மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அமரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கிருந்து மன்மோகன் சிங்கிற்கு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டாம் என்று கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக, பெங்களூரில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட கடிதத்தின் நகல்: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம், கர்நாடகத்தில் பதற்றமான சூழ்நிலைக்கு வித்துட்டுள்ளது. எனவே, காவிரி நதியில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரை உடனடியாக நிறுத்த வேண்டும். நதிநீர் நிலவரத்தை அறிந்துவர கர்நாடகத்திற்கு அனுப்பியுள்ள மத்திய ஆய்வுக்குழுவினரிடம் உடனடியாக இடைக்கால அறிக்கையை பெற வேண்டும்.
செப்.19ம் தேதி காவிரி நதி ஆணையம் பிறப்பித்த உத்தரவை பின்பற்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால், காவிரி நதிப்படுகை அணைகளில் நீர்மட்டம் குறைந்துவருவதால், பெங்களூர், மண்டியா மாவட்டங்களில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக கர்நாடக மக்களிடையே கருத்து நிலவுவதால், நிலைமை மோசமடைவதற்குள் தண்ணீர் திறந்துவிட்டுள்ளதை நிறுத்த வேண்டும். இதை செய்ய தவறினால், காவிரி நதிப்படுகைமக்கள் கடும் அவதிக்குள்ளாக நேரிடும். கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழைக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்காலம் ஆரம்பமாக உள்ளது. இது தமிழகத்தின் நீர் தேவையை நிறைவுசெய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.
காவிரி நீரை முன்வைத்து இவர்கள் முன்னெடுக்கும் கீழ்த்தரமான அரசியலுக்கு எதிராக கேரளத்தின் உழைக்கும் மக்கள் மட்டுமே இறுதியான தீர்வை முன்வைக்க முடியும்.








அது எப்படிசாமி.., கர்நாடகத்துக்கு ஒரு பிரச்சனை என்றால் அங்கிருக்கும் முற்போக்குகள்,பிற்போக்குகள்,அரசுயந்திரங்கள் எல்லாம் ஒன்றாக நின்று ஒரேகுரலில் போராடுகிறார்கள்? ஆனால் தமிழ்நாட்டில் அப்படி ஒரு போராட்டம் வரும்போது தமிழ்நாட்டு அரசே இரும்புக்கரம் கொண்டு அடக்குவது?
This is interesting. Nehru fired his Foreign Minster Krishna Menon when China invaded in 1963. Rajiv Gandhi let go his Foreign Secretary Nadesan.in 1987. The book by Kalaignar Muthuvel Karunanithy about the Central Government and Regional Autonomy is written in Tamil. They should translate it into English and Hindi.