நேற்று முந்தினம் தனியார் பள்ளியின் பேரூந்தில் சிக்கி மரணமடைந்த குழந்தை சுருதியின் சோக நிகழ்வுகளின் அதிர்வலைகள் இன்னும் ஓய்ந்துவிடாத நிலையில் இன்னொரு குழந்தை பணப்பசிக்குப் பலியானார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஈச்சம்பட்டு கிராமம் மீனாட்சி காலனியில் வசிப்பவர் குமார் (28), இவரது மனைவி மீனா. இவர்களுக்கு சுவேதா (5), சுஜிதா (3), என 2 மகள்கள் இருந்தனர். இதில் சுஜிதா பலியாகியுள்ளார்.
குழந்தைகள் 2 பேரும் ஆம்பூர் அடுத்த மாராபட்டில் உள்ள உள்ள எம்போசியா தனியார் பள்ளியில் படித்து வந்தனர். அங்கு சுவேதா யுகேஜி படித்து வருகிறார். சுஜிதா எல்கேஜி படித்து வந்தார். இதே பள்ளியில் இவர்களது பெரியப்பா மகன் அசோக் என்ற சிறுவன் 2ம் வகுப்பு படிக்கிறான். இவர்கள் 3 பேரும் நேற்று காலை வழக்கம் போல் பள்ளி பஸ்சில் ஏறி பள்ளிக்கு சென்றனர்.
பின்னர் மாலை வீடு திரும்ப பள்ளி பஸ்ஸில் ஏறினர். தாக்கள் இறங்கவேண்டிய பஸ் ஸ்டாப் வந்ததும் குழந்தைகள் இறங்கினர். இதில் முன்பக்கமாக சுஜிதா சென்றா. இதில் குழந்தை சுவேதா முதலில் செல்ல, குழந்தை சுஜிதா கையை பிடித்து சிறுவன் அசோக் பின்தொடர்ந்துள்ளான். ஆனால் இவர்கள் பஸ்சை கடந்து சென்று விட்டனரா? என்பதை கவனிக்காமல் டிரைவர் பஸ்சை இயக்கியுள்ளார் இதனால் சிறுமி பலியானார்.
அந்த பள்ளிப் பேருத்தை ஓட்டியது 59 வயதான முதியவர் என்பதும், அவருக்கு கண்ணும் சரியாகத் தெரியாது, காதும் சரியாக கேட்காது எனவும் குற்றம் சுமத்தப்படுகிறது.
குழந்தைகளின் உயிரைக்கூடப் பணயம் வைத்து இலாபத்தை அதிகரிக்க முயலும் பண வெறிகொண்ட தனியார் கல்வி நிலையங்களும் அவற்றை ஊக்கப்படுத்தும் அரசுகளும் இருண்ட சமூகத்தை உருவாக்கத் தயாராகிவிட்டன.
இன்னொரு பிஞ்சுக்குழந்தை அநியாயமாக கொல்லப்பட்ட செய்தி படித்ததும் மனம்தாங்க முடியவில்லை. தாங்கிக்கொள்ள வைக்கிறது முள்ளிவாய்கால் நினைவுகள். இன்று நாகரீகமடைந்த மக்கள் நிறைந்துவாழும் உலகம் என்பதையும் நினைவில் கொள்ளாது, போரென்றால் மக்கள் கொல்லப்படுவது தவிர்க்கமுடியாது என்று தத்துவம் சொன்ன தலைவியின் ஆட்சியில் வாகனம் ஓடினால் விபத்துகளும் ஏற்படும். அதனைத் தவிர்க்கமுடியாது என்று அவர் தீர்ப்பு எழுதக்கூடும். . .
North and East are both 4,000 square miles with so many Tamil villages and towns. Do the people up north in Tamil Nadu know that or care about us in a daily basis?