இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவின் அச்சம் அவர் சூறையாடிய பணத்தின் ஒரு பகுதியை விழுங்கியுள்ளது. இலங்கை மக்களின் வரிப்பணத்தின் மற்றொரு பகுதி தேர்தலுக்காக வாரியிறைக்கப்பட்டுள்ளது. 10.5 பில்லியன் ரூபாய்கள் தேர்தலுக்காகச் செலவாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர வெளி நாடுகளிலிருந்த உயர்மட்ட ராஜதந்திரிகளை மகிந்த தனக்கு ஆலோசனை வழங்கவும் பிர்ச்சாரம் மேற்கொள்ளவும் திருப்பியழைத்துள்ளார். மகிந்தவின் அழைப்பில் பலர் இலங்கை வந்தடைந்துள்ளனர்.
வன்னி இனப்படுகொலையின் பின்னர் தனக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொள்ள மகிந்த ராஜபக்ச ராஜித செனிவர்த்னவின் ஊடாகச் செயற்பட்டார். பிரித்தனீயாவிலுள்ள பெல் பொட்டிங்டர் நிறுவனம் ராஜபக்ச ஆதரவுப் பிரச்சாரங்களை மேற்கொண்டது.இன்று ராஜித செனிவரத்ன எதிர்க்கட்சியில்.
மேற்கு ஏகாதிபத்தியங்கள் ராஜபக்சவைப் பயன்படுத்தி இனப்படுகொலையை நடத்தியது. பத்தாண்டுகள் ராஜபக்சவின் ஆட்சியில் இலங்கையை தனது தொடர்ச்சியான அதிகாரத்திற்கு உகந்த பிரதேசமாக மாற்றியது. இனிமேல் ராஜபக்சவை விட அதிக பலன் தரக்கூடிய மத்திரிபால சிரிசேனவை ஏகாதிபத்திய நாடுகள் ஆட்சியேற்ற விரும்புகின்றன.
இதுவரை இலங்கையில் ஆட்சியிலிருந்தவர்களில் இனக்கொலையாளி மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பமுமே நாட்டை அதிகளவில் சூறையாடியுள்ளது.
இலங்கையிலிருந்தே பெல் பொட்டிங்கரோடு தொடர்புவைத்திருந்த ராஜித செனிவரத்னாவே அரசாங்கத்திலிருந்து மைத்திரிபாலவுடன் முதலில் எதிர்க்கட்சிக்குத் தாவியவர்.
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ள ராஜதந்திரிகள் பட்டியலில் அவுஸ்திரேலியாவிற்கான இலங்கைத் தூதர் அட்மிரல் திஸ்ச சமரசிங்க, ஜப்பானியத் தூதர் அட்மிரல் வசந்த கரன்னாகொட, ரஷ்யத் தூதர் உதயங்க வீரதுங்க ஆகியோர் உட்படப் பலர் அடங்குவர்.
இக்குழாமில் ரஜித செனிவரத்ன போன்ற பலர் ராஜபக்சவிற்குக் குழிபறிக்கக் காத்திருக்கலாம்.
மகிந்ததவின் அழிவில் புதிய கொள்ளையர்களும் பேரினவாதிகளும் ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டார்கள்.
தேர்தல் என்பதும் பாராளுமன்றம் என்பதும் திருடர்களுக்கும் கொலையாளுக்குமான கூடாரம். ஏமாற்றப்படும் மக்கள் புதிய ஜனநாயகத்திற்காகப் மக்களை அணிதிரட்டிக்கொள்வது தவிர்க்க முடியாது என்பதையே இத் தேர்தல் அரசியல் பாடமாகக் கற்பிக்கிறது. தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டமும் சிங்கள மக்கள் மத்தியிலான வர்க்க ஒடுக்குமுறக்கான போராட்டமும் சமாந்தரமாக முன்னெடுக்கப்படவேண்டிய அரசியல் பாடத்தைத் தேர்தல் கற்றுத்தருகிறது.
மாகாண சபை உறுப்பினருக்கு 5 கோடி…..பா.உ.வுக்கு 50 கோடி………மாகாண சபை மந்திரிக்கு 25 கோடி………அரசியல் கட்சி தலைவர்களுக்கு 100 கோடி………..கொஞ்சம் எடக்கு மொடக்கானவர்களுக்கு 200 கோடி………….கூத்தாடிகளுக்கு 2 கோடி….3 கோடி என பணம் கரைகின்றது
டொப் ஏஜன்ட் லெட்டர் போர் மகின்த பிரதர்ஸ் அன்ட் லிமிடட் கம்பனி.
– யஹியா வாஸித்
நிழல் தேடி அலைகின்றனர்
மரம் வெட்டும் மனிதர்கள்.
இன்னுமா புன்னகைக்கின்றாய் பூமித்தாயே.
எண்ட ஆண்டவனே எதையுமே நம்ப முடியவில்லை ஆண்டவனே. இந்த சிறிலங்காவில எதையுமே நம்ப முடியவில்லை.
மகின்ததான். மகின்த பிரதர்ஸ்தான். மகின்த மவராசன்தான்.
இனி ஒரு அம்பது வருஷத்துக்கு இந்த நாட்டுக்கு ராசா.
ராசாதி ராசா என்று சொன்ன ஒவ்வொரு வாயும்.
மை கோட். மை குட்னஸ்.
வட் ஹெப்பன் ரூ மகின்த பிரதர்ஸ் அன்ட் லிமிடட் கம்பனி.
நம்மட வாக்காளனுகள்ற வாய்க்குள்ள நெருப்புக்கொள்ளிய போடவேணும்.
அப்படி கதைக்கானுகள் தலைவரே.
எதையுமே நம்பமுடியவில்லை தலைவா. எதையுமே பேசமுடியல. எல்லாமே கனவு போலவும் இருக்கின்றது. எல்லாமே
நனவு போலவும் இருக்கின்றது. இது நிஜமா. இது நிஜமா. இது தகுமா. இது தகுமா என………
முழு சிறிலங்காவுமே பித்துப்பிடித்து அலைகின்றது.
வயலுக்குள்ள வரப்புக்கட்டுர ஹம்மாந்தோட்டை, வீரவில புஞ்சு ஹப்புஹாமி தொடக்கம்
லோ கொலேஜில் சட்டத்தை கரச்சி குடிச்ச கோட்டு. சூட்டு போட்ட நம்ம படிச்ச தொரமார் வரை
முழு சிறிலங்காவிலுமே அனல் பறக்கின்றது. ஒரு பக்கம் நாடு முழுக்க
வௌ்ளம் சாத்து. சாத்தென சாத்துகின்றது. இன்னொரு பக்கம்
அரசியல் சூடு அதையெல்லாம் காய்ச்சி எடுக்கின்றது. குளிரே தெரியல.
2010 ஜனாபதிபதி தேர்தலுக்கு முதல்வரை மகின்த பிரதர்சை தலையில் வைத்து கொண்டாடி. கொஞ்சம் கூத்தாடி
தேர்தல் முடிந்ததும் அந்த வெற்றியை கண்மண் தெரியாமல் வெறியாடி. கூடி கும்மாளமிட்ட அதேகும்பல்
2014 வரை ஒரு அசுரப்புரட்சி செய்த. அந்த மகராசனுக்கு என்ன நடந்தது.
எகிப்தின் கிளீன் சூட் ஹூஸ்னி முபாரக்கை ஒரே இரவில் தூக்கி வீசியதைப் போல.
லிபியாவின் திமிங்கிலம் கடாபியை நடுவீதியில் கடாசியதைப் போல.
ஈராக்கின் தந்தை என வர்ணிக்கப்பட்ட சதாம் ஹுசைனை
கழுவிலேற்றியதைப் போல
30வருட சீரழிவை கண்மூடித்திறப்பதற்குள் கட்டிப் போட்ட உங்களுக்கு என்ன நடந்தது.
கட்டுக் கோப்பான அத்துடன் கட் அன்ட் றைட்டான. உளவுத்துறை.
நேர்த்தியான வீதிப்புனரமைப்பு.
அதிகப்படியான உல்லாசப் பிரயாணிகள் வருகை.
திறந்த பொருளாதார கொள்கை.
ஊருக்கொரு மந்திரி.
தெருவுக்கு நாலு கட்சி அமைப்பாளர்கள்.
லேட்டஸ்ட் ஹொஸ்பிட்டல்கள்
பாரிய ஹொட்டேல்கள்.
ஆயிரத்துக்கு மேற்பட்ட காமண்ட் பெக்டரிகள்.
கண்ணாடி போல் வழுக்கிச் செல்லும் எங்கள் மலையகத்துப் பாதைகள்.
கிராமப்புறத்தானும் ஏற்றுமதி துறையில் கால்பதித்துள்ளமை.
கடல்ல தமிழன் சுதந்திரமாக மீன் பிடிக்கலாம்.
வடக்கில தமிழன் தனியாட்சி.
கிழக்கை சோனவன்ட பேருல பிரித்துக் கொடுத்த கெட்டிக்காரத்தனம்
வல்லரசு நாடான ( ஆல்றெடி வல்லரசு ) இந்தியாவையே கைகட்டி வாய் பொத்தி நிற்க வைத்துள்ள மகா ராஜ தந்திரம்.
சிறிலங்காவுக்கெதிராக போர்க்குற்ற விசாரணை வேண்டுமென்று ஒற்றைக்காலில் நிற்கும்
யுஎன்ஏவைப் பார்த்து டோன்ற் டோக் டூமச் என சவால்விடும் வித்துவத்திறன்.
உலக பொருளாதரத்தையே தன் உள்ளங்கைக்குள் வைத்திருக்கும்
அந்த சீனத்துச் சிப்பிகளை பொக்ட்டுக்குள் வைத்துக் கொண்டு
வீ ஆர் த கிங் ஒப் த சிறிலங்கா என சொல்லாமல் சொல்லி வல்லரசுகளையே சுரண்டிப் பார்க்கும் கெட்டிக்காரத்தனம்.
அடேயப்பா.
ராஜாதி ராஜ. ராஜ குலோதுங்க. ராஜ பராக்கிரம. ராஜ கம்பீர
ராஜ மார்த்தாண்ட
மேன்மை தங்கிய. அதி உத்தம. அதி கம்பீர
ராஜபக்ஸ குடும்பத்திற்கு என்ன நடந்தது.
நேற்றுவரை
என்கட்சி. என்மந்திரிகள்
எங்கும் எச்சில் சோறு தின்ன போகமாட்டார்கள் என்று
நெஞ்சை நிமிர்த்தி பேசிய நீங்கள். இன்று
கூனிக்குறுகி உங்களது பைல்களை வெளியிடுவேன் என தடுமாறுவதின் தாற்பரியம் என்ன.
பெட்டியைத் தொலைத்துவிட்டு. சாவியைத் தேடும் எங்க ஊர் வட்டிக்கடை கந்தசாமியைப் போல்
நீங்கள் மருளுவதன் மர்மம் என்ன.
ஜனநாயகம் என்பது றைற் ரு றிபர்.
றைற் ரு கிரிட்டிசைஸ் என ஊர் கூடி ஒப்பாரி வைத்ததும்
எங்கள் கிங்கொங்
வேட்டைநாயின் பற்களில் சிக்கிய முயலைப் போல் விழிப்பதன் வியாக்கியானம் என்ன.
முல்லைக்குத் தேரீந்த பாரியாகத்தான் உங்களை
நாங்கள் பார்த்தோம். பார்க்கின்றோம் தலைவா.
ஆனால்
திமிருடன் வீரம் பேசிய ஒரு தம்பி
பொதுபலசேனாவுக்கு புதுபலம் கொடுத்த
அந்த தங்க கம்பி
முந்தாநாள் பேருவளையிலும். தர்காநகரிலும்
போய் காக்கா மாருடன் புதுசாக பிரியாணி தின்று
முக்கி முனகுவதன் மையக்கருத்தென்ன.
பிபிசிக்கு பிடறி மயிர் புடைக்க பேட்டி கொடுத்த
அந்த புண்ணியவான்
இன்று சோனவனுடன் புண்ணாக்கு யாவாரம் செய்ய படி இறங்குவதன் இளக்குவாரம் என்ன.
கைகட்டி. வாய்பொத்தி நீங்கள் வீசியெறியும் மந்திரி பதவிக்கு ஆலாய்ப்பறக்கும்
எங்கள் உள்வீட்டுப் பிள்ளைகள்
அலறி மாளிகையில் வாய்விட்டு சிரித்துக்கொண்டு டீ குடிப்பதன் உளக்குவாரம் என்ன.
முப்பது வருஷம் அஞ்சாத வாசம் இருந்த தமிழ் பேசும் மொத்த சனமும்
ஆப்ட லோங் லோங் டைம் நெஞ்சை நிமிர்த்தி மல்லுக்கு வருவதன் மகாத்மியம் என்ன
பிரபாகரன் இருக்கும் போது கூட இவனுகளுக்கு இந்த திமிர் வரல.
வட் ரோங் வித் யு தலைவா.
சலூனில தலைமுடி வெட்ட முடியல
டீ கடையில டீ குடிக்க முடியல
பஸ்ஸுக்கு கியூவில நிற்க முடியல.
றெயினுல போக முடியல. ரியூசன் கிளாசுல பாடம் படிக்க முடியல.
யுரோப்புல டயஸ்போராக்கள நெருங்க முடியல
மொத்தமா
எங்குமே எதிலுமே நோமோர் மிஸ்டர் மகின்த.
ஏன்….ஏன்….ஏன்
எங்களுக்கு ஒரு விடயம் நன்றாக புரிகின்றது.
நீங்களும். உங்கள் குடும்பமும் தீயாக நினைத்துக்கொண்டு
நம்பியிருந்த உங்கள் இண்டலிஜன்டுகள்
உங்கள் மொத்த குடும்பத்தையும்
தலையணையை தலைக்கு மேல் வைத்து
தூங்குமாறு ஆலோசனை சொல்லி விட்டு
இவர்கள் தலையணையை நன்றாக தலைக்கு கீழ்
வைத்துக்கொண்டு தூங்கி உள்ளார்கள் என்பது புரிகின்றது.
இப்போதாவது புரிகின்றதா தலைவா.
தலையணையை தலைக்கு மேல் வைத்து தூங்கினால்
மொத்த பேரும் சேர்ந்து தயைணையை இலகுவாக அமுக்கி விடுவார்கள்
நீங்கள் தலையணையை நன்றாக தலைக்கு மேல் வைத்துக் கொண்டு தூங்கிவிட்டீர்கள்.
இங்கு எல்லாமே
தலை கீழாக மாறிவிட்டது பிரதர்ஸ்
ஆசுபத்திரியில கக்கூசு கழுவுற ஜொப்புக்கு அப்ளிகேசன் போட்டம் பொக்ட்டுக்குள்ள எவ்வளவு இருக்கு என கேட்கின்றார்கள்.
மேல் இடத்துல தொடர்பு உண்டா என்று விசாரிக்கிறாங்க.
கொழும்புல ஒரு 140 பேர்ச்சஸ் காணி வேண்ட போனோம்.
60 கோடி ரூபா பிசினஸ்.
இடையில் ஒருவர் வருகின்றார்.
ஐந்து கோடி ரூபா அவருக்கு கேட்கின்றார்.
புரியல. புரியல. யார் இவர் என்று புரியல.
புரிந்த போது தலைகால் திமிறல் அடங்கல.
மொனராகல மாவட்டத்தில் ஒரு இன்வெஸ்ட்மென்ட் புறஜக்ட்
பல ஆயிரம் கோடி முதலீடு.
சிங்கப்பூர் அன்ட் அமெரிக்க முதலீடு.
3500 பேருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்கும்.
தொண்ணூறு வருசத்துக்கு மொனராகலை. பதுளை. ஊவா மாகாணம் உவ்வாவுக்கு அலைய வேண்டியதில்லை.
அனைத்தும் றெடி.
இடையில் ஒருவர் வருகின்றார்
அவருக்கு ஐயாயிரம் கோடி வேண்டுமாம்.
வௌ்ளேந்திரியாக கேட்கின்றார் வௌ்ளை வெளேரென்று இருக்கின்றார்
வந்த வௌ்ளையன் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என ஓடி கொங்கோ நாட்டில் போய் நின்றான்.
( நாளையும் தொடரும் ) http://www.lankabazar.com