கள் பற்றிய தகவல்களைப் பெரும் சிரமத்தின் மத்தியில் திரட்டியுள்ளார். இவ்வாறு சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் பற்றி ஜெரோமி வெளியிட்டுவரும் புலனாய்வு நூல்களுக்குச் சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பு இருந்துவருவதுடன் பெருந்தொகையான பிரதிகளும் விற்பனையாகியுள்ளன.

லங்காதீப: வெளிநாட்டு செய்தித்தாள் பகுதி: 13.07.2008