தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்கள் மீதும் தலா 2,63,976 ரூபாய் கடன் சுமை உள்ளது என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்து வந்தது. தமிழகம் கடன் சுமையால் தள்ளாடும் நிலையில் நிதிச்சுமையும் அதிகரித்து வருகிறது.புதிதாக பதவிக்கு வந்த திமுக அரசால் பொதுமான நிதியை செலவு செய்ய முடியவில்லை. விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் ஒப்புதலோடு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முடிவு செய்து அறிவித்தார்.
இன்று அந்த அறிக்கையை வெளியிட்டார். துறைவாரியாக எவ்வளவு கடன் சுமை வருவாய் இழப்பு என்று அந்த அறிக்கையை இன்று வெளியிட்டார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உரிய நேரத்தில் நடத்தாத காரணத்தால் 2,577 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி, உள்ளாட்சி நிர்வாகங்கள் மின்வாரியத்திற்கு வைத்துள்ள கடன் 1,200 கோடி
மின்சார வாரியம், போக்குவரத்துத்துறை இரண்டிற்உம் 2 லட்சம் கோடி கடன் உருவாகியுள்ளது. இது பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என்று அறிவிப்பதற்கு முன்பே இதுதான் நிலை.
வருவாயை விட செலவு அதிகமாகச் செய்ததால் 1.50 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.இன்னொரு பக்கம் மத்திய அரசு ஜி எஸ் டி நிலுவைத் தொகையாக மாநில அரசுக்கு வைத்துள்ள தொகை 20 ஆயிரம் கோடி.
மொத்தத்தில் கடந்த பத்தாண்டுகளில் வருவாயைப் பெருக்காமல் செலவு மட்டுமே செய்து கொண்டிருந்த அதிமுக அரசின் செயலாலாலும் அனைத்து துறைகளிலும் கொடி கட்டிப்பரந்த ஊழலாலும் ஒவ்வொருவர் தலையிலும் 2 லட்சத்து 63,976 ரூபாய் கடன் சுமை கூடியுள்ளது.