பெரும்பான்மை மக்கள் வழிபாடு செய்யும் கோவில்களில் தமிழ் இல்லை. ஆனால் மிகச்சிறிய கூட்டத்தினர் வழிபாட்டிற்கு பயன்படுத்தும் சமஸ்கிருதமே கோவில்களில் வழிபடும் மொழியாக இருக்கிறது. தமிழில் அர்ச்சனை நடைபெற வேண்டும் என்று தமிழ்நாட்டில் பெருவாரியான மக்கள் கோரிக்கை விடுத்த போதும் பிரமாணர்கள் இதை எதிர்த்து வந்தனர்.
பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளும் தமிழ் மொழி அர்ச்சனைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழ்நாட்டு கோவில்களில் தமிழில் அர்ச்சனை என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு பரவலாக பாராட்டைப் பெற்றாலும் இந்த அறிவிப்புக்கு எதிராக பிரமாணர்களும் பாஜகவினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் அர்ச்சனைக்கு தடை கோரி மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஆனால், இவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து தமிழ் அர்ச்சனைக்கு தடை பெறுவார்கள் என்று முன்கூட்டியே அறிந்து கொண்ட தமிழ்நாடு அரசு. உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேவியட் மனு என்பதை முன்னெச்சரிக்கை மனு என்றும் சொல்லலாம். கேவியட் மனுவை தாக்கல் செய்யும் வாதிக்கு எதிராக எவ்வித முன்னறிவிப்பு இன்றி குறிப்பிட்ட ஒரு வழக்கில் பிரதிவாதிக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு எதனையும் வழங்கி விடக்கூடாது என்பதற்காக அப்படி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டால் அதில் தங்கள் கருத்தையும் கேட்க வேண்டும் என்று முன்கூட்டியே தாக்கல் செய்யும் மனுவாகும்.
தமிழ் அரச்சனைக்கு எதிராக எவரும் உச்சநீதிமன்றம் சென்றால் தமிழ்நாடு அரசுக்கு தெரியாமல் கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவுகளையும் இனி பிறப்பிக்க முடியாது.