இனப்படுகொலையை திட்டமிட்டு நடத்திய இலங்கை சிங்கள் இராணுவத்தின் காலடியில் வடக்கிலும் கிழக்கிலும் இனச்சுத்திகரிப்பை நடத்துகிறது. வறுமையின் பிடியில் சமூகத்தின் ஒருபகுதி மடிந்துகொண்டிருக்கிறது. சமூகத்தின் இன்னொருபகுதியை உடல் ஊனமுற்றவரகள் ஆக்கியிருக்கிறார்கள். இவ்வாறான ஒரு சூழலில் இராணுவத்தைத் தமிழர்களின் சகோதாரர்கள் என்கிறார் யாழ்பாண மாநகர சபை முதல்வர் .
ஒரு காலத்தில் தமிழர்கள் இராணுவத்தினரை எதிரிகளாக பார்த்த சூழல் மாறி இன்று எம்முடன் இணைந்த சகோதாரர்களாக ஒன்றிப் பிணைந்து வாழும் காலம் உருவாகி விட்டது என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.
நடப்பாண்டில் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 184 புள்ளிகளுக்கு மேல் பெற்ற யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 26 மாணவர்களுக்கு பாதுகாப்பு படையினரின் ஏற்பாட்டில் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
That was something good from the Mayor of Jaffna. None came to the function organised by the then Mayor of Jaffna the late and great Alfred Thuraiyappah during the International Tamil Conferance. It will take some tine for real reconciliation to take place. They have not finished the mapping process. It looks like.
அம்மா சொன்னா சரியாத்தான் இருக்கும். அவர் வாழும் உலகமே வேறே. எல்லா விசயங்களையும் வெள்ளாந்தியா வெளியே பேச முடியுமா? கிடைச்ச பதவியை தக்க வைக்க வேறு வழி?
Mr. Mano what are trying to say? In our times Amma meant Mrs. Srimavo Ratwatte Dias Badaranaike the first women Prime Minister of the world.