Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தமிழ்த் தலிபான்கள் : கோசலன்

இனியொரு... by இனியொரு...
05/30/2014
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
54
Home பிரதான பதிவுகள் | Principle posts

abu_hamzaபதினைந்து வருடங்களின் முன்னர் அபு ஹம்சாவைத் தெரியாதவர்கள் பிரித்தானியாவில் இல்லை என்றே கூறலாம். இஸ்லாமிய மத்தத்தின் மீது வெறித்தனமான பற்றுக்கொண்டவராகத் தன்னைக் காட்டிக்கொண்டார். தொலைக்காட்சிகளிலும் செய்தி ஊடகங்களிலும் அடிக்கடி வந்து போவர். பின்ஸ்பரி பார்க் என்ற இடத்தில் இருக்கும் இஸ்லாமியப் பள்ளிவாசலில் முக்கிய புள்ளியாக இருந்தவர். அவருடன் இஸ்லாம் மதத்தின் மீது வெறித்தனமான பற்றுக்கொண்ட இளைஞர்கள் உலா வந்தனர். வெளி நாட்டவர்களின் குழந்தைகளுக்கு பிரித்தானிய அதிகாரவர்க்கத்தின் மீது இயல்பாகவே வெறுப்பிருந்தது. அந்த வெறுப்பை முழு வெள்ளையினத்தின் மீதான வெறுப்பாக மாற்றுவதில் அபு ஹம்சா வெற்றிகண்டார்,

‘கோபம் கொண்ட இளம் மனிதன்’ என்ற அமைப்பை உருவாக்கிக்கொண்ட ஹம்சா இஸ்லாமிய ஊடகங்களில் கதாநாயகனானார். லண்டனில் ஒலிபரப்ப்பான இஸ்லாமிய வானொலியில் ஒசாமா பின்லாடன் போன்ற அடிப்படைவாதிகளது வெறிகொண்ட பற்றாளானாக தன்னை வெளிப்படுத்தினார். இஸ்லாமிய கொடி, குரான், ஒழுக்கம், பெண்கள் மீதான ஒடுக்குமுறை என்ற அனைத்தையும் தனது முழக்கமாகக் கொண்டார். மேற்கின் மீதான வெறுப்பு அதிகார வர்க்கத்தின் மீதானதாக இல்லாமல் அப்பாவி வெள்ளையின மக்கள் மீதானதாக திசைதிருப்புவதில் அபு ஹம்சா திட்டமிட்டுச் செயற்பட்டார்.

ஆப்கானிஸ்தானில் அல்-கயிதா பயிற்சி முகம்களுக்கு எல்லாம் சென்று லண்டன் திரும்பிய அபு ஹம்சா லண்டனில் தனது உணர்ச்சிப் பேச்சுக்கள் ஊடாக ஒரு இளைஞர் கூட்டத்தை தன்னை நோக்கி இணைத்துக்கொண்டார். வெறிகொண்டிருந்த இந்த இளைஞர் கூட்டம் இஸ்லாமிய மதத்தை விமர்சிப்பவர்களை கொன்று தின்பதற்கும் தயாராகவிருந்தது.

பிரித்தானிய அரசாங்கம், அதன் போலிஸ் மற்றும் உளவுப் படைகள் போன்றன அபு ஹம்சாவைக் கண்காணிப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன. குரூரமான பயங்கரவாதி ஹம்சாவைக் கைது செய்ய ஆதரங்களைத் தேடிக்கொண்டிருப்பதாக பிரித்தானிய அரசு அறிவித்தது. பிரித்தானிய அரசைத் திட்டித் தொலைக்கும் இப்படியான பயங்கரவாதியைக் கைது செய்வதற்குக் கூட தகுந்த ஆதாரத்தை எதிர்பார்க்கும் பிரித்தானிய அரசின் ஜனநாயகத்தை மக்கள் வியந்து பாராட்டினர்.

காலம் சுழன்றது. அபு ஹம்சா ஒவ்வொரு நாடகக் கடத்தப்பட்டு அமெரிக்காவில் சிறைப்பிடிக்கப்பட்டார். பிரித்தானியாவிலிருந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சந்தடியின்றி நடைபெற்ற வழக்கில் அபு ஹம்சா பிரிதானிய அரசின் உளவாளி என்ற தகவல் மே மாத ஆரம்பத்தில் வெளியாகியது.
பிரித்தானிய அரச உளவு நிறுவனம் ஹம்சாவை வளர்த்து உளவாளியாகப் பயன்படுத்தி அமெரிக்காவில் கைதானபின்னர் கைவிட்ட வழக்காக இது தொடர்கிறது.

அபு ஹம்சா, மோடி போன்ற மதவெறியர்கள், லூ பென் ஹிடலர் போன்ற நிற வெறியர்கள், UKIP, BNP போன்ற தேசிய அமைப்புக்கள் -அதிகார வர்க்கங்களால் தீனிபோடப்பட்டு அவற்றின் நலன்களுக்காக வளர்க்கப்பட்டவர்கள்.

பிரித்தானிய அரசு தனக்கு எதிரான பயங்கரவாதியைத் தானே வளர்த்தமை ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. உலகம் முழுவதுமுள்ள அரசுகள் இவ்வாறு பல்வேறு துறைசார் கொலைஞர்களை வளர்த்து அதிகாரிகளாக்கியிருக்கின்றன. சிலரை கொன்றுபோட்டிருக்கின்றன. தலைமை தவிர்ந்த ஏனையோரில் பெரும்பாலானவர்கள் வெட்டப்படுவதற்காக வளர்க்கப்படும் ஆடுகள்!

இவ்வாறு அழிக்கும் அரசுகளதும் அதிகார வர்க்கங்களதும் நலன்களுக்கா வளர்க்கப்பட்டு மக்கள் மத்தியில் விடப்படுகின்ற இந்தப் பயங்கரவாதிகளிடையேயான பொதுவான இயல்பு:

1. தாம் மேலானவர்கள், தமது கலாச்சாரம் மேலானது என்று பிராச்சாரம் மேற்கொள்வார்கள்.

2. ஒரு குறித்த இனம் அல்லது இனக்குழுவின் மேலான வெறுப்பை மக்கள் மத்தியிக் விதைப்பார்கள்.

3. கோட்பாடுகளற்ற வெற்று முழக்கங்களான இவற்றிற்காக கொடிகள், வரலாற்றுச் சின்னங்கள், தனிமனிதர்கள் போன்றோரைப் புனிதமானவர்களாக்கிக் கொள்வார்கள்.

4. இதன் பின்னர் தம்மைச் சுற்றி வெறிபிடித்த இளைஞர் கூட்டம் ஒன்றை உருவாக்கிக் கொள்வார்கள்.

5. இவை அனைத்திற்கும் தத்துவார்த்த விளக்க்ம் கூறும் தனி மனிதர்களையும் உள்வாங்கிக் கொள்வார்கள்.

இந்த ஐந்து அடிப்படைகளும் திருப்திப்படுத்தப்படும் நிலையில் வியாபாரம் தயாராகிவிடும். இதன் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் உளவு நிறுவனங்களாகவோ அழிக்கும் அரசுகளாக்வோ தான் காணப்படும். சில வேளைகளில் தனி மனிதர்களால் தயாரிக்கப்படும் இவ்வாறான குழுக்களை அரசுகள் விலைகொடுத்து வாங்கிக்கொள்ளும். அபு ஹம்சா முதலாம் வகை; தலிபான்கள் இரண்டாம் வகை.

இவ்வாறான அடிப்படைவாத அமைப்புக்களின் எல்லா இயல்புகளும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களிடம் காணப்படுகின்றன.

வெறிகொண்டவர்கள் போல நடிக்கும் தலைவர்கள், அவர்களால் தூண்டிவிடப்படும் அப்பாவிகளான இளைஞர்கள். மாயைக்குள் கட்டிவைக்கப்பட்டுள்ள மக்கள் போன்ற அனைத்து அடிப்படைவாத இயல்புகளும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களிடம் காணப்படுகின்றன.

90 களின் ஆரம்பத்தில் ஜீ.ஐ.ஏ என்ற அல்ஜீரிய இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு பிரஞ்சு அரசாங்கத்திற்கு எதிராக பிரஞ்சு அரசாங்கத்தாலேயே உருவாக்கப்பட்டது. அது அழிக்கப்பட்ட சில வருடங்களின் பின்னரும் ஜீ,ஐ,ஏ இன் ஆதரவாளர்கள் புலம்பெயர் நாடுகளில் அதன் கொள்கைகளை வழி நடத்தினர். ஜீ,ஐ,ஏ பிரஞ்சு அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியது. போராடும் வழிமுறை தவறு என்று விமர்சித்து போராட்டத்திற்கு உறுதியான அரசியல் வழிமுறை ஒன்றை முன்வைக்க விழைந்த பலர் கொன்றொழிக்கப்பட்டனர்.

ltte_flagஇந்த வகையில் புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் வெறித்தனமான சுலோகங்களுடனும் உணர்ச்சிப் பேச்சுக்களுடனும் போராட்டம் நடத்தும் உளவுப்படைகளதும் அரசுகளதும் தயாரிப்பு என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்கமூடியாது.

புலிக்கொடி, பிரபாகரன் போன்றவர்கள் மீது இந்த அமைப்புக்கள் கட்டியெழுப்பும் போலிப் புனிதத்துவம் தலிபான்களின் செயற்பாட்டை விஞ்சியதாகப் பலதடவைகள் காணப்படுகின்றன. ஆண்ட தமிழர்கள் என்று யாழ்ப்பாணத்தை மையமாகக்கொண்டு இவர்கள் கட்டமைக்கும் தற்பெருமைப் புனைவுகள் ஏனைய அடிப்படைவாத அமைப்புக்களுக்கு எந்தவகையிலும் குறைந்தவையல்ல.

இக்குழுக்கள் தம்மைச் சுற்றி இளையோர் கூட்டம் ஒன்றை வளர்த்துள்ளார்கள். தமக்கு ஏற்ற ஊதுகுழல் ஊடகங்களை பெரும் பணச்செலவில் அமைத்துள்ளார்கள். மக்களுக்கு ஒரு பக்க உண்மையை மட்டுமே கூறி வெறித்தனத்தையும் கண்மூடித்தனமான பற்றையும் வெறியையும் அடிப்படை ஜனநாயக விழுமியங்களைக் கூட மத்திக்காமல் வளர்த்துள்ளார்கள்.

இக் கூட்டங்கள் தேசியம் என்று கூறும் தலிபானிசம் தேசியமல்ல. உளவு நிறுவனங்களிற்கும் அதிகார வர்க்கத்திற்கும் பயன்பாட்டுப் போகும் இவ்வமைப்புக்களின் தலிபானிசம் அழிக்கப்பட்டு புதிய புரட்சிகரமான அமைப்புக்கள் கடந்த காலம் குறித்த விமர்சனம் சுய-விமர்சனங்களோடு உருவாக்கப்பட வேண்டும்.

இங்கு தமிழ்த் தலிபான்கள் எந்த உளவுப்படையுடன், எந்த அரசுடன் எப்படி வேலைசெய்கிறார்கள் என்பதற்கு அப்பால் அடிப்படையில் இனக்கொலையாளி ராஜபக்சவிற்குத் துணை போகிறார்கள் என்பதே பிரதானமானது.

இனக்கொலையாளி ராஜபக்சவிற்கு இரண்டு முக்கிய தேவைகள் உண்டு:

1. தான் தொடர்ந்தும் பயங்கரவாதத்திற்கு எதிராகப்போராடுகிறேன் என்று சிங்கள மக்களுக்களை சிங்கள பௌத்த மாயைக்குள் வைத்திருக்க வேண்டும்.

2. தடையின்றி நிலப்பறிப்பையும் இனச்சுத்திகரிப்பையும் தொடர வேண்டும்.

இந்த இரண்டிற்கும் ஏதுவான அமைப்புக்களைப் புலம்பெயர் நாடுகளில் காணலாம். உணர்ச்சி வியாபாரம் நடத்தும் இந்த அமைப்புக்கள் ராஜபக்சவின் இன்றைய தேவைகளைப் பூர்த்திசெய்கின்றன.

ஒரு போராட்டம் தோல்வியடையும் போது அதன் தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்வதும், அவற்றை விமர்சித்து புதிய வழிமுறைகளை முன்வைப்பதும் மனித இயல்பு. தலிபான்கள் அப்படியல்ல. பழம் பெருமை பேசுவதையே அவர்கள் தமது வியாபாரத் தந்திரமாகக் கொள்வர். தமிழ்த் தலிபான்களிடமும் இதனைக் காணலாம். அதிகார வர்க்கம் தலிபான்களைத் தேவையான போது பயன்படுத்திவிட்டு அழித்துவிடும். புலம்பெயர் தமிழ்த் தலிபான்களின் வாழ்வுக்காலம் இன்னும் சில வருடங்களே நீடிக்கும்.அவர்களின் அழிவோடு போராட விழையும் அனைவரும் அழிக்கப்படுவர். அதனால்தான் தமிழ்த் தலிபான்களின் தலைமை ஜனநாயக முற்போக்கு சக்திகளால் பிரதியிடப்பட்டு உறுதியான அரசியல் வேலைத்திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஜெயலலிதா மோடியைச் சந்திக்கிறார் : மக்கள் விரோதிகளின் சங்கமம்

ஜெயலலிதா மோடியைச் சந்திக்கிறார் : மக்கள் விரோதிகளின் சங்கமம்

Comments 54

  1. K Shanmugam says:
    12 years ago

    Yes we have the same people like VAIKO/SEEMAAN/NEDUMARAN/JJ&SUBRAMANIYASWAMY but in diferent AVATARS.But they are making good money out of it.But these people safe unlike ABUHAMSA,They are tacitly supported by each other including Rajapakshe.

    • Lala says:
      12 years ago

      ##       VAIKO/SEEMAAN/NEDUMARAN.But they are making good money out of it. ##

      Could you explain how they make money out of this problem ??

      • K Shanmugam says:
        12 years ago

        Maveeran Prabhakaran died.What about the LTTE assets in Srilanka and abroad.LTTE had over 50 small ships and lot of properties out side their countries.These people loot the same with the help of migrants setled in UK,Canada,US etc.

        • lala says:
          12 years ago

          Do you think VAIKO/SEEMAAN/NEDUMARAN owned those properties ?
          First you talk about VAIKO/SEEMAAN/NEDUMARAN , and now you talk about migrants setled in UK,Canada,US etc.

          • K Shanmugam says:
            12 years ago

            Yes these people joined with migrants and looted as the LTTE property has no control after Maveeran.It is unaccounted.

  2. mannan says:
    12 years ago

    மேற்குலகின் ஆதிக்கம் இலங்கையில் பரவத்தொடங்கியது  முதல் 
    மேற்குலகம் தமது  கைக்கூலிகளை  தங்கள் செல்லப்பைள்ளைகளாகவே  
    வளர்த்தார்கள்.    சாதாரண விவசாயியோ அல்லது  தொழிலாளர்களோ
    மேன்நிலைப்படுத்தப்படவில்லை. இவர்கள்  அனறும் இன்றும் சுரண்டப்படுபவ்ர்களாகவே  உள்ளனர்.

    மேற்குலகின்  கைக்கூலிகளாக இருந்த  தமிழர் சிங்களவ்ரிடையேயான
    அதிகராப் போட்டியே  தமிழர் சிங்களவ்ர்  பகைமைக்கு  வித்திட்டது.
    உலகமாற்றத்தினால்  இன்று  முதலாளித்துவத்தை   அதிகராப்போட்டியில்
    ஈடுபடுவோர்  மூலமாக   மேற்குலகம் காப்பாற்ரிக்கொள்கின்றது.

    இதற்கான  சான்றிதளாக  இந்தக்கட்ட்டுரை அமைந்துள்ளது  வாழ்த்துக்கள்.

  3. Kandiah says:
    12 years ago

    //பிரித்தானிய அரச உளவு நிறுவனம் ஹம்சாவை வளர்த்து உளவாளியாகப் பயன்படுத்தி அமெரிக்காவில் கைதானபின்னர் கைவிட்ட வழக்காக இது தொடர்கிறது.

    அபு ஹம்சா, மோடி போன்ற மதவெறியர்கள், லூ பென் ஹிடலர் போன்ற நிற வெறியர்கள், UKIP, BNP போன்ற தேசிய அமைப்புக்கள் -அதிகார வர்க்கங்களால் தீனிபோடப்பட்டு அவற்றின் நலன்களுக்காக வளர்க்கப்பட்டவர்கள்.
    //
    The same way Binthiran Valae and Pirabakaran grromed by Indians for their own benefit. I share the same thought with the writer and most of the Tamils will do. But how to win the violent minority or noisy minority? This is the problem writer. I am only crying inside.

  4. Lala says:
    12 years ago

    ##   மேற்குலகின்  கைக்கூலிகளாக இருந்த  தமிழர் சிங்களவ்ரிடையேயான
    அதிகராப் போட்டியே  தமிழர் சிங்களவ்ர்  பகைமைக்கு  வித்திட்டது.#

                                       இன்று  ஜெனிவாவில் மேற்குலகத்தினால்  கொண்டு வரப்பட்ட  தீர்மானத்தில்   தமிழர் என்ற  தமிழர்  பிரச்சனை என்ற  பதத்தை தவிர்த்து  மத  முரண்பாடுகள்நிலவுவது போல்  குறிப்பிட்டு இலங்கை இனப்பிரச்சனை  திசை திருப்புவது  போன்றதுதான் மேற்கூறிய  வாசகமும்..
     அதில் மதமுரண்பாடுகள் என திசை திருப்பினார்கள், இதில் முதலாளீத்துவம் , தொழிலாளித்துவம் , வர்க்கம் என   என பசப்பி    திசை மாற்றுகிறார்கள் . தங்களுக்குள் அடித்துக்கொண்டாலும் , முதலாளித்துவத்தினதும் , தொழிலாளித்துவத்தினதும்  கபட  னோக்கம் என்னவோ  ஒன்றுதான் . இனப்பிரச்சனையை  திசை திருப்புவது,.

    இலங்கையில் தமிழர் சிங்களவருக்கிடையே அதிகாரப்போட்டி  என்றும் நடைபெற்றதில்லை .தமிழர் அங்கு அதிகாரத்திற்கு  வரவும் முடியாது..

    • mannan says:
      12 years ago

      //இலங்கையில் தமிழர் சிங்களவருக்கிடையே அதிகாரப்போட்டி  என்றும் நடைபெற்றதில்லை .தமிழர் அங்கு அதிகாரத்திற்கு  வரவும் முடியாது//லாலா

      அதற்காகத்தான்    தமிழரசுக்கட்சி  செல்வநாயகமும்,   இலங்கைத் தமிழ்காங்கிரஸ்   ஜீ.ஜீ.பொன்ன்னம்பலதாலும் தலைமை தாங்கப்பட்டு
      தமக்குள்ளேயே   போட்டி போட்டார்கள் காரணம்   தமிழர் மீது
       ஆதிக்கம் செலுத்துவதற்காகவே.  இதனைத்தொடர்ந்த   புலிகழும்
      அதன் உலகளாவிய  ஆதரவாளர்கழும்  ஆயுதபலத்தால் தமிழரின்
      மாற்று அமைப்புகளை அழித்து  தமிழர்மீது   உலகளாவியளவில்
      ஆதிக்கம் செலுத்தினார்கள். இதனால் இறுதியில்   அவர்கள் விடுதலை
      இயக்கமல்ல   அதிகாரமோகமும்   பணம்மோகமும் கொண்ட
      பயங்கரவாதிகள் என் உலகநாடுகளால்  தீர்மானிக்கப்பட்டார்கள்.

      இராஜபகசவின்  குடும்ப அதிகாரம் கொண்ட இலங்கை அரசும். தமிழ் பயங்கரவாதிகளின்   இரகசிய  இராஜங்க உறவுகழும்   தமிழரின்
      அரசியல் தீர்வினை  சாண் ஏற  முழம் சறுக்கும்  நிலமையில்  என்றும்
      வைத்திருக்கும்.

      • Lala says:
        12 years ago

        ##  தமிழரசுக்கட்சி  செல்வநாயகமும்,   இலங்கைத் தமிழ்காங்கிரஸ்   ஜீ.ஜீ.பொன்ன்னம்பலதாலும் தலைமை தாங்கப்பட்டு
        தமக்குள்ளேயே   போட்டி போட்டார்கள் காரணம்   தமிழர் மீது
         ஆதிக்கம் செலுத்துவதற்காகவே ##

           
                             அதற்கு பெயர்  ஆதிக்கம் செலுத்துவதோ அல்லது ஆள்வதோ அல்ல . மக்களை பிரதிநிதுத்துவ படுத்துவது  என்றே  ஜனநாயகநடை முறையில் அழைக்கப்படும் .. மாற்றுக்கருத்து  போராளிகளுக்கு  ஜனநாயக  அறிவு சற்றும் இல்லையென்பதை மற்றுமொருமுறை வெளிச்சம் போட்டு  காட்டியுள்ளீர்கள்..

        • a voter says:
          12 years ago

          // தமிழரசுக்கட்சி செல்வநாயகமும்இ இலங்கைத் தமிழ்காங்கிரஸ் ஜீ.ஜீ.பொன்ன்னம்பலதாலும் தலைமை தாங்கப்பட்டு
          தமக்குள்ளேயே போட்டி போட்டார்கள் காரணம் தமிழர் மீது
          ஆதிக்கம் செலுத்துவதற்காகவே சூசூ

          அதற்கு பெயர் ஆதிக்கம் செலுத்துவதோ அல்லது ஆள்வதோ அல்ல . மக்களை பிரதிநிதுத்துவ படுத்துவது என்றே ஜனநாயகநடை முறையில் அழைக்கப்படும் .. மாற்றுக்கருத்து போராளிகளுக்கு ஜனநாயக அறிவு சற்றும் இல்லையென்பதை மற்றுமொருமுறை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளீர்கள்.//
          ஜனநாயகத்தின் அடிப்படையே தமது பேச்சின் மூலம் மக்களை ஆள்வது தான். மக்கள் தம்மைத் தாமே ஆள்வது என்பதெல்லாம் வெறும் வாய் வீச்சுத் தான்.

          • lala says:
            12 years ago

            அது எந்த ஜனநாயகமோ, அந்த ஜனநாயகம் தான் உலகில்நடை முறையில் உள்ளது. அந்த ஜனநாயக அடிப்படையில்தான் பொன்னம்பலமும் , செல்வாவும் தமிழ் மக்களிடம் வாக்கு கேட்டு தமிழ் மக்களை பிரதினிதித்துவப்படுத்தினார்கள் .

            அதனை ஏதோ தமிழ் மக்களை ஆண்டார்கள் . ஆதிக்கம் செலுத்தினார்கள் , அடிமைப்ப்டுத்தினார்கள் என என்னமோ உலகத்தில் இல்லத ஒன்று தமிழ் சமூகத்தில் இருந்த தாக மன்னன் ஏகத்துக்கும் பில்ட் அப் கொடுத்ததற்கே பதி கொடுத்திருந்தேன்.

      • Sutharsan says:
        12 years ago

        அப்பநீங்க என்னதான் சொல்லுறீங்க ?

  5. Lala says:
    12 years ago

    ##  அதற்காகத்தான்    தமிழரசுக்கட்சி  செல்வநாயகமும்,   இலங்கைத் தமிழ்காங்கிரஸ்   ஜீ.ஜீ.பொன்ன்னம்பலதாலும் தலைமை தாங்கப்பட்டு
    தமக்குள்ளேயே   போட்டி போட்டார்கள் காரணம்   தமிழர் மீது
     ஆதிக்கம் செலுத்துவதற்காகவே. ##புலிகழும்

                         பொன்னம்பலமும் , செல்வநாயகமும்  ஆளுக்கொரு கட்சி ஆரம்பித்து வாள் கொண்டு மோதிக்கொண்டார்களா ?

    எல்லா நாடுகளிலும் இனங்களிலும்  ஜனநாயக  நடைமுறையே அங்கும் இருந்தது . அதுதான் உலக  வழக்கமும் கூட . உலக  ஜனநாயக நடை முறைக்கு மாறாக  அங்கு எதுவும்நடைபெறவில்லை .
    எனவே உலகத்தில் நடக்காத ஒன்று தமிழ் சமூகத்தில் நடந்ததாக பாவ்லா பண்ணுவதை நிறுத்துங்கள்.

    ##    அதன் உலகளாவிய  ஆதரவாளர்கழும்  ஆயுதபலத்தால் தமிழரின்
    மாற்று அமைப்புகளை அழித்து  தமிழர்மீது   உலகளாவியளவில்
    ஆதிக்கம் செலுத்தினார்கள். இதனால் இறுதியில்   அவர்கள் விடுதலை
    இயக்கமல்ல   அதிகாரமோகமும்   பணம்மோகமும் கொண்ட
    பயங்கரவாதிகள் என் உலகநாடுகளால்  தீர்மானிக்கப்பட்டார்கள்.##

      உலகநாடுகள் புலிகளை அழித்ததற்கு  காரணம் , கடந்த  30  வருட போராட்டத்தில் வேறு எந்த போராட்ட இயக்கங்களும் பெறாத வளர்ச்சையை அது பெற்றதும் , உலகநாடுகளின் நிகழ்ச்சிநிரலுக்கு  அமைய  போராட்டத்தை நடாத்த ஒப்புக்கொள்ளாமயுமாகும்.

    மேலும் நீங்கள்  உலகநாடுகள் என  செப்பி  வைத்ததில் பெரும்பங்கை  மேற்குலகநாடுகளே  வகிக்கின்றன .அந்த  மேற்குநாடுகள்தான் உலகில் போராடும் இனங்களைநசுக்கி வருகின்றன . இந்த முதலாளித்துவநாடுகளை நம்பி மோசம் போகக்கூடாதென இத்தனை  காலமும் செப்பி வந்த்தீகள் .
    இப்போது புலிகளை பயங்கரவாதிகள் என  தீமானித்ததிலும் , ஒடுங்கியதிலும் மிக நியாயமாகவே நடந்து கொண்டதாக இப்போது சான்றிதழ்  வழங்கியதன் மூலம் உங்களது இரைட்டை  வேடமும் , போலி  வர்க்கப்போராளியின்  முக மூடியும் கிழிந்து தொங்குகிறது …

    • Alex Eravi says:
      12 years ago

      The growth is acceptable… But the way of ‘growth’…? Hmm…
      The problem starts from there… from the foundation…

  6. mannan says:
    12 years ago

    //உலகநாடுகள் புலிகளை அழித்ததற்கு  காரணம் , கடந்த  30  வருட போராட்டத்தில் வேறு எந்த போராட்ட இயக்கங்களும் பெறாத வளர்ச்சையை அது பெற்றதும் , உலகநாடுகளின் நிகழ்ச்சிநிரலுக்கு  அமைய  போராட்டத்தை நடாத்த ஒப்புக்கொள்ளாமயுமாகும்.//லாலா

    அவர்களின் விடுதலை வளர்ச்சி  யாழ்நகரை விட்டு, திருகோணமலை
    மட்டக்களப்பு மன்னாரை விட்டு  வன்னிக்குள் இப்போ  படிப்பிப்பதற்கு
    தமிழ் ஆசிரியர்கள    போக  விரும்பாத பகுதிக்குள்   முடக்கப்பட்டதை
    வளர்சியென கூறுகின்றீர்களா?

    அல்லது  ஒரு சூட் கேசுடன் வந்து  அகதிகள் முகாம்களில்  மேற்குலகில்
    வாழ்ந்தவ்ர்கள்  மேற்குலகில்  பிறந்து  வளர்ந்தவ்ர்களை விட  சர்வதேச
    வர்த்தக்த்தில்    முன்னணியில்  இருப்பதை  வளர்சியென  கூறுகின்றீரா?

  7. lala says:
    12 years ago

    ##யாழ்நகரை விட்டு, திருகோணமலை
    மட்டக்களப்பு மன்னாரை விட்டு வன்னிக்குள் இப்போ படிப்பிப்பதற்கு
    தமிழ் ஆசிரியர்கள போக விரும்பாத பகுதிக்குள் முடக்கப்பட்டதை
    வளர்சியென கூறுகின்றீர்களா? ##

    வளர்ச்சி என்பது எந்த எல்லைக்குள் நின்று போராடுகிறார்கள் என்பதை வைத்து அல்ல .அவர்களது வளர்ச்சி எத்தைகயது என்பதைநீங்கள் உலகநாடுகளில் 23நாடுகள் ஒன்று சேர்ந்து அழிக்க கிளம்பியதிலிருந்தே எந்த முட்டாளும் புரிந்து கொள்ள முடியும்.

    ##அல்லது ஒரு சூட் கேசுடன் வந்து அகதிகள் முகாம்களில் மேற்குலகில்
    வாழ்ந்தவ்ர்கள் மேற்குலகில் பிறந்து வளர்ந்தவ்ர்களை விட சர்வதேச
    வர்த்தக்த்தில் முன்னணியில் இருப்பதை வளர்சியென கூறுகின்றீரா?##

    அகதியாக வந்தவர்கள் பொருளாதரத்திலும் வர்த்தகத்திலும் முன்னேறியதை எவ்வளவு வயிற்றெரிச்சலோடு பார்க்கிறீர்கள் என்பதை மேற்படி கூற்றிலிருந்து தெரிகிறது.

    எவ்வளவு தகைமைகள் , திறமைகள் இருந்தும் தமிழினம் முன்னேறாமல் சாண் ஏற முழம் சறுக்குவதற்கு உங்களைப்போன்ற கோடரிக்காம்புகள் இருப்பதுதான் காரணம்..

  8. Belaa says:
    12 years ago

    இங்கு பூந்து விளையாடும் லாலா போன்ற ஜந்துக்கள் 30 வருட தலிபான் அரசியலின் வாரிசுகள். இவர்கள் பணத்திற்காகவோ அல்லது வெறும் தலிபான் அரசியலால் உள்வாங்கபட்டவர்களோ தான். லாலா முட்டாள் அல்ல, இனியொருவை அழிப்பேன் என்று சொல்லியபடியே நுளைந்து விளையாடுகிறார். இந்த ஜந்து முட்டாள் அல்ல, முன்னர் இனியொருவில் பலதடவை விளக்கம் கொடுக்கப்பட்டவற்றை மீண்டும் பொய்யாக கூறும் இவர்கள் தான் ராஜபக்ச போன்ற இனக்கொலையாளிகளின் அடிமட்ட பினாமிகள். 2010 ஆம் ஆண்டு இந்திய தூதரகத்துக்கு முன்னால் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் புலிக்கொடி காட்ட வேண்டும் என்று வெறித்தனமாக கூத்தாடிய ரில்கோ நிறுவனத்தின் முதலாளியின் தம்பி ரகு அதே ஆண்டு இலங்கையில் இராணுவத்தினருடம் போட்டோ எடுத்துக்கொண்டார். ரில்கோ கோட்டேல் இன்று யாழ்ப்பாணத்தில் இலங்கை அரச பினாமிகளுக்கும் புலம்பெயர் வர்த்தகர்களக்கும் தங்குமிட வசதிகளை அள்ளி வழங்குகிறது. பெரும்பாலான தலிபான்கள் இப்படித்தான். லாலா இந்த வகையே.

    • lala says:
      12 years ago

      # இங்கு பூந்து விளையாடும் லாலா ##

      பூந்து விளையாடுமளவிற்கு இனி ஒருவின் ஆக்கங்களும் கருத்துகளும் அமைந்திருக்கின்றன . அதனால் புகுந்து விளையாடுகிறேன்.

      # இனியொருவை அழிப்பேன் என்று சொல்லியபடியே நுளைந்து விளையாடுகிறார். ##

      இனி ஒருவை அழிப்பதற்கு அது என்ன கட்சியா, இயக்கமா ?

      மாற்று அரசியல் என்ற பெயரில் இரகசிய , போகாத ஊருக்கு வழி காட்டுகின்ற , யாருக்கும் எந்த பிரயோசனமும் அற்ற ஒரு அரசியலை ஒரு சிலர் தம்மகத்தே வைத்துக்கொண்டு அதற்கான இணைய ஊடகத்தை நடத்த்குகிறார்கள் . அவ்வளவுதான்.

      ## முன்னர் இனியொருவில் பலதடவை விளக்கம் கொடுக்கப்பட்டவற்றை மீண்டும் பொய்யாக கூறும் இவர்கள் தான் ராஜபக்ச போன்ற இனக்கொலையாளிகளின் அடிமட்ட பினாமிகள் ##

      முன்னர் பொய்யாக திரும்ப , திரும்ப விளக்கம் கொடுக்கப்பட்டதால் , உண்மையை திரும்ப , திரும்ப கூற வேண்டியதாகி விட்டது.

      மேலும் கேள்விகளுக்கும் , விளக்கங்களுக்கும் பதில் இல்லாவிட்டால் ஓரே யடியாக ராஜ பக்சவின் பினாமி , அடியாள் என சொல்லி ஊத்தி மூடி விடுவது. நல்ல கெட்டித்தனம்தான் .

    • K Shanmugam says:
      12 years ago

      YES

  9. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    Taliban still ready to fight the NATO Forces. Why did the Sri Lankan Tmils stop the war.

    • Alex Eravi says:
      12 years ago

      Dr, u mean after Osama still they are fighting… But after ‘Thamby’ Pirabha no one come forward to lead or no one have the guts…?

      Dr, better ask Uruthirakumar & Canada Neru…

    • Alex Eravi says:
      12 years ago

      I think that’s the different between the foreign policy & leadership of both governments…

  10. mannan says:
    12 years ago

    //அகதியாக வந்தவர்கள் பொருளாதரத்திலும் வர்த்தகத்திலும் முன்னேறியதை எவ்வளவு வயிற்றெரிச்சலோடு பார்க்கிறீர்கள் என்பதை மேற்படி கூற்றிலிருந்து தெரிகிறது.//லாலா

    நான் குறிபிட்ட வர்கள்   தமிழீழவிடுதலைக்காக பாடுபட்ட  புலம்பெயர்தமிழரின்  வாழ்க்கையும்  அவர்களின்  பொருளாதார  நிலமையையும்  மட்டுமே.   இலங்கைத்தமிழரின்   வாழ்க்கை,இரத்தம்
    உயிர் இவைகளை   விளம்பரமாக்கியே   தமிழீழ வியாபாரம் செய்த
    புலம்பெயர்  தமிழ்  கோடரிக்காம்புகளாகிய  கொடியவ்ர்களைப் பற்ரியதேயாகும்.

  11. mannan says:
    12 years ago

    //வளர்ச்சி என்பது எந்த எல்லைக்குள் நின்று போராடுகிறார்கள் என்பதை வைத்து அல்ல .அவர்களது வளர்ச்சி எத்தைகயது என்பதைநீங்கள் உலகநாடுகளில் 23நாடுகள் ஒன்று சேர்ந்து அழிக்க கிளம்பியதிலிருந்தே எந்த முட்டாளும் புரிந்து கொள்ள முடியும்//லாலா

    நிதானமாகவும்  சரியாகவும்  உண்மையாகவும்  விளங்கப்படுத்தியதற்குநன்றிகள்.

    தமிழீழவிடுதலை என்பதும் ஆயுதமெடுத்து   போராடியதென்பதும்
    தமிழர் பிரதேசங்களை   சிங்கள  இராணுவத்திடமிருந்து    பாதுகாப்பதற்கோ
    அல்லது  இழந்த  பிரதேசங்களை  மீட்பதற்கோ  அல்ல. பதிலாக  இராணுவம்
    இல்லாத   தமிழ் பிரதேசங்களில்  சிங்கள இராணுவத்தை  வரவழைப்பதற்கேயாகும்.    அதற்காக  தமிழ் வாலிபர்களை  மாவீர்ராக்கியும்  ஏழைகளை  பலி கொடுத்தும்   தமிழீழ வியாபாரம்  செய்தவர்கழும்  பலன்டைதவ்ர்கழும் யார்  என்பதை  மறைமுகமாக
    ஏற்றுக்கொண்டுள்ளீர்கள்.

    இந்த  உண்மையை அறிந்த  23  நாடுகளே  ஒன்றாக   இணைந்து இலங்கை அரசிற்கு   உதவியுள்ளது.

    • Lala says:
      12 years ago

      ##  தமிழீழவிடுதலை என்பதும் ஆயுதமெடுத்து   போராடியதென்பதும்
      தமிழர் பிரதேசங்களை   சிங்கள  இராணுவத்திடமிருந்து    பாதுகாப்பதற்கோ
      அல்லது  இழந்த  பிரதேசங்களை  மீட்பதற்கோ  அல்ல. பதிலாக  இராணுவம்
      இல்லாத   தமிழ் பிரதேசங்களில்  சிங்கள இராணுவத்தை  வரவழைப்பதற்கேயாகும்.   ##

       83 ஆம் ஆண்டிலிருந்தெ சிங்கள  ராணுவம் வட கிழக்கின்  எல்லா பிரதேசங்களையும் ஆக்கிரமித்திருந்தது . இருபது வருட போராட்டத்தின் மூலம் பல பிரதேசங்களையும்  சிங்கலப்படையிடமிருந்து மீட்டது  வரலாறு.

      2009  ஆம் ஆண்டு  புலிகளின்  வீழ்ச்சியின் பின்னரே  சிங்கள  ராணுவம் மீண்டும் எல்லா பிரதேசங்களையும் ஆக்கிரமித்தது . மீண்டும் சிங்களப்படைகள் எல்லா பிரதேசங்களையும் ஆக்கிரமிப்பதற்கு 23நாடுகலின் உதவுகளெ காரணம்.

      ##  இந்த  உண்மையை அறிந்த  23  நாடுகளே  ஒன்றாக   இணைந்து இலங்கை அரசிற்கு   உதவியுள்ளது.##

        அந்த  உண்மையை அறிந்த 23நாடுகளேன  , அந்தநாடுகளின்  புகழ் பாடியுள்ளீர்கள் . சும்மாவா ? புலிகளை அழிப்பதற்கு  வகை  தொகையில்லாமல் உதவியவர்களாயிற்றெ ?  ஒரு  சிறியநாட்டில்  தமக்கென ஒருநாட்டை  அமைப்பதற்கு ம், பேரினவதத்திலிருந்து  விடு படுவதற்கும் போராடிய  ஒரு சிறிய இனத்தை கூண்டோ டு  அழிப்பத்ற்கு என்ன ஒரு வீரத்தோடு  23நாடுகள்  கூச்ச  னாச்சமின்றிஒரணியில் இணைந்து நின்று  போராடினார்கள் .அவர்களை  உங்களைப்போன்றவர்கள் பாரட்டாவிட்டால்  செய்நன்றி  மறந்தவர்  ஆகி விட  மாட்டீர்களா ?

      23 நாடுகளில்  பெரும்பாலானவை  மேற்குலகநாடுகள்தான் . அந்த நாடுகளைத்தான் உலகில்  போராட்டங்களை நசுக்குவதில் முன்னணியில் நிற்பவை என்றும் , புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கூட அந்தநாட்டு  அரசுகளை  னம்பக்கூடாதென்றும் . அப்படி  அந்த  அரசுகளோடு  பேச்ச்சுவார்த்தைநடாத்திய  தமிழ்  அமைப்புகளை வாய் திட்டி தீர்த்தும் வந்த்தீர்கள் .
      இப்போது என்னடாவென்றால் அந்தநாடுகள் தமிழர்கள் விடயத்தில்  உண்மையின் பால் நீதியின் பால் , அறவழி நின்று   புலிகளை அழித்தாக அந்தநாடுகளுக்கு சாமரம்  வீசியுள்ளீர்கள் .

      • mannan says:
        12 years ago

        //83 ஆம் ஆண்டிலிருந்தெ சிங்கள  ராணுவம் வட கிழக்கின்  எல்லா பிரதேசங்களையும் ஆக்கிரமித்திருந்தது . இருபது வருட போராட்டத்தின் மூலம் பல பிரதேசங்களையும்  சிங்கலப்படையிடமிருந்து மீட்டது  வரலாறு.//லாலா

        தமிழர்களின்   முக்கிய பிரதேசமான யாழ்ப்பாணப் பகுதியில்  இருந்த
        பலாலி இராணுவமுகாம்   எப்போதாவது   புலிகளால்  கைப்பற்ரப்பட்டு
        இருந்ததா? பலாலி முகாம்  பயங்கரவாதத்திற்கோ அல்லது
        தமிழர்களிற்கு  எதிராகவோ  அமைக்கப்படவில்லை.  கள்ளக்கடத்தல்
        கள்ளக்குடியேற்ரம் முதலிய  குற்ரச்செயல்களிற்கு  எதிரான  நடவடிக்கைகளிற்காகவே   அமைக்கப்பட்டது.

        இன்று  அந்த முகாம் தமிழரின் பிரதேசங்களை   அபகரிக்கும்
        இராணுவமுகமாக  மாறிவிட்டது . இதற்கு  யார்  காரணம்?சும்மா கிடந்த
        சங்கை   ஊதிக்கெடுத்தவ்ர்கள் யார்?

        • Lala says:
          12 years ago

          1972   ஆம் ஆண்டிலிருந்தே  சீறிலங்க காவல் துறையினரும் , இராணுவத்தினரும் தமிழர்க்கு எதிரான  பயங்கரவாத செயற்பாடுகலை ஆரம்பித்திருந்தனர் என்பது வரலாறு . 

          உமது கருத்துககளிலிருந்துநீர்  வர்க்கப்போராளி அல்ல இனவாத  சிங்கள அரசுக்கு சொம்பு  தூக்கி என்பதை மீண்டும் மீண்டும்  வெளிக்காட்டி வருகிறீர்கள்.

          • mannan says:
            12 years ago

            1960 அகிம்ஸ்சை வழியிலான  சத்தியாக்கிரகப்போராட்டம் முறியடிக்கப்பட்டது.  ஆனால்   தமிழருக்கிடையே இருந்த  அரசியல்
            பிரதேச  வேறுபாடுகள்  களையப்படவில்லை.

            தமிழர் தமக்குள்  ஒர்றுமையின்றியும் (அரசியல் மட்டத்தில்)  இலங்கையில்
            பரந்து வாழ்ந்து கொண்டும்  தமிழீழம் என்னும் மாயையினுள்   புலம்பெயர்
            தமிழர் மீது ஊட்டியே  போராட்டம்நடத்தினார்கள்.

            இன்னமும்  இலங்கைத்தமிழர்  இந்த புலம்பெயர் தமிழர் தமக்காக
            ஏதாவது  செய்வார்கள் என எதிர்பார்க்கின்றார்கள்.  இந்தநிலமையைப்
            பயன்படுத்தி    சர்வதேச   உலகம்  தமிழ் உளவாளிகளையும்,   தமிழ்
            பயங்கரவாததையும்  உருவாக்கிவிட்டது.

            இதிலிருந்து   தமிழர் மீள்வதானால்  சிங்கள  பெரும்பான்மையினது
            உதவி தமிழருக்கு  முக்கியமாக உள்ளது.  திரும்பவும்
            சிங்கள எதிர்ப்பு அரசியல்  தொடர்ந்தால்   அகதிகழும், அழிவுகழும்
            தமிழ்பயங்கரவாதமுமே   தலைதூக்கும்.

        • Sutharsan says:
          12 years ago

          I don’t think so, there is no evidence to prove that Palaly was used to stop smuggling and arrival of illegals. When Air Ceylon became a failure they decided to use it as a base for air force. Same happened to the Amparai, Batticaloa and Trincomalee airstrips. The smuggling did continue nevertheless but illegals did not show any interest in arriving. The VVT kids were even going out to watch movies in TN overnight. You are good at fabricating stories? But why this Kolaveri ?

          • mannan says:
            12 years ago

            மாதகல்,தள்ளாடி மேலும் பல துணை முகாம்கழும்
            கள்ளக்கடத்தல், கள்ளக்குடியேற்ரத்தைத்தடுப்பதற்கே
            அமைக்கப்ப்பட்டன.  இவர்கள் கடலை கண்காணித்தவ்ர்களே
            தவிர யாழ்ப்பாணத்திற்கு   அத்தியாவசிய பொருள்வாங்கவே
            வருவார்கள்.இவர்களிற்கான  உணவுப் பொருட் களை   முகாம்களிற்கு
            தமிழரே  கொண்டு சென்று தினமும் விநியோகித்தார்கள்.

            யாழ்பாணத்தில் எந்த பிரச்சினையாயினும்   பொலிசாரே  தலையிட்டனர்.
            பொலிசார் தடியுடனேயே   உலாவுவது வழக்கம்.  வங்கிகொள்ளைகழும்
            பொலிசார்மீது  துப்பாக்கி பிரயோகமும்  தமிழர்களால்  ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே   பொலிசார்  துப்பாக்கி ஏந்த ஆரம்பித்தனர்.

            இதன் பின்னரே  படிப்படியாக  இராணுவம்    பொலிசாருக்கு
            உதவியாக  கடமைக்கு  அழைக்கப்பட்டது.

            இதனால் ஆத்திரமடைந்த  இளையோர்   கடமையில்  நின்ற இராணுவத்தினர்மீது   துப்பாகியால் சுட்டு கொலைசெய்து விட்டு  ஓடித்தப்பினர்.    அகப்பட்டு   அடிவாங்கியதும்   இறந்ததும் 
            அப்பாவியாக  நடமாடிய  பொதுமக்கள்.

            எவ்வாறு  ஆரம்பிக்கப்பட்டதோ அவ்வாறே  முள்ளிவாய்க்காலிலும்
            தமிழரை  தவிக்க விட்டு   தப்பினார்கள்.

            இதற்கும்  தமிழர்  சிங்களவ்ர்  இனப்பிரச்சினைக்கும்   முடிச்சுப்போட்டு
            பிரச்சாரங்களால்  தமிழ் பயங்கரவாதம்  வாழ்ந்ததே  வரலாறாகபோய்விட்டது

          • Alex Eravi says:
            12 years ago

            Here I accept ‘Mannan’s comment.
            This is true!

            Before 83 how many soldiers in the forces & what they carried…
            Now… U count…
            Who equipped & trained SL forces…? We…
            This is the fact…

          • Sutharsan says:
            12 years ago

            You don’t give up don’t you ? The fact remains the smuggling did continue and the illegals did not show interest anymore. I rememeber the detention center for them in Slave Island. There were only one or two detainees there at any given time. It had nothing to do with the military installation in the peninsula.

          • Sutharsan says:
            12 years ago

            Well using the same logic we can also say the rebels helped you to seek asylum in the West ?

  12. Lala says:
    12 years ago

    ##  தமிழீழவிடுதலைக்காக பாடுபட்ட  புலம்பெயர்தமிழரின்  வாழ்க்கையும்  அவர்களின்  பொருளாதார  நிலமையையும்  மட்டுமே.   ##

           தமிழீழ விடுதலைக்கு பாடுபட்டவர்களென  உங்களையுமறியாமல் ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள் .
    மேலும் , புலம்பெயர் தமிழர்கள் பரவலாக கடந்த  20 வருடங்களில்  பொருளாதாரத்திலும் , கல்வியிலும்  பெருமளவில் முன்னேறியிருக்கிறர்கள் .
    உங்களுக்குத்தான்  நல்லது எங்கிருந்தாலும் அது பிடிக்காதே .அதனால் தமிழீழ வியாபரிகளைப்பற்றி  சொன்னதாக  ஒரே தாவாக   தாவியிருக்கிறீர்கள் 

    தமிழ் மக்களின்  உயிர் , ரத்தம் இவற்றை வைத்து எவ்வாறு புலம்பெயர்நாடுகளில்  பணம் சம்பாதிக்க முடியும் ?

  13. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    Taliban is uniformly Pasthu. So, it has overlap with Pakistan. 

    • Sutharsan says:
      12 years ago

      Thank you for sharing yoru wisdom with us 😉

  14. நக்கீரன் says:
    12 years ago

    மோடி ஒரு அடிப்படை இந்துத்துவவாதி என எந்த அடிப்படையில் கட்டுரையாளர் முடிவுக்கு வருகிறார் என்பதை சான்றுகளோடு மெய்ப்பிக்க வேண்டும். கிளிப்பிள்ளை மாதிரி சொல்லக் கூடாது. அவரவருக்கும் அவர்களது இனம், மொழி, மதம், பண்பாடு ஆகியவற்றில் பற்று இருப்பது அடிப்படை வாதம் அல்ல. அடிப்படைவாதம் என்பது ஒருவர் மற்றவர்கள் அதே இனம், மொழி,மதம், பண்பாடு ஆகியவற்றில் வைத்திருக்கும் பற்றை மறுப்பது. அல்லது எதிர்ப்பது ஆகும். அதைத்தான் தலிபான்கள் செய்கிறார்கள். முழு உலகத்தையும் இஸ்லாமிய மயப்படுத்தி குரானை அரசியல் யாப்பாக்கி ஒரே மதம் ஒரே இனம் ஒரே உலகத்தை உருவாக்குவதுதான் அவர்களது இலக்கு. மோடி அப்படி ஏதாவது செய்கிறாரா? அல்லது சொல்கிறாரா? கட்டுரையாளர் வி.புலிகளையும் அதன் ஆதரவாளர்களையும் கொச்சைப் படுத்துவதில்தான் குறியாக இருக்கிறார். ஆனால் இது பெட்டைப் புலம்பல். விடுதலைப் போராட்ட காலத்தில் வேடிக்கை பார்த்துவிட்டு இப்போது விமர்ச்சிப்பது கோழைத்தனம். வி.புலிகள் சிங்கள ஆதிக்கத்திற்கு, அடக்குமுறைக்கு, வன்முறைக்கு, சிங்கள – பவுத்த பேரினவாதத்துக்கு எதிராக ஆயுதம் தூக்கியவர்கள். சாட்சாத் சந்திரிகாவே பிரபாகரனை சிங்கள இனவாதமே உருவாக்கியது என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்திருக்கிறார். கட்டுரையாளரை நான் கேட்கும் கேள்வி? தமிழ்மக்களது ஆதரவில்லாமல் பிரபாகரனால் 30 ஆண்டுகாலம் சிங்கள இராணுவத்துக்கு எதிராகப் போராடியிருக்க முடியுமா? ஒரு நிழல் அரசை உருவாக்கியிருக்க முடியுமா? ஆயுதப் போராட்டம் பயங்கரவாதமா அல்லது விடுதலைப் போராட்டமாக? என்பதை தீர்மானிப்பது மக்கள் ஆதரவுதான். வி.புலிகள் சிலபோது – எதிர்வினையாக – சிங்களளப் பொதுமக்களைத் தாக்கிக் கொன்றிருக்கலாம். கொன்றிருக்கிறார்கள். ஆனால் அது பயங்கரவாதம் அல்ல. அவை போர்க்குற்றங்கள். மனித உரிமை மீறல்கள். புலம்பெயர் நாடுகளில் வி.புலி ஆதரவாளர்களாக இருந்தவர்கள் இப்போது பல கோடி சொத்துக்களுக்கு அதிபதிகளாகி சுகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது அதீத கற்பனை. வயிற்றெரிசல் என்றும் சொல்லலாம். விடுதலைப் போராட்டத்துக்கு தங்கள் நேரத்தை. பணத்தை அர்ப்பணித்தவர்கள்தான் 99 விழுக்காடு. மார்க்சீய சித்தாந்தவாதிகள் அல்லது அப்படிச் சொல்லிக் கொள்பவர்கள் மலட்டு அரசியல் நடத்த முயல்கிறார்கள். அது நடக்காது.

    • Lala says:
      12 years ago

      Well said.
      You have spoken my mind.

  15. K Shanmugam says:
    12 years ago

    தமிழ்மக்களது ஆதரவில்லாமல் பிரபாகரனால் 30 ஆண்டுகாலம் சிங்கள இராணுவத்துக்கு எதிராகப் போராடியிருக்க முடியுமா? ஒரு நிழல் அரசை உருவாக்கியிருக்க முடியுமா? – Not because of Tamil people,it is because Indian government& RAW

    • Lala says:
      12 years ago

      புலிகள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை  ஏற்க மறுத்து  இந்திய ராணுவத்தை எதிர்த்த  1987 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை தமிழர்கலி போராட்டத்தை சிதைத்து ஒடுக்குவதற்கு  இலங்கை அரசோடு எவ்வாறேல்லாம் ஒத்துழைத்து  பாடுபட்டதென்பது  இலங்கை  விடயத்தை மேலோட்டமாக அறிந்தவர்களுக்கே  தெரிந்த விடயம்.

      • mannan says:
        12 years ago

        இன்னமும் புலிகளில் ஒருபகுதியினர்  இலங்கை அரசுடன்
        இணந்ததுபோல்  இந்திய அரசோடும்  இணந்துள்ளனர். இதனை
        நிரூபிக்க  தற்சம்யம் முடியாவிட்டாலும் காலம் வரும்போது
        வெளிவரும்.

        • Lala says:
          12 years ago

          தங்களது புலனாய்வுக்கு நன்றி

        • Lala says:
          12 years ago

          ##  மாதகல்,தள்ளாடி மேலும் பல துணை முகாம்கழும்
          கள்ளக்கடத்தல், கள்ளக்குடியேற்ரத்தைத்தடுப்பதற்கே
          அமைக்கப்ப்பட்டன.  இவர்கள் கடலை கண்காணித்தவ்ர்களே
          தவிர ##

            அப்போது  பொலிசாரை  தவிர இராணுவத்தினரும்  தமிழ்  மக்களை ஒடுக்கி அச்சுறுத்தவே பயன்படுத்தப்பட்டார்கள் . இவர்கள்  சிங்களப்பகுதிகளிலும் , தமிழ் பகுதிகளிலும் எவ்வாறு பாரபட்சமாக செயற்பட்டார்கள் என்பதிலிருந்தே  இதனை விளங்கி கொள்ள  முடியும்.

          அப்போது  தமிழ் மக்கள்நிராயுத  பாணிகளாக  இருந்தார்கள் என்பதனால்  தமிழ் மக்களை அடக்கி வைப்பதற்கு பொலிசாரும் , இரகசியப்போலிசாரும் போதுமானவர்களாக  இருந்தார்கள் . மேலும் அவர்கள் ஆயுதம் வைத்திருந்தார்கள் , மன்னாரில் முஸ்லிம்  பள்ளி வாசலில்  போலிசார்  துப்பாக்கி சூடு  நடத்தி மக்கள் பலியானது எவ்வாறு ?

           தமிழாரய்ச்சி மாநாட்டில் போலிசார் துப்பாக்கி சூடுநடாத்தியிருந்தனர்.

          • mannan says:
            12 years ago

            பொலிஸ்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன்
            சிங்கள பொலிசார்   விரும்பும் மாவட்டமாக
            யாழ்ப்பாணமே இருந்தது.  காரணம்  படித்தவர்கள்
            பண்புள்ளவ்ர்கள்  சட்டத்திற்கு  பயந்தவ்ர்கள்
            என்பதால் மட்டுமே. அவர்கள்  தமிழரை  அடக்கி
            ஒடுக்கலாம் என  அங்கு வர விரும்பவில்லை.

            தமிழ் அரசியல் வாதிகளின்  பேச்சும்  உசுப்பேத்தலும்  அதன் பின் ஆயுதமேந்தி  தம்மை  தாமே அழித்த  அமைப்புகழும்.   இறுதியில்
            புலி வடிவமெடுத்து    உலகத்தமிழ் பயங்கரவாத்மாக  மாறிய தமிழரின்
            அரசியல்  போரட்டமுமே.  
             இப்போ   இதனால்  செல்வந்த  சொர்க்க லொகத்தில் வாழும்  இலங்கைத்தமிழரே   இதற்கு சான்றாக  உள்ளனர். 

          • Alex Eravi says:
            12 years ago

            True…Mannan

        • Lala says:
          12 years ago

          ##  இதற்கும்  தமிழர்  சிங்களவ்ர்  இனப்பிரச்சினைக்கும்   முடிச்சுப்போட்டு
          பிரச்சாரங்களால்  தமிழ் பயங்கரவாதம்  வாழ்ந்ததே  வரலாறாகபோய்விட்டது##

          இலங்கையில்  சிங்கள  , தமிழ் இனப்பிரச்சனை காலம் காலமாக புரையோடிப்புள்ளதென்பதும்  அது தீர்க்கப்ப்பட வேண்டியதெனபதும்  சர்வதேசத்தாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட  ஒரு விடயம்..

          • mannan says:
            12 years ago

            அந்தப்பிரச்சினையை   தீர்க்கப்படவேண்டியது
            அரசியல்வாதிகளாலும் அறிவாளிகளாலுமே
            தவிர   பயங்கரவாதிகளாலல்ல.

  16. கோசலன் says:
    12 years ago

    நக்கீரன், மோடி தன்னைத் தானே பாசிஸ்ட் என்று சொல்கிறவர். முசோலீனி ஹிடலர் போன்றவர்களை ஏற்றுக்கொள்வதாக அவர் சார்ந்த ஆர்.எஸ்.எஸ் சொல்கிறது. நீங்கள் உங்களது இன்னொரு பதிவில் ஜே,ஆர்,ஜெயவர்த்தனாவைப் போற்றியுள்ளீர்கள், ஆக, நீங்கள் யார் உங்களுடைய நோக்கங்கள் என்ன என்பதெல்லாம் இரகசியங்கள் அல்ல. ஜெயவர்த்தனா ஆட்சிக்கு வந்து ஐந்து வருடங்களுக்குள் இலங்கையின் வறிய மக்களின் தொலை 30 வீதத்தால் முன்னெப்போது இல்லாத அளவு அதிகரித்தது. இதனை மறைக்கவே தமிழர்களைக் கொலைசெய்ய ஆரம்பித்தார். லாலா என்பவர் உங்களை ஆதரிப்பது நீங்கள் இருவரும் எந்த அரசின் ஆட்கள் என்பதும் உங்கள் நோக்கம் என்ன என்பதும் தெளிவாகக் கூறுகின்றது. பல மில்லியன்கள் மதிப்புடைய புலம்பெயர் புலிகளின் சொத்துக்களைப் பங்குபோட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அல்லது சொத்துக்கள் மக்களின் தேவைக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
    மன்னன், நீங்கள் உங்களின் பல பதிவுகளில் இலங்கையில் பிரதான முரண்பாடு தேசிய முரண்பாடு என்பதையும் பிரதான எதிரி பேரினவாதிகள் என்பதையும் மறந்துவிடுகிறீர்கள். இனவாத பாசிச ஆதரவாளர்களுக்கு இது பல சந்தர்ப்பங்களில் வாய்ப்பாகப் போய்விடுகிறது.

    • Lala says:
      12 years ago

      ##        இலங்கையின் வறிய மக்களின் தொலை 30 வீதத்தால் முன்னெப்போது இல்லாத அளவு அதிகரித்தது. இதனை மறைக்கவே தமிழர்களைக் கொலைசெய்ய ஆரம்பித்தார். ##

        ஆனால்  பட்டினிசாவு ஜெயவர்த்தனா ஆட்சியில் இருக்கவில்லை . அதற்கு முன்பு சிறிமா ஆட்சியில் பட்டினி ச்சாவு மலையக  தோட்ட தொழிலாளர் மத்தியிலும் , மிகப்பின் தங்கிய சிங்களப்பகுதிகளிலும் நிகழ்ந்தது .

      தமிழர் விரோதப்போக்கை கைவிட்டு  பொருளாதாரத்தில்  மட்டும்  கவனம் செலுத்தியிருந்தால் ஜே .ஆர்  இலங்கையை இன்னொரு ஆசியாவின் சிங்கப்பூராகவோ அல்லது  கொங்கோங் ஆகவோ மாற்றியிருந்திருப்பார்  என்பதில் எள்ளளவும்  சந்தேகமில்லை .

      ஆனால் எல்லாவற்றையும்  விட தமிழனின் மண்டையை உடைப்பதையே பிரதானாமாக நினைத்து  இன வாதத்துடன் செயற்பட்டதால்  எல்லாம் பாழானது.

  17. mannan says:
    12 years ago

    //மன்னன், நீங்கள் உங்களின் பல பதிவுகளில் இலங்கையில் பிரதான முரண்பாடு தேசிய முரண்பாடு என்பதையும் பிரதான எதிரி பேரினவாதிகள் என்பதையும் மறந்துவிடுகிறீர்கள். இனவாத பாசிச ஆதரவாளர்களுக்கு இது பல சந்தர்ப்பங்களில் வாய்ப்பாகப் போய்விடுகிறது.//கோசலன்

    தவறுகளை சுட்டிக்காட்டியதற்கு  நன்றிகள்.  பேரினவாதத்தின் எதிரிகளாக
    தம்மைக்காட்டிக்கொண்டு  தமிழ்ரை  ஏமாற்ரி வருவோரை மட்டுமே
    கருத்திற்கொண்டு  எழுதுவதால் இந்த தவறு  ஏற்படுகின்றது.

    இவர்கள்  தெரிந்து கொண்டுதான்  இங்கு வந்து  எழுதுகின்றார்களா?அல்லது
    தவறுதலாகவா என்பது புரியவில்லை.  எதிரியுடன் வாழ்பவர்களைவிட
    பேரினவாதிகளோடு இரகசிய உறவுவைத்து   தமிழரை ஏமாற்றுவோரே
    பயங்கரமானவர்கள்.

    • Kumar says:
      12 years ago

      இப்படி எத்தனை வீராதி வீரா்களை 30 வருடங்களாக இந்த ஐரோப்பா எங்கிலும் பாா்த்துவிட்டோம் மன்னன், அன்று என் வீடுவரைவந்து பணம் கேட்டு பயமுறுத்திய பலா் இன்று நான் பாா்க்க நான்கு ஐந்து கடைகளிற்கு முதலாளிகளாக இலங்கைக்கு சுற்றுலா போகின்றாா்கள் ஆனால் இங்கே இதை பொய் என்று வாதாடவும் சிலா் முற்படுகின்றாா்கள் 

      • mannan says:
        12 years ago

        குமார்,  இப்படியானவர்கள்    

        புலத்தில் புலிகளாவார்
        தெனிலங்கையில்  இலங்கையராவார்
        வவுனியாவிற்கப்பால் போனவுடன்  தமிழராவர்
        இவர்கள் தமக்கு வைத்துள்ள பெயர்தான்  மானமுள்ள தமிழன்
        மற்ரவரெல்லாம்  துரோகிகள்

      • Sutharsan says:
        12 years ago

        கடை வைத்தவனெல்லாம் உம்மைய மெரட்டுனவனுமல்ல மெரட்டுனவனெல்லாம் கடை வச்சவனுமல்ல. மொத்ததுல யாரு கடை வச்சு நல்லா இருந்தா சிலருக்கு பொறாமை, அது எப்படி நான் பிஎச்டி படிச்சும் பண்ணமுடியாததெல்லாம் இந்த பசங்க பண்ணுறாங்க எண்டு.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...