தமிழ்நாட்டில் ஆனந்த விகடன் சில வாரம் முன்பு தமிழீழக் கோரிக்கையை தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் ஆதரிப்பதான ஆய்வொன்றை வெளியிட்டு இருந்தது..
இதைத் தொடர்ந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தமிழீழத்து ஆதரவு இருப்பதாக கோவை உட்பட சில நகரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வை வெளியிட்டது. இவை அடுத்து வரப்போகும் தமிழ்நாட்டு தமிழினவாத அரசியலுக்கும் புலிசார்பு நடவடிக்கைகட்கும் முன்னோட்டமாக இருந்தது. இ;ந்த ஆனந்த விகடன், இந்தியன் எக்ஸ்பிரஸ் மதிப்பீடுகள் இணையத்தளம் ஊடாக ஒருவரே பல தடவை வாக்கெடுப்பில் கலக்கும் அளவு வாய்ப்புள்ள நிலையில் நடத்தப்பட்டது. எனவே இதை சரியன மதிப்பீடாகக் கொள்ள இயலாது. இந்த பின்புலத் தயாரிப்புக்களின் தொடர்ச்சியாக வை.கோபால்சாமி, ராமதாஸ்,நெடுமாறன், திருமாவளவன், சுப.வீரபாண்டியன் என்போரும் தமிழகக் கொம்யுனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் போன்றோர்களும் இலங்கையில் தமிழினப் படுகொலைகளைத் தடுப்பது என்ற பெயரில் புலிப்பாசிஸ்டுகட்கு ஆதரவு இயக்கமே நடத்தத் தொடங்கினர். இலங்கையில் புலிகள் இலங்கை இராணுவத்திடம் தோல்வி மேல் தோல்வி கண்டு கிளிநொச்சியும் படிப்படியாக விழத் தொடங்கியிருந்த சமயமுமாகும்.
புலிகளைக் காப்பாற்றவே நோர்வே போன்ற மேற்குலக நாடுகளின் நிதியிலும் நிகழ்ச்சி நிரலிலும் இவை தமிழ்நாட்டில் அரங்கேறின. இதன் மூலம் தமிழ்நாட்டில் இலங்கைப் பிரச்சனை, செயற்கையாக வலிந்து மக்கள் கவனத்தை ஈர்க்கவும் இலங்கையில் தமிழ்நாடும், இந்திய மத்திய அரசும் தலையிடத்தக்க சூழல் கட்டாயப்படுத்தி உண்டாக்கப்பட்டது.
இந்திய கொம்யுனிஸ் கட்சியின் தா.பாண்டியன் ஒரு ஸ்டாலினிச சி;த்தாந்த வழிப்பட்ட ஒரு பாராளுமன்ற வாதக் கட்சியின் தலைவர். உலக மயமாதலின் பொருளாதாரப் போக்கில் கூட ‘தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கோட்பாடு” செயற்படமுடியும் என்று நம்புமளவு தத்துவப்பழமைவாதி. புலிகள் மேற்குலக ஏகாதிபத்தியங்களின் இராணுவ அரசியல் கூலிப்படையாக ஒரு பிரிவினைச் சக்தியாக இருப்பதை இவர்களையொத்தவர்கள் காணவியலாது போயினர்.புலிகள் ஆலியமாகும் போக்குக்கு எதிரான சக்தி என்று எவரும் விளங்கி;க்கொள்ளவில்லை. இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணயம் பேசு; தா.பாண்டியன் தமிழ்நாட்டின் சுயநிர்ணய உரிமைக்காக வாதாடுவாரா? காஸ்மீர், நாகலாந்து, காலிஸ்தான், தெலுங்குதேசப் பிரிவுகட்கு தேசிய சுயநிர்ணய அடையாளம் தருவாரா? ஆதரிப்பாரா? இந்தியாவில் நக்சலைட் ஆயுத இயக்கங்களைக் கூட ஏற்காத இவர்கள் புலிப்பாசிச ஆயுதமேந்தலை எப்படி ஆதரிக்கின்றனர்? எப்படி தமிழினவாதத்தின் பின்னால் ஓடுகின்றார்கள்? இந்தியா,? சீனா, மலேசியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் போன்ற முக்கிய ஆசிய நாடுகள் தம் உள்நாட்டு தேசிய இனப்பிரச்னைகள் மதவாதச் சச்சரவுகளை விட்டு நீங்கத் தொடங்கிவிட்டன. இந்த பொது ஓட்டத்துள் இலங்கையும் ஆட்படத் தொடங்கியுள்ளது. ஒரு காலத்தில் மிக நேர்மை மிக்க கொம்யுனிஸ்டுகளால் படைக்கப்பட்ட கொம்யுனிஸ்ட் கட்சிகள் இன்று தமிழக மற்றும் இலங்கை தமிழினவாதிகட்கு தோதான அரசியலுக்குள் வந்து வீழ்ந்துள்ளன. இந்த தா.பாண்டியன் ஏன் இலங்கையில் உள்ள தமிழ், சி;ங்கள, முஸ்லிம் மக்களுக்கு சொல்ல செய்தி ஏதும் இல்லையா? இலங்கைத் தொழிலாளர் வர்க்கத்துக்கும் இலங்கை இடதுசாரி இயக்கங்கட்கும் சொல்ல தா.பாண்டியனின் கொம்ய+னிஸ்ட் கட்சிக்கு அரசியல் வேண்டுகோள்கள் கிடையாதா?
இது இப்படியிருகக் பாரதிராஜா, பாலச்சந்தர், சேரன், சீமான் போன்ற சினிமாக்காரர்கள் திடீரென புலிப்பாஸி;ஸ்டுகளை ஆதரிப்பவர்களாகவும் தமிழ் ஈழத்துக்காக போராடி உயிர் விடத் தயார் என்று அறிக்கை விடுபவர்களாகவும் ஆனார்கள்.பாரதிராஜா பிரபாகரன் தனது தலைவர் என்று பேச, சீமான் பிரபாகரன் தனது நண்பன் என்று விலாசமெழுப்பினார். பிரபாகரனைத் தலைவராகவும் நண்பராகவும் கருதிய பல நூறு பேர் புதைகுழிக்குள் பிரபாகரனால் வழியனுப்பப்பட்ட கதைகளை இவர்கள் ப+ரணமானக அறிந்திருக்கவில்லை. இலங்கையில் ஒன்றரைக் கோடி சிங்களவர்கள் உள்ளனர். நாம் 12 கோடித் தமிழர்கள் உள்ளோம் என்று தமிழ் பேரினவாத திமிரெடுத்து நின்றார்கள். இலங்கை அரசு 1000 கிலோ குண்டுகளை தமிழர் பகுதிகளில் போடுவதாகவும் விழுந்த இந்தக் குண்டுகள் நிலத்தைத் துளைத்துச் சென்று நிலத்தில் இருந்து நீர்பீச்சியடிப்பதாகம் 5 கிலோ மீற்றர் சுற்றளவுக்கு உள்ளவற்றை அழிப்பதாகவும் இவர்கள் தொடர்ந்து சினிமாவில் திரைப்படமாக எடுக்கத்தக்க கதை கூறி வசனங்கள் தீட்டினார்கள். சினிமா வர்ணனை தான் நிகழ்;ந்தது. இலங்கை அரசு கொன்ற தமிழ்மக்கள் தொகையை விட புலிப்பாசிஸ்கள் கொன்ற தமிழ் மக்கள் தொகை அதிகம் என்பதை எவரும் உணரவில்லை. தமிழ்நாட்டில் நடிகை குஷ்பு ஒரு முறை ‘ பெண்கள் திருமணத்துக்கு முன்பு பாலியல் உறவு கொள்வது தவறல்ல” என்று கூறிய போது இன்று புலிகளுக்காக வாதாடும் தலித்தியவாதி திருமாவளவன் போன்றவர்கள் குஷ்பு தமிழச்சிகளையும் அவர்களின் கற்பையும் கேவலப்படுத்திவிட்டதாய் பிரச்சாரம் செய்தார்கள். குஷ்பு தமிழச்சி அல்ல என்று இனவாத சகதி வீசினார். இங்கு குஷ்பு பேசியது முதலாளிய உலகில் நிலவக்கூடிய மிகச் சாதாரணமான பெண் உரிமை ஒரு ஜனநாயக கருத்துரிமைப் பிரச்னை.அதை ஆதரிக்கத் துணிவில்லாது பதுங்கிக் கிடந்த இந்த சினிமாக்காரர்கள் இப்போது திருமாவளவன் கும்பலுடன் சேர்ந்து தமிழின உரிமைக்குப் போரிடுகின்றார்களாம். பாரதிராஜா, பாலச்சந்தர், பாலுமகேந்திரா போன்றவர்கள் சினிமாத் தொழிலாளர் சங்கமான ‘பெப்சி” தமக்கு உரிமைகள் கேட்டும் தொழில் வழங்காது பட்டினி போட்டவர்கள்,இந்த சினிமாத் தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் வேலை இழந்தார்கள்.பட்டினி கிடந்தார்கள். பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். அப்போதும் இந்த பாரதிராஜா, பாலச்சந்தர், பாலுமகேந்திரா போன்ற சினிமாத் தயாரிப்பாளர்கள் கூட்டம் இரங்கவில்லை. இத்தகையவர்கள் இலங்கைத் தமிழர்கட்காக கண்ணீர் வடிக்கின்றார்களாம்.
இந்த சினிமாக்காறர்கள் தமிழ்நாட்டில் தம் சொந்தத் தமி;ழ் தொழிலாளர்களை இரக்கமின்றிச் சாகவிட்டவர்கள் அவர்களின் கோரிக்கைகளை மறுத்துப் பழிவாங்கியவர்கள் – இவர்கள் தமிழகத்தில் எங்காவது சாதிக்கொடுமைகட்கு எதிராக இப்படி ஆக்ரோசமாக ஆர்ப்பாட்டம் செய்ததுண்டா? இந்து மதவெறியர்கட்கு எதிராக கிறீஸ்தவ, முஸ்லிம், சீக்கியர்களைப் பாதுகாத்ததுண்டா? இவர்கள் பிராமணர், தேவர், கவுண்டர் சாதிகளைப் போற்றிப் படம் எடுப்பதும் மதுரைத் தமிழன், கேரளத் தமிழன், மெட்ராஸ் தமிழன் என்று தமிழ்நாட்டில் கூடப் பிரதெசவாதத் சின்னத்தனங்களில் இருந்து விடுபடமுடியாதவர்கள், பெண்களை இழிவுபடுத்தாது நுகர்பண்டமாக்காது ஒரு படம் எடுக்கமுடியாதவர்கள், பொலிஸ் வன்முறையையும் என்கவுண்டரையும் போற்றிப் படம் எடுப்பவர்கள் தமிழ் மக்களின் சாதாரண ஜனநாயக உணர்வுகளை மனித நாகரீக விழுமியங்களை மதித்துப் படமெடுக்காதவர்கள் முதலாளிய வர்த்தக சினிமாவின் நாயகர்கள்.
இலங்கைத் தமிழர்கட்கு ஆக சினிமாத்தனமான ஆர்ப்பரிப்பும் வீர உரைகளும் நிகழ்த்துகின்றார்கள். தமது நடிப்பை சினிமாவுக்கு வெளியே அரசியல் மேடைகளுக்கும் இட்டு வருகின்றார்கள். தமிழ்நாட்டு நடுத்தர வர்க்கத்தின் ஆடை அணிகள், காதல், கனவுகள், நடனம், சண்டை, ஆங்கிலம், தனிமனித வீரம் இவைகளே தமிழ் சினிமாவின் பொதுப் பண்பாகவுள்ளது. முன்பு புலிகள் தமிழ்சினிமா, தமிழ் சினிமாப் பாடல்களை தமது கட்டுப்பாட்டுப் பகுதியி;ல் தடை செய்தனர். படம் பார்த்த மக்கள் தண்டிக்கப்பட்டனர். ஆனால் இன்று புகலிட நாடுகளில் தமிழ்ப்பட விநியோகஸ்தர்களாக சினிமா நடிகர், நடிகைகளை அழைத்து நிகழ்ச்சிகள் சினிமாப் பாடகர்கள் பாடகிகளை அழைத்து தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகம், வெண்புறா அமைப்பு என்பன நிகழ்ச்சிகளை நடத்திப் பணம் திரட்டுகின்றார்கள். தமிழ் சினிமாவுக்கு மிகப் பெரும் சந்தை புகலிடத் தமிழர்களிடம் உள்ளது என்பதுடன் சினிமாவை எதிர்த்த புலிகள் தமிழ்நாட்டில் திரைப்படத்துறையிலும் முதலீடுகள் செய்ததுடன் திரைப்படங்களையு; தயாரிக்கின்றனர். சீமான், தங்கர்பச்சான் போன்ற சினிமாத் தயாரிப்பாளர்கட்கும் புலிகள் நிதி வழங்கியுள்ளனர். எனவே தான் தமிழ்திரைப்படத்துறையில் உள்ளவர்கள் இப்பிரச்னையைக் கையில் எடுத்தனர். மறுபுறம் நடிகர் சங்கத்தில் உள்ள சரத்பாபு, விஜய்காந்த் ஆகியோர் தமது அரசியற் கட்சிகளையும் நோர்வே, ஐ.நா.பற்றிப் பேசுமளவு மேற்பெருக்கி நெருக்கமானவர்கள் தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழ் அகதிகளை ஏறெடுத்தும் பார்த்திராத இந்த சினிமாக் கூட்டம் ஒரு அகதி முகாமுக்குச் சென்று அகதிகளுடன் ஒருவார்த்தை பேசியிராதவர்கள் திடீரென இலங்கைத் தமிழர்கட்காகப் போராட பிறந்திருப்பதாக அறிக்கையிட்டார்கள். இவர்களின் தமிழன் பெருமை பேச்சுக்கள் தமிழ்நாட்டு அரசியலில் பழம் பண்டம் என்பதுடன் இலங்கையில் தமிழ்த்தேசிய வெறியை கௌரவப்படுத்தியமைக்கு மக்கள் இரத்தவிலை கொடுத்து இருந்தனர்.எனவே சினிமாக்காறர்களின் தமிழ் ஆவேசங்கள் முதிரா அறிவுநிலைக்குரிய அற்பர்களின் நடவடிக்கையாக முடிந்தது. சினிமா ஒரு அற்புதசாதனம் என்பதும் மனிதப்பெறுமதிகளை வெளிப்படுத்தக்கூடிய துறை என்றபோதும் அது முதலாளிய பண்பாட்டுச் சூழலின் பிடியில் உள்ளது. இதனையும் மீறிய பல உலகக் கலைஞர்கள் சினிமாவில் இருந்துள்ளனர். உலக மனிதத்துக்காகத் திரைப்படம் படைத்த ஜசன்ஸ்டைன், தன் தாய் நாடான பிரிட்டனை எதிர்த்தும் தனது அமெரிக்க குடியுரிமையை நடுக்கடலில் கப்பலில் பயணம் செய்தபோது துறுந்த பாசிசத்தை அம்பலப்படுத்தி சினிமா எடு;த சார்லி சப்ளின் போன்றோர் இருந்திருக்கின்றார்கள். மேற்குலகில் மரணதண்டனை எதிர்ப்பு, அணுஆயுத எதிர்ப்புக்குத் தம்மைத் தந்த சினிமாக் கலைஞர்களும் ஈராக் யுத்த எதி;ர்ப்பு முதல் ஏகாதிபத்தியங்களின் உலகப் பயங்கரவாதத்தை எதிர்க்கும் சினிமாத் துறைப்படைப்பாளிகளும் இன்று இருக்கின்றார்கள். கலைஞர்கள் இன,மத, மொழி,நாடு கடந்த மனித உணர்வுகட்காக நிற்கவேண்டும். இலங்கையின் சிங்களக் கலைஞனான காமினி பொன்சேகா, விஜயகுமாரதுங்க போன்றவர்கள் சிங்கள, தமிழ்,முஸ்லிம் வேறுபாடு கடந்த சினிமாக் கலைஞர்களாக உயர்ந்து நின்றிருந்தார்கள். ஆனால் நமது தமிழ்நாட்டு சினிமாக்காறர்கள் தீவிர இந்தியத்தன்மை, தமிழின வெறி, இவைகளை விட்டுக் கூட நீங்கமுடியாத உலக மனிதத் தரிசனம் அறியாதவர்கள், தமிழ்நாட்டில் உள்ள சிறந்த நடிகர் எனக் கருதக்கூடிய கமலகாசனுக்குக் கூட தமிழினவாதப் பெரு நோயிலிருந்து தப்பமுடியவில்லை.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்
நெடுமாறன், வை.கோபால்சாமி, ராமதாஸ், திருமாவளவன் போன்றோரையடுத்து பிற்காலத்தில் சரத்குமார், விஜயகாந்த் போன்ற சினிமா அரசியல்வாதிகளும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவு என்ற பெயரில் புலிகளை ஆதரித்து வந்தனர். இவர்கள் பழந்தமிழன் பெருமைகளின் மூழ்கும்படி உலக மயமாதலின் முன்புள்ள தமிழருக்கு அழைப்பு விட்டனர்.போர்க்கொடுமைகளில் ஒரு போதும் வாழ்ந்தறியாத இந்த நபர்கள் வீரப்போர், புறநாநூற்றுத்தமிழன் பற்றிய காலத்துக்கொவ்வாத போக்குகட்கு தமிழக மக்களையும் இழுத்துவிட முயன்றனர். ஆனால் தமிழக மக்கள் இந்தப் பருவங்களைத் தாண்டிவிட்டனர். அவர்கள் உலக மயமாதலில் கலக்கும் இந்தியப் பொருளாதாரத்தின் காலத்தில் வாழ்ந்தனர். தீவிரமான ஆங்கிலம் கற்றல், பில்கேட்ஸ் மற்றும் அப்துல்கலாம் கனவுகளில் அவர்கள் இருந்தனர். ஆனால் இந்த மேற்படி அரசியல்வாதிகள் இந்திய முதலாளிய வளர்ச்சிக்கு எதிரான மேற்குலக நாடுகளின் பிரிவாக மற்றும் சாதிய சக்திகளாகவும் இருந்தனர். முக்கியமாக ராமதாஸ், திருமாவளவன் கும்பல்கள் தொடக்கத்தில் தமிழ்த்தேசியம், இந்த மதவாதங்களை எதிர்த்தே அரசியல் தொடங்கியவர்கள் பின்பு அச்சக்திகளுடன் ஒன்று சேர்ந்தவர்கள். இவர்கட்கு மேற்குலக தொடர்பும் NGOS உறவுகளும் இருந்தது. இவர்கள் கருணாநிதி போன்றவர்கள் தொடர்ச்சியாகப் பேசி வந்த திராவிடர், தமிழர் அரசியலை தமதாக்கிக் கொண்டனர். கருணாநிதி திராவிடர் -ஆரியர் போன்ற கருத்துக்களை பல வருடம் முன்பே விட்டமைக்கான காரணங்கள் இருந்தது.கல்லக்குடியில் கருணாநிதி தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்த காலத்தில் அவர் தான் போட்டிருந்த வேட்டி சட்டைக்கு மட்டுமே சொந்தக்காறர். இன்றோ கருணாநிதி பல பத்துக் கோடிகட்கு அதிபதி அவரது குடு;ம்பமே தமிழ்நாட்டின் கோடீஸ்வரக் கும்பல்களின் ஒன்று. ஊடகத்துறை முதல் பல தொழிற்துறைகளிலும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல பக்கத்து மாநிலங்கட்கும் பரவும் நிலையில் உள்ளவர்கள். இற்கு மூலதனத்துக்கு இனம், மதம், நாட்டு எல்லை கிடையாது. முதலாளி கருணாநிதிக்கு இப்போ தமிழ்மானம்,திராவிடப் பெருமை, பிராமணிய, ஆரிய வெறுப்புக்கள் அவரது வர்க்க ரீதியில் தேவையற்ற பெருஞ்சுமைகளாகும். இந்திய முதலாளியம் ஆசியாவிலும் அதற்கு வெளியில் உலக ரீதியிலும் பரவும் நிலையில் இவை பெரும் தடைகளாகும். கருணாநிதி இடையிடையே தமிழன் பெருமை பற்றி முக்கி முனகினாலும் அது கருணாநிதியின் தமிழறிஞர், தமிழினப் போராளி என்ற தனிமனித பாத்திரத்தின் அடையாளம் காக்கும் பொருட்டு மட்டுமே எழுப்பப்படுவதாயிற்று. தமிழ்நாட்டின் நடுத்தர வர்க்கம் முன்பு போல ஆரிய திராவிட அரசியலை பின் தொடரவில்லை. அது வலிமை படைத்த இந்தியர் மற்றும் சொந்த, கம்பியுட்டர் என்ஜினியர், software கனவுகளிலும் தன்னை துரத்திக் கொண்டு இருந்தது. இங்கு கருணாநிதி மாறவில்லை. இந்திய அரசியல் பொருளாதாரச் சூழல்கள் கருணாநிதியை மாற்றின. அண்ணாத்துரை காலம் முதலான திமுக வின் மேற்குலக தொடர்புகள் பிரிவினைவாதப் போக்குகள் இன்று இவர்கள் இப்போ இந்திய மூலதனத்தின் பலத்தின் ஒரு பகுதியாகத் திரள்வதுடன் முடிவுக்கு வந்தது. எனவே தான் மேற்குலகு புதிதாக திருமாளவன், ராமதாஸ்,வை.கோ போன்ற புதியவர்களைத் தேடிப்பிடிக்க வேண்டி வந்தது.இவர்களே தமிழ்நாட்டில் மீண்டும் தமிழினப் பிரச்னையை கிளப்பியபோது கருணாநிதிக்குச் சிக்கல் எழுந்தது. அவர் தனது பாரம்பரியமான ‘தமிழனக் காவலர்” பெயரையும் இந்தியா தழுவிய முதலாளிய வளர்ச்சியுடன் பிணைத்த தனது நலன்களையும் ஒன்று சேரக்காக்க வேண்டிய கட்டாயம் வந்தது.
கருணாநிதி மிகவும் தந்திரமாகச் செயற்பட்டார். நெடுமாறன், வை.கோ, ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்களையும் மிஞ்சத்தக்க இலங்கைத் தமிழர் ஆதரவை வெளியிட்டதுடன் மந்திரி பதவி துறப்பு, மத்திய அரசுக்கு காலக்கெடு , பெரும் பொதுக்கூட்டம் என்று பெரும் ஊடகத் துணையுடன் அவர் செயற்பட்டபோது நேரடி புலி ஆதரவுச் சக்திகள் முக்கியத்துவமற்கு 3ம் 4ம் இடங்கட்கு அடித்துச் செல்லப்பட்டனர். கருணாநிதியால் தூண்டிவிடப்பட்ட தமிழ்நாட்டு சினிமாக் கூட்டமானது ராமதாஸ், திருமாளவன்,வை.கோவையும் கொம்யுனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியனையும் கடைசி நிலையில்இருத்திவிட்டது. இங்கு கருணாநிதி இப்பிரச்னையை கையாளத்தக்க தனது இடத்தைப் பெற்றுவிட்டார். புலியாதரவு அரசியல் சக்திகளும் கருணாநிதியே இப்பிரச்னையைத் தீர்த்துவைக்கவேண்டும் என்று அவரை வேண்டத் தொடங்கினர். இவ்வாறு கருணாநிதி – பிரபாகரனையும் மிஞ்சிய உலகத்தமிழர்களின் தலைவரானார். இந்த அங்கீகாரத்துடன் அவர் இந்திய – இலங்கை அரசுகளின் பொருளாதார அரசியல் , இராணுவ நலன்கள் பாதிக்கப்படாத வகையில் செயலிலிறங்கினார். இந்தியா தலையிடவேண்டும். இலங்கைத் தமிழர்களைக் காக்கவேண்டும். யுத்தத்தை நிறுத்தவேண்டும் என்ற புலிப்பாசிஸ்டுகளின் தமிழக ஆதரவுச் சக்திகளின் அரசியலானது கடைசியில் இலங்கைத் தமிழ் மக்களுக்கு உணவு,மருந்து அனுப்பும் இந்தியத் தீர்மானமாக முடிவடைந்தது. முன்பு இந்தியா இலங்கைக்குள் ஊடுருவி உணவுப் பொட்டலங்களை வீசிய காலம் திரும்பி வரப்போகின்றது என்று காத்திருந்தவர்கள் தலையில் இடி வீழ்ந்தது. தமிழ்நாட்டில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி சனங்களை வீதிக்கு இறக்கி அரசாரை நிர்ப்பந்தித்து இலங்கையில் யுத்தத்தை நிறுத்திப் புலிகளைக் கடைசிக்கட்டத்தில் காப்பாற்றி விடலாம் என்ற நோர்வேயின் திட்டத்திற்கு செயற்பட்ட தமிழ்நாட்டு புலியாதரவு சக்திகள் தோல்வியுற்றனர். இவர்களை விட சினிமாக்காறர்கள் செய்த ஆர்ப்பாட்டங்கள் ஊடக முக்கியத்துவத்தைப் பெற்றது. இலங்கைத் தமிழர் ஆதரவு என்ற பொதுக் கோரிக்கையுடன் புலிகளையும் உள்ளடக்கிக் காத்து விடலாம் என்ற புலியாதரவு அரசியல் சக்திகள் எண்ணம் தடைப்பட்டது. இலங்கைத் தமிழ்மக்களையும் புலிகளையும் வௌவேறாகப் பிரித்துப் பார்க்கவேண்டும் என்ற கோரிக்கைகள் பலம் பெற்றன. புலியாதரவு சக்திகள் பிரிவினைச் சக்திகள் என்ற குற்றச்சாட்டுக்கள் பெருத்தன. எனவே தமிழக புலிப்பாசிச ஆதரவாளர்கள் செயற்கையாகக் கிளப்பப்பட்ட புதிய நிலைமைகள் சரியத் தொடங்கியதும் பழைய யதார்த்த நிலைமைகட்குப் பின்வாங்கத் தொடங்கினர்.
தமிழ்நாட்டில் புலியாதரவு நிகழ்வுகள் தொடங்கி உச்சம் பெற்றுக் கொண்டிருந்த சமயம் இலங்கையின் அமெரிக்கத் தூதுவரான றொபேர்ட் பிளக் சென்னையில் தோன்றினார். 24.10.2008 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் அவர் பேசியதாவது, ‘புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பே தமிழ்மக்களின் பிரச்னை தீர்க்கப்படும் என்ற ராஜபக்சவின் கருத்தை தான் ஏற்கவில்லை எனவும் புலிகள் தோல்வியுற்றாலும் ஒரு ஆயிரம் பேராவது மிஞ்சியிருந்து கொரில்லாப் போராட்டத்தை தொடர்வார்கள்” என்ற சரத் பொன்சேகாவின் கருத்தையே தான் ஏற்பதாகவும் கூறினார். இவர் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னையை தமிழ்நாட்டுக்கும் எடுத்துச் சென்றதுடன் அங்குளள் புலிப்பாசிச ஆதரவு சக்திகளைப் பலப்படுத்த முயன்றார். இவர்கள் எல்லோரும் தமது வளர்ப்பான புலிகளை அழிவிலிருந்து காக்க முயன்றனர்.ஏகாதிபத்திய பிரிவினைச் சக்தியான வை.கோ. ஏன் தமிழ்நாட்டில் திராவிட நாடு கேட்கும் போராட்டத்தை தொடங்கக்கூடாது. ராமதாஸ் வன்னியர்கட்கும் திருமாவளவன் தலித்துகட்கும் சமஸ்டி கேட்கக்கூடாது. இவர்கட்கு இலங்கையின் பல்லினக் கலாச்சாரத்துள் உள்ள மக்களை தனிநாட்டுப் பிரிவினைக்கு தள்ளிவிட புலிப்பாசிசக் கொடுமையிலிருந்து தமிழ்மக்கள் மீண்டு வர முடியாமலும் செய்ய இவர்கள் யார்? கடைசியாக இவர்களை ஆட்டுவித் பின்புல நாடு பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கியது. 26 அக்டோபரில் Srilanka Guardian உட்பட பல ஊடகங்கள் புலியாதரவு சக்திகட்கு தமிழ்நாட்டில் புலிகள் மட்டுமல்ல நோர்வேயும் பல மில்லியன் குரோன்கள் நிதியுதவி பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கின. இலங்கையில் தமிழினப் படுகொலை நடப்பதாகவும் கோவில்கள், மசூதிகள்,தேவாலயங்கள் குண்டு வீசித் தாக்கப்படுவதாகவும் தமிழ்பெண்கள் கட்டி வைக்கப்பட்டு சிங்கள இராணுவத்தால் கதறக்கதற கற்பழிக்கப்படுவதாயும் தமிழ்நாட்டு தமிழின வெறிகள் புலிகளின் பொய்ப்பிரச்சாரத்தை நிகழ்த்த பொய்களைப் பரப்பினர்
சினிமா மற்றும் அரசியல் கிசுகிசுச் செய்திகளில் வாழ்க்கை நடத்தும் தமிழினவாத நக்கீரன் சஞ்சிகை’ தமிழர்களைக் கொல்ல இரசாயனக் குண்டு”, ‘குழந்தைகளைப் பொசுக்கும் சிங்களன்”, ‘பிரபாகரனின் நள்ளிரவுப் பிளான்”, ‘மனம் திறந்த பிரபாகரன்” என்ற தலையங்கங்களில் புலிகளை மெச்சும் செய்திகளும் படங்களும் வெளியிட்டது.
ஸ்டாலின் கால அரசியலில் இருந்து வெளிவரமுடியாத புதிய முதலாளிய உலக மயமாக்கலுக்கு மாற்றான மாக்சிய அரசியல் போக்கை தேர்ந்து கொள்ளமுடியாக தமிழகத்திலிருந்து வெளிவரும் ‘புதிய ஜனநாயகம்” அரசியல் சஞ்சிகையானது இன்னமும் சுயநிர்ணயம் சிங்களப் பாசிசம் பேசி புலியாதரவு அரசியல் எழுதுகின்றது. சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் இணைந்த இலங்கைத் தொழிலாள வர்க்கம் இருப்பதும் ஒரு பல்லினகலாச்சார வாழ்வு இல்லாமல் சோசலிசத் திசையில் இன்றைய ஆசிய மயமாகும் பொருளாதார நிகழ்வுப் போக்கில் முன்னேறமுடியாது என்ற பார்வையும் இவர்களிடம் இல்லை. ஆசிய முதலாளித்துவ வளர்ச்சி ஏற்பட ஏற்பட இன,மத, பிரதேச வேறுபாடுகள் தகர்ந்து கண்டம் தழுவிய சோசலிச பொழுதுபோக்குகளே எதிர்விளைவாக இருக்கும். நோர்வே உட்பட மேற்குலக ஏகாதிபத்தியம்கள் புலிப்பாசிஸ்டுகளின் பின்புறம் செயற்படுவதையிட்டு இவர்கள் கவலையுறாமல் புலிப்பிரிவினை வாதத்தையும் எதிர்ப்புரட்சியின் பயங்கரவாதத்தையும் ஆதரிக்கின்றார்கள்.
NGO ஜெயபாலன்
நீருள்ளவரை மீன் குஞ்சு துள்ளும் என்பது போல தமிழினவாத அரசியல் உள்ளவரையில் ஜெயபாலன் போன்றவர்கள் புகலிட அரசியலில் சஞ்சரிப்பார்கள். தமிழ் மக்களின் அரசியலில் அடாத்துப் பண்ணுவார்கள்.
ஜெயபாலன் முன்னொரு காலத்தில் ஒரு ஸ்டாலினிஸ்ட் பின்பு தமிழ்தேசிய வாதத்துக்கு கவிதையெழுதி பின்னர் புகலிட தமிழ் ஜனநாயகவாதிகட்கும் புலிகட்கும் முதலில் பாலம் போட்டவர்களில் ஒருவர். இறுதியாக அவர் வந்த இடம் நோர்வேயின் NGO நபர் என்ற அரசியல் தரிப்பிடம்,இத்தகைய ஜெயபாலன் தமிழ்நாட்டில் சிறு அரசியல் கட்சிகளும் சினிமாக்காறர்களில் ஒரு பிரிவும் இலங்கைத் தமிழரைப் பாதுகாக்கின்றோம் என்று புலிப்பாசிஸ்டுகளைப் பாதுகாக்க ஒன்று குவிந்தபோது அங்கும் தோன்றினார்.அதே பொழுதில் தமிழர் தேசியக்கூட்டமைப்பும் தமிழ்நாட்டில் இருந்தனர். ஏற்கனவே திட்டமிட்டபடி அரசியல்,மற்றும் ஊடகங்களின் துணையுடன் இவர்கள் கூடினர்.வை.கோபால்சாமி, நெடுமாறன் போன்றவர்கள் புலிகள் ஊடாக நோர்வேயுடன் அறிமுகம் பெற்று இருந்தனர். நோர்வே நபராக ஜெயபாலனும் வருகை தந்தமையும் நாடார்கட்கு தனிக்கட்சி தொடங்கிய நடிகர் சரத்குமார் நோர்வே பற்றிப் பேசுவது; இந்த அரசியல் முயற்சிகளின் பின்புலம் நோர்வே இருப்பது உறுதியானது. சில ஊடகங்களிலும் நோர்வேயே தமிழ்நாட்டில் இந்த புலியாதரவு இயக்கத்தை ஏற்பாடு செய்து நிதி தந்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. ஒரு காலத்தில் எம் மக்கள் துரத்திய மேற்கும் சந்திக்க திரும்பவும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னைக்கு சம்பந்தப்படுத்தும் அரசியல் போக்குகள் நிகழ்ந்தது. ‘விட்டுப்போன மேற்குலகச் சனியன்கள் மீண்டும் விருந்து போட்டு வரவழைக்கப்பட்டன. இலங்கையுள் எரிபொருள் இருப்பதும் ஆசிய வளர்ச்சியுடன் இதுவரை இப்பிரதேசங்களில் நிலவிய இன, மத, பிரதேச மற்றும் நாடுகட்கு இடையேயான முரண்பாடுகள் குறையத் தொடங்குவதும் இவற்றை செயற்கையாக தூண்டிவிடவும் மேற்குலக நாடுகளின் சார்பில் நோர்வே தலையீடு செய்தது.
நோர்வே ஏன் தனது பக்கத்து நாடான பெல்ஜியத்தில் உள்ள ” பிளாமன்” மற்றும் Wallenen பிரச்னையில் தலையிடவில்லை? கோர்சிக்கா பிரிவினைக்கும் பால்கன் நாட்டு விடுதலைக்கும் உதவாமல் பல ஆயிரம் கிலோ மீற்றர் தாண்டி ஏன் இந்தியத் துணைக்கண்டத்துக்கு வருகின்றது? மேற்குநாடுகள் முழு ஆசியப் பிராந்தியத்திலும் சீனா முதல் இந்தியத்துணைக்கண்டம் வரை உள்நாட்டு கலகங்கள் பிரிவினைகளை பயங்கரவாதத்தை ஊக்குவித்தார்கள். புலிகட்கு நோர்வே பயிற்சி, நிதி என்பன தந்தமை புதிய செய்திகளல்ல. புலிகளை மட்டுமல்ல புலியை எதிர்க்கும் ஜனநாயகவாதிகள் என்று அறிவித்துக் கொண்ட புகலிடத்திலுள்ள ஜெயதேவன் முதல் SLDF நபர்கள் வரை நோர்வேயுடன் தொடர்புடையவர்களே. எனவே புலிகளை மட்டும் அல்ல அவர்களை எதிர்க்கும் தமிழ் அரசியல் குழுக்களையும் நோர்வே கையாண்டது. இங்கு ஜெயபாலன், மற்றும் சண்முகரத்தினம் எனப்படும் சமுத்திரன் போன்ற நபர்களும் நோர்வேயின் NGOS ஊடாகத் தோன்றியவர்களாவர். எல்லோருமே நோர்வேயின் கட்டுள் அவர்களின் வழி நடத்தலுக்குள் இயங்கினர் என்று நாம் கொள்ளமுடியும். ஜெயபாலன் தமி;ழ்நாட்டில் இருந்தபடி ஐரோப்பிய தீபம் தொலைக்காட்சிக்கு தொலைபேசியில் செவ்வி தந்தார். ‘இலங்கை அரசு 400 தமிழக மீனவர்களைக் கொன்று விட்டதாகவும் 1000 பேரைக் காயப்படுத்தியுள்ளதாகவும் இலங்கைத் தமிழர்களை மட்டுமல்ல தமிழகத் தமிழர்களையும் இனப்படுகொலை செய்யத் தொடங்கியிருப்பதாகவும்” கூறினார். இங்கு புலிப்பாசிச ஆதரவு நபரான ஜெயபாலன் பொய்களும் மிகைப்படுத்தல்களும் இல்லாமல் தனது தமிழினவாத அரசியலில் உயிர்தரித்திருக்க முடியாது என்பதல்ல பிரச்சனை. இதை எச்சந்தர்ப்பத்தில் எந்தப் போக்கை பலப்படுத்தக் கூறினார் என்பதே கருத்திற் கொள்ள வேண்டியதாகும்.உண்மையில் இந்திய மீனவர்களே நீண்டகாலம் இலங்கை கடற்பரப்புகள் வந்து மீன்பிடிப்பதை வழக்காய் கொண்டு இருந்தனர். இது ஏதோ இலங்கைக் கடல் மீது ஆக்கிரமிக்கும் குணத்தால் அல்ல மாறாக குறுகிய கடற்பிரதேசத்தை பல ஆயிரம் மீனவர்கள் பங்கிடவேண்டி வந்து நெருக்கடிகளாகும். இலங்கையும் இந்தியாவும் புவியியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஒரே நாடாக ஒரே நிர்வாகமாக இருப்பதே. அனைத்து இந்தியத் துணைக்கண்ட வளங்களையும் பங்கிட உள்ள வழியாகும். இந்தியா இலங்கை இடையேயுள்ள 24 மைல் கடற்பரப்பில் 12 கடல் மைல்கள் இலங்கைக்குரியதாகும். வல்வெட்டித்துறைக் கள்ளக்கடத்தல் தொழில், கள்ளத் தோணி வருகை என்பனவே. இலங்கை கடற்கண்காணிப்பை அதிகரிக்கக் காரணமாகும். இதில் அடிக்கடி இலங்கைக் கடல் எல்லையுள் நுழையும் இந்திய மீனவர்கள் பிரச்னைகளை எதிர்கொண்டனர். இங்கு இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படைப்பிரச்னை என்பது இலங்கைத் தமிழர் பிரச்னைக்கும் முந்தியது தமிழ் இயக்க ஆயுத நடவடிக்கைகள் நடந்தபோது இது தீவிரமடைந்தது.இந்திய மீனவர்கள் புலிகட்கு ஆயுதம், பொருட்கள், கடத்தும் தொழிலில் ஒரு பகுதி கூட்டாகச் செயற்பட்ட உண்மைகளும் இருந்தது. இஙகு ஜெயபாலன் புலிப்பாசிஸ்டுகட்கு சார்பாக வலை வீசுகின்றார். புலிகள் இலங்கைக் கடற்படை போல் உடைதரித்து இந்திய மீனவர்களைச் சுட்டுக் கொன்றமை அவர்களைக் கடத்தியமை , மீன்பிடி வள்ளங்கள் வலைகளை அபகரித்தமை ஆகியவைகளிலும் ஈடுபட்டு இலங்கை அரசு தமிழக மீனவர்களைத் தாக்குவதான கருத்தியலை உருவாக்கினர். இதன் மூலம் தமிழக மக்களையும் இந்திய அரசையும் இலங்கைக்கு எதிராகத் திருப்பவும் முயன்றனர். தமிழ்நாட்டு ஒரு பகுதி ஊடகங்களும் இப்போக்குகட்கு அனுசரணையாக இருந்தன. எனினும் இந்திய அரசு இலங்கையுடன் முரண்பட இவை காரணிகளாக இருக்கவில்லை. ஆசியப் பொது ஓட்டத்துள் இந்திய முதலாளிய அரவணைப்புள் இலங்கை இருந்தது. இராணுவம், பொருளாதார, புவியியல் போக்குகளால் அது பாதுகாக்கப்பட்டது.
ஜெயபாலன் போன்றவர்கட்கு புதிய உலகார்ந்த நிலைமைகளை அடையாளம் காண முடியவில்லை. இவர்கள் 20 வருடங்கட்கு முந்திய இந்திய – பாகிஸ்தான் சச்சரவு இந்திய – சீன மோதல் காலத்தில் வாழ்ந்து வந்தனர். பி;ற்கால ஆசியாக்கண்ட முதலாளியப் பொருளாதார வளர்ச்சி – தொழிற்துறை, புதிய இணைந்த போக்குகளை காணத் தெரியாத வரிசைக்குள் இருந்தனர். 10.06.2008 தீபம் தொலைக்காட்சியில் தோன்றிய ஜெயபாலன் சிங்கள மக்களைப் புலிகள் கொல்வது குண்டுகள் வைப்பது பற்றிய பிரச்னைக்கு பதிலளிக்கையில்,
‘இதற் தாயக எல்லைப் பாதுகாப்பு அரசைப் பேச்சுவார்த்தைக்கு இணங்கச் செய்வது போன்ற காரணிகள் புலிகட்கு இருப்பதாய் கூறியதுடன் இலங்கை அரசு” தமிழர்களைத் தாக்கி முஸ்லிம்கள் மேலும் முஸ்லிம்களைத் தாக்கித் தமிழர்களையும் அடிப்பதாக தனது பரந்த அரசியல் மதிநுட்பத்தால் கண்டறிந்து கூறினார். நாம் ஜெயபாலனின் வாதத்தை ஏற்பதாயின் வடக்கிலிருந்து 2 லட்சம் முஸ்லிம்களைக் குடியெழுப்பியது, பள்ளிவாசல்களில் அவர்களை தொழுகையி;ன் போது சுட்டு; சவமாக்கியது எல்லாம் புலிகள் சம்மதப்பட்டுச் செய்யவில்லை. புலிகளின் சகோதர இயக்கப்படுகொலைகள், சுட்டு வெட்டி, குண்டு வைத்து கொன்றவைகள் யாவும் அரசு ஏற்படுத்திய நிர்ப்பந்தத்தால் செய்யப்பட்டவை என்றாகிறது.தமிழினவாதத்துக்கு புலிப்பாசிசத்துக்காக ஜெயபாலனை விட எவரும் சிறப்பாக வழக்காட முடியாது. தமிழ்தேசியம், ஆசியமயமாதலில் அரசியல் பசையற்ற சக்கையாகிவிட்டது. அதைச் சார்ந்து கவிதை படைத்த ஜெயபாலனும் படைப்பாற்றல் வரண்டு வெளிப்படையாகவே மேற்குலக ஏகாதிபத்திய கருத்துக் காவிகளாகிவிட்டனர். ஜெயபாலன் நிலையற்ற மனோ நிலை படைத்தவர்.சந்தர்ப்பவாத அரசியல் பாரம்பரியம் கொண்டவர் என்ற காரணிகளை விட அவரது யாழ் நடுத்தர வர்க்க நிலையாமைக்குணமே நாளுக்கொரு அரசியலுக்கும் இறுதியாக புலிப்பாசிசத்தின் புதைகுழியுள்ளும் தள்ளிவிட்டுள்ளது. புலிப்பாசிசம் அழியும்போது இவர்களும் கூடவே கண்ணாமல் போவார்கள். அரசியல் சூனியத்துள் துரத்திக் கலைக்கப்படுவார்கள்.
சர்வதேச சமூகம்
மேற்குலக ஏகாதிபத்தியங்கள் உலகமயமாதலின் பின்பு தமக்குத் தாமே இட்டுக் கொண்ட பெயரே சர்வதேச சமூகமாகும்.இந்தச் சர்வதேச சமூகம் என்ற சொல்லடுக்குள் ஆசிய, ஆபிரிக்க,அமெரிக்க நாடுகள் இடம் பெறுவதில்லை என்பது கவனிக்கத்தக்கது. உலகின் பல பாகங்களிலும் யுத்தம் இடம் பெறுவதில்லை என்பது கவனிக்கத்தக்கது. உலகின் பல பாகங்களிலும் யுத்தம் செய்து வருபவர்களும் உலகப் பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் உலகில் எப்பாகத்திலும் போர் செய்யவும் குண்டு வீசவும் உரிமை பெற்றவர்களே சர்வதேச சமூகம் என்று தம்மை அழைத்துக் கொண்டனர்.இவர்களது ஊடகங்கள் மறுபுறம் ஜனநாயகம்,மனித உரிமை சுதந்திரம் இவைகளைப் பேணுபவர்களாகவும் இனப்படுகொலைகளை எதிர்ப்பவர்களாகவும் தம்மை அறியத் தந்தனர். மேலும் மேற்குலக NGOS கள் தம்மை சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள் என்று கருதிக் கொண்டனர். இந்த மேற்குலகக் கருத்தியலின் தாக்கத்துக்கு புகலிடத்தில் உள்ள தமிழினவாதிகள் மட்டுமல்ல தம்மை ஜனநாயகவாதிகளாகக் கருதுவோரும் NGOS நபர்களும் உட்பட்டு இருந்தனர்.அவர்களின் பிரச்சாரத்தையே தமதாக்கிக் கொண்டனர். சர்வதேச சமூகம் எனப்படும் மேற்கு நாடுகள் தான் யுகோஸ்லாவியாவை வைத்துத் துண்டாடி பல நூறாயிரம் மக்களைக் கொன்றனர். அணுக்கதிரியக்கங்களுடைய ஆயுதத் தாக்குதலை நடத்தினர். ஈராக்கில் இன்று வரை 1.5 மில்லியன் மக்கள் இவர்களால் கொல்லப்பட்டனர். 5 மில்லியன் மக்கள் அகதிகளாகவுள்ளனர். கியுபாவுக்குச் சொந்தமான Guantanamo தீவிலும் ஈராக்கின் Abughraib இலும் ஆப்கானிலும் பிரமாண்டமான சித்திரவதைக் கூடங்களையும் சிறைகளையும் நீதிவிசாரணையற்ற அரசியல் கைதிகளையும் இந்த சர்வதேச சமூகத்தின் தாய்நாடான அமெரிக்கா கொண்டுள்ளது. ‘‘Waterboarding ” எனப்படும் கைதிகளை நீரில் அமிழ்த்தி விசாரணை செய்யும் முறையை அமெரிக்க அரச அதிபர் புஸ் ஏற்றுள்ளார். தோல்வியடைந்த அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோண் மெக்கெய்ன் இத்தகைய சித்திரவதை முறைகள் இல்லாவிட்டால் பயங்கரவாதம் மற்றும் குற்றங்களை ஒழிக்கமுடியாது என்கிறார்.
அமெரிக்க நிர்வாக நீதிமன்ற நீதிபதியான Antonin Scalia தனது பிபிசி செவ்வியில் (2008 பெப்ரவரி) அமெரிக்க நீதிமன்றங்கட்கு இத்தகைய சித்திரவதைகளைத் தடுக்கும் உரிமையில்லை என்கிறார். நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான Tim Weiner எழுதிய Cia- dle ganze Geschichte என்ற நூலில் அமெரிக்காவின் உலகு தழுவிய பயங்கரவாதத்தை வரிசைப்படுத்துகின்றார். மேலும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆவணப்படத் தயாரிப்பாளரான John Pilger தயாரித்த ‘‘The war on democracy” ” என்ற அமெரிக்கா பற்றிய ஆவணப்படம் உலகில் 40 க்கும் மேற்பட்ட சுதந்திர அரசுகளை எப்படி அமெரிக்கா சதிப்புரட்சிகள், கலகங்கள், பொய்ப்பிரச்சாரங்கள்,கூலிப்படைகள் NGOS ஊடாக கவிழ்த்தது என்று காட்டியுள்ளார். இதில் 1984 இல CIA யின் தலைவராக இருந்த Duane Clarridge, ‘ஒரு நாடு ஜனநாயக முறைப்படி ஆட்சி புரிகிறதா இல்லையா என்பதல்ல பிரச்சனை அந்த நாடு எம்முடன் இணைந்து வேலை செய்கிறதா இல்லையா என்பதே பிரச்சனை என்று வெளிப்படையாகவே பேட்டி தருகின்றார். மேற்கு நாட்டு அரச உளவுப்படைகள் தம் சொந்தச் சட்டம்கட்குப் புறம்பான மனித உரிமை மீறல், இரகசியசிறைகள், சித்திரவதைக் கூடம்கள், ஆட்கடத்தல், கொலைகள், பொய்ப்பிரச்சாரங்கள் செய்கின்றன. இவைகளையே சர்வதேச சமூகம் என்று எமது புகலிடத் தமிழ் ஜனநாயகவாதிகள் அழைக்கிறார்கள்.மேற்கு நாடுகளின்’உலக பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்பது ஆசிய, லத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க மக்களின் பிரச்சனையல்ல, மாறாக இஸ்லாமிய தீவிரவாதம் உட்பட பல கிளர்ச்சிகள் மேற்குலக நாடுகளின் அரச பயங்கரவாதம்களின் எதிர்வினையாகும்.
எமது புகலிடத்தமிழர்கள் மெச்சும் சர்வதேச சமூகமானது ஈரான்;, ஆப்கான், உட்பட பல இடங்களில் தமது இராணுவம்களுடன் கூலிப்படைகளையும் இறக்கியுள்ளன. உதாரணமாக Black water Dyn. International,Triple conopy உட்பட பல தொகைக் கூலிக்குழுக்கள் இருந்தன.இவர்கள் ஏற்கனவே ய+கோஸ்லாவியா, பிலிப்பைன்ஸ், சோமாலியா உட்பட நாடுகளில் செயற்பட்டவர்கள். உலகில் பயங்கரவாதக் குழுக்களை ஒழிக்கவேண்டும் அரசுகட்கு புறம்பாக ஆயுதமேந்திய அமைப்புக்களைத் தடை செய்யவேண்டும் எனும் மேற்கு நாடுகள் சொந்த கொலைக்குழுக்களை கூலிக்கு கொல்லும் அமைப்புக்களைக் கொண்டுள்ளன. அமெரிக்க கூலிப்படையில் ஒன்றான Black Water வட கரோலினா (North carolina)இல் 2830 கெக்டர் நிலப்பரப்பில் வெளிப்படையாக இயங்குகின்றது. இவர்களை இவர்களது பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட சேர்பியாவோ சோமாலியாவோ இவர்களைப் பயங்கரவாத அமைப்பில் பிரகனடப்படுத்தி தாக்குதல் நடத்த முடியுமா? இந்த மேற்குலக கூலிப்படைகளை எதிர்த்து சர்வதேச மனித உரிமைகள் சபை அல்லது ர்ரஅயn சiபாவ றயவஉh சர்வதேச இயக்கம் நடத்தியதில்லை. ஆனால் இலங்கையில் அரசு சார்பு கருணா அணியின் ஆயுதத்தைப் பறி என்று பிரச்சாரம் செய்கின்றார்கள். இவர்கள் புலிகளின் ஆயுதத்தையும் அதே சமயம் பறி என்று கேட்பதில்லை.
ஆனால் இவ்வருடம் அக்டோபர் மாதம் அமெரிக்காவின் ‘Winter soldier 2008“ என்ற தலைப்பில் அமெரிக்காவின் முன்னாள் இராணுவ வீரர்கள் 3 நாட்கள் ஒன்று கூடினார்கள். இவர்கள் வியட்நாம், கொரியா முதல் ஈரான்,ஆப்கானிஸ்தான் வரை போரிட்டவர்களாவர். இந்த அமைப்பு 1971 முதல் இயங்கி வருகின்றது. இந்த நிகழ்வில் பேசிய ஈராக்கில் போரிட்ட இராணுவ வீரரான Chann – Suarez ‘நாம் ஒரு மில்லியனுக்கு; மேற்பட்ட ஈராக்கியர்களைக் கொன்றோம். அங்கு நாம் விடுதலையையோ ஜனநாயகத்தையோ கொண்டு வருவதற்காகச் சென்றோம் என்பது பொய்” என்றார். ஈராக்கில் இராணுவச்செய்திகளை சேகரிக்கும் செய்தியாளராகப் பணிபுரிந்த Jan critchfield,’நாம் பிரச்சாரத்தைத் தவிர வேறு எந்தப் பெருமைபடத்தக்க செயலையும் செய்யவில்லை எனக் குறிப்பிட்டார்.Josh Simpson என்ற இராணுவ வீரர் பேசும்போது’ஒவ்வொரு இரவு; எமக்குக் கட்டளையிடப்படாத போதும் கூட நாம் ஈராக்கியர்களின் வீடுகளில் புகுந்தோம்., ஈராக்கியத் தாய்மார்களிடமிருந்து பிள்ளைகளைப் பிடித்துச் சென்றோம்” எனப் பேசினார்.’நாம் ஈராக்கிய சுதந்திரத்துக்காகப் போரிடவி;ல்லையா மில்லியன் மக்களைக் கொன்றோம், கொள்ளையிட்டோம், சொத்துக்களை இராணுவத்தினர் வைத்திருக்கக்கூடாது என்ற இராணுவ விதிகளை மீறி தவறான வழிகளில் சொத்துக்களைச் சேர்த்தோம்.நாம் இராணுவச் சீருடையணிந்த குற்றவாளிகளாக இருந்தோம். நான் ஒரு கிறிமினலாக உங்கள் முன்பு நிற்கின்றேன் என்று ஈராக்கில் இராணுவத்துறை உளவுத்துறையில் பணிபுரிந்த Evan knappenberger கூறினார். சர்வதேச சமூகத்தைக் கொண்டாடும் சகல தமிழினவாதிகளும் சர்வதேச சமூகத்தின் நிதிகளில் தங்கியுள்ள NGOS நபர்களும் சிறிலங்கா அரசைத் தவிர, வேறு எந்த நாட்டையும் அநீதியான அரசாகக் காணமாட்டார்கள். புகலிடத் தமிழ் NGOS ஒன்றின் முக்கிய தமிழ் நபரொருவர் அமெரிக்க கூலியாக ஆப்கானிஸ்தானில் அம் மக்களுக்கு எதிராக வேலை செய்கிறார். உலகின் கொலையரசை ஆதரிக்கும் இத்தகைய நபர்கள் இலங்கை அரசை சிங்கள அரசு என்று தமிழினவாதத்தால் நிரப்பியுள்ளனர். இலங்கையின் தேசிய ஓட்டத்தில் சிங்கள மக்களோடு இணைந்த கருணா அணியையும் இலங்கை அரசின் சார்பான குழு என்று வர்ணிக்கின்றார்கள். ஆனால் இவர்கள் சொந்தமாக மேற்குலக NGOS நபர்களாக அவர்களின் அரசியல் ஆக்கிரமிப்புக்கான கருவிகளாகவுள்ளனர்.
முன்னாள் அமெரிக்க வீரர்களில் 200,000 பேர் இன்று அமெரிக்காவில் தெருவில் வாழ்கிறார்கள். கிறிமினல்களாக மாறியுள்ளனர். பெருமளவு இராணுவ வீரர்கள் யுத்த காலத்திய நடவடிக்கைகளால் உளவியல் பாதிப்புக்குட்பட்டவர்களாகியுள்ளனர் என்று ‘CRS“அறிக்கை கூறுகின்றது. ஈராக்கில் அமெரிக்கா நுழைந்த பின்பு 207 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கச் சிறைகளில் ஒவ்வொரு 100 பேருக்கும் ஒருவர் என்ற வீதத்தில் 2.315. 528 ஆண்கள் – பெண்கள் சிறையிலுள்ளனர். இது அமெரிக்காவை விட 4 மடங்கு மக்கள் தொகை கொண்ட சீனாவையும் 3 மடங்கு மக்கள் தொகை கொண்ட இந்தியாவையும் விட அதிகமானதாகும் என்று அமெரிக்க Instiute in washington.D.C.und Philadelphia ஆய்வு தெரிவிக்கின்றது. இத்தகைய நாட்டுக்கு உலகின் மனித உரிமை, ஜனநாயகம் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கின்றது.அமெரிக்க சட்டத்துறை அறிஞரான Vincent Bugliosi அண்மையில் ‘ Anklage wegen mordes gegen george w.bush நூலை வெளியிட்டுள்ளார். இதில் பேச்சுக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டில் வழக்குத் தொடரத்தக்க குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ளனர். ஈராக் யுத்தத்தில் இறந்த 4000 அமெரிகக் வீரர்களின் மரணத்துக்கும் ஈராக்கில் அணு ஆயுதங்கள், இரசாயன உயிரியல் ஆயுதங்களில் இருந்ததாக உலகுக்கு பொய் கூறுவதற்காகவும் புஸ்ஸை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்..இவற்றை இலங்கையில் மனித உரிமை மீறலைத் தேடித் திரியும் Human right watch முதல் சர்வதேச சமூகத்துக்கு தோத்திரம் செய்யும் புகலிட தமிழ் ஜனநாயக வீரர்களும் பேசமாட்டார்கள்.
புகலிடத் தமிழினவாதிகள்
புகலிடத்தில் புலிப்பாசிச ஊடகங்களை மி;ஞ்சும் வண்ணம், ஜனநாயகம்,கருத்துரிமைச் சுதந்திரம் பேசிய ஊடகங்களும் தமிழகத்திலே எழுச்சி, கிளர்ச்சி, 1983விட உச்சத்தை எட்டிய மக்கள் ஆதரவு என்ற சித்திரங்களைத் தீட்டின.புலிப்பாசிஸ்டுகளின் GTV தொலைக்காட்சிக்குச் சமமாக தீபம் தொலைக்காட்சியும் புலியறிக்கைகள் செய்திகளால் தன்னை மூழ்கடித்ததுடன் தமிழர் தேசியக் கூட்டமைப்பு தமிழினவாதிகளின் பேட்டிகளையும் வெளியிட்டனர். புலி போராடித் தமிழ்ஈழம் எடுத்து முடித்து இப்போது தமிழகமே ஒன்று சேர திரண்டு எழுந்து இலங்கைத் தமிழருக்கு உரிமை பெற்றுத் தரப் போவதாகவும் இலங்கை சிங்கள இனவாத அரசைக் கட்டுகள் கொண்டு வரப்போவதாகவும் கருத்துக்கட்டலில் ஈடுபட்டனர். பழைய ஸ்டாலினிசக் கட்சி மற்றும் நெடுமாறன், வை.கோ, சு.ப.வீரபாண்டியன், திருமாவளவன் போன்ற தமிழினவாத உதிரிக்கட்சிகள் சில நூறு பேருடன் நடத்திய இயக்கங்கள் அவர்களது ஊடக வலிமைகாரணமாக எங்கும் பெரிய எழுச்சி இயக்கமாய் காண்பிக்கப்பட்டது. அடுத்து தமிழ் சினிமாக்காறர்கள் இவர்களை மிஞ்சிய விண்ணர்களாக தமிழினவாத அரசியல் சிலநாட் பொழுதுகள் கூட நின்று பிடிக்காது என்று இவர்கள் விளங்கவில்லை.
புலிப்பாசிஸ்டுகளின் GTV தேசியத் தலைவர் மற்றும் தமிழ்ஈழம் பற்றிய கட்டுக்கதையாடல்களில் ஈடுபட்டபோது தீபம் தொலைக்காட்சியின் அனாஸ் போன்றவர்கள் தமிழீழ இலட்சியம் மீண்டும் உயிர்த்தெழுந்து கொண்டிருப்பதாக அறிக்கையிட்டார்கள். புலிகளின் பிரச்சாரப் பேய்க்குக் கள்ளுவார்த்தார்கள். அனாஸ் என்ற இந்த தீபம் செய்தியாளர் முல்லைத்தீவுப் பகுதியில் இருந்து முஸ்லிம் மக்கள் புலிப்பாசிஸ்டுகளால் கலைக்கப்பட்டபோது கூடவே துரத்தப்பட்டவராவர். அதனால் இன்று வரை அந்த நன்றி மறவாது 18 வருடம் கடந்த பின்பும் தன் விசுவாசத்தை புலிகளின பாதார விந்தத்துக்கு தெரிவித்து வருபவராவர். இந்த அனாஸ் புலிமொழியிலேயே பேசுவார். ஓட்டுப்படை, துணைப்படை, துரோகிகள், சிங்கள அரசு, சிங்கள பேரினவாதம், பிள்ளையான் ஒட்டுபடைக்குழு என சுத்தமான புலிபாசையிலே நான் தொலைக்காட்சியில் உரையாடத்தக்க அரசியல் பக்குவமும் ஜனநாயகத் தன்மை ஒருங்கே கொண்ட பெருந்தகையாளர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொலைபேசி உரையாடல்களில் ஒரு மில்லிகிறாம் புலி எதிர்ப்பு விமர்சனம் வராமல் சகலதையும் கட் பண்ணி கருத்துச்சுதந்திரம் பேணும் நபராவார்.இந்த அனாஸ் தமிழினவாதிகளை, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரை புலி நபர்களை வார்த்தைகளால்; வருடுவார், தன் புன்சிரிப்பால் தடவித் தடவிக் கேள்விகள் கேட்பார். அவர்களின் பதில்களை மெச்சிக் கொண்டாடித் துணைவிளக்கங்கள் தருவார். எப்படி இக்பால் அத்தாஸ் போன்ற UNP மற்றும் மேற்குலக சார்பு நபர்கள் புலிப்பாசிசத்துக்காக ஊடகப்பயங்கரவாதம் புரிகிறார்கள். மேற்குக நாட்டு ஊடகங்களில் உள்ள சின்ன ஜனநாயக உணர்வே, மாற்றுக்கருத்து பற்றிய பார்வையோ இவர்களிடம் கிடையாது. புலிகளால் துரத்தப்பட்டு 18 வருடமாக அகதிகளாக உள்ள இரண்டு இலட்சம் முஸ்லிம் மக்கள் பற்றி ஒரு வார்த்தை கூட இந்த அனாஸ் பேசியதில்லை. தன் முஸ்லிம் சனத்துக்காகப் பேசவேண்டாம் ஒரு கலாச்சாரமடைந்த மனிதனாய்க் கூட இந்தப் புலிக்கொடுமைகளை எதிர்க்காமல் புலி விசுவாசியாய் தமிழ்ஈழ தேசபக்தராய் செய்யும் பாசாங்கு ஒரு நாளில் தன் சொந்த மக்களின் தீர்ப்புக்கு முன்பு நிற்கவேண்டி வரும்.
2008 இல் A+
SLDF நபர்களும் லண்டனில் இருந்து கலந்து இருந்தனர். இதுவரை ஜனநாயகம்,மாற்றுக்கருத்துப் பேசியவர்களையும் எவ்வாறு வந்தடைந்தது?இவர்கள் காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலைகளை, கந்தன் கருணை கொலைகளை ஏன் நினைவு கூரவில்லை. அனுராதபுரம் படுகொலை, புலிகளின் வன்னியில் உள்ள துணுக்காய் படுகொலை முகாம்களில் மரணித்த ஆயிரக்கணக்கானவர்களை நினைவு கூரும் நிகழ்வுகளை ஏன் நடத்துவதில்லை? இந்திய இராணுவம் கொன்ற 5000 பேர், PLOT முகாம்களில் கொல்லப்பட்ட 300 க்கு மேற்பட்டோர்களை இவர்கள் ஏன் நினைவில் கொள்ளவில்லை?இலங்கை இராணுவம் கொன்ற தமிழர்களின் தொகையை விட புலிப்பாசிஸ்டுகளும் தமிழ் ஆயுத இயக்கங்களும் கொன்ற தமிழர்களின் தொகை அதிகமல்லவா? இதை நினைவு கூரும் ‘நெடுங்குருதி நினைவு நாட்கள் ஏன் இல்லை? அப்படிச் செய்யவிடாமல் இவர்களை தமிழினவாதம் தான் தடுக்கின்றது. TELO, இயக்கத்தை புலி அழித்ததை விடவா வெலிக்கடை படுகொலைகள் மோசமானவை? தமிழன் தமிழனைக் கொல்லலாம். சிங்களவன் தமிழனைக் கொல்லக்கூடாது. அது இனப்படுகொலை என்பதா இவர்களது சித்தாந்தம்? உண்மையில் புகலிடத்திலுள்ள ஜனநாயகவாதிகள் எல்லோரும் தமிழினவாதிகள் தான் அதனைத் தான் புலிப்பாசிஸ்டுகள் மன்னிக்கிறார்கள். நெருக்கடிகளில் புலிப்பாசிச சார்பு நிலை எடுக்கிறார்கள்.பெரும்பான்மைத் தமிழர்களின் பின்பு ஓடுகிறார்கள்.
புகலிட நாடுகளில் தமிழ் புகலிட ஊடகங்களும் ஜனநாயகவாதிகளும் தமிழ்தேசியவாத வெறியாட்டு நடத்திக் கொண்டு இருக்கையில் புகலிட நாடுகளில் உள்ள தமிழர்களும் இணைந்துள்ள NGO அமைப்புக்கள் தமிழ்நாட்டு எழுச்சிக்கு பக்கபலமாக செயற்பட ஆரம்பித்தனர் என்பது பெரும்பாலும் ஏற்கனவே திட்டமிட்ட நடவடிக்கைகளாகவே கொள்ளவேண்டும்.அக்டோபர் (24 முதல் 26 ஆம் திகதி)2008 இல் Berlin நகரில் Evangelisches Johannestiftung இனர் ல் Ist Kreig die einzige losung fur den – konflict?(போர் தான் முரண்பாடுகளுக்கான ஒரே தீர்வா?) என்ற தலைப்பில் புலிகளைக் காப்பாற்றும் மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் GEKODM எனப்படும் சிறுபான்மை மக்களின் மனித உரிமைக்கான அமைப்பு , INSA (International network of srilankan diaspora) எனப்படும் புலம்பெயர்ந்த இலங்கையர்க்கான சர்வதேச வலைப்பின்னல், மனித உரிமைக்கான கண்காணிப்பு மையம் என்பதான (Human rights watch)HRW என்பன போன்ற மேற்குலக NGO களுடன் ஜெர்மனிய அரசின் கீழை நாடுகளுக்கான பொருளாதார அபிவிருத்தி அமைப்பான ‘BMZ” என்பனவும் கலந்து கொண்டன.50 முதல் 60 பேர் வரை கலந்து கொண்ட இந்த மாநாட்டில் புலிகளும் புலிகளின்மாணவர் அமைப்புக்களும் அழைக்கப்பட்டு இருந்தனர்.அத்தோடு இலங்கையில் இருந்து ‘INFORM“ அமைப்பைச் சேர்ந்த சுனில் அபயசேகர (sunila Abeysekara) சிவில் கண்காணிப்பு அமைப்பில் (Civil monitoring Commission) இருந்து மனோகணேசன் எம்.பி., கொழும்பில் உள்ள Transparency International சார்பில் ஜே.சி.வெலியமுன (J.C.Weliamuna) ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மேற்குலக ஏகாதிபத்திய NGO களின் முக்கியமான ‘NGO forum” இனைச் சேர்ந்த பீற்றர் பவுலிங் (Peter Bowling) பிரிட்டனில் இருந்து கூட்டத்துக்கு வந்துள்ளார்.
இதில் ;’INSA” எனப்படும் புலம்பெயர்ந்தவர்கட்கான சர்வதேச வலைப்பின்னர் இலங்கை அரச எதிர்ப்பு மற்றும் புலிசார்பு மேற்குலக நிதியில் செயற்படுவதாகும். HRW எனப்படும் மனித உரிமைக்கான கண்காணிப்பு மையம் மிக மிக ஆபத்தான அமெரிக்க NGO ஆகும். இது கிட்டத்தட்ட உலகம் முழுவதும் தனது ஆட்களை கொண்டுள்ளது. இது அமெரிகக் உளவுத்துறையான CIA யுடன் தொடர்புடைய சுதந்திர இல்லம் ( Freedom House) அமெரிக்காவின் USAID என்பவற்றுடன் அமெரிக்க நிதி மூலதன நிறுவன உடமையாளனும் உலகு தழுவிய சோசலிச விரோதியுமான George Soros இன் Soros Instiute உடனும் தொடர்பு நிதிபரிவர்த்தனை போன்ற உறவுடையதாகும். இந்த அமைப்புக்கள் கியுபா, சோமாலியா, நேபாளம் , இந்தியா, வெனிசூலா, பொலிவியா, முன்னாள் யுகோஸ்லாவியா, ரஸ்யா, சிம்பாப்வே,சீனா,சூடான், வடகொரியா,ஈரான் போன்ற நாடுகளில் தலையிட்டதுடன் நிதியுதவி தந்து பல வகையான NGO குழுக்களை உருவாக்கினர். இதில் புகலிடத் தமிழர்களை மட்டுமல்ல, சிங்கள, முஸ்லிம் உதிரி அரசியல் சக்திகளையும் உள்வாங்கினர். இவர்கள் கியுபா, முன்னாள் ய+கோஸ்லாவியா, ரஸ்யா, சீனா போன்ற நாடுகளை விட்டு வெளியேறி வாழும் புகலிட அரசியல் குழுக்களையும் பல்வேறு கலாச்சாரக் குழுக்களையும் தமது நோக்கங்கட்கு இசைவான சக்திகளாக்கினர். இந்த மாதிரியே இலங்கைப் புகலிட சக்திகளும் இவர்களால் உறுஞ்சப்பட்டன.
இலங்கையில் அரசு , ஜேவிபி இவைகட்கு எதிராக USAID,HRW , எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு
என்பன தலையிட்டது போலவே கியுப அரச எதிர்ப்புக்குழுமங்களையும் நிதி ஊடகப்பிரச்சாரம் தந்து அவர்கள் ஆதரித்தனர். கியுப மனித உரிமை மீறலுக்காக பிடல் கஸ்ட்ரோ ஐரோப்பா வரும்போது அவரைக் கைது செய்த டென்காக்கில் உள்ள சர்வதச நீதிமன்றத்துக்கு கொண்டு வரவேண்டும் என்று பலவருடங்கள் முன்பதாக பிரச்சாரம் மனிதவிரோத அமைப்புக்கள் இதுவாகும்.வெனிசூலாவில் Chavez பொலிவியாவின் Eva Morales போன்ற இடதுசாரி அரசுத் தலைவர்கட்கு எதிராக இந்த அமைப்புக்கள் எண்ணற்ற சதிகளைச் செய்து வருகின்றன. நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் தேர்தலில் வெற்றி பெற்றபோது அமெரிக்க உளவுத்துறையும் இந்த அமெரிக்கநிதியில் இயங்கும் NGO க்களும் நேபாளத்தின் தென்பகுதியில் உள்ள Terai இந்திய வம்சாவளி மக்களை இந்திய மதவெறி அமைப்பான பிஜேபி யுடன் சேர்ந்து அணுகி அவர்களை தனிநாடு, சமஸ்டி கேட்கத் தூண்டிவிட்டனர்.Terai Army என்ற புலியை ஒத்த ஒரு கூலிப்படை தோன்றிக் குண்டு வெடிப்புக்களை நடத்தியது, ஆட்களைக் கொன்றது. இத்தோடு Madhesi மலைவாழ்மக்களையும் NGO கள் கலகம் செய்ய மாவோயிஸ்டுகட்கு எதிராகத் தூண்டிவிட்டன.ஆனால் இவர்களுக்காகவே பல வருடமாக மாவோயிஸ்டுகள் போராடியிருந்தனர். சீனாவில் ஒலிம்பிக் விளையாட்டு நடந்தபோது ஒலிம்பிக் தீபத்தைக் குழப்பும் நிகழ்ச்சிகளை ஐரோப்பிய நாடுகளில் HRW யும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பும் சேர்ந்தே நடத்தின. இவர்கள் ‘Free Tibet “கோரிக்கையையும் ஒலித்தனர். இந்த NGO கள் உலகார்ந்த பலம் கொண்டவை.CNN,BBC உட்பட சர்வதேச ஊடக பலம் மேற்குலக அரசியல், பொருளாதார பலம் என்பவைகளை உடையவை.இவர்களே இந்த Berlin மாநாட்டில் பிரதான சக்திகளாக இருந்தனர் என்பதும் இவை பல்வேறு பெயர்களில் உள்ள ஆனால் பின்புலத்தில் USAID,Sores Institut ஐரோப்பியக் கூட்டமைப்பின் வெளிநாட்டு உதவிகட்கான அமைப்பு. EUFR (European Council on Foreign Relation)
ஜெர்மனிய வெளிநாட்டு அமைச்சு இருந்தன..’Evangeliches Johannesetiftung“ என்பவை இவைகளின் முகப்பு அமைப்பாக கருதலாம். இந்த கூட்டத்தில் ஜெர்மனிய அரசின் கீழை நாடுகளுக்கான பொருளாதார அபிவிருத்தி அமைப்பான ‘BMZ” இன் சார்பில் Elke Lael கலந்து கொண்டமையையும் கவனத்தில் இருத்தவேண்டும்
இலங்கையிலிருந்து கலந்து கொண்ட மனோ கணேசன் எம்.பி.’சிவில் உரிமைக் கண்காணிப்புக்குழு (Civil monitoring Commission) ‘INFORM““அமைப்பிலிருந்து சுனில் அபயசேகர (sunila Abeysekara) மற்றும் Transparency International சார்பில் ஜே.சி.வெலியமுன (J.C.Weliamuna) கலந்து கொண்டனர்.இவைகளில் nபரும்பகுதி ஒரு சில நபர்களைக் கொண்ட மேற்கு நிதியில் செயற்படும் அவர்களது அரசியல் நிகழ்ச்சி நிரல்கட்கு ஏற்படச் செயற்படும் அமைப்புக்களாகும். இலங்கையில் 5000 க்கு மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட NGO கள் உண்டு. இதில் 1500 க்கும் மேற்பட்டவை பெரும் நிதிபலத்துடன் நாட்டின் சகல துறைகளிலும் ஊடுருவி சட்டg+ர்வமான இலங்கை அரசுக்கு சவாலாக உள்ளன. USAID போன்றவைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல இலங்கை NGO கள் புலிகளின் பிரதிநிதிகளாக பிரதேசத்தில் வேலை செய்வதும் புலிகட்கு பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் உதவி புரிவதுடன் உணவு மற்றும் இராணுவ உபகரணங்களும் பயங்கரவாத தாக்குதலுக்குக் கடத்துவது வரை ஈடுபட்டமை அடிக்கடி வெளிவந்த செய்தியாகும். சிவில் உரிமைக் கழகத்திலிருந்து வந்த மனோ கணேசன் எம்.பி., ஒரு தொகை ஊழல்கள் உத்தியோகம் பெற்றுத் தருவதாகப் பெண்களைப் பாலியல் ரீதியில் பயன்படுத்தியமையுட்பட குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் புலிப்பாசிச நபராவார். கருணா புலிகளை உடைத்துக் கொண்டு வெளியேறிய போது மனோ கணேசன் மூலம் புலிப்பாசிஸ்டுகள் சந்திரிகாவை அணுகி உடன்பாடு செய்து கொண்டு 300 க்கும் மேற்பட்ட கருணா அணியினரை கொலை செய்தனர். இதில் 150 வரையிலான 16 க்கும் 20 வயதுக்கும் உட்பட்ட பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் வன்முறைக்குப் பின்னர் சித்திரவதை செய்து கொன்று வெருகல் பகுதியில் புதைக்கப்பட்டனர். இத்தகைய செயல்கட்கு ஏற்பாடு செய் மனோகணேசன் இப்போ சிவில் உரிமைக் கழகம் என்ற அந்நிய NGO வில் இணைந்து மக்கள் உரிமைக்குப் போராடும் போராளியாம். மனிதவிரோதிகள் NGO இல் சேர்ந்தது தான் தாமதம் மனித உரிமைவாதிகளாக பரிணாமம் எடுத்து விடுகிறார்கள்.
புகலிட நாடுகளில் UTHR,SLDF, INSA போன்ற ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் புலம் பெயர் தமிழர்களின் அமைப்புக்கள் இயங்குகின்றன. இவை நடுநிலைமை பக்கம் சாராத செயற்பாடு என்ற குரல்களில் தம்மை உருவத்தை உருமறைப்புச் செய்தபோதும் தமிழினவாத அமைப்புக்களாகவும் ஆசியப் பொது வளர்ச்சிப் போக்குக்கு எதிராக இலங்கையைச் சீரழிக்கும் அரசியலைச் செய்பவர்களாகவும் இருந்தன. இதில் உள்ள சிலர் ஒரு காலம் மனிதம், பல்லினக்கலாச்சாரம் எல்லாம் பேசியவர்களாகவும் ‘தேசியம் ஒரு கற்பிதம்” என்பதைக் கூடிக் கொண்டாடியவர்களுமாவர். ஆனால் இப்போது புலிப்பாசிசத்தை மறைக்க சிங்களப் பேரினவாதம் என்பதை உரக்கச் சொன்னார்கள். ஏகாதிபத்திய உலக யுத்தப் பயங்கரவாதத்தை மறைக்க இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பற்றி பெருங்குரலெடுத்தனர். முழு இலங்கை மக்களையும் மேற்குலக நாடு:கட்கு காட்டித் தரும் செயற்பாடுகளைச் செய்தனர். இதற்கான வெகுமதிகளையும் அடைந்தனர். இவர்களில் பெரும்பகுதி மேற்குலக நாட்டுப் பிரச்னைகள் என்ற அளவில் மேற்குலக நாட்டு அரசியல், சமூகம் பற்றிய கரிசனை உடையவர்களாக இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்போம்.ஆனால் இவர்கள் தாம் வாழும் நாட்டின் ஏனைய மக்கள் மேலான யுத்தம், படுகொலைகள், மனித உரிமை மீறல்களைப் பற்றி இவர்களது ஆவணங்களில் காணமுடியாது. உதாரணமாக நவம்பர் மாதத் தொடக்கத்தில் ஈராக்கிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் இராணுவத்தின் அணிவகுப்பு பிரிட்டனில் நடந்தபோது ஈரான், ஆப்கான் யுத்தத்தில் இறந்த பிரிட்டிஸ் இராணுவ வீரர்களது தாய்மாரும் உறவுகளும் ஏனைய யுத்த எதிர்ப்பு சக்திகளும் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடி பெரும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ‘Ulster Volunteer Force “என்ற பிரிட்டிஸ் விசேட கொலைப்படைகளை அம்பலப்படுத்தினார்கள். மேலும் தற்போது பிரிட்டனில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின்படி ஒருவரை 28 நாட்களே தடுப்புக் காவலில் வைக்கமுடியும். அதை 48 நாட்களாக மாற்ற சட்டம் வருகின்றது. பொலிஸ் – உளவுத்துறை கூட்டுச் செயற்பாடுகள் வீடியோ கமரா பொது இடங்களில் கண்காணிப்பு, வெளிநாட்டவர்கள் அகதிகள் மேல் கெடுபிடிகள் இதை எதிர்த்து இந்த UTHR எனப்படும் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமை அமைப்போ SLDF எனப்படும் Sri lanka Democracy Forum – NGO களோ INSA என்றழைக்கப்படும் ‘புலம் பெயர்ந்த இலங்கையர்களுக்கான சர்வதச மையமோ ஏதாவது விழிப்புணர்வை புகலிடத்தமிழர்களிடம் ஏற்படுத்த முடியுமா? முனைந்ததுண்டா?
பிரிட்;டிஸ் உளவுத்துறை, தலிபான்; இயக்கத்தில் இருந்து வெளியேறிய 2000 ஆப்கானியர்களை தென் ஆப்கானில் பயிற்றுவித்து தலிபானுக்கு எதிரான கூலிப்படையாக போராடச் செய்கிறதே. மேலும் 2007 டிசம்பரில் பிரிட்டிஸ் பிரதமர் Brown எமது நோக்கம் ஆப்கானில் கிளர்ச்சி செய்பவர்களை முறியடிப்பது தான். அதன் தலைவர்களைத் தனிமைப்படுத்தி அழிப்பது தான் நாம் அவர்களுடன் ஒருபோதும் பேசமாட்டோம் என்று கூறினார். இதை எதிர்த்து பிரிட்டனில் உள்ள SLDF ஏதாவது கூற முடியுமா? இலங்கைப் புலிகளுடன் பேசு, இராணுவத்தீர்வு வேண்டாம் அரசியல் தீர்வு தேவை, கருணா அணியின் ஆயுதத்தை பறி என்றெல்லாம் போதிக்கும் பிரிட்டனை இந்த நபர்கள் கேள்வி கேட்கமுடியுமா? ஏன் எனில் அவர்களால் முடியாது. ஏன் எனில் அவர்கள் பிரிட்டனால் அவர்கட்காகப் பேச வாதாட நியமிக்கப்பட்டவர்கள்.
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் 2007 மே மாதத்தில் இலங்கைப் பிரச்சனை 4 மணிநேரம் விவாதிக்கப்பட்டது. இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை, புலிகள் மேலான தடையை நீக்கி இலங்கை அரசு பேசவேண்டும், தமிழ்ச் செல்வனை அழைத்து பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசவிட வேண்டும் என்று கூடப் பேசப்பட்டது. உலகப் பயங்கரவாதத்தைப் பற்றி ஓலமிடும் பிரிட்டிஷ் அரசு. தன் சொந்த நாட்டிலேயே பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டுள்ள நாடு, பயணிகள் விமானத்தைக் கூட பயங்கரவாதிகள் கடத்தினால் வானத்தில் வைத்துச் சுட்டு வீழ்த்த சட்டம் போடலாம் என்று வாதிடும் நாடு. இலங்கையுடன் மட்டும் புலிப்பாசிசத்துக்கு இத்தனை பேரன்பு காட்டுவானேன்? ஏன் தமிழ்ச்செல்வனை மட்டுமல்ல, பின்லாடனையும் லண்டனுக்கு அழைப்பித்து பாராளுமன்றத்தில் பேசவிடலாமே? அதைக் கேட்க விசேட பிரதிநிதியாக மகாராணி எலிசபெத்தையும் மகன்,மகள்,பேரன்,பேத்தி கும்பலுடன் வருகை தரும்படி அழைக்கலாமே? ஆப்கானிஸ்தானும் ஈராக்கும் என்ன பிரிட்டனின் அப்பன் ஆத்தை விட்டுச் சென்ற சொத்தா அங்கு பயங்கரவாத எதிர்ப்புப் போர் புரியச் செல்ல? UTHR, SLDF, INSA இப்படி எல்லாம் பிரிட்டனை எதிர்த்து இயக்கம் நடத்துமா? புகலிடத் தமிழர்களை அதற்காகத் திரட்டுமா? நாளை கோர்கிக்காவில் தனிநாடு கேட்கும் மக்களுக்கு ஆதரவையும் ஸ்பெயினில் ‘பாக்ஸ்”இன மக்களுக்காகவும் அயர்லாந்து பிரிவினைக்கு ஆதரவாகவும் இலங்கை, இந்தியப் பாராளுமன்றங்களில் ஒன்று கூடி ஆதரவுத் தீர்மானம் போட முடியுமா? பிரிட்டிசின் இலங்கை இந்தியத் தூதர்களை அழைத்து பிரச்சனையை சமாதானமாகத் தீர்க்கும்படி எம் நாடுகள் எச்சரிக்கை செய்யமுடியுமா? எம் புகலிட நாடுகளில் உள்ள இந்த தமிழ் NGO க்கள் கறுப்பு அடிமை மனிதர்கள் இன்னமும் மேற்கத்தைய வெள்ளை எசமானர்கட்கு எதிராக நாவெட மறுக்கும் பிறவிகளை என் செய்யலாம்? இலங்கை அரசை டென்காக்கின் சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு வரவேண்டும் என்று கூடப் பேசியும் எமது புகலிடத்தில் NGO நபர்கள் பிரி;ட்டனையும் பிரான்சையும் ஜெர்மனியையும் ய+கோஸ்லாவியா முதல் சோமாலியா வரை ஈரான் தொடக்கம் ஆப்கான் வரை புரிந்த மனிதகுலத்துக்கு எதிரான போர்க்குற்றங்களுக்காக டென்காக் சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு வரவேண்டும் என்று கடைசி ஒரு அறிக்கையாவது குறைந்தது புகலிடத் தமிழர்கள் மத்தியிலாவது விடுவார்களா?
சீனாவுக்கு எதிராக மதவாதக் கலவரம் புரியும் தலாய்லாமாவுக்கு மேற்குலக நாடுகளி; பல்ககை;கழகங்களில் பேசவிட்டு தங்கப் பதக்கமும் தருகிறார்களே அப்படியே மேற்குலகுக்கு எதிராகப் போராடும் பின் லானுக்கு சீனாவும் இலங்கையும் தம் நாடுகட்கு அழைப்புவிட்டு பல்கலைக்கழகங்களில் பேசவிட்டு பொன்னாடையும் போர்த்தி தங்கப்பதக்கமும் வீரவாளும் தந்தால் எப்படியிருக்கும்? ஒரு காலத்தில் ‘ஐரோப்பிய மையவாதத்தை” எதிர்ப்பதாய் கூறியவர்கள் இன்று மேற்குலக ஏகாதிபத்தியக் கருத்தோட்டங்களை எமது நாடுகளில் பரப்பும் சாதனங்களாகிவிட்டார்கள். ஸ்பெயினில் பாக்ஸ் இனமக்களின் பத்திரிகையான Egunkaria இன் பத்திரிகையாளர் Xabier Oleaga கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதை, துருக்கிய பிகேகே இன் தலைவர் கைது செய்யப்பட்டு 8 வருடமாக Imrali தீவில் தனிமைச் சிறையில் தொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி, தொலைபேசி தொடர்பு மறுக்கப்பட்டு மனிதத் தொடர்பே இல்லாமல் அப்துல்லா ஒச்சானுக்கு மனநிலை பாதிப்பு என்று செய்திகள் வருகின்றன. துருக்கியில் இடதுசாரி அமைப்பான DHKP, கொலம்பியாவின் FARC>ELN ,பாக்ஸ் இனமக்களின் ETA என்பன மேற்கு ஐரோப்பா எங்கும் ஒடுக்கப்படுகின்றது. இவர்களுடன் அரசியல் தொடர்புடைய இடதுசாரிகளை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கவேண்டும் என்றனர். ஐ.நா. சபையின் அமைப்பான ‘FAO” ஈராக்கில் 1995 ஆம் ஆண்டு முதல் வருடா வருடம் 567,000 குழந்தைகள் உணவு,மருந்து இல்லாமல் இறக்கின்றனர்.இதுவரை ஈராக்கில் 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இறப்பு, 5 மில்லியன் பேர் அகதிகள் நாட்டின் 30 வீதமான மக்கள் அகதிகளாகி விட்டனர். 400 தொன் அணுக்கதிரியக்கம் கொண்ட Du- Mynition’ Basra பகுதியில் மட்டும் யுத்தத்தில் நாட்டோ படைகளால் போடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் 45 வீத புற்றுநோய் அதிகரிப்பு ஈராக்கின் 18 மாநிலங்களில் 13 இல் அணுக்கதிரியக்கத்தின் பாதிப்பு என்கின்றது. இதை ஏகாதிபத்திய மனித உரிமை அமைப்பு HRW பேசுமா? எல்லைகளற்ற ஊடகவியலாளர் என்று அழைக்கப்படும் ‘RSF” 1985 இல் பிரான்சில் Robert Meneard ஆல் தொடங்கப்பட்டது. இதன் பின்புலம் பிரான்சிய உளவுத்துறை செயற்பட்டது. பின்பு RSF அமெரிக்க உளவுத்துறை அரசியலுடன் இணைந்தது. கியுபாவுக்கு எதிராகத் தீவிரமாய்ச் செயற்பட்டது. கியுபாவில்;; எதிர்அணியில் உள்ள அமெரிக்காவில் ஜனநாயகம், சுதந்திரம் இருப்பதாக ஒரு முறை எழுதியவர்கள எல்லாம் கியுபாவின் சர்வாதிகாரத்துக்கு எதிரான மிகப் பெரும் பத்திரிகையாளர் எழுத்தாளர் என்று ஆக்கியது.இந்த RSF இலங்கை ஊடகத்துறையில் நுழைந்துள்ளது.
ஜெர்மனியில் 2009 ஜனவரி முதல் புதிய சட்டங்கள் வரவுள்ளன. தொலைபேசி, கைத்தொலைபேசி ,இணையத்தளம், தொலைநகல், கடிதங்கள் எல்லாம் வேவு பார்க்கப்படவுள்ளன. மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், சட்டத்தரணிகள் உட்பட தனியார் வீடுகளிலும் இரகசியமாகக் கமராவை வைத்துக் கண்காணிக்கும் உரிமையை பொலிசும் உளவுத்துறையும் பெறப்போகின்றது. இதற்கு எதிராக HRW,RSF இரண்டும் ஏன் பெரும் ஊடகப் போர் தொடங்கவில்லை.இவர்கள் ஏன் 3ம் உலக நாடுகளில் மட்டும் மனித உரிமை மீறல், சர்வாதிகாரத்தை தேடுகிறார்கள்.மேற்குலக நாடுகளின் அரச பயங்கரவாதத்தை போர்க்குற்றங்களை ஏன் அம்பலப்படுத்துவதில்லை. 30 வருடமாக அமெரிக்க சிறையில் உள்ள அமெரிக்க கறுப்பின மக்களின் உரிமைப் போராளியும் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான Mumia Abu- Jamal பொய்க்குற்றச்சாட்டில் மரணதண்டனை வழங்கப்பட்டவருக்காக HRW,RSF ஏன் பேசுவதில்லை.தனியே மேற்குலகுக்கான நபரான தலாய்லாமாவுக்கு தான் பிரச்சாரம் செய்கிறார்கள். சமாதான உடன்படிக்கையை புலிகள் இலங்கையில் 10,000 தடவைக்கு மேல் மீறியதாகவும் அரசு 3000 தடவைகள் வரையே மீறியதாகவும் மேற்குலகு சார்பான போர்க்கண்காணிப்புக் குழுவே அறிக்கையில் கூறிய பின்பும் புலிகளை பாதுகாக்கும் அரசியலையும் பிரச்சாரத்தையும் இவர்கள் செய்தார்கள். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இணைந்த ஒன்றிணைந்த இலங்கை மக்கள் என்பதைத் தகர்த்து புலிப்பாசிசத்தையும் பிரிவினையையும் இனமுரண்பாடுகளையும் உயிருடன் வைத்திருக்க வேலைகளைச் செய்தனர் புகலிட தமிழ் NGO அமைப்புக்களில் ஒன்றான UTHER அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் இடதுசாரிகளைத் தாக்கியுள்ளது. தமிழ், சிங்கள் இனவாதிகளன அரசியல் பிரமாண்டம் முன்பு தான் இவர்களது மனித விரோத அரசியல் முன்பு தான் இடதுசாரிகள் தவறிழைக்கவேண்டி வந்தது. 1972 இல் புதிய அரசியலமைப்பை கொல்வின் எழுதினார் என்று தமிழ்தேசியவாதிகள் தொடர்ந்து கூறி வருகின்றார்கள்.எந்தக் கொலனியில் இருந்து விடுதலை பெற்ற நாட்டில் பெரும்பான்மை மக்களின் மொழி மதம் ஏனையதை விட முக்கியத்தும் பெறவில்லை. இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா, தென் ஆபிரிக்கா வரை எங்கும் இதே நிலை தான். அது முதலாளிய அபிவிருத்திக் கட்டத்துக்கு உரியது. பாராளுமன்ற முறையில் அகப்பட்ட இடதுசாரிகளால் இதை மீறமுடியவில்லை. ஆனால் 1972 அரசியலமைப்புச் சட்டம், பொதுநலவாய நாட்டு கீழ் முடிக்குரிய பிரிட்டிஸ் அரசியின் நாடு என்ற நிலையில் இருந்து இலங்கையை விடுவித்தது. பிரிட்டனின் இலங்கையின் துறைமுகம் கடற்படைத்தளம் உட்பட பல விசேட உரிமைகளை இல்லாது செய்தது. பிரிட்டிஷ் அமெரிக்கத் தூண்டுதலில் தமிழிழீம் கேட்ட தமிழனவாதிகட்கு சிங்கள இனவாதத்தையும் இதே பிரி;ட்டனும் அமெரிக்காவுமே தூண்டி வளர்த்த கதை விளங்காது. ஜே.ஆர் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் சர்வ அதிகாரம் படைத்த ஜனாதிபதி ஆட்சி முறையை கொண்டு வர மூல ஆலோசனை உதவி வழங்கியவர்கள் நீலன் திருச்செல்வம் மற்றும் செல்வநாயகத்தின் மருமகன் ஜே.ஏ.வில்சன் என்ற இரண்டு அமெரிக்க சார்புத் தமிழர்களே என்பதை நாம் மறக்கக்கூடாது.மேற்குலக நாடுகள் சுதந்திர வர்த்தக வலயத்தைக் கொண்டு வரவும் போர்நிறுத்த உரிமை, தொழி;ற்சங்கம், இடதுசாரிகள் ஆகியோரை ஒடுக்கவுமே பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழர்களைச் சாட்டிக் கொண்டு வரப்பட்டது. இவைகளின் பின்புறத்திலும் இரண்டு இந்த அமெரிக்க சார்புத் தமிழர்கள் இருந்தனர். முழு இலங்கை மக்களுக்கும் சர்வாதிகாரத்தைக் கொண்டு வந்ததில் இவர்கட்கும் பங்கு இருந்த. நீலன் திருச்செல்வம், ஜே.ஏ.வில்சன் போன்றவர்கள் தமிழ் புகலிட NGO கட்கு முன்னோடிகளாக இருந்தார்கள்.மேற்குலகத்தின் வங்கிகள் பெரும் தொழில் நிறுவனங்கள் இப்போது பொறிக்கின்றன. உலகின் தலைமையான பொருளாதார, அரசியல், இராணுவ பாத்திரம் இனி நகரத் தொடங்கும் எனவே கீழைத்தேச NGO கள் உட்பட இலங்கை மற்றும் புகலிட வாழ் NGO கட்கான நிதியாதரவுகள் இனிமேல் எதிர்காலத்தில் விரைவாக வீழ்ச்சியடையும். புலிகள் இலங்கையில் இராணுவ ரீதியாக முறியடிக்கப்படும்போது புகலிட மற்றும் NGO களும் சேர்ந்தே சக்தியிழந்து போவார்கள்.இலங்கை முதலாளிய அரசா? அல்லது புலிப்பாசிச பயங்கரவாதமா? என்பதில் இலங்கை முதலாளியத்தை ஆதரிப்பதும் புலிகளின் அழிவின் பின்பான இலங்கை தழுவிய ஜனநாயகம் இல்லாமல் சோசலிச இயக்கங்கள் தோன்றலானது புலிகள் அழியும்போது அதன் கூடவே ஆயுதமெடுத்த PLOT, EPRLF,TELO,EROS, கருணா அணி சகலதுமே இல்லாமல் போவார்கள். போர்,இனவாதம் இரண்டிலிருந்தும் பாடம் பெற்ற தமிழ் மக்கள் இலங்கை தழுவிய அரசியலுக்கே போவார்கள். இலங்கை இராணுவம் இரண்டு தடவை ஜேவிபி கிளர்ச்சியை அழித்தது. தமி;ழ் மக்கள் அழிப்பையும் நடாத்தியது.ஆனால் இப்போது இலங்கை இராணுவத்தில் உள்ள சிங்கள ஏழை விவசாயிகளின் பிள்ளைகள் புலிப்பாசிசப் பயங்கரவாதத்திடமிருந்து தமிழ் மக்களை விடுவிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கின்றார்கள்.நாளை இலங்கை தழுவிய சோசலிசப் புரட்சியின் பொழுதில் இதே இராணுவம் மீண்டும் எதிர்ப்புரட்சியின் பாத்திரத்தை ஏற்கும் என்பதை நாம் உணரவேண்டும். தமிழ் சிங்கள இனவாத அரசியலுக்குள் பழக்கப்பட்டவர்கட்கு அதைத் தாண்டிச் சிந்திக்கும்படி வரலாறு கட்டளையிடும். புலிப்பாசிச அழிவின் பின்பு வடக்கு கிழக்கில் தோண்டப்படப் போகும் பலநூறு புதைகுழிகளில் இருந்து வெளிப்படும் பல ஆயிரம் மனித எலும்புக்கூடுகள் தமிழ் மக்களுக்கு இன்றைய பொருளை விட இன்னமும் அதிகமாய்க் கற்பிக்கும்.
தமிழரசன் சொல்லவாற விசயங்கள் முக்கியமானவை. ஆனால் அவரின் நீண்ட கட்டுரையால் சொல்லவாற விசயங்கள் வாசகர்களாகிய எங்களுக்கு அலுப்பைத்தருகிறது.
தமிழரசன்,
.
தரவுகளை மட்டும் வைத்துக்கொண்டு – அதுவும் ஏகாதிபத்திய தொடர்புசாதனங்கள் ஊடகங்களூடான- முடிபுக்கு வருதல் என்ற ஆய்வுமுறையிலிருந்து பொருள் முதல்வாத ஆய்வுமுறை வேறுபட்டாகவேண்டும்.
வாய்வழித் தரவுகளையும் சில அனுமானங்களையும் மட்டுமே வைத்துக் கொண்டு புனைவுகள் போல நகரும் உங்கள் கட்டுரை இறுதியில் சமூகத்தின் எதிரிகளுக்குச் சாதகமானதாக அமைந்துவிடுமோவென அச்சம்கொள்ள வக்கிறது.
தமிழக மக்களின் மன உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் கட்டுரையாளர் எழுதியுள்ளார். இங்கு தமிழகத்தில் ஈழப் பிரச்சணைகளுக்கு ஆதரவு கொடுக்கும் சக்திகளை எல்லாம் கொச்சைப்படுத்துவதாக கட்டுரையாளரின் எண்ணம் உள்ளது. ஈழத்தவர்களாகிய நீங்கள் ஈழப்பிரச்சனையை பார்ப்பதற்கும் நாங்கள் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. நீங்கள் உங்கள் இயக்க முரண்பாடடிலிருந்தும் தமிழ விடுதலைப் புலியை எதிர்ப்பதிலிருந்தும் உங்கள் அரசியலை பார்க்கிறீர்கள். இங்கு நாங்கள் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலை என்ற கோணத்திலிருந்தே சிறீலங்கா சிங்கள அரசை பார்க்கிறோம். தமிழ விடுதலைப் புலிகள் மேல் உங்களைப்போல் இங்குள்ள இடது சாரிகளுக்கு விமர்சனம் இருக்கிறது. இதை நீங்கள் அறிந்து கொள்ளாமல் மேலோட்டமாக ஸ்ராலினிச எதிர்ப்பினால் எல்லோர் மீதும் அதாரம் அற்று குற்றம் காணுகிறீர்கள். உங்கள் கட்டுரை ஒருபக்க சார்பானதாகவே இருக்கிறது.ஈழத் தமிழ் மக்கள் இன்று அங்கு படும் துயரங்களை உங்களைப்போன்றவர்கள் தமிழ் ஈழ விடுதலை புலிகள் மீது கொண்டிருக்கும் வெறுப்பினால் பார்க்க தவறிவிடுகிறீர்கள். வெறும் செய்திகளை வைத்துக்கொண்டு நாங்கள் ஈழத் தமிழர்கள் மீது கொண்ட உண்மையான ஆதரவு மீது சந்தேகம் கொள்ளாதீர்கள்.
தமிழரசன் நீங்கள் சொல்லவருவதில் உண்மை இருக்கலாம். ஆனால் அதற்கான ஆதாரங்களை கொடுக்கவில்லை. உதாரணத்திற்கு நோர்வே தான் தமிழக தமிழின சக்திகளுக்கு உதவி செய்கின்றது என்பதற்கு ஆதாரங்கள் உண்டா? தமிழக இடதுசாரி அமைப்புகளை, அது பாராளுமன்ற வழியை நம்பும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானாலும், அல்லது இன்னும் தீவிரமான ம.க.இ.க. என்றாலும், மற்ற தமிழினவாத சக்திகளோடு ஒப்பிடமுடியாது. அவர்கள் இன்னொரு நாட்டில் நடக்கும் ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம் என்ற ரீதியிலேயே ஈழப் பிரச்சினையை அணுகுகின்றனர். இந்த ஆதரவை வழங்கும் போது, அந்த இயக்கம் பாசிச , மதவாத அல்லது ஸ்டாலினிச இயக்கமா என்றெல்லாம் பார்த்து தெரிந்தெடுத்து ஆதரிப்பதில்லை. அல்ஜீரியா போன்ற நாடுகளில் விடுதலைக்காக போராடியவர்கள், காஷ்மீர் போன்ற இடங்களில் போராடிக் கொண்டிருப்பவர்கள் யாரும் கொள்கை ரீதியாக ஒன்றானவர்கள் அல்ல, அதேநேரம் மனித உரிமைகளை மீறாதவர்கள் அல்ல. ஒவ்வொரு சமூகமும் தனக்கு தெரிந்த வழியில் தான் போராடும். அந்த சமூகம் முன்னெடுக்கும் தேசியவாதத்தை முற்போக்கானதாக பார்க்கிறார்கள். ஒரு கட்டம் வரையில் தேசியவாதம் மக்களை ஒன்றுசேர்க்கும் முற்போக்கான பாத்திரம் வகிக்கும்.
//புகலிட நாடுகளில் UTHR,SLDF, INSA போன்ற ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் புலம் பெயர் தமிழர்களின் அமைப்புக்கள் இயங்குகின்றன//தமிழரசன் .
உங்கள் ஆய்வு போதாது. இந்த அமைப்புக்கள் பற்றிய முழு விபரங்களை அவர்கள் பின்னணியை முழுமையாக ஆய்வு செய்து எழுதவும். அத்தோடு உங்கள் கட்டுரை இறுக்கமாகவும் சுருக்கமாகவும் இருந்தால் இணையத்தள வாசகர்களுக்கு படிப்பதற்கு வசதியாக இருக்கும்.
சிலருக்கு அதாவது உலகடங்கிலும் மிகச் சிலரே! ஒருவித மனநோய் பிடிக்கப்பட்டவர்கள். வேஷ்டி தானாகக் கழன்று விழுந்தாலும் ஸடாலினிசத்தின் சதி என்று கொல்லியபடியே பற்றிப் பிடிப்பார்கள்.
இந்தப் போக்கில் இவர்கள் எழுத்துக்களும் எடுபடாமற் போகின்றது!
ரங்கராஜன்> நாவலன் இவர்களின் பின்னூட்டங்களோடு ஒத்துப் போகவேயுள்ளது.
தா. பாண்டியன்/ ஜெயபாலன் ஸ்டாலினிஸ்டுக்கள்?
ஸ்டாலினிசத்தின் நோ;மையான பாட்டாளி வர்க்க இறுக்கம் எப்பொழுதாவது இந்த இருவாப்ல் யாரிடமும் காணப்பட்டது கிடையாது. அதிலும் ஜெயபாலன் எந்த கம்யூனிஸ்ட கட்சியிலும் அங்கத்துவம் பெற்றிருக்கவில்லை.
ரங்கராஜன் குறிப்பிட்டது போல் களநிலையும் கடந்த காலப் புலிகளின் நடவடிக்கைகளும் பற்றி சாப்யான பார்வை விமர்சனங்களோடுள்ள கம்யூனிஸ்டுக்களும்/ ஜனநாயகவாதிகளும் நிறையவே உள்ளனர். சிபியை யின் சில உறுப்பினர்கள் மட்டும் உதாரணமாகாது.
விளங்கியோ விளங்காமலோ தவறான வழிகாட்டலிலோ சதாரண மக்கள் உணர்வை மதிக்கத் தவறிய எழுத்தும் கொள்கையும் இல்லாதிருப்பதையே மதிக்கிறோம்.
இனவாதம்/ பிரபுத்துவத் தலமை தொனிக்கும் புனைபெயர் இதுவும் ஸ்டாலின் சூட்டிய . . . . ?