முன்னிலை விவரங்கள்
ஸ்ரீபெரும்பதூரில் டி.ஆர். பாலு முன்னிலையில் உள்ளார். பாலு 92,816 வாக்குகளும், ஏ.கே. மூர்த்தி 91,267 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
சேலம் தொகுதியில் செம்மலை 1,70,828 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தங்கபாலு 1,47,754 வாக்குகள் பெற்று பின்னடைந்துள்ளது.
மயிலாடுதுரையில் ஓ.எஸ். மணியன் 1,68,790 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். மணிசங்கர் ஐயர் 1,45,826 வாக்குகள் பெற்று பின்னிலையில் உள்ளார்.
மதுரை தொகுதியில் திமுக வேட்பாளர் அழகிரி 1,26,671 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 20,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
இளங்கோவன் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னணியில் உள்ளார்.
சிதம்பரம் 5,143 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னணியில் உள்ளார்.
நெப்போலியன் 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
திருமாவளவன் 26,687 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.
பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் பின்னடைவு.
விருதுநகர் தொகுதியில் மதிமுக வேட்பாளர் வைகோ 8152 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னனியில் உள்ளார்.
தென் சென்னையில் அதிமுக வேட்பாளர் 6350 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் 1,15,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உளளார்.