காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக, நேற்று முறைப்படி பதவியேற்ற ராகுல், “” எதிர்மறை அரசியல் நடத்துவதில் எனக்கு விருப்பமில்லை. நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவேன்,” என்றார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், சமீபத்தில் நடந்த காங்., கமிட்டி கூட்டத்தில், “கட்சியின் துணைத் தலைவர் பதவி, ராகுலுக்கு தரப்படும்’ என, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, காங்.,சின் நிர்வாக பொறுப்பில், சோனியாவுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடம், ராகுலுக்கு கிடைத்தது.
இந்நிலையில், டில்லியில் உள்ள, காங்., தலைமையகத்துக்கு நேற்று வந்த ராகுல், கட்சியின் துணைத் தலைவராக, முறைப்படி பொறுப்பேற்றார். அவருக்கு, கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:எதிர்மறை அரசியலில் எனக்கு விருப்பமில்லை. அதில் ஈடுபட மாட்டேன். யாரையும் விமர்சிக்க மாட்டேன். நேர்மறையான அரசியல் நடத்தவே விரும்புகிறேன். நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதே, என் நோக்கம் என்றார்.
காங்கிரஸ் குடும்ப அரசியல் நாட்டை முன்னேற்றப்பாதையில் நடத்திச்சென்ற வேகத்தில் இந்த்தியா இன்னும் உலகில் மிக மோசமான வறிய நாடுகளில் ஒன்றாகிவிட்டது.