”இலங்கை மீனவர்கள் இந்திய எல்லையைத் தாண்டி வந்தால், இந்தியா எப்படி சட்டப்படி நடக்கிறதோ அதுபோல் இலங்கையும் சட்டத்தின் அடிப்படையில் நடந்துகொள்ள வேண்டும்” என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, பிரதமரின் வழிகாட்டுதலில், மத்திய உள்துறை அமைச்சரின் நுணுக்கமான மற்றும் சீரிய அணுகுமுறைகளால், 2010ஆம் ஆண்டு முழுவதும், உள்நாட்டுப் பாதுகாப்பில் பெரிய அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழவில்லை என்பதை இந்த அவையில் பதிவு செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கை இந்திய மீனவர்களிடையே பிளவை ஏற்படுதும் இலங்கை அரசின் புதிய தந்திரோபாயத்திற்கு எதிராக தமிழ் நாட்டிலிருந்து குரல்கள் ஒலிக்கும் அளவில் புலம்பெயர் நாடுகளிலிருந்து அவை உருவாகவில்லை. இலங்கையில் மக்கள் கொல்லப்படும் போதெல்லாம் தமிழ்நாடு குரலெழுப்பியிருக்கிறது. அதே தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை அரசால் கொல்லப்படும் போது மெளனம் சாதிப்பது சந்தர்ப்பவாதம.
தொடர்புடைய பதிவுகள் :தமிழக மீனவர் படுகொலைகள்: இரு நாட்டு மீனவர் மோதலா?
குதிரைச் சவாரியை அதிகார வர்க்கம் ஏழை மினவர் மீது நடாத்தும் போது தமிழ் மீனவர் தமக்கிடையேயான பிரிவுகள மறந்து ஒன்றூ படவேண்டும்.புலம் பெயர்ந்தோர் புண்ணாக்கு வியாபாரத்தில் கவனம் செலுத்துவதை விடுத்து தமிழ் இனக் குரலாகவும் ஒலிக்க வேண்டும்.
மீனவர்கள் கொலைக்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட இணையதளங்களில் போய் பாருங்கள் ஈழத்தமிழர் எதிர்ப்புக் குரல் எழுப்பவில்லையா என? அதே சமயம் கொலைவெறி சிஙகள்வன் நடத்தும் உலக கிரிக்கட் போட்டிகளை இலங்கையில் நடத்த தடைவிதிக்கும் படி வேண்டுகோள் விடுக்கப்ட்டும் இன்னமும் 1000 க்கு சற்றும் அதிகமானவரே எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து கையொப்பம் இட்டுள்ளனர். இதில் தமிழக உறவுகள் பங்குபற்றததது ஏன்?