Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தமிழ்த் தேசியக் கோமாளிகள் : கோசலன்

இனியொரு... by இனியொரு...
12/29/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

இன்று இலங்கையின் வடகிழக்கு மக்களின் ஒவ்வோர் அசைவிலும் ஒடுக்குமுறை இராணுவையும் தனது கோரக்கரங்களால் கட்டுப்படுத்துகிறது. சிவில் நிர்வாகம் இராணுவ தலைமையகத்திலேயே தீர்மானிக்கப்படுகின்றது. மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வின் ஒவ்வோர் நகர்வும் இராணுவத்திற்கும் அதன் துணைக் குழுக்களுக்கும் தெரியாமல் நடந்தேற முடியாது. ஒரு தேசிய இனத்தை, ஒரு மக்கள் கூட்டத்தை சிதைத்து, சீர்குலைத்து சிதறடிப்பதற்கு அப்பாவி மக்களின் மீது ஒவ்வொரு முனைகளிலிருந்தும் தாக்குதல் நடத்தப்படுகின்றது.

சிங்கள பௌத்த பேரினவாத அரசு தனது இனச் சுத்திகரிப்பு நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக கருத்தியல் தளத்திலும், பொருளாதாரத் தளத்திலும், பௌதீக இருப்பிலும் தனது தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
இந்த மூன்று வேறுபட்ட தளங்களிலும் தனது தாக்குதலை நடத்துவதற்காக வன்னியில் ஒரு லட்சம் அப்பாவித் தமிழர்களை சில இரவுகளுக்குள் கொன்றொழித்துவிட்டு உலக அரங்கில் இறையாண்மையுடைய அரசு என்று மார்தட்டிக்கொள்ளும் பேரினவாத அரசு அதன் முகவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.

முதலில் சுயநிர்ணய உரிமைக்காக மக்களின் போராட்டம் பயங்கரவாதப் போராட்டம் என்றும் இது புலிகளுக்கு மட்டுமே உரித்தான பயங்கரவாதப் போராட்டம் என்றும் இனவாதப் போராட்டம் என்றும் கருத்தியல் தளத்தில் இலங்கை அரச பயங்கரவாதிகள் உலகின் ஏகபோக அரசுகளின் துணையோடு நடத்ததுகின்ற தாக்குதல் ஆபத்தானது. அழித்துத் துவம்சம் செய்யப்பட்ட மக்கள் கூட்டத்தின் மீது, அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக சூறையாடப்பட்ட மக்கள் மீது நடத்தப்படுகின்ற கருத்தியல் யுத்ததத்தின் தமிழ் முகவர்களின் வலைப்பின்னல் பரந்து விரிந்தது.

இரண்டாவதாக, வடக்கிலும் கிழக்கிலும் இனப்படுகொலைக்குப் பின்னான பொருளாதாரம், உற்பத்தி என்பன இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளது. கொழும்பு சந்ததையைச் சார்ந்த உற்பத்திகளாகட்டும், உள்ளூர் உற்பத்தி நிலைகளாகட்டும் இராணுவத்தின் நேரடியான தரகுகள் ஊடாகவே நடத்தப்படுகின்றன.

மூன்றாவதாக, தமிழ்ப்பேசும் மக்களின் பௌத்தீக இருப்பைக் கேள்விகுள்ளாக்குவது. வட கிழக்கில் சந்திக்குச் சந்தி புத்தரின் சிலைகள் எழுகின்றன. இராணுவம் நிரந்தரமாக நிலைகொள்ள ஆரம்பித்துவிட்டது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திய அதே ஆக்கிரமிப்பைப் போன்று இராணுவத்தின் குடும்பங்கள் அவலத்தில் வாழும் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. பல் தேசிய நிறுவனங்கள் அகதிகளான மக்களின் நிலங்களைச் சூறையாடுகின்றன.

இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டும்; மக்களின் சிவில் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என்பன போன்ற முழக்கங்களே தமிழர் அரசியலில் அக்கறை கொண்ட சாதாரண மனிதாபிமானி கூட முன்வைக்கக்கூடியவை. இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இராணுவம் தமிழர் பிரதேசங்களிலிருந்து வெளியேறுவதைத் தாம் விரும்பவில்லை எனக் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தியிருந்தார்.
தமிழ்த் தேசியம் என்ற கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு தேர்தலுக்காக உருவான கூட்டமைப்பின் தலைவர், பழுத்த அரசியல்வாதி இந்தக் கருத்தை முன்வைத்தமை கண்மூடித் தனமாக அவரை நம்பியிருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தது.

இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் சம்பந்தரின் கருத்துக்கள் ஏற்படுத்திய அதிர்வலைகளை எதிர்கொள்ள வழமையான இலங்கை அரசின் கருத்தியல் முகவர்கள் களத்தில் இறங்க ஆரம்பித்தனர். சம்பந்தரின் உரையின் உள்ளர்த்ததை மேலும் கீழும் ஆராய்ந்து புதிய விளக்கங்களை முன்வைத்தனர். சம்பந்தர் கூறியவற்றை அவர்கள் தங்களது மொழியில் வேறுவகையில் நியாயப்படுத்தினர்.

இலங்கை அரசு மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள கருத்தியல் யுத்ததம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல அடுக்குகளாக கடந்த நான்கு வருடங்களாக நிகழ்ந்து வருகிறது.

1.சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் தவறானதும் அழிவுகளை ஏற்படுத்துவதுமாகும்.

2. சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரான இனவாதம்.

3. சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் ‘அவர்கள் முன்வைக்கின்ற’ அபிவிருத்திக்கு எதிரானது.

4. சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் சாதீய ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகிறது.

5. சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கையை ‘சர்வதேச அரசுகள்’ ஏற்றுக்கொள்ளாது.

இது போன்ற வெவ்வேறு அளவிலான பல்வேறு அரசியல் சமூகப் பிரச்சனைகளூடாக இலங்கை அரசின் கருத்தியல் யுத்தம் ஆரம்பிக்கும் அதே வேளை அதற்கான இடைவெளிகளையும் கடந்தகால போராட்டத்தின் தவறுகள் விட்டுச்சென்றிருந்தது.

இக்கருத்தியலை தமிழ்ப் பேசும் மக்கள் மீது உட்செலுத்தும் அதே வேளை அவர்களை அழித்து, சூறையாடு துவம்சம் செய்யும் அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது பேரினவாத அரசு.

இன்று இந்தக் கருத்தியலுக்கு அப்பால் இலங்கையின் எல்லைக்குள் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள யாரும் எஞ்சியிருக்கவில்லை. அதன் பிரதான முகவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.

தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய குறுந்தேசியவாத ஏகாதிபதிய சார்பு வாக்குப் பொறுக்கும் அரசியல் கட்சிகளின் தொடர்ச்சியாகக் கருதப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய முழக்கத்தை தமது வாக்கு வங்கியை நிரப்பிக்கொள்வதற்காக மட்டுமே இன்றுவரை பயன்படுத்தி வந்துள்ளது.

இலங்கையின் மிகப் பயங்கரமான இனக்கொலையாளி சரத் பொன்சேகாவுடனும், பேரினவாதக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடனும் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் வாக்குப் பொறுக்கிய தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை தமிழ்த் தேசிய அரசியல் வெறும் வாக்குப் பொறுக்கும் கருவி மட்டுமே.

முள்ளிவாய்க்காலில் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்படும் வரைக்கும் தமிழ்த் தேசியயம் என்பது இந்திய அரசிற்கும் ஒரு வகையில் மேற்கு வல்லரசுகளுக்கும் தேவையானதாக அமைந்திருந்தது. தெற்காசியாவில் ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையிலான உள்முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்வதற்கான இராணுவ அரசியல் தேவைகள் காணப்பட்டன. இந்த நிலையில் தமிழ்த் தேசிய அரசியலை தமது நலன்களின் அடிப்படையில் பாதுகாக்கும் தேவை இந்திய அரசிற்கு ஏற்பட்டது. அதன் மறுபக்கத்தில் தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்து சிங்கள மக்கள் மத்தியிலான எழுச்சிகளை ஒடுக்குவதற்கு இலங்கை அரசிற்கும் அது பயன்பட்டது.

தமிழ்த் தேசிய அரசியல் ஆயுதப் போராட்டமாக எழுச்சி பெற்ற வேளையிலும் இதே அரசியல் தொடர்ந்தது. 90களின் இறுதிவரை நகர்ந்த இந்த அரசியல் சூழலில், ஒரு புறத்தில் தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களும், மறு புறத்தில் முழு இலங்கையுமே முடிவுகளற்று அழிந்துகொண்டிருந்தது. அதன் பின்னான காலப்பகுதியில், தமிழ்த் தேசிய அரசியலின் தேவை இந்திய அரசிற்கும் ஏனைய ஏகாதிபத்திய நாடுகளுக்கும் அற்றுப் போக, புதிய அரசியல் சூழல் தோன்றுகிறது.

அதனோடு கூடவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உருவாகின்றது. ஏற்கனவே அழிக்கப்படக்கூடிய அரசியல் கட்டமைப்புக்களைக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான முன் நடவடிக்கைகளை அதன் தேவை அற்றுப்போன அனைத்து நாடுகளும் மேற்கொள்ள ஆரம்பித்தன. ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் புலிகள் தடைசெய்யப்பட்டனர். புலிகளின் சர்வதேச தொடர்பாளரும் ஆயுத வழங்குனருமான கே.பி உள்வாங்கப்பட்டார். பல்வேறு நாடுகள் ஊடாக இலங்கை அரசு அழிவு ஆயுங்களைக் குவித்துக்கொள்வதற்கு அனுமதி கிடைத்திருந்தது. இரசாயன ஆயுதங்கள் தங்கு தடையின்றி இலங்கை இராணுவத்தின் கைகளில் கிடைத்தது.

புலிகளின் நம்பிக்கைக்கு உரிய ஜனநாயக முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட ஆரம்பிக்கிறது. வாக்கு வங்கிகள் பலமடைகின்றன. உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் வயது முதிர்ந்த ‘தேசியத் தலைவராக’ சம்பந்தன் தரமுயர்கிறார்.

எண்பதுகளின் இறுதியில் புலி ஆதரவாளர்களை வெட்டிக் கொலைசெய்வது என்ற அடிப்படையில் தோன்றிய மண்டையன் குழு என்ற இந்திய இராணுவத் துணைக்குழுவை சுரேஷ் பிரேமச்சந்திரனே தலைமை தாங்கினார். யாழ்ப்பாண்த்தில் அசோக் ஹொட்டேலை தலைமையகமாகக் கொண்டியங்கிய இந்தக் குழுவினால் கொலைசெய்யப்பட்ட அப்பாவிகள் பலர். இந்த சுரேஷ் பிரேமச்சந்திரனே புலிகளின் அழிவின் பின்னர் இந்திய அமரிக்க நலன் சார்ந்த அரசியலை இலங்கையில் முன்னெடுப்பதற்காக தயார்படுத்தப்பட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு முன்னதாக மகிந்த ராஜபக்ச அமைச்சராகவிருந்த மீன்பிடி அமைச்சின் செயலாளர் சுரேஷ்.

அமிர்தலிங்கம் கொலை செய்யப்பட்ட போது அவர் இன்று கூறுவது போன்றே வடகிழக்கில் பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டும் என்று கூறிய சம்பந்தர் கூட்டமைப்பின் தலைவரானார். இலங்கை அரச சலுகைகளைப் பெறுவதில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள்ளேயே சர்ச்சைக்கு உள்ளான சம்பந்தரை பணத்துக்காக எதையும் செய்யக் கூடியவர் என அமரிக்கத் தூதரகம் நம்பியதாக விக்கிலீக்ஸ் கேபிளின் தகவல் ஒன்று கூறியது. அழிவின் பின்னர் தமிழ்த் தேசியத்தைக் கையகப்படுத்துவதற்காக தயார்செய்யப்பட்ட பிரதான மனிதனே சம்பந்தர்.

கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவனும் சட்டத்தரணியும் மக்களுடன் குறைந்தபட்ச தொடர்புகளுமற்ற கொழும்புத் தமிழரான சுமந்திரன் அழிவின் பின்னர் தமிழ்த் தேசியத்தைக் கையகப்படுத்த தயார்செய்யப்பட்ட மூன்றாவது நபர்.

இந்த மூன்று பிரதான தேசிய அரசியல் கோமாளிகளதும் பின்னணியில் இந்திய – அமரிக்க அரசுகளே செயற்படுகின்றன. தமிழரசுக் கட்சியின் ஆரம்பத்திலிருந்தே அதன் அரசியலின் பின்னணியில் செயற்பட்ட அதே அரசுகள் இன்றும் செயற்படுகின்றன. இந்திய அமரிக்க ஆண்டவர்கள் சொல்வதை அடியார்கள் செய்கிறார்கள். அவ்வளவு தான். இதற்கு மேல் எதுவும் கிடையாது.

இவர்கள் அமரிக்கா சென்றுவிட்டு வரும் வழியில் கனடாவில் நடந்த கூட்டத்தில் பேசிய சம்பந்தர் வடக்குக் கிழக்கு தமிழர்களுக்கு சொந்தமானதில்லை என்றார். அது அவரது எஜமானர்கள் அவருக்குக் கொடுத்த உத்தரவு. கடந்தவருடம் இந்தியா சென்று திரும்பிய சுமந்திரன் நாம் ஒன்றும் செய்ய முடியாது, இந்தியா சொல்வதை நாங்கள் செய்கிறோம் என்றார்.

இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட அரசுகளுக்கு மகிந்த அரசின் இருப்பும், இனச் சுத்திகரிப்பும் இன்றைய தேவை. அதன் கருத்தியல் முகவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

அவர்களின் அச்சுக்களாக தோற்றம் பெற்ற சிறிய கீழ் நிலை முகவர்களே சம்பந்தனின் உரைக்கு பொழிப்பு எழுதும் எழுத்துலக ஜாம்பவான்கள். கொழும்பு சிங்களத் தரகு முதலாளிகளுக்கும் தமிழ் தரகு முதலாளிகளுக்கும் ஆண்டாண்டு காலமாக திரைமறைவில் நடைபெற்ற நாடகத்தை இப்போது பொது மேடையில் நடத்துகிறார்கள். சம்பந்தனையும் சுமந்திரனையும் அவர்களின் ஜால்ராக்களையும் அம்பலப்படுத்தும் அதே வேகத்தில் இதன் அடியில் படர்ந்திருக்கும் அரசியலையும் வெளிக்கொண்டுவரத் தவறினால் புதிய சம்பந்தர்கள் வேறு முகத்தோடு களத்தில் இறங்கிவிடுவார்கள்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தெலுங்கானா தனி மாநில கோரிக்கை - இன்று முழு கடையடைப்பு : சந்திரசேகர் ராவ்

Comments 1

  1. manithan says:
    13 years ago

    இந்த இரண்டு செய்திகளில் எது உண்மையாக இருக்கும்?

    1)
    பரந்தனில் இரு இளைஞர் மீது பொலிசார் மிக மோசமான தாக்குதல்!- இளைஞர்களிடம் மன்னிப்புக் கேட்ட பொலிஸார்!

    கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இரண்டு இளைஞர்கள் மீது பொலிசார் மிகமோசமாக கூட்டாக தாக்கியுள்ளனர்.

    இதன் காரணமாக பரந்தன் பகுதியில் பொலிசாருக்கும் மக்களுக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

    தகவல் அறிந்தவுடன் பா.உறுப்பினர் சி.சிறீதரன்இ கரைச்சி பிரதேசசபை தவிசாளர் குகராசாஇ உபதவிசாளர் நகுலேஸ்வரன் உட்பட பிரதேசசபை மற்றும் கட்சி அங்கத்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரச்சனையை கேட்டறிந்துள்ளனர்.

    தாக்கப்பட்ட இளைஞர்கள் கிளிநொச்சி பொதுமருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இரண்டாம் இணைப்பு-

    கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குள்ளான தமிழ் இளைஞர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டிருப்பதுடன்இ குறித்த தாக்குதலுக்கு பொலிஸார் மன்னிப்பு கோரியிருக்கின்றனர்.

    இன்று மாலை குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த வட்டக்கச்சியை சேர்ந்த வி.விஜயரூபன் (வயது26)இஆ.லோகேஸ்வரன் (வயது24) ஆகிய இரு இளைஞர்களையு
    ம் பொலிஸார் வழிமறித்துள்ளனர்.

    எனினும்இ சடுதியாக நிறுத்த முடியாமையினால் குறித்த இளைஞர்கள் இருவரும் தமது வாகனத்தை சற்று தள்ளி கொண்டு சென்று நிறுத்தியிருக்கின்றனர். இதற்கிடையில் குறித்த இளைஞர்கள் இருவர் மீதும் பாய்ந்த போக்குவரத்துப் பொலிஸார் அவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

    இதன் பின்னர் பொதுமக்கள் பொலிஸாருடன் தர்க்கப்படவே குறித்த இளைஞர்கள் இருவரும் தம்மை தாக்கியதாக பொலிஸார் பெல்டி அடித்துள்ளனர். இதன் பின்னர் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சென்றிருந்தார்.

    இந்நிலையில் விடயம் பெரிதாக்கப்படப் போகின்றது என்ற அச்சத்தில் பொலிஸார் சம்பவத்திற்காக மன்னிப்புக் கோரியதுடன்இ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர்களை விடுதலை செய்திருக்கின்றனர்.

    இதேவேளை பரந்தன் சந்தியில் இன்று நடைபெற்ற இந்தச்சம்பவம் 5வது சம்பவமாகும்இ இதற்கு முன்னரும் படையினர்இ பொலிஸார் இணைந்து பல தடவை மக்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்
    2) பரந்தனில் பா.உ சிறீதரனை விரட்டி விரட்டி அடித்த பொதுமக்கள்!

    கிளிநொச்சி பரந்தனில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனை தமிழ் மக்கள் திட்டியதுடன் முகத்தில் காறித்துப்பி ஒட ஓட கலைத்துள்ளனர் இன்று காலையில் ஏ9 வீதியில் மோட்டர்சைக்கிள் பாயணித்துக் கொண்டு இருந்தவர்களை பொலிசார் மறிக்க நிற்காமல் சென்றதால் பொலிசிறகும் இளைஞர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு இறுதியில் சமாதானமாக பேசி சென்றனர் இரு இளைஞரும் விடை பெற்று சென்றனர்.

    ஏ9 வீதியால் பயணித்த இவர்களை வீதி கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைமறிக்க நிற்காது சென்றதால் பொலிஸ் அதிகாரிகளும் இப்பகுதி பொதுமக்களும் இணைந்து சுற்றிவளைத்து இளைஞர்களை பிடித்தது விசாரணையை மேற்கொண்டனர் விசாரணை முடிவில் இரு இளைஞர்களும் தாம் இவ்வாறு நிற்காது ஓடியது தவறு என மன்னிப்பு கேட்டதால் பெலிஸ் அதிகாரியும் பொதுமக்களும் இணைநது இவர்களை மன்னித்து விடுதலை செய்துள்ளனர்.

    விடுதலையின் போது சம்பவ பகுதியால் பயணம் செய்த பா.உ சிறீதரன் வந்து இந்த பகுதி பெலிஸ் பொறுப்பதிகாரி தனக்கு தெரிந்தவர் நான் தான் கதைத்து உங்களை விடுதலை செயதன் என்று கூறிக்கொண்டடு நாம் எல்லோரும் ஒன்றாக நின்று படம் எடுக்கலாம் என்று அளைக்க இதனால் கோபம் அடைந்த மக்கள் உங்களுக்கு அரசியல் செய்ய நாங்களா கிடைத்தோம் நீங்கள் உங்கள் வேலையை பார்த்துக்கொண்டு போகலாம் என குறிப்பிட்டதுடன்.

    இந்த இரண்டு இளைஞர்களும் சிறீதரனை பார்த்து நாம் செய்தது பிளைதான் என மன்னிப்பு கேட்டோம் பொலிசிடம் அவரடகளும் மன்னித்து எங்களை விடுதலை செய்து விட்டர் ஏன் நீங்கள் அதற்குள் வருகிறீர்கள் எனக்கூற இதற்கிடையில் சிறீதரன் இல்லை இல்லை நான் தான் பேசி உங்களை விடுதலை செய்தேன் என குறிப்பிட சிறிதரனுக்கும் மக்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்ட இறுதியில் இவர்கள் சிறீதரனுடைய முகத்தி்ல் காறி துப்பிவிட்டு இனி எமது வாழ்க்கையை குழப்பாது நீங்கள் உங்களுடைய பாதையில் செல்லுங்கள் எங்களுடைய பிரசினையில் தலை போடவேண்டாம் எமது வாழ்க்கையை எப்படி அமைக்க வேண்டும் என்பது எமக்கு தெரியும் எனகுறிப்பிட்டார்.

    மேலும் உங்களுடைய இணைய செய்திக்காகவும்இ ஏயைணய இணையத்தை அலங்கரிக்க தேவைப்படும் செய்திக்காக எங்களை நீங்கள் விற்பனைப்பொருளாக மாற்ற வேண்டாம் என தெரிவித்து அனுப்பியுள்ளனர்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...