மக்கள் விரோத காங்கிரஸ் அரசு இது வரை இல்லாத அளவிற்கு எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய எரிபொருட்களின் விலையை கூட்டியுள்ளது. சிலிண்டர் ஒன்றுக்கு 35 ரூபாய் வரை விலை ஏற்றம் பெற்றுள்ள நிலையில் நடுத்தவர, ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை நிலை குலையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இடதுசாரிக் கட்சிகள் இந்த விலை உயர்வுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில் தமிழகத்தில் வருகிற 5-ஆம் தியதி விலைவாசி உயர்வுக்கு எதிராக அதிமுக கூட்டணித் தலைவர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.இதுதொடர்பாக
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ செயலாளர் தா.பாண்டியன், சிபிஎம் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மக்கள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். எனவே இந்த விலை உயர்வை உனடியாக மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.அதை வலியுறுத்தி நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கோரியுள்ளனர்
this price hike is inevitable and unavoidable as the oil marketing companies are bleeding and have to be bailed out by central govt. this increases the govt fiscal deficit and creates inlfation indirectly. hence, unless the fule prices are allowed to ‘float’ , ultimate result will be the same. But the total tax on petro products in India is the highest anywhere, with almost 100 % tax rates. Hence, if the tax rates are reduced to ‘rational’ levels, then price hikes can avoided and even reduced. But reduction of tax rates will cause a steep fall in central and state govt revenues. only way is to reduce and slash unwanted and unproductive govt expenditures like in defence, admin, subsidies for non-poor, etc.
Indians should decide for themselves : whether they want nulcear weapons or low inflation. and the subsidy for LPG gas cylinders in unfair. the middle class and above use it while the poor use kerosene. hence the artifical shortage of LPG in India.
பெட்ரோல், டீசல், காஸ் விலைகள் ஏறப்போகுது என்பதை எல்லா நாளிதழ்களும் 2,3 மாதங்களாக எழுதி வருகின்றன. அப்போதெல்லாம் இந்த எதிர் கட்சிகள் குரங்குக்கு பேன் பார்த்துகொண்டிருந்தார்களா? ஏற்கனவே வழக்கம் போல வியாபாரிகளும் அரசியல்வாதிகளும் எண்ணை விலை ஏற்றத்தை பயன் படுத்தி நல்ல காசு பார்த்துவிட்டார்கள். இப்போது கண்துடைப்புக்காக மறியல் பந்த் என்று ஆர்ப்பாட்டம் பண்ணி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாழாக்க போகிறார்கள். அதுவும் எல்லோரும் இற்றுப் போன மார்க்கெட் போன எதிர் கட்சிகள். (இவர்களின் எத்தனை பந்துக்களை பார்த்துவிட்டோம்) இதையெல்லாம் இவர்கள் நாளிதழிளில் வரும் போதே ஆரம்பித்து இருந்தால் உண்மையாகவே மக்களுக்காக போராடுகிறார்கள் என நம்பலாம். இப்போ இதெல்லாம் நாட்டு மக்களை முட்டாள்களாக நினைத்து இவர்கள் செய்யும் அரசியல் பித்தலாட்டம். இவர்கள் வெளி வேஷத்துக்கு போடும் ஆர்ப்பாட்டங்கள் மக்களை சென்றடையாது. இதுதான் இன்றைய நிதர்சனம். நான் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவாக இதை எழுதவில்லை. படித்தோர், அறிவுடையோர் என் கருத்தை எற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
அசோக்ராஜ் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்…ஜெயலலிதா போன்ற மக்கள் விரோதிகள் பந்த நடத்துவது தவறு என்றா? அல்லது விலைவாசியை இப்படி ஏற்றி மக்கள் தலையில் சுமத்துவது சரி என்றா? எரிவாயு சிலிண்டர் 35 ரூபாய் விலை ஏற்றப்படுகிறது, தவிற பெட்ரோல் நான்கு ரூபாய்க்கு மேல் இதனால் பாதிக்கப்படுகிறவர்கள் குறித்து உங்களுக்கு கவலை ஏத்வும் இல்லை? என்பதைத்தான் உங்களின் பதில் காட்டுகிறது. நாளிதழ்கள் செய்தி வெளியிடும் போதே போராட வேண்டுமா? என்ன? என்னய்யா சொல்ல வருகிறீர்?
அசுரன் சார், நான் முன்பே குறிப்பிட்ட படி எந்த கட்சியையும் ஆதரித்தோ எதிர்த்தோ எழுதவில்லை. எந்த கட்சியாய் இருந்தாலும் எதெற்கெடுத்தாலும் பந்த் என்பது இங்கே இந்தியாவில்தான் நடக்கிறது. நெஞ்சை தொட்டு சொல்லுங்கள். இவர்களின் கடந்த கால பந்த்க்கள் எந்த அளவுக்கு பயனளிதுள்ளன என்று? பொதுமக்களுக்கு இடையூரு தவிர வேறொன்றுமில்லை. உங்களுக்கு எதெற்கெடுத்தாலும் பந்த் நடத்துவது என்பதில் உடன்பாடு உள்ளது போல் உள்ளது. நான் எந்த வகையிலும் எரிபொருள் விலை உயர்வை ஆதரிக்கவில்லை. அதற்க்காக பந்த் என்பதைதான் என்னால் ஒத்துகொள்ளமுடியவில்லை. அதுவும் விலை உயர்ந்து இத்தனை நாட்கள் கழித்து தூங்கி விழித்து இருக்கிறார்கள். விலை உயர்வை அறிவித்த மறு நாளே ஏதாவது புரட்சி பண்ணியிருந்தால் கூட பரவாயில்லை மற்ற மானிலங்களை போல. அப்படியே இவர்கள் பந்த் செய்து எரி பொருள் விலைகளை குறைத்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். இன்று விலை ஏறிய மற்ற பொருட்களின் விலைகளை நம் இந்திய வியாபாரிகள் குறைத்துவிடுவார்களா? இது போல இந்திய சரித்திரத்தில் நடந்துள்ளதா? இது போல பந்த் அன்று உங்கள் வீட்டில் எதாவது விஷேசம் இருந்தால் உங்களுக்கு கஷ்டம் தெரியும். அதற்க்காக எங்கள் வீட்டில் விஷேசம் அதுதான் இப்படி எழுதுகிறேன் என்று எண்ண வேண்டாம். பொதுவாகவே இது போன்ற காரணங்களுக்கு மட்டுமில்லை எதற்க்குமே பந்த் என்ற நடவடிக்கை வேண்டாம் என்பது என்னுடைய கருத்து. ஆளும் கட்சிகளே பந்த் நடுத்தும் கேவலமே நம் நாட்டில்தான். அளும் கட்சிகள் நடத்தினால் அன்று அரசு விடுமுறை. எதிர் கட்சிகள் நடத்தினால் பந்த் நச நசத்தது என்பது. என்ன கூத்து இது? யாருக்கு என்ன லாபம்?
அசோக்ராஜ் உங்களின் கருத்துக்கள் மத்திய தர வர்க்க மன நிலையை பிரதிபலிக்கிறது. அதாவது அரசை எதிர்க்கக் கூடாது. அபப்டி எதிர்ப்பது மக்களுக்கு இடைஞசல்………..சரி பந்த் நடத்த வேண்டாம் வேறு வடிவங்களின் போராடலாம் அதில் உங்களை இணைத்துக் கொள்விர்களா? என்ன?