சிங்கள மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியோ எனக் கருதத் தோன்றும் வகையில் தமிழ்ப் பேசும் முஸ்லீம்கள் தலைனகரின் முக்கிய பகுதியான கொம்பனித் தெருவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
வீடுகளை உடைப்பதற்கான நீதிமன்ற உத்தரவு சமர்ப்பிக்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பனிர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
உரிய முறையில் காணி உறுதிகளைப் பெற்றுக்கொண்டவர்களே இவ்வாறு பலவந்தமான முறையில் வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நூற்றுக் கணக்கான வருடங்கள் வாழ்ந்த பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நகர அபிவிருத்தியை முறையாக மேற்கொள்ள வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பலமான பிரதேசங்களில் அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்களப் பேரினவாதிகள், முஸ்லிம்களை இலக்கு வைப்பது அவர்கள் “தமிழ்ப் பேசும்” முஸ்லிம்கள் என்பதாலல்ல.
அவர்கள் முஸ்லிம்கள் என்பதாலும் அவர்களுடைய ஆதரவு ஆளுங் கட்சிக்குக் கிடைக்காததாலுமே. இரண்டாவது காரணம், “சிங்களம் பேசும்” முஸ்லிம்கட்கு எதிராக மட்டுமல்லாது சிங்களவருக்கு எதிராகவும் செயற்படும்.
சரி, “தமிழ்ப் பேசும்” முஸ்லிம்கள் வடக்கிலிருந்து விரட்டப் பட்டது பற்றி நமது நிலைப்பாடு எப்படி இருந்தது? இந்தத் “தமிழ்ப் பேசும்”/”சிங்களம் பேசும்” என்பதை ஒரு புறம் வைத்து விட்டு, ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள், சிறுபான்மைச் சமூகங்கள் என்று விடயங்களைப் பார்ப்பது நல்லது.