மிகக்குறுகிய காலத்தில் தமிழகத்தில் சுமார் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் ஒன்னும் ஏழு கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
புதிய அரசு பொருப்பேற்ற பின்னர் தடுப்பூசி போடும் பணிகளை முடிக்கி விட்டது. தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் தடுப்பூசி இன்மையால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள்.தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 90,000 தடுப்பூசிகள் போடப்பட்டு சேப்பாக்கம் முதலிடத்தில் உள்ளது.சில கிராமங்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு இதுவரை 1.44 கோடி தசுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. 1.41 கோடி டோஸ்கள் இதுவரை மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஏரளமான தடுப்பூசிகளை கடந்த எடப்பாடி பழனிசாமி அரசு வீணடித்தது. ஆனால் இப்போது மக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வம் உள்ளது.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பேசும் போது, “நகர்ப்புற, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 19 இடங்களில் தடுப்பு செலுத்தும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 5 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக முகாம்கள் நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி வருகையில் ஏற்பட்ட ஏமாற்றத்தால் தமிழ்நாடு முழுவதும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்” என்று அவர் கூறினார்.
தமிழகத்தில் பெரும்பான்மை மாவட்டங்களில் தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டுள்ளது.