தெரியாத வட மாநிலத்தவர்களும் போலியான சான்றிதழ்கள் மூலம் நுழையும் ஆபத்து ஏற்பட்டது. இதனைத் தடுக்க இனி தமிழ் நாடு அரசுப்பணி தேர்வாணையத்தில் தேர்வு எழுதுகிறவர்களுக்கு தமிழ் கட்டாயம் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பாஜக தயவில் அதிமுக ஆட்சி செய்து வந்த 2016-காலக்கட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடத்தப்படும் தேர்வுகளில் பிற மாநிலத்தவர்களும் பங்கேற்கலாம் என்று அதிமுக அரசு உத்தரவிட்டது. இது பலத்த அதிர்வலைகளை உருவாக்கிய போதும் பாஜகவும் அதிமுகவும் இந்த அறிவிப்பை வாபஸ் பெறவில்லை. இதனால் இந்தி பேசுவோர் பலர் தமிழே தெரியாமல் தமிழ்நாட்டு வேலைகளில் சேர்ந்து வந்தனர்.
அமீபத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கையின் போது நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் தமிழ்நாடு அரசுப்பணிகளில் நூறு சதவிகிதம் தமிழ்நாடு இளைஞர்களை மட்டுமே பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தமிழ்நாடு அரசின் எந்த தேர்வாக இருந்தாலும் தமிழ் மொழித் தாள் ஒரு தேர்வாக இருக்கும் என்றும் அறிவித்தார்.
அந்தவகையில் இப்போது தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தாள் கட்டாயம் இடம் பெறும். தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் 10 வகுப்பு நிலையில் இருக்கும். கட்டாய தமிழ் தாள் தேர்வில், குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண் பெறாதவர்களின் பிற தாள்கள் திருத்தப்படாது.
தற்போது நடைமுறையில் உள்ள தமிழ் பொதுத் தமிழ்/ பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில் பொது ஆங்கிலம் தாள் தேர்வு நீக்கப்படுகிறது. பொதுத்தமிழ் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக இருக்கும். மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் உள்ளிட்ட மாநிலத்தின் பிற தேர்வு முகமைகளில் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வினை நடத்துவது தொடர்பான மேற்படி வழிகாட்டு நெறிமுறைகள் சம்மந்தப்பட்ட நிர்வாகத் துறைகளால் வெளியிடப்படும்” இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.