சிறிலங்கா அரச தொலைக்கட்சியான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஐ அலை வரிசையில் ஒளிபரப்பாகும் தமிழ்ச் செய்திகளை வாசிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கக் கூடாதென நிர்வாகம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதாக ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த உத்தரவை மீறிச் செயற்பட முயற்சிக்கும் பெண்களைச் செய்தி வாசிப்பிலிருந்து உடனடியாக நிறுத்துமாறும் கண்டிப்பான உத்தரவை நிர்வாகம் பிறப்பித்துள்ளது
சில நாட்களுக்கு முன்னர் ஒரு தமிழ்ப் பெண் நெற்றியில் பொட்டு வைத்து குங்குமமும்; பூசிக் காணப்பட்டதனையடுத்து ரூபவாஹினி உயர் மட்டம், பொட்டும் வைக்கக் கூடாது குங்குமமும் பூசக் கூடாது என்ற நிலையில் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளது.
தமிழ் மக்களின் மத, காலாசாரம் பண்பாடுகளுக்குத் தடைவிதிக்கும் வகையில் நிர்வாகம் இவ்வாறு நடந்து கொண்டுள்ளமை தொடர்பில் அங்கு கடமையாற்றும் தமிழ் ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியும் வேதனையும் ஏற்பட்டுள்ளதாக தமிழ் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயத்தில் இங்கு கடமையாற்றும் தமிழ் உயரதிகாரிகள் கூட எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் நிர்வாகத்தின் உத்தரவினை அப்படியே கடைப்பிடிக்குமாறு தமிழ்ச் செய்தி வாசிக்கும் பெண் அறிவிப்பாளர்களுக்குத் தெரிவித்துள்ளமை குறித்தும் தமிழ் ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
Raj Suthan
ஏன் இப்படி பொண்கயை எழுதுகிறீர்கள்? உங்கள் இணையம் புலிப்பாணியில் கட்டுக்கதைகளை எழுது ஆரம்பித்தது உங்கள் இணைய்த்தின் நம்பிக்கை தன்மையை இழக்க வைக்கிறது. இன்று காலையும் மாலையும் பொட்டுவைத்த பெண்களே செய்தி வாசித்தார்கள்.
அப்படியாயின் முஸ்லிம் பெண்கள் முக்காடு போட்டு செய்தி வாசிக்க எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது அது மத அடையாளம் அல்லவா,நிர் பகஸவுக்ககு சூ– து கொடும் முன்னர் பிரபாவுக்கு கொடுத்தீர், இப்பபோ அவன் செத்தவுடன் தொப்பிய மாற்றும்
பொட்டு தமிழ்ப்பண்பாட்டின் அம்சம் அல்ல. அது இந்து மதப்பண்பாட்டினைக் குறிக்கிறது.
எனினும் தொலைக்காட்சியில் தோன்றும்பொழுது எந்த மத அடையாளத்தையும் அணியக்கூடாது என்ற அடிப்படையில் இது சொல்லப்பட்டிருக்கவில்லை என்றால் இது தவறானது. மற்றப்படி இதில் தவறேதும் இல்லை.
பொட்டு பற்றீப் பேசும் போது நான் பதறீய நிமிடம் மட்டும் நினைவுக்கு வருகிறது.கடவுளே இது யார் பெற்றேடுத்த பிள்ளயோ என கலங்கிய நிமிசம் அது.நெற்றீப் பொட்டில் துவக்குச் சூடு சிரித்த முகம்.நிர்வாணமாக்கி ரோஸ் கலர் ஆடையால் போர்த்தப்பட்டிருந்தது.அருகே துப்பாக்கி ரவைகளால் சல்லடையாக்கப்பட்ட இன்னொரு பெண்.
அப்படியாயின் முஸ்லிம் பெண்கள் முக்காடு போட்டு செய்தி வாசிக்க எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது அது மத அடையாளம் அல்லவா,நிர் பகஸவுக்ககு சூ– து கொடும் முன்னர் பிரபாவுக்கு கொடுத்தீர், இப்பபோ அவன் செத்தவுடன் தொப்பிய மாற்றும் உண்மை என்ன என்றூ
பொய்யான மத சார்பின்மை அரசு இந்த மாதிரி செயல்களை செய்கிறது. முஸ்லிம் ஆண் செய்தி வாசிப்பாளர் தொப்பி வைக்க , பெண் வாசிப்பாளர் முக்காடு போடவும் தடை ஏன் இல்லை????