தமிழ்நாடு – திண்டுக்கல் அருகே அமைந்துள்ள தொட்டானூத்து அகதி முகாமில் வரண்ட கிணற்றில் இருந்து இலங்கையைச் சேர்ந்த இளம் தாயும் அவரது இரு பிள்ளைகளும் சடலங்களாக நேற்று முன்நாள் மீட்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் அருகே ரெட்டியாபட்டியில் உள்ள வரண்ட கிணற்றில் இருந்து உடல் கருகிய நிலையில் குறித்த மூன்று சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தமிழகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையை சேர்ந்த கலைச்செல்வி (வயது-35), அவரது மகன்மாரான வினோத் (வயது-12), கௌதம் (வயது-7) ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தீயில் கருகிய நிலையில் சடலங்கள் காணப்படுவதால் குறிப்பிட்ட மூவரும் கொலை செய்யப்பட்ட பின்னர் கிணற்றில் வீசப்பட்டாளர்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்ற சந்தேகத்தில் தமிழகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓநாய்களின்
ஒப்பாரியை..
தப்பாக புரிந்து
தஞ்சம்போன
அப்பாவி ஆடுகள்..
United Nations High Commissioner for Refugees should have given importance to this than taking Sri Lanka to the Human Rights Commission in Geneva.