Wednesday, April 29, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தமிழினப்படுகொலைக்குப் பின் முஸ்லீம் இனத்தின்மீதான இலங்கை அரசின் கொலைகள்-வன்முறைகள் சொல்வது என்ன?

இனியொரு... by இனியொரு...
06/20/2014
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
13
Home பிரதான பதிவுகள் | Principle posts

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்குப் பின் முஸ்லீம் இனத்தின்மீதான இலங்கை அரசின் கொலைகள்-வன்முறைகள் சொல்வது என்ன?

(1)

அப்பாவி மக்களைப் பலியெடுக்கும் இனப்படுகொலை அரசிலானது இன்றைய இலங்கையை பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய வகைத் தாக்குதலுக்குள் தள்ளியுள்ளது.கடந்த மூன்று தசாப்தமாக நடைபெற்ற ஈழத்துக்கான போரின் எதிர்விளைவுகளாக இதை எடுப்பதற்கில்லை.இலங்கையின் மிக அண்மைய அரசியல் நகர்வும் அதுசார்ந்த பௌத மதவாதச் சாயம் பூசிய இனவாதத்தாக்குதல் போக்குகளும்,இலங்கைச் சிறுபான்மை இனங்களை ஒட்டயொடுக்கி காலப்போக்கில் அவர்களை எந்தவுரிமையுமற்ற வந்தேறுகுடிகளாக்கும் பாரிய திட்டத்தைக் கொண்டிருக்கிறது.

இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து சிங்கள மக்களைத் திசை திருப்பி மகிந்த அரசைக் காப்பதற்கெடுக்கும் முயற்சிக்குப் புலிகளில்லாத இலங்கையில் “பௌத -இஸ்லாம்”மதப் பிரச்சனையொன்று திட்டமிடப்பட்டு இயக்கப்படுகிறது.

இதற்கான ஒத்திகைகளைப் புலத்துத் தமிழர்களுக்குள் இயங்கும் தலித்துவ மற்றும் பிரதேசவாதக் குழுக்களைவைத்து இயக்கிய மகிந்த அரசு, இதை மிக நேர்த்தியாக இயக்கும் பண்பை இவர்களது ஒத்துழைப்புகளோடுதாம் மீளவும், இயக்குகிறது. இதற்காவேதாம் சிங்கள பௌத அடிப்படைவாதச் சக்திகளையெல்லாம் தலித்துவக் குழுக்கள் சந்தித்து, பகிரங்கமாக ஒப்புதலளித்தும் இருந்தனர்.

இன்று நாட்டில் பேயாட்டம் போடும் ஞானசார தேரோவுடன்  Raman Yogaratnam Asura Nathan Theva Thasan
இன்று நாட்டில் பேயாட்டம் போடும் ஞானசார தேரோவுடன்
Raman Yogaratnam Asura Nathan Theva Thasan

இதன்பின் தலித்துவக் குழுவின் தலைவர் தேவதாசன்குழுவும் மற்றும் பிரதேசவாதப் பிளவு வாதிகளான ஞானம் குழுவும்இணைந்த “நாம் அனைவரும் இலங்கையர்கள்” தமிழ்த் தேசிய வாதத்தை நிராகரித்து இலங்கையை முன்னேற்ற வேண்டுமெனப் பகிரங்கமாகப் பேசவும் முற்பட்டனர்.சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் முள்ளிவாய்கால் இனப்படுகொலையைக் குறுக்கி “பாசிசப் புலிகளை”அழித்த மகிந்தாவுக்கு நன்றியும் தொடர்ந்து தெரிவித்தனர்.

இதை யாழ்பாணம்வரை சென்று, டான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் -பிரச்சாரமும் செய்தனர்.இவர்களுக்கிணைவாகப் பிழைப்புவாதி குகதாசனின் தொலைக்காட்சியும் இலங்கையில் சமாதனம் தோன்றி, ஜனநாயகம் மலர்ந்துவிட்டதாகவும் பரப்புரையைத் தொடர்ந்து செய்து மகிந்தாவின் பாசிச அரசைக் காத்துவந்தனர்.

இன்றிந்த முஸ்லீம் மக்கள் மீதான இனப்படுகொலைகளைப் பார்த்து இப்படித்தான் கருத்தாடத் தோன்றினுங்கூட இத்தகைய தாக்குதல்களின் பின்னே ஒளிந்திருக்கும் அன்னிய நலன்களும் அவை சார்ந்த அரசியல் சாணாக்கியமும் அப்பாவிகளைத் தமிழரின்- முஸ்லீம்களின் மற்றும் பௌத்த சிங்களவரின் பேரால் அழித்து வருகிறது.இதற்குடந்தையாக விடுதலைவேண்டிப் போராடப் புறப்பட்ட முன்னாள் தமிழ் இயக்கங்கள் அனைத்துமே இருக்கின்றன. ஒவ்வொரு இயக்கங்களும்-குழுக்களும்,கட்சிகளும் தத்தமது இயக்க-கட்சி நலன்களின் அரசியலை அப்பாவி மக்களின் மீது பலிகளைச் செய்து, தமது எஜமான வேண்டுதலை நிறைவேற்றும்போது சாவதென்னவோ ஏழையெளிய மக்களே.அந்த மக்கள் தமிழைப் பேசினால் என்ன சிங்களத்தைப் பேசினாலென்ன இல்லை, முஸ்லீம் ,பௌத்தர்களாகவிருந்தாலென்ன அனைவரும் மனிதர்கள்தாம்!

சிங்களப் பேரினவாதத்தின் அதீத வெளிப்பாடுகள் மக்களை வகைதொகையின்றி வருத்தியபடி அவர்களின் உயிர்களை இனப்படுகொலையாகப் பறித்துவருவதை எந்த மனிதாபிமானமிக்க நபரும் பார்வையாளராக இருந்து மௌனிக்க முடியாது.

அளுத்கமவில் பௌத்த பயங்கரவாதிகள் சிந்தவைத்த இரத்தக்கறை
அளுத்கமவில் பௌத்த பயங்கரவாதிகள் 

அப்பாவி மக்கள் முள்ளி வாய்க்காலிலோ அல்லது, அழுத்கமவிலோ சரி இனவாத அரசியலுக்குத் தீனீயாக்க முடியுமென்றால் இலங்கையின் இன்றைய அரசியல் சூழலை எந்தத் தேசத்தோடும் ஒப்பிட முடியாதளவு மோசமானவொரு இருண்ட சூழலுக்குள் இருப்பதை நாம் ஊகிக்க முடியும்.உலகம் 21 ஆம் நூற்றாண்டை மனித வேட்டை-நர மாமிசம் புசிக்கும் நூற்றாண்டாகவே பிரகடனப்படுத்தியுள்ளது.இவ் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆவ்கானிஸ்தானை-ஈராக்கை அத்துமீறி அழித்து வரத் தொடங்கிய ஏகாதிபத்திய எரிபொருளுக்கான பெரு வேட்டை, கொத்துக் கொத்தாகச் சிரியாவில் , உக்கிரைனில்மனிதப் பிணங்களை உற்பத்தி பண்ணி வருகிறது.இத்தகையவொரு அரசியலை உலகம் வலிந்துருவாக்கி வைத்தபடி இன்றைய தேசிய இன முரண்பாட்டை அத்தகையவொரு சதிமிகு நலன்களுக்குடந்தையாக்கி எமது மண்ணில் குருதியாற்றைத் தொடர்ந்து ஓட வைத்திருக்கிறது.

இன்று உலகந்தழுவி எப்பகுதியிலும் மனிதர்களைக் கொல்லுதல் மிகச் சாதரணமான விடையமாகப் போயுள்ளது!

பயங்கரவாதத்தின் பெயராலும்,பட்டுணியின் பேராலும் அப்பாவிகளின் உயிரைப் பறித்துவரும் புதிய உலக ஒழுங்கானது இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களின்மீது தமது அத்துமீறிய வலுக்கரத்தைப் பதித்து தேசங்களின் இறைமைகளையே நாசமாக்கியுள்ளது.இந்த அரசியல் இலக்குக்கிசைவாகக் காரியமாற்றும் மூன்றாமுலக அரசியல் மற்றும் பெருங்கட்சிகள்கூடவே அவர்களது லொபிக் கூலிக் குழுக்கள் தமது மக்களின் உண்மையான எதிரியாக மாறியுள்ளது.இதுவொரு மிக மோசமான புறச் சூழலை அமைதியாக வாழும் இனங்களுக்கிடையில் தோற்றி வைத்து,அதுசார்ந்து இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளாக வளர்த்துச் சம்பந்தப்பட்ட தேசங்களின் சுய வளர்ச்சியை மெல்லச் சிதைத்து வருகிறது.இத்தகைய தந்திரம் அந்நிய நிதி மூலதனத்துக்கு அவசியமானது.

இதன் தொடர்ச்சியான விளைவுகள்,போர்,பொருளாதார அழிவுகள்,நோய்,நொடி,பட்டுணிச் சாவாக மக்களை அண்டும்போது தேசத்தின் மிகப் பொதுவான மனிதவளம் நோய்வாய்க்குட்பட்டுத் தேசத்தின் சுய ஆளுமை அழிந்து தேசம் அன்னியத் தயவில் சுயசார்பிழந்து தங்கி வாழும் இனத்தை உற்பத்தி பண்ணுகிறது.இங்கே, தொடர்ச்சியான யுத்தத்துள் இருத்தி வைப்பதற்காகவும் தமது பழைய-கழிவு ஆயுதங்களை விற்றுக் காசாக்கவுமாக மூன்றாம் உலகத்தில் செயற்கையான முரண்பாடுகளையும் அதுசார்ந்த யுத்தத்தையும் ஏகாதிபத்தியக் கம்பனிகள் தொடக்கி வைத்திருக்கின்றன.இன்றைய நிலவரப்படி ஜேர்மனிய அரசு காட்டுமிராண்டி அரசான அல்ஜீரியாவுக்கு 980 டாங்கிளை 1600 கோடிகள் டொலருக்கு விற்பனை செய்கிறதென்றால் இதன் நோக்கம் என்னவாக இருக்கும்?

இதன் தொடர்ச்சியில் மையங்கொள்ளும் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் இராணுவக் கேந்திர அரசியலானது என்றைக்கும் மூன்றாமுலகத்தில் அமைதியும் சமாதானம் மலர விருப்பமுற்றே இருக்கிறது.இது, தான் உற்பத்தி செய்வதற்கானவொரு இனமாகத் தமது தேசத்தைக் கட்டி வளர்த்தபடி மற்றைய கீழத்தேய வலயத்தை மூலதனத்தைச் சுரண்டும் வலயங்களாகவே இருத்தி வைத்திருக்கிறது.இத்தகைய அரசியலைப் புரிந்து கொள்ள ஆபிரிக்கக்கண்டக் கொங்கோ தேசமே நல்ல உதாரணமாக இருக்கிறது. இன்று -இப்போது இலங்கையே நல்ல உதாரணமாகும்!

pillaiyaan-gnanamஇத்தகையவொரு இருண்ட பொருளாதார நலன்சார்ந்த இனவழிப்பு -வன்முறைகள்நமது தேசத்தில் அப்பாவிக் குழந்தைகளை இனப்படுகொலையாகக் கொன்று குவிப்பதற்குச் சிங்கள-தமிழ்-முஸ்லீம் இனங்களின் நலன்களின் வாயிலாக எழும் முரண்பாடாக எவரும் பார்ப்பாராகின், எமது இத்தகைய அழிவுகளைத் தடுத்து நிறுத்தவே முடியாது.இது இன்னும் பலிக்குப்பலி அரசியல் வடிவத்தை எட்டி, எமது மண்ணில் என்றைக்குமே அமைதியற்றவொரு சூழலை நிரந்தரமாக்கித் தேசத்தை இராணுவச் சர்வதிகாரத்தின் கீழ் கட்டிப்போடும் அபாயம் நெருங்கி வருகிறது.இதிலிருந்து மீள்வதும், இனங்களுக்கிடையாலான முரண்பாடுகளின் மீது இலகுவாக ஆதிக்கஞ் செய்யும் அன்னிய நலன்களை வெற்றிகொண்டபடி இலங்கையில் பல்லினங்களும் பரஸ்பர நட்புறவோடு வாழ்வை முன்னெடுப்பது அவசியமானவொரு அதி மானுடத் தேவையாகவே இன்றிருக்கிறது.இதையொட்டிச் சிந்தித்ததாகச் சொல்லும் புலம் பெயர் “மாற்றுக் குழுக்கள்”எனும் போர்வைக்குள் ஒடுக்குமுறையாளர்களோடு கைகோர்த்த தலித்துவ-பிரதேசவாதப் பிளவுவாதிகள் செய்த சதி அரசியலை எங்ஙனம் புரிந்துகொள்வது நண்பர்களே?

இனப்படு கொலை அரசியலானது அப்பாவி மக்கள்மீது பயங்கரத்தனமான தாக்குதல்களைத் தொடுத்து அவர்களது கனவைச் சிதைப்பதை நாம் தொடர்ந்து”அடிக்கு அடி-இனப் படுகொலைக்குக் கொலை”எனும்படி அனுமதிப்போமானால் இலங்கையில் எந்தவொரு இனமும் தனது நிம்மதியை-நிலைத்த வாழ்வைத் தக்கவைக்க முடியாது!இது எமது தேசத்தைக் குட்டிச் சுவாராக்க எண்ணும் அன்னிய ஆளும் வர்க்கங்களுக்கும் இலங்கையின் தரகு ஆளும் கும்பலுக்குமான வேட்டைக் காடாகவும் அவர்களின் குடும்ப நலன்களுக்கான கொலைகளுமாகப் படுகொலைகள் பரந்த அரசியல் பழிவாங்கலாக நம்மைப் பூண்டோடு அழிப்பதாக முன் நகரும்.இத்தகைய அரசியல் செல்நெறி ஒருபோதும் முஸ்லீம்களுக்கோ அல்லது ,தமிழருக்கான-இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கான விடுதலையைத் தரப்போவதில்லை. மாறாக, நமக்கு இன்னும் பல தசாப்த காலத்துக்கு இதே அழிவு வாழ்வைத் தந்து நமது வரலாறே சுடுகாடாகும்!

இதை தடுப்பதற்கான ஒரு அரசியல், இலங்கையின் இனங்களுக்கிடையலான முரண்பாட்டை முடிவுக்குக்கொணரும் இன விடுதலைசார்ந்த சுய நிர்ணயத்தை அங்கீகரிப்பதும், சுய ஆட்சியுடைய வலயங்களை உருவாக்குவதுமே இன்றைய மூன்றாமுலகத்தின் முன் இருக்கும் அரசியல் பணி.இதைச் செய்து முடிக்கும் தகமை இனங்களுக்கிடையலான ஒற்றைமையின் இருப்பிலே சாத்தியமாகும்.இந்த ஒற்றுமையைக் குலைப்பதே அன்னிய நலன்களின் பெருவிருப்பு.நாம் இதை வெற்றிகொள்வது அவசியம்.அங்ஙனம் வெற்றி கொள்ளாதவரை முள்ளிவாய்க்காலுக்குப்பின் அழுத்கமவிலும் பின் யாழ்ப்பாணத்துக்கும் ,மட்டககளப்புவுக்குமென மதவாத வன்முறையாகவும்-இன வன்முறைகளாகவும் சுழன்றடிக்கும் இலங்கைப் பாசிச அரசின் இனவழிப்பு அரசியலாகும்.இதன்வழி மகிந்தாவின் அந்நியச் சேவை அரசு தன்னைத் தற்காத்துக்கொள்ளும்.இதற்காவேதாம் இந்தப் புலத்து லொபிக்குழுக்கள் யாவும் தமது பிழைப்புக்காக இலங்கை மக்களைச் சாதிரீதியாக-பிரதேசரீதியாக மற்றும் மதவாத ரீதியாவும் பிளந்து குருதி குடிக்கின்றனர்.இந்தப் பயங்கரவாதிகளை வெல்வதும் இவர்களை ஜனநாயகரீதியாகத் தோற்கடிப்பதும் புரட்சிகரமான அரசியலுக்குட்பட்டதே.இதையொட்டி உதிரிகளான நாம் என்ன செய்யப் போகின்றோம்?-இது கேள்வி…

( 2)

முசிலீம் மக்கள் மீதான வன்முறையைப் புரிந்துகொள்ள…

இலங்கையில் முசுலீம் இனத்தின்மீது அரசியல் வன்முறையை ஏவி விட்டுள்ள மகிந்தா தலைமையிலான இனவாத அரசானது “தற்செயலான வன்முறைக்கு”ப் பாத்திரமற்றது என்றொரு கருத்தைப் பலர் உரையாடுகிறார்கள்.அவர்களுள் முசுலீம் அரசியற்றலைமைகள் கூட இங்ஙனம் உரையாடுவதில் தமது பதவிகளை -அமைச்சகப் பொறுப்புக்களைக் காக்கவும் முனைகின்றனர்.இந்த சிக்கலான காலத்திற்கூட இலங்கையில் ஒடுக்குமுறைக்குட்பட்ட – உட்படும் சிறுபான்மை மக்களினங்களானவை தமக்குள் இணக்கமானவொரு அரசியலைக் கொண்டியங்க முடியாத தடைகளாக இருப்பவைகள் என்ன?

தமிழ்பேசும் மக்களது ஒரு பிரிவான மலையக மக்கள், மலையகத்தில் ஒட்டச் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தப் பொழுதில் பொது பல சேனாவின் முகத்தோடு அந்த மக்களையும் வேட்டையாடப்போகும் மகிந்தா அரசின் தொழிலாளர்களுக்கெதிரான அசியற்போக்ககளின் விருத்தியே இத்தகைய வன்முறையாகவெழுகின்றது.இதன் மிக நுணுக்கமான செல்நெறியானது மக்களினங்களைப் பல வடிவினில் அரசு சாரத முறைமைகளில் ஒடுக்குவதும் ,அதன்வழி தத்தமது எசமானர்களான அந்நிய முதலீட்டார்களின் நலன்களை இலங்கையில் அடைவதற்கான அனைத்து வழிகளையும் திறந்துவிடுவதாகவே இன்றைய மகிந்தா தலைமையிலான இலங்கை அரசின் பண்பாக -நிலைப்பாடாகவிருக்கிறது!

riots-rajapaksaஇன்று முசிலீம் மக்கள்மீது இலங்கை அரசால் ஏவப்படும் சிங்கள உதிரிவர்க்கமானது தனக்கான நலன்களைப் பேணத்தக்க முறைமைகளில் முசீலீம் சிறு வர்த்தகர்களைத் தாக்கியழிப்பதில் குறியாவிருக்கிறது.மதரீதியாக -மொழிரீதியாகப் பிளவுண்ட சிறு வர்த்தக நலன்களானது இக் குழுமங்களுக்குள் மிகவும் போட்டியானவொரு சூழலைக் கடந்த 20 ஆண்டுகளாகச் செயற்கையாகவே உருவாக்கியது.இதன் பலாபலன்களானது ஊட்டி வளர்க்கப்படும் இன -மத வாதச் சூழலைத் தகமைத்து மக்களினங்களைப் பிளந்து அரசுக்கெதிரான அணித் திரள்வை உடைத்தெறிவதே இலங்கை -சீன அரசுகளது தந்திரமாவிருக்கிறது.

இலங்கையில் நடாத்தப்படவிருந்த இரூனேசியப் பாணி”மக்கள் எழிச்சி” ஒட்போரது[Otpor!] தலைமையின் தூண்டலோடு சம்பந்தப்பட்டதெனினும் அஃது மேற்குலகின் வியூகம் -ஒத்துழைப்போடு சம்பந்தப்பட்டதென்பதையும் கூடவே , இலங்கையில் கம்யூனிச-வர்க்கவுணர்வு அதிகமாகப் போர்க் குணமிக்க பாட்டாளிகளைக்கொண்டிருப்பதென்பதும் உலகம் அறிந்ததுதாம்.இதன் திசையில் கட்டப்படும் வியூகங்களை ஒடுக்குமுறைக்குட்படும் எந்தச் சிறுபான்மையினங்களும் சரியப்புரிந்து முன்னெடுக்கும் அரசியல் வெற்றிடமாகவே உள்ளது.

இந்நிலையை மீள மறுத்தொதுக்கும் தமிழ் “மார்க்சிய” நண்பர்கள் சிலர் கீழ்வரும்படி எதிர்வு கூறுகிறார்கள்:”இலங்கையின் புரட்சிக்கான சூழலுக்கு, ஆசிய மூலதனத்தின் வரவோடு புதிய பாட்டாளிய வர்க்கத்தை அது தோற்றுவிக்கும் என்றும், உற்பத்திச் சக்திகளை(தொழில்மயப்படுத்தும் உற்பத்தி ஜந்திரங்கள்) உருவாக்கி அதுசார்ந்த உறவுகளை வலுப்படுத்தும்.இதனால் தொழிற்சங்கம்வரும்,பாட்டாளிகள் தமக்குள் இனங்கடந்து ஒன்றுபடுவார்கள்-இனவாதம் செயலிழக்கும்,இனங்கலந்து தொழில் ஈடுபடும்போது அங்கே இனவொற்றுமை வலுக்கும்,இது புரட்சிகரமான சூழலைத் தகவமைக்கும்.” என்று பகற் கனவுகாணும் நண்பர்கள்,அதன் பாதகமான பக்கங்களை மறுப்பது ஒருவகையில் ஏகாதிபத்தியங்களிடம் சரணடையும் அரசியலாகவே இருக்கும்.இதைக் கவனப்படுத்தும்போது,நிலைமை கட்டுக்கடங்காத திசை நோக்கிச் செல்வதை இனங்காண முடியும்.இதைச் சற்றுப் புரிய முனைவோம்.

1):முள்ளிவாய்காலிற் புலிகளை முற்று முழுதாக அழித்தபின் இலங்கையினது அரசியல் நகர்வானது ஆசிய மூலதனத்தைச் சுற்றியருப்பினும் அது சிங்கள மையவாதத்தில் மூழ்கியே கிடக்கிறது.அந்நியப் பெருவர்த்தகங்கள் இலங்கையை நோக்கிப்படையெடுப்பதாகவிருந்தாலும் அங்கே அரசுக்கும் , பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்குமான இடைவெளி மிக அதிகமாகவே இருக்கிறது.இது இலங்கை தழுவிய புரட்சிக்கான விசும்பு நிலையை அடைவதற்குத் தடையாகத் தமிழ்த் தேசிய இனத்தின் முரண்பாடுகள் ஒவ்வொரு வடிவங்களில் அணுகப்படுகிறது.இஃது,அந்நிய மூலதனத்துக்கிசைவான இலங்கையின் முன் நகர்வுகளில் ஒன்றானதே.இலங்கை -அந்நிய அரசுகளது இன்றைய இலங்கை மீதான பொருளாதார நகர்வுகள் இலங்கையின் வளங்களை ஒட்டச் சுரண்டுவதிலும் ,கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடல் வலயத்தை வார்த்தக -அரசியல் தேவைக்குட்பக் கையக்படுத்தும்போது வரும் மக்களது கூட்டுத் தாக்குதலைக்கொண்ட உணர்வெழுச்சி வெடித்துக் கிளம்பாதிருக்கச் செயற்கையாக இனக் குரோதத்தைத் திட்டமிட்டு வளர்க்கிறார்கள் .இலங்கையை மாறி மாறி ஆளும் கட்சிகளானவை இன்றைய தெரிவில் வன்முறையான சகல வடிவங்களையும் தமக்குள் உள்வாங்கிச் செயற்படுத்துகின்றனர்.

2):புலிகளென்பவர்கள் இன்று அழிக்கப்பட்டபின், ஒவ்வொரு களமுனையிலும் சாகடிக்கப்பட்ட எமது மக்களது குழந்தைகளின் அளப்பெரிய உயிர் பிழையான முறையில் அந்நிய நலன்களுக்காகப் பலியெடுக்கப்பட்டதாகவே போய்விட்டது.இத்தகைய நிலைமைகளில், புலிகளின் படுபாதகமான அரசியல் கபடத்தனமே நம் மக்கள் மத்தியில் அம்பலமாகியது.எனினும், புலிகளால் ஏமாற்றப்பட்ட தமிழ்பேசும் மக்களினது உரிமைகளை இந்த இலங்கையை ஆளும் எந்தக் கட்சிகளும் மதித்து,அவர்களது வாழ்வைச் செப்பனிட இனிமேல் முனைவதற்கில்லை.இதனால் இனங்களுக்கிடையில் தொடர்ந்து அவநம்பிக்கை வளர்க்கப்படுகிறது.

3):இலங்கையின் இன்றைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஆசிய-மேற்குலக ஏகாதிபத்தியங்களின் மிக மட்டரமான அணுகுமுறையானது இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து இனவொதுக்குதலுக்குள் முடக்கியபடி, இலங்கையின் ஜனநாயகச் சூழலை இல்லாதாக்குவது.அதன்பின், இராணுவ வகைப்பட்ட ஆட்சியலகை நிலைப்படுத்துவது.இதற்குச் சிலியினது பினேசேவ் ஆட்சியை உதாரணமாக எடுக்கலாம்(இது அமெரிக்கப் புதியலிபரல்களின் பொருளாதாரவாதியான மில்டன் பிறீட்மான் திசைவழிப்பட்டது.)

4):இதன் தொடராக வந்தடையும் இலங்கையின் அரசியலில்,இலங்கை மக்களினது எந்தவுரிமையும்(போராட்டம்,தொழிற்சங்கவுரிமை,வேலைநிறுத்தம்,சுதந்திரமான கருத்துப்பரிமாற்றம் இன்னபிற)தேசவிரோதம்-அரசுக்கு விரோதமெனும் போக்கில் நசுக்குவதற்கானவொரு இராணுவச் சர்வதிகாரமே இலங்கைக்கு இனிமேல் வாய்க்கப்பெறும்படியாக இந்த அந்நிய ஆர்வங்கள் விதிக்கின்றவொரு சூழலை எட்டுவதே அவர்களின் நோக்கு(பத்திரிகையாளர் திரு.திஸ்சநாயகத்துக்கு விதிக்கப்பட்ட இருபதுவருடச் சிறைத் தண்டனை இதை மேலும் உறுதிப்படுத்தும்).

5):இலங்கையை ஆளும் கட்சிகளும்,போராடும் சிறுபான்மை இனங்களின் அமைப்புகளும் வர்க்க அரசியலுக்குள் தாம் சார்ந்த உடமை வர்க்கத்துக்கு-எஜமானர்களுக்கு ஏற்ற வகைகளிலேயே வளர்தெடுக்கப்பட்டு,இன்றுவரை உயிர்த்திருக்கும்படி விடப்பட்டிருக்கிறார்கள்.

6):இன்றைய பின்போராட்டச் சூழலில்-போராட்டத் தோல்விக்குப்பின் இவைகளைக் கடந்து, நமது மக்கள் இலங்கையின் பெரும்பாண்மைச் சிங்களத் தொழிலாள வர்க்கத்தோடு தோள் சேர்ந்து-தமக்கு நேர்ந்த கொடுமைகளுக்கெதிராக-அவர்களது பலத்தோடு போராடுவதைத் தவிர வேறு வழி இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கில்லை என்றாகிறது இன்றைய சூழல்.என்றபோதும், இத்தகைய ஒருமைப்பாட்டை எட்டுவதற்கான பல தடைகளை இலங்கையின் கட்சி அரசியலுக்குள் நாம் இனங்காணமுடியயும்.இனஞ்சார்ந்த குறுகிய கதையாடல்களை வளர்த்துச் சதி அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளுக்கு அந்நியச் சக்திகளது நிதி ஆதாரமாக இருக்கிறது.இதன் உண்மையில் திட்டமிடப்பட்ட உலக வல்லரசுகளது இலங்கைமீதான ஆதிக்கம்-அரசியல் இலாபங்கள் குவிந்திருக்கிறது.இவற்றைத் தகர்ப்பதற்கான இலங்கையின் முழுமொத்த மக்களது எதிர்ப்புப் போராட்டம் இன்னமும் மையங்கொள்ளாது இனவாதத் தீயில் மூழ்கிக்கிடப்பதற்காக ஒவ்வொரு பொழுதிலும் ஏதோவொரு வகையில் படுகொலைகள் நடந்தேறுகிறது.அல்லது, குறைந்தபட்சமாவது இனவாத அவநம்பிக்கைப் பிரகடனங்கள் முன்னுக்குத் தள்ளப்படுகிறது.

7) : இப்போது முசுலீம் -சிங்கள இனங்களுக்கிடையில் வளர்க்கப்படும் குரோதமானது திட்டமிட்ட அந்நியச்சதி என்கிறோம். இதிலிருந்து வளர்க்கப்படும் பொதுபல சேன என்ற இனவாத அமைப்பானது இலங்கைக்குள் நிகழ்த்தப்படவிருக்கும் பல்வேறு சமூக அமுக்க வினைகளுக்கானவொரு ஆரம்பம்.இத்தகைய அரசியல் வாழ்வை எதிர்கொள்ளும் இலங்கை மக்கள் மத்தியில் கட்டிவளர்க்கப்படவேண்டிய “இனங்களுக்கிடையிலான ஐக்கியம்” இன்று அதே சக்திகளலேயேதாம் பேசவும் படுகிறது.இவற்றை எதிர்கொண்டு இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தைப் பேணும் அரசாக மகிந்தாவின் அரசை எண்ணமுடியாது.அவ்வரசு முசுலீம் மக்களை மட்டுமல்ல இலங்கையின் அனைத்து இனங்களையும் அழித்துக் கரைத்துச் சிங்கள “நாம் அனைவரும் இலங்கையர்” என்று கதையைத் தொடர்கிறது.இந்தத் திசையில் முசுலீம் மக்கள் மத்தியில் தொடரப்படும் இன்றைய இனவாதத் தாக்குதல்களுக்கும், சீன முசுலீம் முரண்பாட்டிற்கும் பல்வேறு வகையான தொடர்புகள் உண்டு. சீனாவில் முசுலீம் மக்களுக்கும் சீன அரசுக்குமிடையிலான முரண்பாட்டின் விளைவுகளை [Shaanxi (province, China)Holy War in China ]-வெளிகளை [History of Muslims in Northwest China ]ஆயும் ஒரு முன்னோட்டமாகச் சீன அரசும் இதை வளர்த்து இயக்கிப் பார்த்துக்கொள்கிறது.தற்போது இலங்கையானது சீனாவின் மட்டுமல்ல பல அந்நியச் சக்திகளது பரீட்சார்த்தக்களமாகவே இருக்கிறது.சீனாவின் சமீபத்து (2009 )முரண்பாட்டில் (ethnic tensions between Uighurs and Han Chinese )பலர் கொல்லப்பட்டார்கள்.பண்டுதொட்டுச் சீனாவின் இந்த முரண்பாடுகள் இன்னும் நீறுபூத்த நெருப்பாகவே இருப்பதால் இதை அணுகும் பல பொறிமுறைகளை நோக்கிச் சீனா நகர்கிறது[ Read more … : Studies in Islamic History and Civilization: In Honour of Professor David Ayalon ]

எனவே, இந்நிலையில் முசிலீம் மக்கள் மீதான வன்முறையைப் புரிந்துகொள்ள முனையுந் தருணத்திற்கூட முசிலீம் இனமானதோ அதைக் குறித்துப் பேசுவதைவிட்டுப் பண்ட்டுதொட்டுச் சிங்கள இனவாத அரசுகளால் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பரந்துபட்ட தமிழ்மக்களைக் குற்றக்கூண்டில் ஏற்றுவதிலேயேதாம் முழுமூச்சாகவிருக்கிறது.இதைக் கடக்கும் அரசியலைத் தமிழ்ச் சூழலை அண்மித்த அரசியற் குழுக்கள் தற்போது முன்வைத்தாகவேண்டும்.

ப.வி.ஸ்ரீரங்கன்

19.06.2014

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
விஜித தேரரைக் கொலையின் விழிம்பிற்கு அழைத்துச்சென்ற இலங்கை அரச அடியாட்படைகள்

விஜித தேரரைக் கொலையின் விழிம்பிற்கு அழைத்துச்சென்ற இலங்கை அரச அடியாட்படைகள்

Comments 13

  1. mannan says:
    12 years ago

    புலிகளால் முஸ்லிம்கள் வடபகுதியிலிருந்து   வெளியேற்ரப்பட்டபோது
    உலகெங்கும்  பரந்து வாழ்ந்த தமிழர்கள்  தட்டிக்கேட்டார்களா?
    முஸ்லிம்களை  துரத்திய  புலிக்கொடியை  தமது  தேசியக் கொடியாகவும்
    அதன் தலைவரை  தமிழ்த்தேசியத்தலைவ்ராகவும் ஏற்ரார்கள்.

    இப்போ  ஏன் பரிதாபப்படுகிறார்கள்  எதிரியின் எதிரியை  நமக்குநண்பனாக்கவா?  

    உலகமெங்கும் வாழ்ந்த தமிழர்  முஸ்லிம்களிற்கு எதிராக புலிகளை
    ஆதரித்தைவிட   10 இலக்கியச் சந்திப்பு  நபர்கள் ஒரு பிக்குவை சந்தித்தது
    பெரியவிடயமல்ல.  அதுமட்டுமல்ல   வன்னி பேரழிவிற்கு பின்னர்
    இலங்கை  அரசுடன்  வெளியில் வராத கள்ளத்தொடர்பில்
    வாழும் தமிழ் தேசிய வாதிகள்  எத்தனையோ?

    • lala says:
      12 years ago

      ## புலிகளால் முஸ்லிம்கள் வடபகுதியிலிருந்து வெளியேற்ரப்பட்டபோது
      உலகெங்கும் பரந்து வாழ்ந்த தமிழர்கள் தட்டிக்கேட்டார்களா? ##

      புலிகளால் யாழிலிருந்து முஸ்லிமகள் வெளியேற்றப்படுவதற்கு முன்பே கிழக்கு அம்பாறையில் தமிழ் மக்கள் முஸ்லிம்களால் படுகொலை செய்யப்பட்டு மிகுதியாக இருந்த மக்களு ம் அவர்களின் ஊர்களை விட்டு துரத்தியடிக்கப்பட்டார்கள் .

      அப்போது எந்த முஸ்லிம் பொது மகனாவது அல்லது முஸ்லிம் அரசியல்வாதியாவது தட்டி கேட்டதுண்டா ?/

      • mannan says:
        12 years ago

        பழிக்கு பழி,கொலைக்கு கொலை என்னும்  கொள்கை  மனம் கொண்டோர்
        உருமை,விடுதலை சுதந்திரம் அரசியல் என்னும் விடயங்களிலிருந்து
        விலகி  இருப்பதே மேல். அல்லாவிடின்  அவர்கள்  தம்மையும் அழித்து
        தம்மை  நம்பினவ்ர்களையும்   பலிகொடுப்பார்கள்.

        • lala says:
          12 years ago

          ##பழிக்கு பழி,கொலைக்கு கொலை என்னும் கொள்கை மனம் கொண்டோர்
          உருமை,விடுதலை சுதந்திரம் அரசியல் என்னும் விடயங்களிலிருந்து
          விலகி இருப்பதே மேல். ##

          நான் சொன்னதில் எங்கிருக்கிறது பழிக்குபழி ?
          யாழில் முஸ்லிம்களை வெளியேற்றியதைப்பற்றி அடிக்கடி வக்கணையாக வசை பாடுபவர்களுகு , அத்ற்கு முன்பு முஸ்லிம்களால் அம்பாறையிலிருந்து வெளியேற்றப்பட்ட அப்பாவி தமிழ் மக்களை பற்றி பேசினால் மட்டும் ஏன் வலிக்கிறது ?
          தமிழர்களை விட முஸ்லிம்கள் மேலானவர்கள் என சொல்ல வருகிறீர்களா ?
          தமிழர்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என் கிற யுரந்த மனப்பானமையா ?

  2. ப.வரதன்(கஸ்ரோ) says:
    12 years ago

    உளகேங்கும் வாழும் தமிழ் உறவுகளே ………மானம் உள்ள தமிழனாக இருந்தால் அனைத்து மதங்களையும் துறக்க வேண்டும் .இல்லை எனில் இஸ்லாம் தமிழன் .இந்து தமிழன் .கிருஸ்த்தியன் தமிழன் அல்லலூயா தமிழன்.சீயா முஸ்லீம் தமிழன் .இப்படி அடிக்கிகொண்டே போகல்லாம் .ஆனால் தமிழர்கள் என்ற அடையாளம் என்ன மதமா??? அப்படியாயின் மேல்கூறிய மதத்தவர்கள் அனைவரும் தமிழை ஒன்றாக சுவாசிக்க வேண்டும் .நீங்கள் தமிழனாக வேண்டுமா மதத்தை துறந்த மனிதனாகினால் வள்ளுவன் புகள் தமிழும்ஓங்கும் http://youtu.be/XE_7O42KINg …[youtube http://www.youtube.com/watch?v=XE_7O42KINg&w=420&h=315%5D

  3. putthan says:
    12 years ago

    சிங்கள மொழி பேசும் முஸ்லிம்கள்…..உருவாகிகொண்டிருக்கின்றனர் ….தெற்காசிய மொழி பேசும் மக்களிடையே சிங்கள மொழி பேசும் முஸ்லிம்கள் மட்டும்தான் உலகில் அடையாளப்படுத்தப்படவில்லை….மலையாள முஸ்லீம்கள்,கன்னடமுஸ்லீம்கள்,தெலுங்குமுஸ்லீம், துலு முஸ்லீம்கள்,தமிழ்முஸ்லீம்கள்…..இந்த வரிசையில்சிங்கள முஸ்லீம்கள் இப்பதான் உருவாகிகொண்டிருக்கின்றனர்……பொதுபலசேனா சிங்கள முஸ்லீம்கள் உருவாக கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.ஆனால் அதை அந்த புத்தராலோ அல்லது அல்லாவாலோ தடுக்கமுடியாது.. ஏன் பொதுபலசேனாவலேயே முடியாது….சிங்கள இனத்தில் பெளத்தம்,கிறிஸ்தவம் போன்ற மதங்கள் ஆட்சி செய்வதுபோல முஸ்லீம் மதமும் ஆட்சி செய்யும்… தூய இனம் என்றோ,தூய மொழி என்றோ, தூய மதம் என்றோ உலகில் நிலைத்து நின்றதாக சரித்திரமில்லை

    • lala says:
      12 years ago

      உண்மைதான் இலங்கைக்கும் , சிங்கள்வர்களுக்கும் அப்படி ஒரு ஆபத்து எதிர்காலத்தில் வரலாம் . தமிழ் முஸ்லிம்கள் தமிழ் பகுதிகளில் தமக்கு உடந்தயாக இருந்து தமிழர்களுக்கும் அவர்களது விடுதலை போராட்டத்துக்கும் செய்த அட்டுழியங்களை நேரில் பார்த்தவர்லளல்லவா ?
      அதனால்தான் பிக்க்கள்நேரத்தோடு உசாரகி விட்டார்கள் .
      இவர்களை இப்படியே விட்டால் எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிமகளும் , சிங்கள முஸ்லிம்களும் பெருகி ஒன்றாக இணைந்து சிறிலங்காவை , சிறிலங்கிஸ்தானாகவோ அல்லது சிறிலங்க பாத் ஆகவோ மாற்றுவதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என சொல்லமுடியாது.
      இவர்களை விட்டால் உலகத்தியே கேட்பார்கள் .
      அதனால்தான் பவுத்த தேரர்கள் இவர்களால் தமது எதிர்கால சந்ததியினருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து இப்போதே முட்டிக்கு முட்டி தட்டி முழங்காலில் உக்காத்தி வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்..

      • mannan says:
        12 years ago

        //அதனால்தான் பவுத்த தேரர்கள் இவர்களால் தமது எதிர்கால சந்ததியினருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து இப்போதே முட்டிக்கு முட்டி தட்டி முழங்காலில் உக்காத்தி வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்//  லாலா

        தென்னிலங்கையிலும்  சம உருமையோடு வாழ்ந்து கொண்டு  வடக்கு
        கிழக்கிலும்   தனிநாடு கேட்ட தமிழர் மீது  ஆத்திரமடைந்த  பிக்குகள்
        நியாயமானவ்ர்கள் என ஏற்றுக்கொள்ளலாமா? 

        • lala says:
          12 years ago

          ஏற்றுக்கொள்ள முடியாது .

          வட கிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம் . அங்கு சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இழந்ததால் வட கிழக்கு தமிழர்கள் தனிநாடு கேட்டார்கள் .

          ஆனால் முஸ்லிம்களுக்கு வட கிழக்கிலும் சரி அதற்கு வெளியேயும் சரி பாரம்பரிய பிரதேசம் என்று கிடையாது .
          முஸ்லிம் இனம் , தமிழ் சிங்கள இனக்கள் மத்தியில்பரந்து வாழ்கிறார்கள் .
          இந்தநிலையில் இரு பிரதெசங்களிலும் தமது இனத்தை பெருக்குவதன் மூலம் ரத்த செத்தமில்லாமல் இலங்கையை எதிர்காலத்தில் முஸ்லிம் நாடாக மாற்ற முயற்சிக்கலாம் .
          இதனை தடுப்பதற்கு இலங்கையை பூர்வீக வாழ்விடமாக கொண்ட தமிழர் சிங்களவர் இருவருக்குமே நியாமான காரணங்கள் உண்டு..

          தமிழர்களை பொறுத்தவரை தாம் பெரும்பான்மையாகவுள்ள பிரதேசத்திலேயே தனிநாடு கேட்டார்கள் .
          சிங்கள பிரதேசத்தில் தனிநாடு கேட் கவில்லை..

          • mannan says:
            12 years ago

            முஸ்லிம்நாடாக மாறிவிடும் என்ற அச்சம்
            சிங்களவர்களிற்கும் ,தமிழ ர்களிற்கும்
            இருக்குமாப்போல்   தமிழர்களின்  நாடாக
            தென்னிலங்கை மாறிவிடும் என்று அச்சம் கொள்ழும் சிங்களவ்ர்க ளை ஏன் இனவாதிகள் என அழைக்கின்றார்கள்?  

            யாழ்ப்பாண்த்தில் வாழ்ந்தது  தமிழ் பேசும் முஸ்லிம்கள்  பேசும் மொழியால்  தமிழர்கள். அவர்களை  அவர்களின்  இருப்பிடங்களில்
            இருந்து  வெளியேற்ரியது சரியானதென்றும்,  வடக்கு  கிழக்கு
            தமிழர்களிற்கு   பூர்விகமுமென்று கூறுவோர். தமிழ் பேசும்  பெளவுத்த மதத்தினரையும்   அதனால்தான் பவுத்த தேரர்கள் இவர்களால் தமது எதிர்கால சந்ததியினருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து இப்போதே முட்டிக்கு முட்டி தட்டி முழங்காலில் உக்காத்தி வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் வெளியேற்ர தயங்க மாட்டார்கள்.

            அப்போ  தமிழ் மொழி அரசியல் லாபத்திற்குத்தானே தவிர 
            அந்த  மொழியைப்பேசும் மக்ககளின்  நலன்களிற்காக வல்ல.

  4. சாந்தன் says:
    12 years ago

    சுவிஸ் இரவியின் கருத்தின் மீதான சிலஇ கேள்விகள்.
    ———————————————————————————–
     
    “தேவதாசன்-இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணி”  குறித் துச் சுவிஸ் இரவியின்  கருத்தின் மீதான சிலஇ  கேள்விகள்.
     
     
     
    இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணித் தலைவர் தேவதாசன் இனவாதப் பொது பல சேன  ஞானசாகரா “தேரோ”வுடன் நிற்கும் படத்துக்குச் சுவிச்சர்லாந்து இரவி அவர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.கீழே அவரது கருத்தை வாசிக்கலாம்.
     
     
     
    கிட்டத்தட்ட இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணியினரை சிறு பிள்ளைகளாகவும்இஅரசியலில்”வஞ்சகம்”அற்றுச் செயற்படுவதுமாகக் காட்டிவிடும் இரவி அவர்கள்இ இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணித்  தலைவர் தேவதாசன் மற்றும் கிழக்கு மாகாணசபைப் பேச்சாளர் ஞானம் போன்றோரது அரசியல் மற்றும் அதுசார்ந்த நகர்வுகள் குறித்தும் இத்தகைய கருத்தோடுதாம் இருக்கின்றாரா?
     
     
     
    கடந்த பல தசாப்தாமாகச் சிங்களப் பேரினவாதவொடுக்குமுறைக்குட்படும் இலங்கைச் சிறுபான்மையினங்களது  அரசியல் பிரச்சனையுள் மிக நேர்த்தியாகாக் குழிப்பறிப்புகளைச் செய்யும் அரசியற் தந்திரத்தை இவர்கள் செப்பனவே செய்து வந்திருக்கின்றனர்.தேவதாசன்இ ஞனம் போன்றவர்களும்இநிர்மலா -இராகவன் இ கீரன் குழுக்களுமாக இலங்கை அரசைச் சார்ந்து மக்களை அண்மித்தபோதெல்லாம் இலங்கைப் பாசிச மகிந்தா அரசை சனநாயக அரசாகவே பேசியும் -எழுதியும் வந்தனர்.
     
     
     
    இவர்கள்தாம் முள்ளிவாய்க்கால் அழிவுக்குப் பின் சில மாதங்களில் (டிசெம்பர் 2009 இல்)யாழ்ப்பாணஞ் சென்று மகிந்தாவுக்கு நன்றியும் ;இலங்கையில் சமாதானம் -சனநாயகம் மலர்ந்துவிட்டதென்றும் இ “தமிழர்கள் தமிழ் தேசியவாதத்தையும் ;   தமிழர்கள் எனும் உணர்வையும் “விட்டொழித்துஇ “நாம் அனைவரும் இலங்கையர்கள் “என்றுணர்ந்து இஇலங்கையை முன்னேற்ற வேண்டுமென்றனர்.
     

     
    கிழக்கு மாகாணத்தைப் பிளந்தெடுத்து இ அதைச் சிங்கள -இந்திய அரசுகளுக்குடந்தையாக மாற்றும் தந்திரத்துள் இவர்கள் முன்வைத்த “யாழ் மேலாதிக்கம்-மையவாதம்;யாழ்ப்பாணியம் -வேளாளியம் ” போன்ற அரசியற் கருத்தாக்களின் பின்னே நிகழ்த்தப்பட்ட பிளவுவாத அரசியலின் வினையென்ன?
     
     
     
    கிழக்கு மாகணத்தைப் பிளந்த கையோடு திருவாளர்கள் ஞானமும் இ தேவதாசனம் கிழக்கு மாகாணத்துள் பிரவேசித்துப் பிள்ளையானை அணுகிச் சென்று செய்த அரசியல்பின்  “ஆய்வுகளை முன்வைப்பது”கோமாளித்தனமாகுமா” இரவி?
     
     
     
    இந்திய -இலங்கை அரசுகளது கயமைத்தனமான பிளவுவாத அரசியலுக்குப் பக்கப் பலமாகவிருந்துஇ அரசியல் செய்யும் இத்தகையவர்களைக் குறித்து இரவியின் இந்தப் பார்வையை  எப்படிப் புரிந்துகொள்வது?இது புலிகளைத் “தேசியத்தின் பெயராலும் -அவங்கள் போராடுகிறான்கள் ” என்று கண்மூடித்தனமாக ஆதரித்த மன நிலைக்கு ஒப்பானதில்லையா?
     
     
     
    இவர்கள்  எங்ஙனம் தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயத்தை மறுத்து மகிந்தாவின் தலைமைக்காக மக்களைப் பிளந்தார்களோ அதேயளவு மூர்கத்தோடுதாம் தமிழ்பேசும் மக்களைப் பிரதேச -சாதிய ரீதியாகப் பிளந்து இந்திய -இலங்கையின் அரசியற் சூழ்ச்சிக்கேற்பக் கருத்தாடினார்கள்.
     
     
     
    இவர்களின் பின்னே மிகக் கெடுதியான அரசியல் சக்திகள் ஒழிந்திருந்தபடி இவர்களை வைத்து நகர்த்திய -நகர்த்தும் அரசியலானது புலத்தில் அநியாயத்துக் கு “மாற்றுக் கருத்தாளர்களையே” கருத்தியல் ரீதியாகவும்இசெயற்பாட்டு ரீதியாவும் இலங்கைப் பாசிசத்தை நியாயப்படுத்தும் நிலைக்குத் தள்ளினர்.
     
     
     
    இதன் பின்னால் இருக்கும் அரசியலை தள்ளி வைத்துவிட்டுஇ முகத்துக்கஞ்சி அவர்களை நியாயப்படத்தவே முடியாது.இவர்கள் தெளிவான அரசியல் இலக்குடையவர்கள்.அதையவர்கள் இதுவரை சாதித்தே வருகின்றனர்.இந்த அரசியல் இபெரும்பான்மைச் சிங்கள இனவாத அரசியலுக்கும் ;இந்தியப் பிராந்திய அரசியல் நலனுக்கும் உடந்தையானதென்பதே உண்மை!
     
     
     
    இதை மறுப்பதுள் இ இவர்களை முன்வைத்து  எந்தத்தெரிவுகளையும் வெறும் ” மனவோட்டமாக” ச் சித்தரிக்க முடியாது இரவி.
     
     
     
    இது ஆபத்தானது!
     
     
     
    இவர்கள் எடுத்த முடிவும் -அரசியற்றெரிவும் தமிழ் பேசும் மக்களது சுயநிர்ணயக் கோரிக்கையையே சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.கருத்தியற்றளத்திலும் -அரசியல் கட்சி -அமைப்பு நகர்விலும் இவர்கள் மகிந்தா அரசினது அனைத்துப் பரிணாமங்களையும் ஆதரித்துப் பிரச்சாம் செய்துஇ தமது அரசியலை நகர்த்துபவர்கள்.
     
     
     
    ஒருவகையில் இலங்கை -இந்திய அரசியல் லொபிகளால் வழி நடாத்தப்படுபவர்களென்பதை மறுத்துஇ இவர்களைக் காப்பது மீளவும் இயாழ்ப்பாணஞ் சென்று “முசிலீம் மக்களை அரசு தாக்கவில்லஇ அதை வைத்து அரசைப்பழி சுமத்தமுடியாது எனவே நாம் அனைவரும் முசலீம் -தமிழர்கள் என்பதைவிட இலங்கையர்களாக வாழும்போது இத்தகைய இனக்கலவரங்கள் நடக்காது ” என்பார்கள்.
     
     
     
    இதுதாம் இவர்களுக்கு இலங்கை அரசு சொல்லி க்கொடுத்து வகுப்பெடுக்கும் அரசியல் என்பதை புரிவதிற்றாம் எத்தனை சிக்கல்கள் இரவி?
     
     
     
    -ப.வி.ஶ்ரீரங்கன்
     
     
    21.06.2014
     

     
    பின்னிணைப்பு: இரவியின் குரல் ! :
     
     
     
    சுயஎனைெசயn Pய இந்தப்படம் படாத பாடுபடுகிறது. இதில் நிற்பவர்கள் பிரான்ஸ் தலித் முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஞானசார தேரருடன் இரகசியப் பேச்சு நடத்தக்கூடியவர்களோ அல்லது முஸ்லிம் மக்களுக்கு எதிராக துரும்பைத்தன்னும் அசைக்கும் மனவுணர்வு கொண்டவர்களோ அல்ல. இவர்களுடன் அரசியல் ரீதியில் முரண்பாடு கொண்டவன் நான். ஒருபோதும்; எதிர் விவாதங்களுள் எதிரியாக மாற்றப்பட முடியாதவர்கள். தலித் மனநிலை சார்ந்து இந்து மதத்தின் சாதிய உள்ளடக்கத்தை எதிர்த்து பௌத்தத்தை ஒரு எதிர்மறுப்பாக முன்நிறுத்துபவர்கள்.
    இன்னொருபுறம் புலியெதிர்ப்பு வாதத்துள் முடங்கிப்போனவர்கள். அதற்குள்ளிருந்தும் யாழ் மேலாதிக்க வாதத்துள்ளிருந்தும் மட்டும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் கண்டடைந்தவர்கள் என்ற விமர்சனம் உண்டு. மறுத்தோடல்இ கலகம் என்பதெல்லாம் அவர்களிடமிருந்து அடிக்கடி வெளிவரும் வார்த்தைகள். (இதன்மூலம் தம்மை கவனப்படுத்த முனைபவர்கள் என்ற அவதானமும் என்னிடம் உண்டு.)
     
     
    அவர்களின் தடாலடியான எதிர்மறுப்பு மனவுணர்வு இந்தப் புகைப்படத்தை தாமே முன்னர் இடையிடையே வெளியிட்டு கொண்டாட வைத்ததுதான் நடந்தது. அது இப்போ வினையாக வருகிறது. இதை யாரும் கண்டுபிடித்து பிரசுரித்ததாகவும்இ அவர்கள் பொதுபல சேனாவுடன் இரகசித்தார்கள் என்றெல்லாம் கண்டுபிடிப்பை நடத்துவது புலனாய்வு நடத்துவது கோமாளித்தனமானது. தடாலடிகள்இ கண்மூடித்தனமான எதிர்மறுப்புகள்இ அரசைப் பற்றிய போதியளவு வெளிப்படையான கறாரான விமர்சனங்களை வைக்காமைஇ விட்டுக்கொடுப்புகளுடன் நடந்துகொள்ளாமை (முக்கியமாக இலக்கியச் சந்திப்பின் சிதைவை கணக்கிலெடுக்காமல் போனதுக்கும் இந்தவகை மனவோட்டம்தான் காரணம்) என்பன பற்றி வைக்கப்பட்ட விமர்சனங்களை அவர்கள் அரசியல் பக்குவத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்ற செய்தி முக்கியத்துவம் பெறுகிறது என நினைக்கிறேன்.
    https://www.facebook.com/notes/sri-rangan-vijayaratnam/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/10151865471497168

    • lala says:
      12 years ago

      ## யாழ்ப்பாண்த்தில் வாழ்ந்தது  தமிழ் பேசும் முஸ்லிம்கள்  பேசும் மொழியால்  தமிழர்கள். அவர்களை  அவர்களின்  இருப்பிடங்களில்
      இருந்து  வெளியேற்ரியது சரி##

       யாழில் முஸ்லிம்களை வெளியேற்றியதை சரி என சொல்லவில்லை . 
      யாழில் முஸ்லிம்களை வெளியேற்றியது எவ்வாறு தவறானது என உங்களைப்போன்றவர்களால் சொல்லப்படுகிறதோ ? 
      அதே அளவு தவறு கிழக்கில் தமிழர்கள்  முஸ்லிம்களால் வெளியேற்றுபோதும் சொல்லப்பட்டிருக்க வேண்டும் . 
      ஆனால் அப்படி இல்லையே ? 
      உங்களது பின்னூட்டத்தில் எங்காவது அதைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்களா ? 
      ஒரு தரப்பின் இழப்பை மறைத்து மற்றைய தரப்பின் இழப்பை மட்டும் தூக்கி பிடிப்பதன்  மர்மம் என்ன ? 
      அதன் கபட உள்நோக்கம்தான் என்ன ?
      வேறொன்றுமில்லை . சம உரிமை வாதி , வர்க்கப்போராளி ,  மாற்று அரசியல் வித்தகர் என பீற்றி கொள்ளும் உங்களுக்கு  புலி எதிர்ர்ப்பரசியல் அல்லது தமிழர் எதிர்ப்பரசியல் தவிர வேறொரு  மண்ணாங்கட்டி நோக்கமும் கிடையாதென்பதை பட்டவர்த்தனமாக வெளிக்காட்டி வருகிறீர்கள் .

      தமிழர்களின் மேல் அல்லது புலிகளின் மேல் உள்ள காழ்ப்பினால்தான்நீங்கள்  யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றம் பற்றி பிரஸ்தாபித்து வருகிறீர்களே  தவிர அந்த மக்கள் மீதுள்ள  அனுதாபத்தினால் .அல்ல.
      உங்கள் பின்னூட்டத்திலுள்ள கருத்துக்கள் காழ்ப்பினால் எழுந்தவையே தவிர அனுதாபத்தினால் எழுந்தவை அல்ல .

      ##  அப்போ  தமிழ் மொழி அரசியல் லாபத்திற்குத்தானே .## மன்னன் ##

      முஸ்லிம்கள் தமது மதத்தை என்னென்ன லாபநோக்கங்களுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை மாற்று அரசியல் கண்ணொட்டத்தோடு , வர்க்கப்பார்வையோடு ,  சம உரிமை தளத்தில் நின்று அலசி ஆராயலாமே ?

      • sakthy says:
        12 years ago

        புலிகள் காலத்தில் உண்மையில் நடந்தது என்ன?
        தெரிந்து கொள்ள இஸ்லாமிய மதகுருவை சந்தியுங்கள்.மிக வயதான அவர் அன்று சொன்ன விளக்கம் இது.அவரின் தற்போதய வயது காரணமாக இடம் தரப்படவில்லை
        அ ரசுடன் இணைந்து செயல்படுபவர்களும்,இராணுவமும் இணைந்து தமிழ்-முஸ்லீம் கலவரங்களை தூண்டிவிட முனைப்பட்டது தெரிய வந்ததால் தான்,அதில் இருந்து காப்பாற்ற வேறு வழி தெரியாமல், வட-கிழக்கில் உள்ள சில இஸ்லாமிய மதகுருவினரின் ஆலோசனையுடன் வெளியேற்ற முடிவுசெய்யப்பட்டது.
        உண்மை தெரியாமல் தொடர்ந்து பொய்களை எத்தனை காலம் தான் சொல்லப் போகிறீர்கள். புலிகள் இல்லாத நிலையில் உ ண்மை சொல்ல வர மாட்டார்கள் என்பது காரணமா?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...