பெரும்பாலான புலம்பெயர் புலி ஆதரவுக் குழுக்கள் அமரிக்க ஐரோப்பிய நாடுகளின் உளவுப்படைகள் போன்று செயற்பட்டு தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கும் நிலையிலும் அமரிக்க அரசு மீண்டும் விடுதலைப் புலிகளைத் தடைசெய்துள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் புதிய அறிக்கைகளின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அந்நாட்டு அரசாங்கம் நீடித்துள்ளது.
2011ம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக 2009ம் ஆண் தோற்கடிக்கப்பட்ட போதிலும், புலிகளின் நிதி வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக ராஜாங்கத் திணைக்கள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு முழுவதும் தமிழீழ விடுதலப் புலிகளின் நிதி வலையமைப்பு இயங்கி வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புலிகள் அமைப்பு தோற்றுவிட்டது. அது முடிந்துபோன கதை. ஆனாலும் தமிழர்களுடைய அடையாளங்களை தொடர்ந்தும் புலிகள் அமைப்போடு தொடர்புபடுத்தி வைத்திருக்கவேண்டிய அவசியம் என்ன. இலங்கைப்பிரச்சனையில் இந்தியாவும் குதிருக்குள் மறைந்திருக்கும் ஒரு போர்க்குற்றவாளி. இந்திய அரசு உடைந்து சிதறும்வரையில் அதற்குத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. புலிகள் அமைப்பை உயிரோடு பாதுகாப்பதற்கு தவறினால், குதிருக்குள் மறைந்திருக்கும் இந்தியாவை உலகம் வெளிச்சம்போட்டுக் காட்டிவிடும். சிறீலங்கா அரசைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க முயலும் உலகம், அந்த அரசின் வேண்டுதலுக்கு செவிசாய்க்காது. இந்திய அரசின் வேண்டுதலுக்கு செவிசாய்ப்பதினால் அதற்கு நிறைந்த பொருளாதார இலாபமுண்டு. இதனையே அமெரிக்காவும் பின்பற்றுவதாக கொள்ளலாம். அழிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் பெயரைக்கொண்டு மக்களை ஏமாற்றி நிதிசேகரிப்பவர்களை கிரிமினல் பட்டியலில் சேர்த்து தண்டிப்பதை விடுத்து எதற்காக தமிழினத்தோடு தொடர்புபடுத்தி அவர்களைப் தங்கள் நாடுகளில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
ராஜபக்சா நாடுக்குள்ளே வைத்திருக்கிற புலி முதல்புலி
இந்தியா தடைநீடித்து வைத்திருக்கிற புலி இரண்டாம்புலி
இப்ப அமெரிக்க சொல்லுற புலி மூன்றாம்புலி
சில புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் இருப்பதாக சொல்லும் புலி நாலாம்புலி.ஐந்தாம் புலி எங்கே இருக்கிறது? என்பதுதான் உங்கள் ஊகத்திர்க்கான கேள்வி.
விடுதலை புலிகளை தடை செய்தாக அமெரிக்கா கூறனாலும் நாடுகடந்த தமிழ் ஈழம் செயல் படுவதே அமெரிக்காவில்தான>