இதுவரை ஜெயலலிதா அரசை ஆதரித்துவந்த பழ.நெடுமாறன் முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்ட பின்னர் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் ஒரே கொள்கையுடன் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா பங்களிக்கக்கூடாது என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய மறுகணமே முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிப்பதற்கான தயாரிப்பு வேலைகளில் இறங்கிய ஜெயலலிதா மறுநாள் அதிகாலை இடிக்கப்படுவதற்கான உத்தவை வழங்கியுள்ளார். தமிழ் ஊடகங்கள் ஜெயலலிதாவின் தீர்மானத்தை பிரதானப்படுத்திப் பிரசுரிக்க நெடுமாறன் பின் தள்ளப்பட்டார்.
ஜெயலலிதாவையும் பாரதீய ஜனதாவையும் நம்பி முள்ளிவாய்க்காலில் புலிகளின் தலைமையையும் மக்களையும் காத்திருக்குமாறு கோரிய அனைவரது முகத்திரையும் முற்றம் அழிக்கப்பட்டதோடு கிழிந்து தொங்கியது. முள்ளிவாய்க்கால் முற்றம் அழிக்கப்பட்டது குறித்து பலர் ஏமாற்றமடைந்தாலும் ஜெயலலிதாவினதும் ஏனைய அரசியல் வியாபாரிகளதும் முகம் வெளித்தெரிந்ததில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் அக்கறை கொண்டவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.
தமிழர்களின் அவலத்தை சித்தரிக்கும் வகையில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இடித்தமை யாரும் அனுமதிக்க முடியாது என்பதுடன், தமிழக அரசின் இரட்டை முகம் அம்பலம் என நெடுமாறன் தெரிவித்திருப்பது குறிப்பத்தக்கது.
இந்நிகழ்வு நடக்கும் என நெடுமாறனிற்கு முதலிலேயே தெரிந்திருக்கிறது.
இனி இதை வைத்து அடுத்த நகர்வு… / வியாபாரம்…
ஏதோ அறிக்கைகள் விடுவதற்கும்… மக்களை மந்தைகளாக்கி… பரபரப்பு விடயயமாக்கி… காலத்தை ஓட்ட ஜெயலிதா உதவி செய்துள்ளார்.
“இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது என்பதால் தமிழக அரசை அணுகி, அவ்விடத்தை பயன்படுத்தி கொள்ள அனுமதி பெறப்பட்டது. சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் பூங்கா அமைத்து அதை உலகத் தமிழர் பேரமைப்பே பராமரிப்பது என்றும், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தை பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதியை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்வது என்றும் தமிழக அரசுடன் உடன்பாடு செய்து கொள்ளப் பட்டது. அதன்படி கடந்த சில ஆண்டுகளாக அனுமதி புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது.
நடப்பாண்டிற்கு அனுமதியை புதுப்பிக்கக் கோரி பல மாதங்களுக்கு முன்பே மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அனுமதி முடிவடைந்ததும், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாகக் கூறி முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்திருக்கிறது.”
this is the fact…
Tamilnadu politicians are selfish and no one is concerned about Tamils
That is not new any where in the world Mr. Gangadharan. This is something that is going to get the attention of the United Nations and the Security Council. That is for sure. This is all a matter of times.