இலங்கையில் இன, மத, மொழி பேதங்களைக் கடந்து, அனைத்து இன மாணவர்களும் எல்லா இனத்தவர்களதும் புனித ஸ்தலங்களுக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் அண்மையில் பதுளை, கத்தோலிக்கத் திருச்சபையின் பாதிரியார் திரு.பிரியலால் அவர்களுடனான கலந்துரையாடலின் போது இலங்கையில் கல்வித் திட்டத்தில் நடைமுறையிலுள்ள பல விடயங்கள் குறித்து அவர் தெளிவுபடுத்தினார்.
‘All is depend on need and respect. The human dignity is denied not the human rights’
நாம் காண்பதைத் தாண்டியும் ஏதோவொன்று எல்லாவற்றுக்குள்ளும் இருக்கிறதென்பதை பாதிரியாரின் கருத்திலிருந்து விளங்கிக் கொள்ள முடிந்தது. அதாவது தமிழ் மொழி மூல மாணவர்கள் பௌத்த விகாரைகளை வழிபட வருவதென்பது கல்விச் சுற்றுநிருபம் மூலம் உருவாக்கப்பட்ட பலவந்தமான கட்டளையொன்றின் பிரதிபலன் எனலாம். வெசாக் உற்சவ வாரத்தினை முன்னிட்டு அனைத்து தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு, பௌத்த மத வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்படி சுற்றுநிருபங்கள் அனுப்பப்பட்டிருந்தன. எமது அரசியல் அதிகாரங்கள், பலவந்தமாகவும் ஒருதலைப்பட்சமாகவும் உருவாக்க முற்படும் இவ்வாறான சில நியமங்களின் காரணமாகவே, மத ஒற்றுமைக்கும் இன ஒருமைப்பாட்டுக்குமிடையில் விரிசல்களும், குழப்பங்களும், தடைகளும் ஏற்படுவதாக பாதிரியார் கூறுகிறார்.
மேலும் தற்காலத்தில் மத நல்லுறவு எதிர்நோக்கியிருக்கும் பிரதானமான சிக்கலென பாதிரியார் குறிப்பிடுவது, ஆட்சி அதிகாரங்கள் மீது பேராசை கொண்ட சிலரால் ‘பலசேனா’க்கள் நிறுவப்பட்டு, மத நல்லுறவுக்கு சவால் விடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரச்சினைகளை உண்டுபண்ணுவதாகும். ‘We have a right to our own religion’. எமது மதத்தைப் பின்பற்ற எமக்கு உரிமை இருக்கிறது. அவ்வாறே அடுத்தவருக்கும் இதே உரிமைகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து அனைவரும் ஏனைய மதங்களையும் கௌரவமாக நடத்துவரெனில் இங்கு எந்தப் பிரச்சினைகளும் எழாது.
முன்னாள் ஜனாதிபதி டீ.பீ. விஜேதுங்க கூறிய ஒரு கருத்து நினைவுக்கு வருகிறது. ‘பெரும்பான்மை இனமென அழைக்கப்படும் சிங்களவர் எனும் மரத்தை, சிறுபான்மை எனப்படும் ஏனைய இனத்தவர்கள் கொடி போல பற்றிக் கொண்டு வாழ வேண்டும்.’ அழகான உவமைகள் கொண்டு சொல்லப்பட்ட வாக்கியமாக இது மேம்போக்காகத் தோன்றிய போதிலும், அதனுள்ளேயிருக்கும் அர்த்தமானது, சிறுபான்மையினரை ஒடுக்கும், அவர்களது சுதந்திரத்தையும் உரிமைகளையும் அடக்க முயலும் சிங்களவர்களது அபிப்பிராயங்களையே பிரதிபலிக்கிறதெனக் கூறலாம்.
அத்தோடு பாதிரியார் அவர்கள், இலங்கைக் கல்வித் திணைக்களத்தால் 7 ஆம் தரத்துக்கான சிங்களப் பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ள ஒரு வாக்கியத்தை உதாரணமாகக் குறிப்பிட்டார்.
‘தமிழச்சி ஆனாலும் ஸ்ரீதேவி அழகானவள்’ என்பதே அது.
கல்வித் திணைக்கள அதிகாரிகளது கவனத்தைத் தாண்டி இவ்வாக்கியம் எவ்வாறு இடம்பெற்றது? எந்த நோக்கத்தில் புத்தகத்தில் இவ்வாறு அச்சிடப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை எனினும் இவ் வாக்கியத்தின் உட்கருத்து பல அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது அல்லவா?
*பொதுவாகவே தமிழச்சிகள் அழகானவர்களில்லை.
* ஸ்ரீதேவி அழகானவள் என்பதற்காக மட்டுமே அவளை நேசிக்கலாம்.
* அழகற்ற தமிழச்சிகள் மத்தியில் ஸ்ரீதேவி தப்பிப் பிறந்தவள்.
போன்ற பல தப்பபிப்ராயங்களை சிங்கள மாணவர்களுக்குப் புகட்டுவதற்கு இவ்வரி காரணமாக அமையக் கூடும். இவ்வாறாக பல வரிகள் எல்லாப் பாடப் புத்தகங்களிலும் மறைமுகமாக ஒளிந்திருக்கலாம். இதனைச் செய்பவர்களது நோக்கம் என்ன?
அரசாங்கமானது விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துப் பெற்ற வெற்றியை, அதாவது ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி கொண்டாடப்படும் இவ்வெற்றியை, தற்போது தமிழர்களைத் தோற்கடித்துப் பெற்ற வெற்றியாகக் கொண்டாட சிங்களவர்கள் தூண்டப்பட்டிருக்கிறார்கள். நாடுமுழுவதும் கொண்டாடப்பட்ட இராணுவ வீரர்கள் தினமானது ‘சிங்களவர்களது தின’மாக அர்த்தப்படுத்தப்படுவதானது ஆறி வரும் காயத்தினை மீண்டும் மீண்டும் கீறுவதற்கு ஒப்பானதன்றி வேறென்ன?
– எம்.ரிஷான் ஷெரீப்
தகவல் உதவி – சமபிம
ரிஷான்,
உங்களது எழுத்துக்களை நான் தவறாமல் வாசிப்பதுண்டு. எல்லாவற்றையும் மீறி ஒரு வகையான நடுநிலை கலந்த நம்பகத் தன்மை மேலெழும் ஆக்கங்கள். நீங்கள் சிங்களத்திலும் எழுதுகிறீர்களா என்று தெரியாது, இதே எழுதுக்களை சிங்கள மக்களுக்கும் நீங்கள் கொண்டு செல்ல வேண்டும்.
சபேசனால் எழுதப்பட்டு , மதுரனால் 2006ல் இணைக்கப்பட்ட ” தி இராவணன் கோட் ” என்ற சிறுகதை கருத்துக்களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான வாசகர்களைச் சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது .
இந்த வசனம் இடம்பெறும் பாடப் புத்தகத்தின் முழுமையான பக்கத்தை இணைப்பீர்களா? (வசனம் உள்ள பகுதியை மட்டுமல்ல) Full page.
அது கட்டுரையாளர் குறிப்பிடும் நோக்கமாக இருக்காது என நினைக்கிறேன்.
அஜீவனின் நம்பிக்கை அசாதாரணமானது. அப்படி அவர்கள் எழுதினாலும் தப்பில்லையே. அடிமைகளுள் எப்படி அழகானவள் இருக்கமுடியும்?
உமா நினைப்பது போல தமிழர்கள் அழகானவர்கள் இல்லை என எந்த சிங்களவரும் சொன்னதில்லை. நாம் நம்மை அழகற்றோராக எண்ணுகிறோமா என சந்தேகம் எழுகிறது?
சிங்களவர்கள் அழகானவர்கள் இல்லை என எண்ணுவதாக இருந்தால் தமிழ் திரைப்படங்களை அவர்கள் பார்க்க மாட்டார்கள். அநேக சிங்கள பெண்கள் தமிழர் உடைகளை அணிவதோடு நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டும் மகிழ்கிறார்கள். இது எல்லோரும் அறிந்த விடயம்.
மரம் பச்சையாக தெரிகிறது என்று சொன்னால்
எங்கே மரம் பச்சையாக இருக்கிறது?
மரத்தின் இலைகள் மட்டும்தான் பச்சையாக இருக்கிறது என குதர்க்கம் பேசுவது போல
‘தமிழச்சி ஆனாலும் ஸ்ரீதேவி அழகானவள்’
என்பதை சில வேளை நடிகை ஸ்ரீதேவி அழகானவள் என நினைத்து கட்டுரை வரைந்து விட்டாரோ என்னவோ?
அஜீவன் தவறாக சொல்லிறிங்கள். வட இந்திய பெண்களையே சிங்களப் பெண்கள் பின்பற்றுகிறார்கள். அது எல்லாருக்கும் தெரியும்.
நான் சிங்களப் பகுதிகளில் வாழ்ந்தவன். எனவே எனக்கு அது நன்கு தெரியும். அண்மையில் நான் இலங்கை சென்ற போது சிங்களவர்கள் சப் டைட்டிலோடு ஒளிபரப்பாகும் தமிழ் திரைப்படங்களை பார்க்கிறார்கள். இன்று கிந்தி திரைப்படங்களை விட தமிழ் படங்களே தரம் வாய்ந்தவை என அவர்கள் கருதுகிறார்கள். உதாரணத்துக்கு: அய்யனார் : http://www.lankadrama.com/2011/11/ayyanar-tamil-with-sinhala-subtitle.html
துப்பாக்கி : http://www.lankadrama.com/2012/12/thuppaki-movie-with-sinhala-subtitle.html
சிங்களப் பெண்கள் மேற்குலகப் பெண்களையும் பின் பற்றி வாழ்பவர்கள்.
மேர்வின சில்வா தமிழப் பெண்ணைத்தான் இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்ய வேணுமாம்.
அது சரி தமிழ்ப் படங்களில் தமிழ் பெண்களா நடிக்கிறார்கள்? சிங்களவர்கள் தமிழ் சினிமாவை வைத்துத்தானா தமிழர்களின் அழகை மதிப்பீடு செய்கிறார்கள்?
உமக்கு விதண்டாவாதம் பிடிக்குமோ ? சிங்கள மக்களுக்கு தமிழ் படத்துலநடிப்பவள் தமிழ், அவ்ளோதான்.
“சிங்கள மக்களுக்கு தமிழ் படத்துலநடிப்பவள் தமிழ்இ அவ்ளோதான்”
பின்னே சிங்கள மக்கள் இப்படி இருந்தால் பாடப்புத்தகத்தில் எதையும் எழுதி வைப்பார்கள்தானே!