நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீச்சான்குப்பத்தை சேர்ந்த 42 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க 6 படகில் சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்து கடத்திச்சென்றனர். கடத்திச்செல்லப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் திரிகோணமலையில் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், நாகை மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது.








ஜயா கனவாங்களே, சிறிலங்கா ஒருநாள் தமிழ் நாட்டையே கடத்திக்கொண்டுபோய் சிறிலங்காவில் வைத்திருந்தாலும் இந்தியா ஒரு போதும் கேள்வி கேட் காது. காரணம் , கேள்வி கேட்டா சிறிலங்கா சீனா பக்கம் சாய்ந்துவிடுமாம். சிறிலங்காவோடு பகைக்காமல் தாங்கள் இராஜதந்திர ரீதியில்தானம் காய்நகர்த்துவர்கள் என்று கதையளப்பார்கள்: தமிழ்னாடு கிளர்ந்து தானாகத் தீர்வைத் தேடாமல் மத்திய அரசு ஒரு போதும் இந்த விடயத்தில் தீர்வைத் தராது.