ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்களில் 2 படகுகளை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு படகுகளில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகில் இருந்த மீனவர்களை சரமாரியாக தாக்கினர். மீனவர்கள் படகில் இருந்த வலைகளையும், பிடித்து வைத்திருந்த மீன்களையும் கடலில் அள்ளி வீசிவிட்டு மீனவர்களை விரட்டியடித்தனர்.
மீனவர்களை கயிறு மற்றும் பிளாஸ்டிக் குழாய்களை கொண்டு தாக்கியுள்ளனர். மேலும், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் மீன்களையும் எடுத்துச் சென்றுவிட்டனர். இன்ஜின் இயங்காமல் இருப்பதற்காக அதனுள் சர்க்கரை கொட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் மீனவர்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர். கரைக்கு திரும்பிய அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
The modern technology must come home to mark the international boundary in the sea – The Palk Straits.