இலங்கையின் உண்மை நிலையை விளக்கி தமிழக கலைஞர்களை திறந்த நிலை கடிதம் ஒன்றை அனுப்ப, இலங்கை கலைஞர்கள் குழு ஒன்று தீர்மானித்துள்ளது.
நேற்று இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய போர் சூழ்நிலைக்குறித்து இந்திய திரைப்படத்துறையினர் உட்பட்ட கலைஞர்களுக்கு பிழையான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே அதனை சரிசெய்யும் நோக்கிலேயே இந்தக்கடிதம் இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் ஊடாக அனுப்பிவைக்கப்படவுள்ளது.
கலைஞர் விக்கிரமஹே தலைமையிலான குழுவே இந்த முடிவை எடுத்துள்ளது.