கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 700 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். இவர்கள் கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிறிலங்க கடற்படையினர் 5 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பின்னர், படகுகளில் இருந்த மீன்கள், வலைகளை கைப்பற்றியும், படகுகளை சேதப்படுத்திவிட்டும் சிறிலங்க கடற்படையினர் சென்றுள்ளனர்.
முன்பு வ்டுதலை புலிகல் தாக்கினார்கள், இப்போது இலங்கை ரானுவம்,
in 700 boat cant they catch these lanka soldiers