தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் 2ம் வாசிப்புத் தொடர்பான ‘வாக்கெடுப்பதில் இருந்து விலகியிருக்கும்” நிலைப்பாட்டை மேற்கொண்டிருக்கிறது.
2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான வாக்கெடுப்பு சம்பந்தமாக த.தே.கூ. கூடியாரய்ந்து இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.
இலங்கை அரசிற்கு எதிரான உலக அளவில் மக்கள் அப்பிராயத்தை ஏற்படுத்த முயற்சியெடுக்கப்படும் இன்றைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த நடவடிக்கை பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தவல்லது.
2011 ஆம் அண்டு வரவு செலவுத் திட்டம் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வந்த த.தே.கூ. இவ்வாறதொரு தீர்மானத்தை மேற்கொண்டமை பலரையும் விசனமடைய வைத்திருக்கிறது.
இந்த வரவு செலவுத் திட்டமானது தமிழ் மக்களுக்கு விசேடமாக இடம் பெயர்ந்த மக்களுக்கு எந்தவிதமான நிவாரணத்தையும் வழங்கவில்லை. மீள்குடியேற்றம் புனருத்தாரண வேலைகள் தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துக்கள் எதுவும் வரவு செலவுத் திட்டத்தில் இல்லை என்பதனால் இந்த வரவு செலவுத் திட்டத்தை எந்த அடிப்படையிலும் ஆதரிக்க முடியாது என்ற உறுதியான தீர்மானத்தை மேற்கொண்டோம் எனவும் அரசாங்கம் மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஆக்கபூர்வமான பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற எமது எண்ணத்தை வெளிப்படுத்தும் முகமாகவும் எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முகமாகவும் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிப்பதில் இருந்து விலகியிருப்பதென முடிவெடுத்தோம் எனவும் த.தே.கூ. சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.
ஒரு பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நிலையிலும், வட-கிழக்கு இராணுவ மயமாக்கப்படும் நிலையிலும், இனச்சுத்திகரிப்பு நடைபெறுகின்றது என்ற பொதுக் கருத்து நிலவுகிறது. இவ்வாறான சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நல்லெண்ணத்தை உருவாக்க விரும்புகிறது என்பது சந்தேகத்திற்குரியது.
ஆக இவர்கள் புதியதாகக் காட்ட முனையும் அரசியல் என்பது காலகாலமாக இருந்துவந்த பழைய அதிகார அரசியல் மட்டுமே.
இது தொடர்பாக தினக்குரல் ஆசிரியர், ‘போருக்குப் பின்னர் இலங்கையில் சிறுபாண்மை இனங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்காக தன்முனைப்புடன் குரல்கொடுப்பதில் அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்ப படுத்துகின்ற அரசியல் சக்திகளினால் இயலாமல் இருக்கின்றது.
அதற்கு போர் வெற்றி காரணமாக தென்னிலங்கையில் அரசியல் சமுதாயத்தின் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் மேலோங்கி காணப்படும் கடும் போக்கு சிங்களத் தேசிய வாத உணர்வே முக்கிய காரணமாகும். தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பில் தங்களால் முன்வைக்கப்படக்கூடிய எந்தவொரு நியாயபூர்வமான கோரிக்கையையும் கூட அரசாங்கம் அக்கறையுடனோ அல்லது அனுதாபத்துடனோ நோக்கத் தயாரில்லை.
அவ்வாறு நோக்க வேண்டிய எந்தவொரு நிர்ப்பந்தமும் அரசாங்கத்துக்கு இல்லை. இத்தகைய சூழ்நிலை பெரும்பாலான தமிழ், முஸ்லிம் கட்சிகளை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு அல்லது விரோதித்துக் கொள்ளாமல் இருப்பதற்கு நிர்ப்பந்திக்கிறது. இந்த விசித்திரமான அரசியல் பருவநிலையில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது மாத்திரமே நடைமுறைச் சாத்தியமானதும் விவேகமானதுமான ஒரு அணுகுமுறை என்று வலியுறுத்துபவர்கள் தங்களை மிகப்பெரிய அரசியல் சாணக்கியர்களாக மக்களுக்குக் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் ‘ … தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் திட்டமிட்டே புறக்கணித்து வந்த நிலையில் அவர்கள் தாங்களாகவே வலிந்து நல்லெண்ணச் சமிக்ஞையைக் காட்டியிருக்கிறார்கள். நல்லெண்ண வெளிப்பாடு என்பது ஒரு வழிப்பாதையாக இருக்க முடியாது. இரு வழிப்பாதை. அது தொடரப்படாத பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய அரசியல் அணுகுமுறைளைக் கடைப்பிடிக்கத் தன்னைத் தயார்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பது சிந்தனையைக் கிளறும் ஒரு முக்கியமான கேள்வியாகும்” எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
தினக்குரல் ஆசிரியர் தொடரின் ஆரம்பத்தில் ‘போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு எத்தகைய அரசியல் அணுகு முறையைக் கடைப்பிடிப்பது என்பதில் தமிழ்க் கட்சிகள் பெரும் தடுமாற்றத்திற்கு உள்ளாகியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது”. எனக் குறிப்பிட்டிருப்பது தமிழர்களின் இன்றைய அரசியல் நிலையை தெளிவு படுத்தும் ஒரு கூற்றாகும்.
எது எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரணடைவு வாதம் என்பது தமிழரசுக் கட்சியின் பாரம்பரியம் மட்டுமல்ல புலிகளின் நடைமுறையுமாகும். இந்தியாவையோ அன்றி உலகத்தின் கொடுமைமிக்க அதிகாரங்களையோ நம்பி வாழ்கின்ற மேலாதிக்க அரசியல் இறுதியில் சரணடைவிலேயே முற்றுப்பெறும் என்பதற்கு ஈழப் போராட்டம் சான்றாகும்.
மக்களை அணிதிரட்டும் மக்கள் சார்ந்த அரசியலை முன்னெடுப்பது இன்றைய ஒவ்வொரு இலங்கை அரசியல் முன்னணி அமைப்புக்களதும் கடமையாகும்.
தமது பெரும் அரசியல் பலமாக இந்திய அரசினைச் சுட்டிக்காட்டி வருகிற த.தே.கூ.ப்பினருக்கு, தங்களை இலங்கை வந்த இந்திய வெளிவிகார அமைச்சர் கிருஷ்ணா ‘சந்திக்காமல் சென்றமை” சம்பவம் மிகக் கசப்பானதாக அமைந்திருக்கிறது. இராஜதந்திர ரீதியில் ‘சந்திக்காமல் செல்கின்றமை” ஒரு அரசியல் வெளிப்பாடு. அதாவது நாங்கள் உங்களைக் கவனத்தில் எடுக்கவில்லை என்பதனைச் சுட்டிக்காட்டும் வெளிப்பாடு.
மிகக் கடுமையானதொரு சூழலில் அல்லலுறும் மக்களுக்காக குரல் கொடுக்கிற பெரும் அரசியல் சக்தி நாங்கள் என கூறிவரும் நிலையில் த.தே.கூ.ப்பினர் ‘மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு எத்தகைய அரசியல் அணுகு முறையைக் கடைப்பிடிப்பது” என்பது மிகமுக்கியமான வினா என்பதனைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டியிருக்கிறது. ஆனால் கூட்டமைப்பினர் மத்தியில் அத்தகையதொரு நிலைமை இருப்பதமாகத் தெரியவில்லை.
மக்கள் சாராத அதிகாரம் சார்ந்த அரசியலில் இலங்கை அரசின் நலன்களும் இவர்களின் நலன்களும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன.
இதற்கிடையில் தமிழ்க் கட்சிகளின் அரங்கம், இலங்கைத் தமிழர்களுக்கு சமத்துவம், நீதி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இந்தியாவை கோரி இந்திய வெளிவிகார அமைச்சருக்கு கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்திருக்கிறார்கள். விக்கிரமபாகு கருணாரத்ன, செந்தில்வேல் போன்றோர் இந்திய அரசின் அதிகார நலன்கள் இலங்கையில் எவ்வாறு தமிழ்ப் பேசும் மக்களைக் கொன்றொழித்தன என்பதை தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
பாராளுமன்ற சந்தர்ப்பவாதம் என்பதே இப்போது இங்கு. மாற்று அரசியல் வேண்டும் என்பதையே நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன
இவாகள் என்ன ஏதோ இப்போழுது தான் தமிழருக்க துரோகம் இழைக்கின்றர்களா? சுயநல அரிசியலுக்காக என்றும் இவர்கள் தமிழன விரோதகள்தான். புலிகள் இருக்கும் வரை அடக்கி வாசித்தவர்கள். இனி எதற்கு அஞ்சவேண்டும் கால்நக்கி பிச்சையேடுததாவது தமது பதிவிகளை காத்துக் கொள்ளட்டும். அத்துடன் தமிழரங்கமும் இத்தனை காலம் ஒன்று கூடி எதைக் கிழித்து விட்டார்கள். ஈழததமிழருக்காக போராட ஒரு மாற்று அரசியல் கட்சி இல்லாத கொடுமையால் இந்த சுயநலவாதிகளுக்கு வாக்கு இடவேண்டிய காட்டாயம் காலததின் மற்றுமோரு கொடுமை. இவர்களிடம் வேண்டுவது இக்காட்டான இந் நிலையிலாவது கொடூர சிங்கள அரசுடன் சேராமல் இருக்க வேண்டும் என்பதையே. பனியிலும் குளிரிலும் தமது உறவுகளுக்காக போராடிக் கொண்டிருக்கும புலம் பெயர் உறவுகளின் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்க முடியாது விட்டால் ஒதுங்கியாவது இருக்கட்டும். இநத அரசியல் வியாதிகளின் குரல் வலுவற்றது என்பது நாமறிவோம். அதற்காக குட்டையைக் குழப்பாமல் ஒதுங்கியிருத்தலே ஈழத்தமிழரின் எதிர்பார்ப்பு.
“கிருஷ்ணா சந்திக்காமல் போனார்”!அவர்களுக்கு சீனாவிடமிருந்து இலங்கையை எப்படிக் காப்பது என்று தெரியாதிருக்கையில் அதாவது கையறு நிலையில் இருக்கையில் ஈழத் தமிழர் மறு வாழ்வும் அரசியல் தீர்வும் மேலதிக சுமையாகவே பார்க்கப்படுகின்றது என்பதே உண்மை!தவறான வெளியுறவுக் கொள்கை அல்லது தான் தோன்றித் தனமான வெளியுறவுச் செயலர்களின் நடவடிக்கைகள் தமிழ் மக்கள் கிள்ளுக் கீரைகள் என்று நினைத்து சீண்டாது விடுவதன் பிரதிபலனை அனுபவிக்க வேண்டியிருக்கும்!சீனாவுடன் தமிழ் மக்கள் நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடிப்பதன் மூலம் தார்மீக எதிர்ப்பைக் காட்ட முடியும்!த.தே. கூ வின் நிலைப்பாடு பழைய குருடி கதவைத் திறவடி கதையாகிப் போனது என்று சொல்வது விவாதத்துக்குச் சரியாக இருக்கலாம்!யதார்த்தம் புரிந்து கொள்ளப்படல் வேண்டும்!இப்போது தமிழ் மக்களுக்கு வேண்டியது மறு வாழ்வு அல்ல!ஆக்கிரமிப்பிலிருந்து வெளியேறுவதும்,வெளியேற்றுவதும் தான்!
இலங்கையில் தமிழ் பேசும் மக்களான முஸ்லீம்,கிறீஸ்தவ, சைவர்கள்,வைணவர் என அனைவ்ரும் ஒன்றாக இணந்து அடித்த அடியை எடுத்து வைத்து ஒரு புதிய நகர்வை நோக்கி முன்னேறல் அவசியமானது.இங்கே கசப்பான சம்பவங்கள் என எதையும் நோக்காது அதை அனுபவங்களாக்கி நாம் செயற்பட வேண்டி உள்ளது.இப்போது சிலர் தமது சொந்த ஆசைகளூக்காக கிருஸ்ணாவை தூக்கில் தோளீல் போடாது அதை கால்துடைக்க பயன்படுத்துதல் நலம் இட்லியிலும் சாம்பாரிலும் சாப்பாட்டை முடித்து இடுப்புத்துணீ கவிழும் பெண்ணீக்காக கொழும்பில் ஏங்கும் கிருஸ்னாக்கள் ஒன்றூம் பரமாத்தாக்கள் அல்ல இலங்கையில் சாந்தியும்,சமாதானமும் ஏற்பட வேண்டுமானால் எமது குறகாணூம் போக்கு மாறவேண்டும்.நாம் இன்னார் அவர் இன்னார் என நோண்டிக் கொண்டிருக்காது ஒன்றூ பட வேண்டும்.
ஒரு தோல்வியடந்த தேசத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் செய்கிறது…
பெரிய வாய்சவாடல்கள் பெரிதாக உதவி செய்யாது..அவர்கள் தமது அரசியலை செயட்டும்..புரட்சிகர அரசியலை நீங்கள் செய்யுங்கள்…தமிழர் அரசியல் பரப்பில் ஆயிரம் பூக்கள் மலரவிட்டலும் ஒரு நன்கு அய்ந்தாவது மலரட்டும்
புரட்சிகர அரசியலை விட்டாலும்
வாக்களித்த மக்களுக்கு நேர்மையாக
நடக்கவேண்டாமா அம்மணி? இனப்படுகொலை
அரசுடன் எப்படிச் சார்ந்து நிற்க முடியும்?
தோல்வியடைந்த தேசம் என்பதற்காக எப்படியும் எவ்வாறும் நடந்து கொள்ள முடியுமா?
அது தோல்வியடைந்த தேசம் அல்ல. வெற்றிக் கழிப்பில் புன்னகை பூத்துப்போய் இருக்கிறது.இன்று தமிழனை தமிழன் சந்தியில் போட்டு எரிப்பார் யாரும் இல்லை.
பாடசாலை கர்ப்பிணிகள் பிரயாணம் செய்யும் பஸ்வண்டிகளுக்கு குண்டுவைப்போர் முழுமையாக அழித்தொழிக்கப் பட்டுவிட்டார்கள்.ஐயர் கோவில் பூசைக்கு பயக்கலக்கம் இல்லாமல் செல்லுகிறார். ஆசிரியரும் பேராசியர்களும் மனத்தெளிவுடன் பாடம் நடத்தக்துகிறர்ர்கள்.உரை நிகழ்த்துகிறர்கள். இதை எப்படி தோல்வியடைந்த தேசமாக கருத முடியும்.
தமிழ்மமக்களில் மூன்றாம் தரபிரஜைகளாக இருந்த அடக்கியாடுக்க பட்டமக்கள் சாதியில் குறைந்தவர்கள் மலையகமக்கள் தாம் இலங்கை பிரஜை என்பதை தெளிவாக உணர்ந்து விட்டார்கள். இங்கு தோல்வியடைந்தவர்கள் தமிழ்மக்களின் பிற்போக்கு தனத்திற்கு ஒட்டுமொத்த குத்தகை எடுத்தவர்களே! இங்கு மரணஓலம் எழுப்புபுகிறவர்களும் அவர்களே!.
சந்திரன் ராஜா சொல்வது உண்மைதான் அதில் தவறூ இல்லை ஏனெனில் அவர் வாழ்வது உலகின் நாலாவது பணக்கார நாட்டில் பல வகையான உணவுகள், கோப்பிக்கடைகள்.என் க்கு லண்டனில் பிடித்தது இந்தக் கோப்பிக்கடைகள்தான்.நமக்கு பிரித்தானியர் உண்ர்வு வந்தாயிற்றூ சட்டங்களூம் தெரிகிறது.இலங்கையில் தமிழர் தம்மை இலங்கையராக எண்ண என்ன இருகிறது? இலங்கை கிரிக்கெட் அணீயில் எத்தனை தமிழர் ஆடுகிறார்கள்? கொமன்வெல்த் அணீ வந்ததே யாராவது தமிழர் உண்டா? முள்வேலியில் தமிழர் இருக்க நாவற்குழியில் சிங்களக் குடியேற்றம் எதைக்காட்டுகிறது? இத்தனை காலமாக கண்ணீ வெடியைக் காரணம் காட்டி தம் சொந்தக் காணீயில் கூட தமிழர் குடியேற தடைகள் ஏன்?
இங்கு தோல்வியடைந்தவர்கள் தமிழ்மக்களின் பிற்போக்கு தனத்திற்கு ஒட்டுமொத்த குத்தகை எடுத்தவர்களே என்பது சரிதான். இந்த தோல்வியுடன் இன ஒழிப்பும்> மக்கள் அழிவும்> தங்கு தடையற்ற இன ஒடுக்குமறையும் கலந்து இருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.
அரசியல் நடத்துபவா்களின் சூழ்நிலைகளை,அவா்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அவா்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களை,எல்லாவற்றிற்கும் மேலாக அவா்கள் எடுக்கும் முடிவுகளை லண்டன் கோப்பிக்கடையிலிருந்தோ ரொரன்ரொ மோலிருந்தோ சுலபமாக முன் தீா்ப்பு கூறிவிடலாம்.
எதற்காக இந்தமுடிவுகளுக்கு வருகின்றார்கள் என்பதை கொஞ்சம் பொறுமையுடன் நோக்கவேண்டும் நல்லதா கெட்டதா என்று அறிவதற்கு கால அவகாசம் தேவையல்லவா.
தமிழ் இனம் சமூகப்பிரிவுகளால் சீரளிவதும் இயக்கங்கள் தோன்றியதிலிந்து மேலும் பிரிவுகள்,கசப்புணா்வுகள்,மனித உரிமை மீறல்கள் என்பனவால் பாதிக்கப்படாத தமிழனே இல்லை எனலாம் ஆனால் ஒருசிலா் தாம் மட்டுமே இவைகளால் பாதிக்கப்பட்டவா்கள் போல் புண்ணை மாறவிடாது சொறிந்து கொள்வது மடத்தனமானது.
நானும் சகலவழிகளிலும் பாதிக்கப்பட்டவன் இருந்தும் என் இனத்தின் விடுதலையே எனது தலையாய நோக்கம் வேறு எதுவும் அல்ல.