Thursday, March 19, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தமிழக மீனவர்கள் படுகொலை – அழிவு சக்திகள் களத்தில் : சபா நாவலன்

இனியொரு... by இனியொரு...
02/05/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
9
Home பிரதான பதிவுகள் | Principle posts

அமரிக்க உளவுத்துறை ஆலோசனை மையம் 2020 ஆம் ஆண்டு உலகத்தின் அரசியல் படமாக்கல் எவ்வாறு அமைந்திருக்கும் என்ற அறிக்கையில் ஒப்புதல் வழங்கியிருப்பது போல இப்போது மக்கள் எழுச்சிக்கான காலம் உருவாகிவிட்டது. இதுவரைக்கும் மன்னர் ஆட்சியும் சர்வாதிகார ஆட்சியும் கட்டுப்படுத்தும் நிலையிலிருந்த அரேபிய நாடுகளின் சமூக அமைப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள் ஏகோபித்த மக்கள் எழுச்சியைத் தோற்றுவித்திருக்கிறது.

இன்னும் சில ஆண்டுகளில் நிகழக்கூடும் என எதிர்வு கூறப்பட்ட எழுச்சிகளெல்லாம் இப்போது கண்முன்னே நடைபெற்றுக்கொண்டிருக்கிறன. குறுகிய காலத்துள் மக்களைச் சூறையாடிய பல் தேசிய நிறுவனங்களின் நிர்வாகப் பிரதிநிதிகளான அரபுச் சர்வாதிகாரிகளும் மன்னர்களும் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.

அமரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடி அங்கு பெரும் மக்கள் எழுச்சிகளைத் தோற்றுவிகும் சாத்தியப்படுகளை உருவாக்கும் என்று பைனாசியல் ரைம்ஸ் ஆசிரியர் கருத்து கடந்த மாதம் எதிர்வு கூறியிருந்தது. அரேபிய நாடுகளைக் கையாள்வதிலும், போராட்டங்களைத் திசைதிருப்புவதிலும் மேற்குலகம் தோற்றுப் போகுமானால், ஐரோப்பிய அமரிக்க நாடுகளின் இருப்பே கேள்விக்குள்ளாகும் நிலை உருவாகும்.

இதற்கு இரண்டு பிரதான காரணங்கள் முன்வைக்கபடுகின்றன.

1. ஏற்கனவே முதலீடுகளை மேற்கொண்டுள்ள பல்தேசிய நிறுவனங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும். 

2.  உலக முதலாளிகள் எதிர்பார்க்க்கின்ற “சந்தைப்படுத்தலுக்கான சூழல்” பாதிப்படையும்.

தமிழ் நாட்டு மீனவர் கொலைகளின் பின்னணியிலும் இவ்வாறான பல்தேசிய நிறுவனங்களின் அரசியல் பொதிந்திருக்கிறது எனபது வெளிப்படையான ஒன்று.

இந்த நிறுவனங்களின் சந்தைப்படுத்தில் மற்றும் “அமைதியான” உற்பத்திச் சூழல் போன்றவற வியாபார நலன்களிற்கு தமிழ் நாட்டு மீனவர்கள் தடையாக அமையலாம் என்ற அடிப்படையில் ஏழை மீனவர்கள் மீதான உளவியல், இராணுவ யுத்ததைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறன இலங்கை இந்திய அரசுகள்!

வன்னிப்படுகொலைகளின் போது இலங்கை இந்திய அரசுகளைச் சார்ந்திருந்த அத்தனை பிற்போக்கு  அணிகளும் இப்போது மீனவர் படுகொலையின் கோரத்தைத் திசைதிருப்ப முயற்சிக்கின்றன.

இன்றுவரை இலங்கைக் கடற்படை 500 வரையான மீனவர்களைக் கொன்றுபோட்டிருகிறது, அதுவும் கரையோரங்கள் வரைக்கும் மீனவர்களைத் துரத்திவந்து கொலைசெய்திருக்கிறது.

புலிகள் இருந்தவரை மீனவர்கள் கொலைசெய்யபடுவதற்கு அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தார்கள் என்ற காரணத்தை, இலங்கக் கடற்படையோ இலங்கை அரசோ பிரதான குற்றச்சாட்டாக முன்வைத்ததில்லை. புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் எல்லைப் பிரச்சனை என்பது பிரதான குற்றச்சாட்டக முன்வைக்கப்படுகிறது. 

 பேரின வாதத்தால் வெறியூட்டப்பட்ட இலங்கைக் கடற்படையின் கொலைவெறிக்கு இரையான ஈழத் தமிழ் மீனவர்களின் தொகை இந்திய மீனவர்களை விடப் பல மடங்கு அதிகமானது.

 ஆக, கொலைகளின் பின்னணியில் தொக்கு நிக்கும் அடிப்படை நோக்கங்கள் இலங்கை, இந்தியக் கடற்பகுதியை வியாபாரத்திற்குரிய “அமைதி” ப்பிரதேசமாக்குவதே எனப்தை யாரும் சந்தேகிக்க முடியாது.

இலங்கையில் இராணுவ சர்வாதிகாரத்தின் பிடியில் வாழுகின்ற தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் தெற்காசியாவில் புதிய மாற்றங்களோடு மேலெழும் என்பது தவிர்க்கவியலாத சமூகப் புறநிலை.  

இலங்கை இந்திய ஆளும் வர்க்கங்கள் இதையெல்லாம் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றன. நாளாந்தம் அதிகாரவர்க்கத்தின் வியாபாரப் பசிக்கும் அதன் மறுவடிவமான பேரினவாத்த்திற்கும் இரையாகிக்கொண்டிருக்கும் தமிழ்ப் பேசும் மக்களின் தன்னுரிமைக்கான போராத்தின் அவசியம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

சரி, தவறு என்பதற்கெல்லாம் அப்பால் முடிந்து போன வரலாற்றில் ஈழப் போராட்டத்தின் பாதுகாப்புப் பின் தளமாக வங்கக்கடல் ஆர்ப்பரித்திருக்கிறது. தென்னகத்தின் தென்கோடிக்கரைகளுக்கும் ஈழப் போராட்டத்திற்கும் பிரிக்க முடியாத உறவு நிலவிவந்திருக்கிறது.

வன்னியிலும், கிழக்கிலும், யாழ்ப்பாணத்திலும் எதிர்கால எழுச்சியை அழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் அத்தனை இராணுவ நகர்வுகளும் தமிழக மீனவர்கள் கொலைகளோடும் தொடர்புடையது. இலங்கை இந்தியக் கடற்பரப்பை இராணுவக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதென்பது தமிழ்ப் பேசும் மக்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கை என்பது வெளிபடையானது.

மக்களிடமிருந்து பறித்தெடுக்கப்படுகின்ற நிலங்கள் வியாபாரத்திற்குரிய “அமைதிப்” பிரதேசமாக்கப்பட்டு பன்நாட்டு நிறுவனங்களின் தேவைக்கு வழங்கப்படுவது இலங்கையின் நாளந்த நிகழ்வு. இவ்வாறுதான் ஏழை மீனவர்களிடமிருந்தும் பறித்தெடுக்கப்படும் கடற்பிரதேசங்கள் பன்நாட்டு நிறுவனங்களின் வியாபாரத்திற்குத் தாரைவார்க்கப்படும்.

மீனவர் கொலைகள் அவர்கள் மீதான உளவியல் யுத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

ஒரு புறத்தில் அவர்களை அனாதரவானவர்ள் என்ற பய உணர்வை ஏற்படுத்தித் தனிமைப்படுத்தலும் மறு புறத்தில் அவர்களை இலங்கை மீனவர்களுக்கு எதிரான கொடியவர்களாகச் சித்தரிப்பதும் இலங்கை இந்திய அரசுகளின் புதிய அரசியல் தந்திரோபாயங்கள்.

இந்து பத்திரிகை, தமிழ் நாட்டின் அதிகாரவர்க்கம் சார்ந்த புத்திசீவிகள், இலங்கை அரச துணைக் குழுக்கள், தன்னார்வ நிறுவனங்கள், புலம்பெயர் லும்பன்கள் இணைந்த அணிவகுப்பொன்று இந்த நோக்கத்திற்காகக் களமிறங்கியுள்ளது.
தமிழக மீனவர்கள் கோரமாகக் கொலைசெய்யப்படுவது குறித்துப் பேச வரும் போதெல்லாம் எல்லை தாண்டி மீன்பிடித்தல் குறித்துப் பேசுவதே முதன்மையானது என்று இவர்கள்  கூக்குரலிடுகின்றனர்.

புலிகளின் ஜனநாயக மறுப்புத்தான் இலங்கையின் தேசிய இன அடக்குமுறைக்குக் காரணம் என்று எதிர்ப்பியங்களைச் சீர்குலைக்க முனைந்த அதே முகங்கள் மறுபடி களத்தில் இறங்கியிருக்கின்றன.

எது எவ்வாறாயினும், தமிழக மீனவர்களது போராட்டஙகள் இம்முறை தமிழ்த் தேசியவாத வியாபரிகளிடமிருந்து புதிய அரசியல் சக்திகளின் ஆளுமைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிகின்றது. இவையெல்லாம் புதிய நம்பிக்கைகளைப் போராடும் சக்திகள் மத்தியில் விதைக்கிறது.

இது மாற்றங்களுக்கான காலம். அரபு நாடுகளிலிருந்து, தெற்காசியா வரைக்கும் மக்கள் அதிகார வர்க்கங்களின் அரசியல் தந்திரோபாயங்களை உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அரபு நாடுகளில் ஒடுக்கப்பட்ட வர்க்கம் சார்ந்த அரசியல் தலைமையின் இல்லாமையே போராட்டங்கள் திசைதிருப்பப்  படுவதற்கான அடிப்படைக்காரணம். மாறாக,  தெற்காசியாவின் சமூகப் புறச் சூழல் நீண்டகாலப் போராடப் பாரம்பரியத்தையுடையது. மாற்றங்கள் நேர்மறையாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

தொடர்புடைய பதிவுகள் :
தமிழக மீனவர் படுகொலைகள்: இரு நாட்டு மீனவர் மோதலா?

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பன் கீ மூனும் முப்பதாண்டுச் சாட்சியமும் : அஜித்

Comments 9

  1. Pingback: Tweets that mention தமிழக மீனவர்கள் படுகொலை – அழிவு சக்திகள் க
  2. உமா says:
    15 years ago

    தாங்கள் கூறுவது போன்று இது மாற்றங்களுக்கானகாலம்தான். ஆனால்எம்மால் இதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்பதுதான் எமது தற்போதைய கேள்வி. புதிய திசைகளின் ஏற்பாட்டில் நடைபெறும் இன்றைய கருத்தரங்கின் பெறபேறுகளை அறிய ஆவலாக உள்ளோம். ஆவன செய்வீர்களா?

  3. S. Paranthaman says:
    15 years ago

    சபா நாவலன் அவர்களே வெளி நாட்டில் இருந்து புரட்சி செய்தால் இப்படித்தான் அயோக்கியத்தனமாக கட்டுரை எழுத முடியும்! இன்று இலங்கையின் வடக்கில் மீனவர்கள் படு மோசமாக இந்திய மீனவர்களால் சுரண்டப்படுவது அய்ரோப்பாவில் இருக்கும் புரட்சியாளருக்க தெரிய நியாயமில்லை! நூற்றுக்கணக்கான பலம் வாய்நத் மீன்பிடி படகுகளில் வட இலங்கையை ஆக்கிரமித்து இந்திய மீனவர்கள் செய்யும் சுரண்டல்கள் என்ன என்று மன்னார் முதல் முல்லைத்தீவு கடல்வரையுள்ள மீனவ குடும்பங்களின் சிறு குழந்தைகள் கூட கூறும்! பாவம் நாவலனிறகு டச் விட்டு போய்விட்டது! நிங்கள் அடிப்பது இலங்கை தமிழ் மீனவர்களின் வயிற்றில் என்பது கூட தெரியாது உங்கள் இந்திய மோகம் உங்களை ஆட்டிப்படைக்கிறது! பாட்டாளி வர்க்க சுரரண்டல் என்பது இந்த மீனவர்களிற்கும் பொருந்தும்! முடிந்தால் இந்த மினவர்களின் அவலத்தையும் இங்கு எழுதவும்!

  4. தமயந்தி says:
    15 years ago

    “இந்து பத்திரிகை, தமிழ் நாட்டின் அதிகாரவர்க்கம் சார்ந்த புத்திசீவிகள், இலங்கை அரச துணைக் குழுக்கள், தன்னார்வ நிறுவனங்கள், புலம்பெயர் லும்பன்கள் இணைந்த அணிவகுப்பொன்று இந்த நோக்கத்திற்காகக் களமிறங்கியுள்ளது.
    தமிழக மீனவர்கள் கோரமாகக் கொலைசெய்யப்படுவது குறித்துப் பேச வரும் போதெல்லாம் எல்லை தாண்டி மீன்பிடித்தல் குறித்துப் பேசுவதே முதன்மையானது என்று இவர்கள் கூக்குரலிடுகின்றனர்.”

    நாவலன்! இது பச்சை அயோக்கியத்தனமான எழுத்து. எல்லாம் தெரிந்ததுபோல் பாவனை செய்யப் புறப்பட்டால் இந்த அவலம்தான் வரும். அல்லது எந்த முதலாளிகளைக் காப்பாற்ற இந்த வேடம். முதலில் எமது மீனவர்களின் பிரச்சனைகள புரிந்துகொள்ள நேரமிருந்தால் முயற்சி செய்யுங்கள். -தோழமையுடன் தமயந்தி-
    http://www.piraththiyaal.com/2011/02/blog-post_5483.html

  5. நாவலன் says:
    15 years ago

    தமயந்தி..
    அயோக்கியர்களுக்குத் தோழமையுடன் நீங்கள் வழங்கிய கருத்துரைக்கு முதலில் நன்றி. தமயந்தி, எமது போராட்டம் திருடர்களையும், வியாபாரிகளையும், குழுவாதிகளையும், கொலைகாரர்களையும் உருவாக்கியுள்ளது போலவே மனநோயாளிகளையும், கோமாளிகளையும் உருவாக்கியுள்ளது.
    இவர்கள் அனைவர் மீதும் தனிப்பட்ட கோபதாங்களுக்கு அப்பால் சமூக அக்கறையுடன் அணுகவேண்டும் என்பதே எனது அவா. நேரமிருக்கும் சில வேளைகளில் கோமாளிகளின் கும்மாளத்தைப் பார்த்துச் சிரிப்பதுண்டு. உங்கள் இந்தக் கருத்து எனக்கு நகைச்சுவை உணர்வைத்தான் தருகிறது. தமிழ் நாட்டு மீனவர்கள் இந்திய இலங்கை அதிகாரத்தின் கூலிப்படைகளுக்குப் பலியாவது குறித்து எழுதினால் “ம்ம் -ஹ்கும்” அது வேண்டாம் .. தமிழ் நாட்டு மீனவர்களால் இலங்கையின் மீன்பிடி வளங்கள் பாதிக்கப்படுவது குறித்து எழுதச் சொல்கிறீர்கள்.
    இதே போல இலங்கை இராணுவத்தால் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவது குறித்து எழுதினால், ஏன் வட ஆபிரிக்காவில் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவது குறித்த்து எழுதவில்லை .. அது அயோக்கியத்தனம் என்று விரலைச் சூப்பிக்கொண்டே சொல்வீர்கள் போலிருக்கிறது.
    இந்திய இலங்கை அரசுகளால் தமிழ் நாட்டு மீனவர்கள் கொல்லப்படுவதன் உள் நோக்கம் குறித்து ஒரு கட்டுரை .. அது குறித்து உங்கள் கருத்துக்கள் இருந்தால் சொல்லுங்கள்.. விவாதங்களாகத் தொடரலாம். அதைவிடுத்து அப்படி எழுதுவது அயோக்கியத்தன்ம் என்று கோமாளித்த்தனமாகச் சொல்கிறீர்கள்.
    தமயந்தி, குழுவாதம், கோஷ்டிச் சண்டை, தலைமைப் போட்டி, காழ்ப்புணர்வு, அதிகார ஆசை, அரசியல் வியாபாரம், அவதூறுகள் போன்ற அத்தனை குணாம்சங்களையும் 2000 வருடங்களாக நாம் வாழும் மனிதகுலம் சுமந்து வந்திருக்கிறது.

    இவற்றை கழுவிக்கொள்ள சமூகம் சார் வாழ் நிலையே உதவும் என்பது ஒரு புறமிருக்க, சமூகம் குறித்துப் பேசுகின்ற நாம் குறைந்தபட்சம் சில சில்லறை அழுக்குகளையாவது கழுவிக்கொள்ளலாமே.
    அதைவிடுத்து சேற்றை மீண்டும் மீண்டும் வாரி எம்மீதே இறைத்துக்கொள்ளும் போக்கு தோழமையை வளர்ப்பதற்கு உகந்த வழிமுறையல்ல. அவலங்கள் மிகுந்த சமூகச் சூழலில் இவ்வாறான கருத்துக்கள் சில சமயங்களில் நகைச்சுவை உணர்வைத் தந்தாலும், இவற்றிற்கு வெளியிலிருந்து அவதானிக்கும் புதியவர்கள் பலருக்கு விரக்தியையும் வெறுப்பையுமே விட்டுச்செல்லும். இவை குறித்து “நிதானமாக”ச் சிந்தியுங்கள். எலி வேட்டைக்காக நாம் இணைபேற்படுத்தாமல் மலையைக் கிளப்பும் மகத்துவத்தைப் பெறலாம்.

  6. a voter says:
    15 years ago

    //சரி தவறு என்பதற்கெல்லாம் அப்பால் முடிந்து போன வரலாற்றில் ஈழப் போராட்டத்தின் பாதுகாப்புப் பின் தளமாக வங்கக்கடல் ஆர்ப்பரித்திருக்கிறது. தென்னகத்தின் தென்கோடிக்கரைகளுக்கும் ஈழப் போராட்டத்திற்கும் பிரிக்க முடியாத உறவு நிலவிவந்திருக்கிறது.// இது பழங்கதை. 91ற்கு முந்திய நிலபரம்.

    //இலங்கை இந்தியக் கடற்பரப்பை இராணுவக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதென்பது தமிழ்ப் பேசும் மக்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கை என்பது வெளிபடையானது.// தமிழ் பேசும் மக்கள் மீண்டும் எழ நீண்ட காலம் எடுக்கும் என்பது சகலருக்கும் தெரியும். இப்போது நடப்பது தமிழக மீனவர்களின் எழுச்சியைத் தடுப்பதே.குடாநாட்டு மீனவர்களைக் கேட்டுப்பார்த்தால் தமிழகமீனவர்களே அவர்களது பிரதான பிரச்சினை என்பதை அறியலாம். ஆக குடாநாட்டு மீனவர்கள் தமிழகத்தை விட்டு தனிமைப்பட்டு நீண்ட காலம் ஆயிற்று. அவர்கள் முன் இன்றுள்ள பிரச்சினை வர்க்கம் – தொழில் – சார்ந்ததேயன்றி இனம் சார்ந்ததல்ல. எல்லா விடயங்களையும் இனப்பிரச்சினையுடன் போட்டுக் குpப்பாதீர்கள்.

  7. தமயந்தி says:
    15 years ago

    ஹையோ தோழர் நாவலன்! உங்கள் கட்டுரையையிட்டு நான் வழுவவில்லை. தாங்கள்தான்… சரி அதை விடுவோம் உங்களுக்கு நீண்டதொரு பதிலைத்தான் எழுதினேன். அதை இங்கு பதிவிடுவதால் எந்தப் பிரயோசனமுமில்லை என்பது தெரியும். ஏனென்றால் உங்கள் நோக்கத்தில் நீங்கள் மிகவும் தெளிவாகவே இருக்கிறீர்கள். தவிரவும் ஏற்கனவே சிரிச்சுக்கொண்டிருக்கிறீர்கள். மேலும் நான் சிரிப்புக்காட்டி தற்செயலாக நீங்கள் புரையேறிக் கிரையேறி செத்துக் கித்துப் போனால் அந்தப் பழியும் என்னைச் சும்மா விடாது. வேண்டாம். விட்டு விடுவோம். அதென்ன கோமாளிகள் என்ற எகத்தாளமான விழிப்பு. கோமாளிகள் என்றால் உங்களுக்கெல்லாம் ஒரு நையாண்டிதான் என்ன…? கோமாளிப் பாத்திரத்தின் வரலாறுகளை அறிய முற்படுங்கள். நாட்டுக்கூத்துப் பார்த்த அனுபவம் உண்டோ?

    இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன், கரையில் நின்றுகொண்டு நீச்சலடிக்க முடியாது தோழர்!!!

  8. கணேஷ் says:
    15 years ago

    தமிழக மீனவர்கள் தக்கப்படுவதின் முக்கிய நோக்கம் அவர்கள் புலிகளுக்கு உதவினார்கள் என்பதாலேயே.கட்டவிழ்த்து விட்ட வெறி நாய்களாக சிங்கள ராணுவம் செயல்படுவதும் ,அதை இந்திய அரசு வேடிக்கை பார்ப்பதும் இந்திய அரசின் தமிழ் இன விரோத்தத்தை தான் காட்டுகிறது.
    நல்ல கட்டுரை .

  9. THAMILMARAN says:
    15 years ago

    இரு நாட்டு மீனவரிடையே கறீ சாப்பிடும் பிராமணன் இருப்பதாக நான் சந்தேகப்படுகிறேன்.யாரோ இவர்கள பப்பாவில் ஏற்றீ விட்டு விழுத்தப் பார்க்கிறார்கள்.இது நமக்கிடையேயான பிரச்சனை நாமே தீர்க்காமல் பிராமணனை விட்டால் அவன் தன க்கிருக்கும் மனனோய் நமக்கும் இருப்பதாய் நாடகமாட வாய்ப்பிருக்கிறது.மீனவர்களே உங்கள் மண்டாக்கள தூரப் போட்டு மண்டையால் யோசியுங்கள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...